ஏசாயா 32

Isaiah 32

நீதியின் பேரரசு

இதோ, நீதியுள்ள ஒரு அரசர் வரப்போகிறார். ஏசா 9:6-7எபி 1:8-9எரே 33:15வெளி 19:112 சாமு 23:3எசேக் 37:24ஓசி 3:5ஏசா 11:4

அவரின்கீழ் ஆளுநர்கள் நீதியோடு ஆளுகை செய்வார்கள்.

ஒவ்வொரு மனிதனும் காற்றுக்கு ஒதுங்கும் ஒதுக்கிடம் போலவும், ஏசா 25:4ஏசா 44:3ஏசா 9:6ஏசா 41:18ஏசா 43:20ஏசா 7:14மீகா 5:4-5சங் 143:9

புயலுக்கு ஒதுங்கும் புகலிடம்போலவும்,

பாலைவனத்தில் நீரோடைகள் போலவும், தாகமுள்ள நிலத்துக்கு,

பெருங்கன்மலையின் நிழல் போலவும் இருப்பான்.

அப்பொழுது, பார்க்கிறவர்களின் கண்கள் ஏசா 29:182 கொரி 4:6அப் 26:18ஏசா 35:5-61 யோவா 2:20-21ஏசா 29:24ஏசா 54:13மாற் 7:37

இனியொருபோதும் மூடப்பட்டிருக்க மாட்டாது;

கேட்கிறவர்களின் காதுகள் கவனித்துக் கேட்கும்.

அவசரக்காரரின் மனம், அறிவை விளங்கிக்கொள்ளும்; ஏசா 29:24லூக் 21:14-15அப் 2:4-12அப் 26:9-11அப் 4:13அப் 6:7யாத் 4:11கலா 1:23

திக்குகின்ற நாவு தங்கு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்.

மூடர் இனி உயர்குடி மக்கள் என அழைக்கப்படமாட்டார்கள்; ஏசா 5:20மல்கி 3:18சங் 15:41 சாமு 25:251 சாமு 25:3-8நீதி 23:6-8

கயவரும் இனி கனப்படுத்தப்படமாட்டார்கள்.

ஏனெனில் மூடர் மூடத்தனமாகவே பேசுகிறார்கள், மத் 15:191 சாமு 24:13அப் 5:3-4அப் 8:21-22ஏசா 3:15மத் 23:13நீதி 11:24-261 சாமு 25:10-11

அவர்களின் மனம் தீமையில் தீவிரமாய் ஈடுபடுகிறது:

அவர்கள் இறை பக்தியற்றவர்களாய் நடந்து,

யெகோவாவைப் பற்றித் தவறானவற்றைப் பரப்புகிறார்கள்.

பசியுள்ளோரைப் பட்டினியாக விட்டு,

தாகமுள்ளோருக்குத் தண்ணீர் கொடுக்க மறுக்கிறார்கள்.

துரோகியின் செயல்முறைகள் கொடுமையானவை, எரே 5:26-28அப் 6:11-13ஏசா 5:23மத் 26:14-16மத் 26:59-60சங் 64:4-61 இராஜா 21:10-14ஏசா 1:23

ஏழைகளின் முறையீடுகள் நியாயமாயிருந்தும்

வஞ்சக வார்த்தைகளால் எளியவர்களை அழிப்பதற்கு

தீய திட்டங்களைத் தீட்டுகிறான்.

ஆனால் உயர்குடி மக்கள் சிறப்பான திட்டங்களை வகுக்கிறார்கள்; 2 சாமு 9:1-13அப் 11:29-30நீதி 11:24-252 கொரி 8:22 கொரி 9:6-11அப் 9:39யோபு 31:16-21லூக் 6:33-35

அவர்களுடைய சிறந்த செயல்களினால் நிலைத்தும் இருக்கிறார்கள்.

எருசலேமின் பெண்கள்

சுகபோக வாழ்வை விரும்பும் பெண்களே, ஏசா 28:23ஏசா 3:16மத் 13:9ஆமோ 6:1-6ஏசா 47:7-8நியாயாதி 9:7எரே 48:11-12எரே 6:2-6

நீங்கள் எழுந்து எனக்குச் செவிகொடுங்கள்.

கவலையற்ற மகள்களே,

நான் சொல்வதைக் கேளுங்கள்.

கவலையற்ற மகள்களே, ஏசா 7:23எரே 8:13ஆப 3:17ஓசி 2:12ஓசி 3:4ஏசா 16:10ஏசா 24:7-12ஏசா 3:17-26

ஒரு வருடமும் சில நாட்களும் ஆனபின்பு நீங்கள் நடுங்குவீர்கள்.

