ஏசாயா 47

Isaiah 47

பாபிலோனின் வீழ்ச்சி

“பாபிலோனின் கன்னிப்பெண்ணே, நீ கீழேபோய் புழுதியில் உட்கார்ந்துகொள். எரே 51:33சங் 137:8எரே 46:11எரே 50:42சகரி 2:7ஏசா 3:26ஏசா 14:13-14ஏசா 37:22

கல்தேயரின் மகளே,

அரியணை அற்றவளாய்

தரையில் உட்கார்ந்துகொள்.

நீ இனி மிருதுவானவள் என்றோ மென்மையானவள்

என்றோ அழைக்கப்படுவதில்லை.

திரிகைக் கற்களை எடுத்து மாவரை; யாத் 11:5ஏசா 20:4நியாயாதி 16:21மத் 24:41எசேக் 16:37-39ஆதி 24:65ஓசி 2:3ஏசா 32:11

உனது முக்காட்டை எடுத்துவிடு.

உனது பாவாடைகளை உயர்த்தி, கால்களை வெறுமையாக்கி,

நீரோடைகளைக் கடந்துபோ.

உனது நிர்வாணம் வெளிப்படுத்தப்படும்; நாகூ 3:5எரே 51:20-24எரே 50:27-28வெளி 16:19உபா 32:35உபா 32:41-43எசேக் 16:37எபி 10:30-31

உன்னுடைய வெட்கம் திறந்து காட்டப்படும்.

நான் பழிவாங்குவேன்;

நான் ஒருவரையும் தப்பவிடமாட்டேன்.”

இஸ்ரயேலின் பரிசுத்தரே நமது மீட்பர்; ஏசா 44:6ஏசா 41:14ஏசா 43:14ஏசா 49:26எரே 50:33-34ஏசா 43:3ஏசா 54:5எரே 31:11

சேனைகளின் யெகோவா என்பதே அவரது பெயர்.

“பாபிலோனியர்களின் மகளே, ஆப 2:20ஏசா 47:7வெளி 18:16-191 சாமு 2:9தானி 2:37-38ஏசா 13:10ஏசா 13:19-20ஏசா 14:23

இருளுக்குள் போய் மவுனமாய் அமர்ந்திரு;

நீ இனி ஒருபோதும்

அரசுகளுக்கு அரசி என அழைக்கப்படமாட்டாய்.

நான் எனது மக்களுடன் கோபங்கொண்டு 2 நாளாக 28:9சகரி 1:15உபா 28:50ஒபதி 1:10யாக் 2:13சங் 69:26ஏசா 10:6ஏசா 14:17

எனது உரிமைச்சொத்தாய் இருக்கிறவர்களை

தூய்மைக்கேடு அடையச் செய்தேன்.

அவர்களை உனது கையில் ஒப்படைத்தேன்;

நீயோ அவர்களுக்கு இரக்கம் காட்டவில்லை,

முதியோர்மேலும் மிகவும் பாரமான நுகத்தை வைத்தாய்.

‘தொடர்ந்து நான் என்றென்றும் உபா 32:29ஏசா 47:5எரே 5:31தானி 4:29தானி 5:18-23எசேக் 28:12-14எசேக் 28:2எசேக் 29:3

அரசியாக நிலைத்திருப்பேன்!’ என்று நீ சொன்னாய்.

ஆனால் நீ இந்தக் காரியங்களைப் பற்றி சிந்திக்கவுமில்லை;

என்ன நடக்குமென நீ எண்ணிப்பார்க்கவுமில்லை.

“இப்பொழுதோ ஒழுக்கங்கெட்டவளே, ஏசா 32:9செப்ப 2:15ஏசா 47:10ஏசா 45:6எரே 50:11வெளி 18:3-82 தெச 2:4தானி 11:36

நீ பாதுகாப்பாக சொகுசாக இருந்து,

‘நானே பெரும் அரசி, எனக்கு நிகர் யாரும் இல்லை.

நான் விதவையாகவோ,

அல்லது பிள்ளைகளை இழந்து துன்பப்படுகிறவளாகவோ ஆகமாட்டேன்’

என்று உன் உள்ளத்தில் சொல்லிக்கொள்கிறாய்.

