ஓசியா 4

Hosea 4

இஸ்ரயேலுக்கு எதிரான குற்றச்சாட்டு

இஸ்ரயேலரே, நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்; எரே 4:22மீகா 6:21 கொரி 15:34ஏசா 3:13-14ஆமோ 7:16ஓசி 12:2ஏசா 1:18ஏசா 34:1

நாட்டில் வாழ்கிற உங்களுக்கு எதிராகக் கொண்டுவரும்படி,

ஒரு குற்றச்சாட்டு யெகோவாவிடம் இருக்கிறது:

நாட்டில் உண்மையும் அன்பும் இல்லை,

இறைவனை அறியும் அறிவு இல்லை.

அங்கே சாபமிடுதலும், பொய்யும், கொலையும், ஓசி 6:91 தெச 2:15எரே 6:7மீகா 7:2ஓசி 7:1எரே 5:26-27எரே 5:7-9எரே 7:6-10

களவும், விபசாரமும் மட்டுமே உண்டு;

அவர்கள் எல்லைமீறிப் போகின்றனர்,

இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகின்றது.

இதனால் நாடு துக்கத்தோடிருக்கிறது, செப்ப 1:3ஏசா 24:4-12நாகூ 1:4ஆமோ 5:16எசேக் 38:20எரே 12:4எரே 4:27-28ஆமோ 8:8

அங்கு வாழும் யாவரும் நலிந்துபோகிறார்கள்.

வெளியின் மிருகங்களும், ஆகாயத்துப் பறவைகளும்,

கடலில் உள்ள மீன்களும் சாகின்றன.

ஆசாரியர்களே நீங்கள் ஒரு குற்றச்சாட்டையும் கொண்டுவர வேண்டாம். உபா 17:12எசேக் 3:26ஓசி 4:17ஆமோ 5:13எரே 18:18மத் 7:3-6ஆமோ 6:10

ஒருவன் இன்னொருவனைச் குற்றஞ்சாட்டவும் வேண்டாம்.

ஏனெனில் உங்கள் மக்கள் ஆசாரியனுக்கு எதிராகக்

குற்றச்சாட்டுகளைக் கொண்டுவருகிறவர்கள் போலிருக்கிறார்கள்;

ஆசாரியர்களே, என் வழக்கு உங்களோடுதான்.

நீங்கள் இரவிலும் பகலிலும் இடறிவிழுகிறீர்கள்; ஓசி 2:2எரே 15:8கலா 4:26சகரி 13:2எசேக் 13:9-16எசேக் 14:7-10எசேக் 16:44-45ஓசி 9:7-8

இறைவாக்கினரும் உங்களுடன் விழுகிறார்கள்.

எனவே நான் உங்கள் தாயை, இஸ்ரயேல் தேசத்தை அழிப்பேன்.

எனது மக்கள் அறிவில்லாததினால் அழிந்துபோகிறார்கள். ஏசா 5:13நீதி 19:2ஓசி 6:62 கொரி 4:3-6ஓசி 4:1மத் 15:8நீதி 1:30-32ஏசா 17:10

“நீங்கள் அறிவைப் புறக்கணித்திருக்கிறீர்கள்,

அதனால் நானும் உங்களை என் ஆசாரியர்களாய் இராதபடிக்கு புறக்கணிப்பேன்.

நீங்கள் உங்கள் இறைவனின் சட்டத்தை மறந்தபடியால்,

நானும் உங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிக்க மறந்துவிடுவேன்.

ஆசாரியர்கள் அநேகராய்ப் பெருகியபோது, ஓசி 13:6பிலி 3:191 சாமு 2:30ஓசி 10:1ஓசி 4:10மல்கி 2:9எஸ்றா 9:7ஆப 2:16

அவர்கள் எனக்கெதிராக அதிகமாகப் பாவம் செய்கிறார்கள்;

அவர்கள் தங்களுடைய மகிமையான இறைவனை

வெட்கக்கேடான பாகால் தெய்வத்திற்கு மாற்றினார்கள்.

எனது மக்களின் பாவத்தில் ஆசாரியர்கள் தின்று பிழைத்து, ஏசா 56:11மீகா 3:11தீத் 1:111 சாமு 2:29லேவி 6:26லேவி 7:6-7மல்கி 1:10சங் 24:4

அவர்களது கொடுமையில் ஆவலாயிருக்கிறார்கள்.

அக்காலத்தில்: மக்களைப்போலவே ஆசாரியருக்கும் நேரிடும். எரே 5:31ஏசா 24:2மத் 15:14ஓசி 1:4எரே 23:11-12எசேக் 22:26-31ஓசி 8:13ஓசி 9:9

எனவே அவர்களின் தீயவழிகளுக்காக நான் அவர்கள் இரு சாராரையும் தண்டிப்பேன்.

அவர்கள் செயல்களுக்கேற்ப அவர்களுக்கு நான் பதிலளிப்பேன்.

