செப்பனியா 1

Zephaniah 1

யூதாவின் அரசனான ஆமோனின் மகன் யோசியாவின் ஆட்சிக்காலத்தில், யெகோவாவின் வார்த்தை செப்பனியாவுக்கு வந்தது. செப்பனியா கூசியின் மகன், கூசி கெதலியாவின் மகன், கெதலியா அமரியாவின் மகன், அமரியா எசேக்கியாவின் மகன். எரே 1:22 நாளாக 34:1-332இராஜா 22:1-202 பேது 1:19எசேக் 1:3ஓசி 1:1எரே 25:32 தீமோ 3:16

வரப்போகும் அழிவைப்பற்றிய எச்சரிக்கை

“பூமியின் மேற்பரப்பில் காணப்படும் அனைத்தையும், 2இராஜா 22:16-17மீகா 7:13எசேக் 33:27-29எரே 36:292 நாளாக 36:21ஆதி 6:7ஏசா 6:11எரே 24:8-10

நான் வாரிக்கொண்டு போவேன்”

என யெகோவா அறிவிக்கிறார்.

“நான் மனிதர்களையும், மிருகங்களையும் வாரிக்கொண்டு போவேன்; ஓசி 4:3எசேக் 7:19எசேக் 14:13-21ஏசா 27:9எரே 12:4மத் 23:39எசேக் 14:3-7எசேக் 15:6-8

நான் ஆகாயத்துப் பறவைகளையும்,

கடலின் மீன்களையும்

வாரிக்கொண்டு போவேன்.”

“நான் பூமியின் மேற்பரப்பிலிருந்து மனிதர்களை அகற்றும்போது,

கொடியவர்களையும் அவர்களுடைய தெய்வங்களையும் அழிப்பேன்”

என்று யெகோவா அறிவிக்கிறார்.

நான் யூதாவுக்கு எதிராகவும், எருசலேமில் வாழும் ஓசி 10:52இராஜா 23:4-5மீகா 5:132 நாளாக 34:42இராஜா 21:13ஏசா 14:26-27எரே 6:12யாத் 15:12

அனைவருக்கு எதிராகவும் என் கையை நீட்டுவேன்;

நான் இந்த இடத்திலிருந்து பாகால் வணக்கத்தின்

மீதியான எல்லாவற்றையும் அகற்றுவேன்.

விக்கிரக வணக்கத்தில் ஈடுபடுகிறவர்களையும் அவர்களுடைய பூசாரிகளையும்

அவர்களுடைய பெயர்களே இல்லாமல் போகும்படி அழிப்பேன்.

நட்சத்திரக் கூட்டங்களை வணங்குவதற்காக, 2இராஜா 17:33எரே 19:131 இராஜா 11:331 இராஜா 18:212இராஜா 17:412இராஜா 23:121 இராஜா 11:5ஆமோ 5:26

வீட்டின் மேல்மாடங்களில் விழுந்து வணங்குகிறவர்களையும் அகற்றுவேன்.

யெகோவாவை விழுந்து வழிபட்டும், அவர் பேரில் ஆணையிடுவதோடு,

மோளேக்கு தெய்வத்தின் பெயரிலும் ஆணையிடுகிறவர்களை அகற்றுவேன்.

யெகோவாவைப் பின்பற்றுவதிலிருந்து பின்வாங்கியவர்களையும், ஏசா 1:4எரே 2:13எரே 15:6எரே 2:17எசேக் 3:20எபி 10:38-39ஓசி 11:7ஏசா 9:13

யெகோவாவின் ஆசீர்வாதத்தைத் தேடாமலும்,

அவரிடமிருந்து ஆலோசனைக் கேட்டு அறியாமல் இருப்பவர்களையும் அகற்றுவேன்.

ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாக மவுனமாயிருங்கள். ஆப 2:20சகரி 2:13செப்ப 1:14ஏசா 34:6எரே 46:10ஏசா 13:61 சாமு 16:5ஆமோ 5:18-20

ஏனெனில் யெகோவாவின் நாள் சமீபமாயுள்ளது.

யெகோவா ஒரு பலியை ஆயத்தம் செய்திருக்கிறார்.

அவர் தாம் அழைத்திருக்கிறவர்களைப் பரிசுத்தப்படுத்தியிருக்கிறார்.

யெகோவாவினுடைய பலியின் நாளில், ஏசா 24:212இராஜா 25:19-21ஏசா 3:18-24ஏசா 39:7எரே 22:11-19எரே 22:24-30எரே 39:6-72இராஜா 23:30-34

நான் பிரபுக்களையும்,

இளவரசர்களையும்,

பிற நாட்டவரின் பழக்கவழக்கங்களைப்

பின்பற்றுகிறவர்களையும் தண்டிப்பேன்.

அந்நாளில் போலியான தெய்வங்களை வணங்கி, 1 சாமு 5:5ஆமோ 3:101 சாமு 2:15-162இராஜா 5:20-27நெகே 5:15நீதி 29:12அப் 16:19

அதன் வழிபாட்டில் பங்குகொள்கிறவர்களைத் தண்டிப்பேன்.

