பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட யெகோவாவினுடைய ஊழியனாகிய தாவீதின் சங்கீதம்.
இறைவனிடமிருந்து என் உள்ளத்திற்கு வந்த செய்தி: ரோம 3:18நீதி 16:6மத் 12:33-34நீதி 8:13சங் 112:1சங் 143:12சங் 18:12 பேது 1:1
கொடியவர்களின் பாவம் அவர்களுடைய இருதயங்களில் நிலைத்திருக்கிறது;
அவர்களுடைய கண்களில்
இறைவனைப்பற்றிய பயம் இல்லை.
அவர்கள் பார்வையில் தங்களைப் பெருமையாக காணுவதால், உபா 29:19சங் 49:18சங் 10:31 நாளாக 10:13-141 சாமு 15:18-24ரோம 7:9ஓசி 12:7-8எரே 17:9
அவர்கள் தங்களுடைய பாவத்தை உணர்வதும் இல்லை; அதை வெறுப்பதுமில்லை.
அவர்களுடைய வாயின் வார்த்தைகள் கொடுமையும் வஞ்சகமுமாய் இருக்கின்றன; எரே 4:22சங் 55:211 யோவா 2:19மத் 22:15-18சங் 10:71 சாமு 11:6-131 சாமு 13:13-141 சாமு 15:26
அவர்கள் ஞானமாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் நிறுத்திவிட்டார்கள்.
அவர்கள் தனது படுக்கையிலும் தீமையைச் சிந்திக்கிறார்கள்; மீகா 2:1நீதி 4:16ஏசா 65:2ரோம 12:9அப் 23:12மத் 27:1சங் 97:10வெளி 2:2
பாவவழிக்கு அவர்கள் தங்களை ஒப்புவிக்கிறார்கள்;
தீமையானதை விடாதிருக்கிறார்கள்.
யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு வானங்களையும் சங் 100:5சங் 108:4சங் 103:11சங் 57:10எபி 6:18-20சங் 89:2மத் 24:35சங் 92:2
உமது உண்மை மேகங்களையும் எட்டுகிறது.
உமது நீதி விசாலமான மலைகளைப் போன்றது, ரோம 11:33ஏசா 40:28சங் 77:191 தீமோ 4:10உபா 32:4யோபு 37:23நெகே 9:6சங் 71:19
உமது நியாயம் மகா ஆழத்தைப் போன்றது.
யெகோவாவே, நீரே மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பு எவ்வளவு அருமையானது! சங் 86:5ரூத் 2:121 யோவா 3:1சங் 91:41 யோவா 4:9-10சங் 139:17சங் 17:8சங் 31:19
மனிதர்கள் உமது சிறகின் நிழலிலே தஞ்சம் அடைகிறார்கள்.
உமது வீட்டின் செழிப்பினால் அவர்கள் நிறைவு பெருகிறார்கள்; சங் 16:11சங் 65:4ஏசா 58:11எரே 31:12-14ஏசா 25:6சங் 63:5மத் 5:6ஏசா 48:21
நீர் உமது மகிழ்ச்சியின் நதியிலிருந்து அவர்களுக்குக் குடிக்கக் கொடுக்கிறீர்.
ஏனெனில், வாழ்வின் ஊற்று உம்மிடத்திலேயே இருக்கிறது; யோவா 8:12யோவா 4:141 யோவா 1:7யோவா 4:10யோவா 7:37-39வெளி 21:62 கொரி 4:6ஏசா 60:19
உமது ஒளியில் நாங்கள் வெளிச்சம் காண்கிறோம்.
உம்மை அறிந்தவர்களுக்கு உமது உடன்படிக்கையின் அன்பையும் எரே 24:7எபி 8:11எரே 22:16சங் 9:10சங் 97:10-111 பேது 1:5யோவா 17:3சங் 143:1-2
இருதயத்தில் நீதிமான்களுக்கு உமது நியாயத்தையும் வழங்கும்.
அகந்தை உள்ளவர்களின் கால் எனக்கு விரோதமாய் வராதிருப்பதாக; சங் 16:8ஏசா 51:23யோபு 40:11-12சங் 12:3-5சங் 123:3-4சங் 10:2சங் 119:122சங் 119:51
கொடியவர்களின் கை என்னைத் துரத்தி விடாதிருப்பதாக.
தீமை செய்கிறவர்கள் எப்படி விழுந்து கிடக்கிறார்கள் என்று பாரும்! சங் 1:52 தெச 1:8-9நியாயாதி 5:31எரே 51:64சங் 140:10சங் 18:38சங் 55:23சங் 58:10-11
அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி, வீசி எறியப்பட்டுக் கிடக்கிறார்கள்.