தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழ்வான்? சங் 24:3-5சங் 84:4சங் 61:4சங் 92:13சங் 23:6வெளி 21:23-24சங் 43:3-4வெளி 21:3-4
உமது பரிசுத்த மலையில் யார் குடியிருப்பான்?
குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள், நீதி 28:18கொலோ 3:9எபே 4:25நீதி 2:7-8சங் 34:12-131 யோவா 3:7அப் 10:35எபே 2:10
நீதியானதைச் செய்கிறவர்கள்,
உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுகிறவர்கள்;
தம் நாவினால் அவதூறு பேசாதவர்கள், ரோம 13:10சங் 101:5-8மத் 7:12யாக் 4:113 யோவா 1:11லேவி 19:16எரே 9:4-91 பேது 2:1-2
தம் தோழருக்கு அநியாயம் செய்யாதவர்கள்,
மற்றவர்களை நிந்திக்காதவர்கள்;
இழிவானவனை அவமதிப்பவர்கள், நியாயாதி 11:35மத் 5:33சங் 101:6சங் 101:41 யோவா 3:14ஏசா 32:5-6சங் 16:3யோபு 32:21-22
யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்களைக் கனம்பண்ணுகிறவர்கள்;
ஆணையிட்டதினால் துன்பம் நேரிட்டாலும்
மனதை மாற்றாதவர்கள்;
ஏழைகளுக்குத் தம் பணத்தை வட்டியின்றிக் கடனாகக் கொடுப்பவர்கள், உபா 16:19யாத் 22:25எசேக் 22:12உபா 23:19-20எசேக் 18:8மத் 7:21-25யாத் 23:7-8யாக் 1:22-25
குற்றமற்றவர்களுக்கு விரோதமாக இலஞ்சம் வாங்காதவர்கள்.
இவ்வாறு வாழ்கிறவர்கள்
ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.