திராட்சை அறுவடை பலனற்றுப் போகும்;

கனிகொடுக்கும் அறுப்புக் காலமும் வருவதில்லை.

பகட்டாக வாழும் பெண்களே, பயந்து நடுங்குங்கள்; ஏசா 3:24உபா 28:48ஓசி 2:3ஏசா 15:3ஏசா 2:19ஏசா 2:21ஏசா 20:4ஏசா 22:4-5

கவலையற்ற மகள்களே, கலங்குங்கள்;

உங்கள் உடைகளைக் களைந்து,

உங்கள் இடைகளில் துக்கவுடைகளை உடுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் செழிப்பான வயல்களுக்காகவும், உபா 11:11-12உபா 8:7-8எசேக் 20:15எசேக் 20:6புலம் 2:11புலம் 4:3-4நாகூ 2:7

கனி நிறைந்த திராட்சைக் கொடிகளுக்காகவும் உங்கள் மார்பில் அடித்துக் கொள்ளுங்கள்.

முட்செடிகளும் முட்புதர்களும் வளர்ந்து நிறைந்த ஓசி 9:6ஏசா 22:2ஏசா 34:13ஏசா 7:23ஓசி 10:8ஏசா 22:12-13ஏசா 5:6ஏசா 6:11

எனது மக்களின் நாட்டிற்காகவும்,

மகிழ்ந்து களிகூர்ந்த வீடுகளுக்காகவும்,

கொண்டாட்டமுடைய நகரத்திற்காகவும் புலம்புங்கள்.

கோட்டை கைவிடப்படும், ஏசா 24:10ஏசா 24:12ஏசா 25:2ஏசா 27:102இராஜா 25:9ஏசா 13:19-22ஏசா 24:1-3ஏசா 34:11-17

இரைச்சல்மிக்க நகரம் வெறுமையாய் விடப்படும்.

அரண்செய்யப்பட்ட நகரமும் காவற்கோபுரமும் என்றென்றும் குகைகளாகும்;

அங்கே காட்டுக் கழுதைகள் மகிழ்ச்சியடையும், மந்தைகள் மேயும்.

உன்னதத்திலிருந்து நம்மேல் இறைவனுடைய ஆவியானவர் ஊற்றப்படும்வரையும், எசேக் 39:29ஏசா 29:17ஏசா 44:3தீத் 3:5-6லூக் 24:49ஏசா 59:19யோவே 2:28-29அப் 2:33

பாலைவனம் செழிப்பான வயலாகும்வரையும்,

செழிப்பான வயல்கள் வனம்போல் காணப்படும்வரையும் இப்படியே இருக்கும்.

அப்பொழுது நீதி பாலைவனத்தில் குடியிருக்கும்; 1 கொரி 6:9-111 பேது 2:9-121 பேது 4:1-4ஓசி 3:5ஏசா 35:8ஏசா 42:4ஏசா 56:6-8ஏசா 60:21

நியாயம் செழிப்பான வளமான வயல்களில் வாழும்.

நீதியினால் வரும் பலன் சமாதானமாயிருக்கும்; ஏசா 26:3சங் 119:165யாக் 3:17-18பிலி 4:6-9ரோம 14:17சங் 85:82 பேது 1:10-111 யோவா 3:18-24

நீதியின் விளைவு என்றென்றைக்கும் அமைதியும் மன நம்பிக்கையுமாயிருக்கும்.

என் மக்கள் சமாதானம் நிறைந்த குடியிருப்புகளிலும், சகரி 2:5ஓசி 2:18-23எரே 33:16எசேக் 34:25-26ஏசா 33:20-22ஏசா 35:9-101 யோவா 4:16எபி 4:9

பாதுகாப்பான வீடுகளிலும்,

தொல்லையில்லாத இளைப்பாறுதலின் இடங்களில் வாழ்வார்கள்.

கல்மழை வனத்தைக் கீழே வீழ்த்தினாலும், ஏசா 28:17ஏசா 26:5ஏசா 28:2ஏசா 30:30சகரி 11:2யாத் 9:18-26எசேக் 13:11-13ஏசா 10:19

பட்டணம் முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டாலும்,

நீர்வளமுள்ள இடங்களில் விதை விதைத்து, பிரச 11:1ஏசா 30:23-24ஏசா 55:10-111 கொரி 3:61 கொரி 9:9-11அப் 2:41அப் 4:4அப் 5:14

சுதந்திரமாய் உங்கள் மந்தைகளையும் கழுதைகளையும் மேய்வதற்கு விடுகிற

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.