இவை இரண்டும் ஒரே நாளில், 1 தெச 5:3சங் 73:19ஏசா 47:12-13நாகூ 3:4வெளி 18:8-10தானி 2:2தானி 4:7தானி 5:7

ஒரே நேரத்தில் உன்னை மேற்கொள்ளும்:

நீ பிள்ளைகளை இழந்து, விதவையாவாய்.

உனக்கு எண்ணற்ற மந்திர வித்தைகள் தெரிந்தும்,

வசீகர சக்திகள் இருந்தும்

அவை முழுமையாக உன்மேல் வரும்.

நீ உனது கொடுமையில் நம்பிக்கையாயிருந்து, ஏசா 5:21ரோம 1:22ஏசா 29:15சங் 52:7எசேக் 8:12ஏசா 59:41 கொரி 3:19எரே 23:24

‘ஒருவரும் என்னைக் காண்பதில்லை’ என்று சொல்லிக்கொள்கிறாய்.

நீ உன் உள்ளத்தில்

‘நான்தான், எனக்கு நிகர் யாருமே இல்லை’ என்று சொல்லும்போது,

உன் ஞானமும் உன் அறிவும் உன்னைத் தவறான வழியில் நடத்துகின்றன.

பேராபத்து உன்மேல் வரும், 1 தெச 5:3வெளி 18:9-10தானி 5:25-30யாத் 12:29-30எரே 51:39-42லூக் 12:59நெகே 4:11சங் 50:22

அதை மந்திர வித்தையால் எப்படி அகற்றுவது என நீ அறியமாட்டாய்;

உன்மேல் பெரும் துன்பம் வரும்,

எதை ஈடாகக் கொடுத்தும் அதை உன்னால் தவிர்த்துக் கொள்ளமுடியாது.

நீ முன்னதாகவே அறிந்துகொள்ள முடியாத

ஒரு பேரழிவு உன்மேல் திடீரென வரும்.

“நீ தொடர்ந்து உன் மந்திரங்களைச் சொல்லு, அப் 13:8-12ஏசா 47:9-10எரே 2:28நாகூ 3:4தானி 5:7-9யாத் 7:11யாத் 8:18-19யாத் 8:7

பலவிதமான உன் மாந்திரீக வேலைகளில் ஈடுபடு;

இதைத்தான் உன் சிறுவயதிலிருந்தே நீ செய்கிறாய்.

அதனால் ஒருவேளை நீ வெற்றி பெறலாம்,

ஒருவேளை நீ பயங்கரத்தைக் கொண்டுவரலாம்.

நீ பெற்றுக்கொண்ட ஆலோசனை எல்லாம் உனக்குச் சோர்வையே உண்டாக்கியது; ஏசா 44:25தானி 2:2-10எசேக் 24:12ஏசா 57:10எரே 51:58தானி 5:15-16தானி 5:30தானி 5:7-8

உன்னுடைய சோதிடர்களும்

நட்சத்திரங்களைப் பார்த்து, மாதந்தோறும் இராசிபலன் கூறுகிறவர்களும் எழும்பி,

உனக்கு நேரிடப் போவதிலிருந்து உன்னைக் காப்பாற்றட்டும்.

உண்மையாகவே அவர்கள் அறுவடை செய்த பயிரின் தாளடியைப்போல் இருக்கிறார்கள்; மல்கி 4:1நாகூ 1:10எசேக் 15:7ஏசா 10:17ஏசா 41:2மத் 10:28ஏசா 30:14ஏசா 40:24

நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்.

நெருப்புச் சுவாலையிலிருந்து

தங்களையே விடுவித்துக்கொள்ள அவர்களால் முடியாது.

அது குளிர்காயக்கூடிய தணலாகவோ,

அருகில் உட்காரத்தக்க நெருப்பாகவோ இருக்காது.

உன் சிறுவயதுமுதல் நீ ஈடுபட்டுத் தொடர்புகொண்டிருந்த, எசேக் 27:12-25ஏசா 56:11எரே 51:6-9வெளி 18:11-19

மந்திரவாதிகளினால் இவற்றை மட்டுமே

உனக்குச் செய்யமுடியும்.

அவர்களில் ஒவ்வொருவனும் தனது தவறான வழியிலேயே போகிறான்;

உன்னைக் காப்பாற்றக் கூடியவன் எவனுமே இல்லை.