தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, என்னோடு வழக்காடுகிறவர்களோடு வழக்காடி, சங் 43:1எரே 51:36சங் 119:154ஏசா 49:25நீதி 23:11நீதி 22:23புலம் 3:58அப் 5:39
என்னோடு போராடுகிறவர்களுடன் நீர் போராடும்.
கேடயத்தையும் கவசத்தையும் எடுத்துக்கொள்ளும்; சங் 91:4யாத் 15:3ஏசா 42:13உபா 32:41-42ஏசா 13:5சங் 7:12-13
எனக்கு உதவிசெய்ய எழுந்து வாரும்.
என்னைத் துரத்துகிறவர்களுக்கு எதிராக ஈட்டியையும் ஏசா 12:2சங் 27:2சங் 51:12சங் 91:16ஏசா 8:9-101 சாமு 23:26-27அப் 4:28ஆதி 49:18
எறிவேலையும் நீட்டி இப்படி சொல்லும்:
நீர் என் ஆத்துமாவுக்கு,
“நானே உனது இரட்சிப்பு.”
எனது உயிரை வாங்கத் தேடுகிறவர்கள் சங் 70:2-3எரே 46:5சங் 35:26சங் 38:12சங் 31:17-18சங் 129:5சங் 40:14-15சங் 71:24
அவமானம் அடைந்து வெட்கப்படுவார்களாக;
என்னை அழிக்கச் சதிசெய்கிறவர்கள்
மனம் தளர்ந்து பின்வாங்கிப் போவார்களாக.
யெகோவாவினுடைய தூதன் அவர்களைத் துரத்துவதால் யோபு 21:18ஏசா 29:5அப் 12:23யாத் 14:19எபி 11:28ஓசி 13:3ஏசா 17:13ஏசா 37:36
காற்றிலே பறந்து போகிற பதரைப்போல் இருப்பார்களாக;
யெகோவாவினுடைய தூதன் அவர்களைப் பின்தொடர்வதால், எரே 23:12சங் 73:18எரே 13:16நீதி 4:19
அவர்களுடைய பாதை இருளாகவும், சறுக்குகிறதாகவும் இருப்பதாக.
காரணமின்றி அவர்கள் எனக்காக வலையை மறைத்து வைத்திருப்பதனாலும், யோவா 15:25சங் 140:5சங் 9:15யோபு 18:8சங் 25:3சங் 69:4சங் 119:85சங் 7:3-5
காரணமின்றி அவர்கள் எனக்காக குழிதோண்டி இருப்பதனாலும்,
அழிவு திடீரென அவர்கள்மேல் வருவதாக; சங் 141:9-10லூக் 21:34நீதி 5:22சங் 9:151 தெச 5:3ஏசா 47:11சங் 57:61 சாமு 18:17
அவர்கள் மறைத்துவைத்த வலை அவர்களையே சிக்கவைப்பதாக;
அந்தக் குழிக்குள் அவர்களே விழுந்து அழிந்துபோவார்களாக.
அப்பொழுது என் ஆத்துமா யெகோவாவிடம் சந்தோஷப்பட்டு, ஏசா 61:10லூக் 1:46-47சங் 48:11சங் 58:10-111 சாமு 2:1கலா 5:22ஆப 3:18பிலி 3:1-3
அவருடைய இரட்சிப்பில் மகிழ்ச்சியடையும்.
“யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு? யாத் 15:11சங் 109:31சங் 140:12சங் 51:8சங் 71:19சங் 86:8சங் 18:17சங் 10:14
நீர் ஏழைகளை ஒடுக்குகிற வலிமையானவர்களிடம் இருந்தும்,
ஏழைகளையும் குறைவுள்ளோரையும் கொள்ளையிடுகிறவர்களிடம் இருந்தும் விடுவிக்கிறீர்”
என்று என் முழு உள்ளமும் வியப்புடன் சொல்லும்.
இரக்கமற்ற சாட்சிகள் முன்வருகிறார்கள்; சங் 27:12மத் 26:59-601 சாமு 24:9அப் 6:131 சாமு 25:10அப் 24:12-13அப் 24:5-6
எனக்குத் தெரியாதவைகளை அவர்கள் என்னிடத்தில் கேட்கிறார்கள்.
நன்மைக்குப் பதிலாய் அவர்கள் எனக்குத் தீமை செய்து, யோவா 10:32எரே 18:20சங் 38:20லூக் 23:21-23நீதி 17:13சங் 109:3-51 சாமு 20:31-331 சாமு 19:15
என்னை உதவியின்றி விட்டுவிடுகிறார்கள்.
ஆனாலும் அவர்கள் வியாதியாய் இருந்தபோதோ, சங் 69:10-11யோபு 30:25மத் 5:44ஏசா 58:5லேவி 16:31மத் 10:13லூக் 10:6ரோம 12:14-15
நான் துக்கவுடை உடுத்தி உபவாசத்துடன் என்னைத் தாழ்த்தினேன்.
எனது மன்றாட்டுகள் பதிலளிக்கப்படாமல் என்னிடமே திரும்பிவந்தபோது,
எனது நண்பர்களைப்போலவும் சகோதரரைப் போலவும் லூக் 19:41-422 சாமு 1:11-12ஆதி 24:672 சாமு 1:17-27சங் 38:6
நான் அவர்களுக்காக துக்கித்தேன்;
என் தாய்க்காக அழுகிறது போல,
துக்கத்தில் என் தலையை குனிந்து கொண்டேன்.