அவர்கள் தங்கள் தெய்வங்களின் கோயில்களை

வன்முறையாலும் வஞ்சனையினாலும் நிரப்புகிறார்கள்.

யெகோவா அறிவிக்கிறதாவது: 2 நாளாக 33:142இராஜா 22:14ஆமோ 8:3எரே 4:19-21நெகே 3:32 நாளாக 3:12 நாளாக 32:222 சாமு 5:7

அந்த நாளில் எருசலேம் மதிலிலுள்ள

மீன் வாசலில் இருந்து அழுகை கேட்கும்.

அந்த நகரத்தின் புதிய பகுதியிலிருந்து புலம்பலும்,

குன்றுகளிலிருந்து அது இடிந்துவிழும் சத்தமும் உண்டாகும்.

எருசலேமின் சந்தைப் பகுதியில் வாழும் மக்களே; யாக் 5:1எசேக் 21:12ஓசி 12:7-8எரே 25:34ஓசி 9:6எரே 4:8யோவா 2:16யோவே 1:13

அழுது புலம்புங்கள், உங்கள் வர்த்தகர் எல்லோரும் அழிந்துபோவார்கள்.

வெள்ளி வியாபாரிகள் யாவரும் பாழாய்ப் போவார்கள்.

அந்த வேளையில் நான் எருசலேமில் விளக்குகளைக்கொண்டு தேடுவேன். ஆமோ 6:1எரே 48:11எசேக் 8:12எசேக் 9:9மல்கி 3:14-15ஆமோ 9:1-32 பேது 3:4எரே 10:5

யெகோவா நன்மையோ தீமையோ ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லி,

ஏனோ தானோ என்று இருப்பவர்களைத் தண்டிப்பேன்.

அவர்கள் திராட்சை மதுவின்

மண்டியைப்போல் இருக்கிறார்கள்.

அவர்களுடைய செல்வம் சூறையாடப்படும், ஆமோ 5:11மீகா 6:15உபா 28:30உபா 28:39எசேக் 7:21எரே 15:13எரே 9:19உபா 28:51

வீடுகள் உடைத்து அழிக்கப்படும்.

அவர்கள் வீடுகளைக் கட்டுவார்கள்,

அதில் அவர்கள் குடியிருக்கமாட்டார்கள்,

திராட்சைத் தோட்டத்தை நாட்டுவார்கள்.

அதன் திராட்சரசத்தைக் குடிக்கமாட்டார்கள்.

யெகோவாவின் பெரிய நாள் சமீபித்துள்ளது; எசேக் 30:3மல்கி 4:5செப்ப 1:71 தெச 4:16எசேக் 7:12ஏசா 15:4ஏசா 33:7யோவே 2:11

அது மிக சமீபமாய் இருந்து விரைவாய் வருகிறது.

கேளுங்கள்! யெகோவாவின் நாளில் ஏற்படும் அழுகை மிகவும் கசப்பாயிருக்கும்.

இராணுவவீரருங்கூட கூக்குரலிடுவார்கள்.

அந்த நாள் கடுங்கோபத்தின் நாள், யோவே 2:2ஏசா 22:5வெளி 6:17ஆமோ 5:18-20எரே 30:72 பேது 3:7யோபு 3:4-8யோவே 2:11

துன்பமும் வேதனையும் நிறைந்த நாள்,

தொல்லையும் அழிவுமான நாள்,

அது இருளும் அந்தகாரமுமான நாள்.

மப்பும் மந்தாரமுமான நாள்.

அரணான நகரங்களுக்கு எதிராகவும், ஆமோ 3:6ஓசி 8:1ஏசா 2:12-15ஏசா 32:14ஓசி 5:8ஏசா 59:10எரே 4:19-20சங் 48:12-13

மூலைக் கோபுரங்களுக்கு எதிராகவும்

எக்காள சத்தமும் போர் முரசும் எழுப்பப்படும் நாள்.

மக்கள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்ததால், சங் 83:10வெளி 3:172 பேது 1:9எரே 10:18எரே 2:17மத் 15:14மீகா 7:131 யோவா 2:11

நான் அவர்கள்மேல் துன்பத்தை வரப்பண்ணுவேன்;

அவர்கள் குருடரைப்போல் தட்டித் தடவி நடப்பார்கள்.

அவர்களுடைய இரத்தம் புழுதியில் ஊற்றப்படும்.

அவர்களுடைய குடல்கள் சாணத்தைப்போல் நிலத்தில் கொட்டப்படும்.

யெகோவாவினுடைய கடுங்கோபத்தின் நாளிலே, செப்ப 3:8எசேக் 7:19நீதி 11:4செப்ப 1:2-3எரே 9:11மத் 16:26செப்ப 1:11செப்ப 1:15

அவர்களுடைய வெள்ளியோ தங்கமோ

அவர்களைக் காப்பாற்றமாட்டாது.

அவருடைய வைராக்கியத்தின் நெருப்பினால்,

முழு உலகமும் சுட்டெரிக்கப்படும்.

ஏனெனில் அவர் பூமியில் வாழும் யாவருக்கும்

திடீரென ஒரு முடிவைக் கொண்டுவருவார்.