“அவர்கள் எல்லோரும் சாப்பிடுவார்கள், ஆனால் திருப்தியடையமாட்டார்கள்; மீகா 6:14ஆகா 1:6லேவி 26:26நீதி 13:25சங் 125:5சங் 36:3செப்ப 1:62 நாளாக 24:17

அவர்கள் வேசித்தனத்தில் ஈடுபட்டாலும் பலுகமாட்டார்கள்;

ஏனெனில் அவர்கள் தங்கள் வேசித்தனத்திற்காக யெகோவாவைக் கைவிட்டார்கள்.

புது மற்றும் பழைய திராட்சை இரசம் நீதி 20:1லூக் 21:34ஏசா 28:7பிரச 7:7ஓசி 4:12ஏசா 5:12நீதி 23:27-35நீதி 6:32

எனது மக்களின்

விளங்கிக்கொள்ளும் ஆற்றலை பரித்துவிட்டது.

எனது மக்கள் மர விக்கிரகத்திடம் ஆலோசனையைக் கேட்கிறார்கள்; எரே 2:27ஓசி 5:4ஆப 2:19உபா 31:16ஏசா 44:18-20எண் 15:392 நாளாக 21:132 தெச 2:9-11

அவர்களுடைய கோல் பதில் தருமென்றிருக்கிறார்கள்.

வேசித்தனத்தின் ஆவி அவர்களை வழிவிலகச் செய்கிறது;

அவர்கள் தங்கள் இறைவனுக்கு உண்மையற்றவர்களாய் இருக்கிறார்கள்.

அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, எரே 3:6எசேக் 6:13ஏசா 1:29ஆமோ 7:172 சாமு 12:10-12எசேக் 16:16எசேக் 16:25எசேக் 20:28-29

குன்றுகளிலே இன்பமான நிழல் தருகின்ற கர்வாலி, புன்னை,

தேவதாரு ஆகிய மரங்களின் கீழும்

தகன காணிக்கைகளைப் பலியிடுகிறார்கள்.

எனவே உங்கள் மகள்கள் வேசித்தனத்திற்கும்,

மருமகள்கள் விபசாரத்திற்கும் திரும்புகிறார்கள்.

“உங்கள் மகள்கள் வேசித்தனத்திற்குத் திரும்பும்போதும், 1 கொரி 6:16எபே 4:18ஓசி 4:11 இராஜா 14:23-241 இராஜா 15:122இராஜா 23:7தானி 12:10உபா 23:17

மருமகள்கள் விபசாரம் செய்யும்போதும்

நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன்.

ஏனெனில் ஆண்களும் வேசிகளுடன் பாலுறவுகொண்டு,

கோவில் வேசிகளுடன் பலியிடுகிறார்கள்,

அறிவில்லாத அம்மக்கள்

சீரழிந்து போவார்கள்.

“இஸ்ரயேலே, நீ விபசாரம் செய்தாலும், ஓசி 12:11ஓசி 9:15ஆமோ 4:4ஆமோ 5:5ஆமோ 8:14எபே 5:11ஓசி 10:5ஓசி 10:8

யூதா நாடாகிலும் குற்றமற்றதாயிருக்கட்டும்.

“நீ கில்காலுக்குப் போகவேண்டாம்;

பெத்தாவேனுக்கும் போகவேண்டாம்.

‘யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என்று ஆணையிடவும் வேண்டாம்.

இஸ்ரயேலரோ அடங்காத 1 சாமு 15:11ஓசி 11:7ஏசா 22:18ஏசா 5:17ஏசா 7:21-25எரே 14:7எரே 3:11எரே 3:6

இளம் பசுவைப்போல் பிடிவாதமாயிருக்கிறார்கள்.

அப்படியிருக்க, யெகோவா எப்படி புல்வெளியில்

செம்மறியாட்டுக் குட்டிகளை மேய்ப்பதுபோல அவர்களை மேய்க்க முடியும்?

எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்துவிட்டான்; சங் 81:12வெளி 22:11ஓசி 11:2ஓசி 13:2ஓசி 4:4மத் 15:14ஓசி 12:1

அவனைத் தனியே விட்டுவிடு!

அவர்களுடைய மதுபானங்கள் முடிந்துபோனாலும், மீகா 3:11நீதி 30:15-161 சாமு 12:3-41 சாமு 8:32இராஜா 17:7-17ஆமோ 5:12உபா 16:19உபா 32:32-33

அவர்கள் எப்போதும் தங்கள் வேசித்தனத்தைத் தொடர்கிறார்கள்;

அவர்களுடைய ஆளுநர்கள் வெட்கக்கேடான வழிகளை ஆவலுடன் விரும்புகிறார்கள்.

சுழல் காற்று அவர்களை அடித்துக் கொண்டுபோகும், எரே 51:1ஓசி 13:15ஏசா 1:29எரே 4:11-12ஓசி 10:6ஓசி 12:1ஏசா 42:17எரே 17:13

அவர்கள் விக்கிரகங்களுக்குப் படைக்கும் பலிகள்

அவர்களுக்கு வெட்கத்தையே கொண்டுவரும்.