ஆனால் நான் இடறியபோதோ, அவர்கள் ஒன்றுகூடி மகிழ்கிறார்கள்; எரே 20:10மாற் 14:65மத் 27:27-30மத் 27:39-44சங் 7:2சங் 71:10-111 கொரி 13:6அப் 17:5
நான் எதிர்பாராத வேளையில் தாக்குகிறவர்கள், எனக்கெதிராய் ஒன்றுகூடி,
ஓய்வின்றி என்னை நிந்தித்தார்கள்.
அவர்கள் இறை பக்தியற்றவர்களோடு சேர்ந்து பரியாசம் செய்து, புலம் 2:16யோபு 16:9சங் 37:12அப் 7:54யோவா 18:281 கொரி 5:81 சாமு 20:24-42ஏசா 1:14-15
என்னைப் பார்த்து பற்களைக் கடித்தார்கள்.
யெகோவாவே, எதுவரையிலும் இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்? ஆப 1:13சங் 22:20-21சங் 57:4சங் 74:9-10சங் 89:46சங் 94:3-4சங் 10:14சங் 13:1-2
அவர்கள் செய்யும் அழிவுகளிலிருந்து என்னையும்
சிங்கங்களிடமிருந்து விலையுயர்ந்த என் உயிரையும் தப்புவியும்.
அப்பொழுது மகா சபையிலே நான் உமக்கு நன்றி செலுத்துவேன்; எபி 2:12சங் 22:22-25ஏசா 25:3சங் 116:14சங் 116:18சங் 67:1-4சங் 117:1-2சங் 138:4-5
மக்கள் கூட்டங்களின் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்.
காரணமின்றி என்னைப் பகைக்கிறவர்கள் யோவா 15:25சங் 69:4நீதி 6:13சங் 13:4சங் 38:19நீதி 10:10யோவா 16:20-22சங் 109:3
என்னைப் பழித்து மகிழாமலும்,
காரணமின்றி என்னை வெறுக்கிறவர்கள்
தவறான நோக்கத்தோடு கண் சிமிட்டாமலும் இருக்கட்டும்.
அவர்கள் சமாதானமாய்ப் பேசுவதில்லை; மத் 26:41 பேது 2:22-23எரே 11:19அப் 23:15அப் 25:3தானி 6:5மத் 12:19மத் 12:24
நாட்டில் அமைதியாய் வாழ்கிறவர்களுக்கு எதிராய்
வஞ்சகமாய்த் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து சொல்கிறதாவது: லூக் 11:53-54சங் 22:13சங் 40:15சங் 70:3சங் 54:7ஏசா 9:12
“ஆ! ஆ! எங்கள் கண்களாலேயே நாங்கள் இதைக் கண்டிருக்கிறோம்.”
யெகோவாவே, நீர் இதைக் கண்டிருக்கிறீர்; மவுனமாயிராதேயும். யாத் 3:7சங் 10:1சங் 28:1ஏசா 65:6சங் 22:11சங் 38:21சங் 71:12சங் 22:19
யெகோவாவே, என்னைவிட்டுத் தூரமாயிராதேயும்.
விழித்தெழும், எழுந்து எனக்காக வழக்காடும்; சங் 44:23சங் 7:6சங் 59:4சங் 89:26ஏசா 51:9யோவா 20:28சங் 142:5சங் 80:2
என் இறைவனே, யெகோவாவே, எனக்காகப் போராடும்.
என் இறைவனாகிய யெகோவாவே, உமது நீதியின் நிமித்தம் சங் 43:1சங் 26:1சங் 7:82 தெச 1:6சங் 35:191 பேது 2:22யோபு 20:5சங் 18:20-24
என்னை நியாயம் விசாரியும்;
அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும்.
“ஆ! நாங்கள் விரும்பியதே நடந்துவிட்டது!” புலம் 2:16மத் 27:43சங் 124:31 கொரி 15:542 சாமு 20:19யாத் 15:9யோபு 1:5மாற் 2:6
என்று அவர்கள் சிந்திக்க விடாதேயும் அல்லது
“நாங்கள் அவனை விழுங்கிவிட்டோம்” என்று அவர்கள் சொல்லவிடாதேயும்.
என் துன்பத்தைக் குறித்து என்னைப் பழித்து மகிழ்கிறவர்கள் எல்லோரும் யோபு 8:22சங் 38:16யோபு 19:5சங் 132:18ஏசா 41:111 பேது 5:5தானி 11:36ஏசா 65:13-15
வெட்கமடைந்து கலங்குவார்களாக;
எனக்கு மேலாகத் தங்களை உயர்த்துகிறவர்கள் எல்லோரும் வெட்கத்தாலும்
அவமானத்தாலும் மூடப்படுவார்களாக.
என் நீதி நிலைநிறுத்தப்படுவதை விரும்புகிறவர்கள், எரே 32:40-41சங் 149:4சங் 40:16செப்ப 3:17நீதி 8:18சங் 70:4சங் 142:7சங் 147:11
சந்தோஷத்தினாலும் மகிழ்ச்சியினாலும் ஆர்ப்பரிப்பார்களாக.
“தனது பணியாளனின் நலனை விரும்புகிற யெகோவா உயர்த்தப்படுவாராக”
என்று அவர்கள் எப்பொழுதும் சொல்லட்டும்.
எனது நாவு உமது நீதியை அறிவிக்கும், சங் 145:21சங் 71:24சங் 145:5சங் 51:14-15சங் 104:33-34சங் 34:1சங் 50:15சங் 71:15
நாள்முழுவதும் உம்மைத் துதிக்கும்.