சங்கீதங்கள் 28

Psalms 28
சங்கீதம் 28

தாவீதின் சங்கீதம்.

யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; சங் 143:7சங் 18:2சங் 88:4-6நீதி 1:12சங் 83:1ஏசா 26:4யோபு 33:28வெளி 20:3

நீர் என் கன்மலை,

எனக்கு செவிகொடாமல் இருக்கவேண்டாம்.

நீர் மவுனமாகவே இருப்பீரானால்,

நான் சவக்குழியில் கிடக்கிறவர்களைப் போலாவேன்.

நான் உதவிக்காக உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, சங் 138:2சங் 141:2சங் 140:61 தீமோ 2:8சங் 134:2சங் 5:7தானி 6:101 இராஜா 6:19

நான் உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக,

என் கைகளை உயர்த்தி

இரக்கத்துக்காக நான் கதறுவதைக் கேளும்.

கொடியவர்களுடனும் சங் 55:21சங் 12:2எரே 9:8-9சங் 26:9மீகா 3:5மத் 25:41நீதி 26:23-26சங் 62:4

தீமை செய்பவர்களுடனும் என்னை இழுத்துக்கொள்ளாதேயும்,

அவர்கள் அயலவருடன் நட்பாகப் பேசுகிறார்கள்;

ஆனால் அவர்களுடைய இருதயங்களிலோ தீங்கை வைத்திருக்கிறார்கள்.

அவர்களுடைய செயல்களுக்காகவும் 2 தீமோ 4:14வெளி 22:12சங் 109:17-21வெளி 18:6எசேக் 38:10எஸ்றா 9:13சங் 103:10சங் 2:1-5

அவர்கள் செய்த தீமைகளுக்காகவும் அவர்களுக்குப் பதில் செய்யும்;

அவர்களுடைய கைகளின் செயலுக்காக அவர்களுக்குப் பதில்செய்து,

அவர்களுக்குத் தக்க தண்டனையை அவர்கள்மீது கொண்டுவாரும்.

யெகோவாவினுடைய செயல்களுக்கும், ஏசா 5:12ரோம 1:28யோவா 12:37யோபு 34:26-27சங் 92:4-62 சாமு 7:13சங் 10:51 இராஜா 11:38

அவருடைய கரங்கள் செய்தவற்றுக்கும் அவர்கள் மதிப்புக் கொடாதபடியால்,

யெகோவா அவர்களை இடித்து வீழ்த்துவார்;

மீண்டும் அவர்களை ஒருபோதும் கட்டியெழுப்பமாட்டார்.

யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்; சங் 31:21-22சங் 107:19-22சங் 118:5சங் 66:19-20சங் 69:33-34சங் 116:1-2

ஏனெனில் இரக்கத்துக்கான எனது கதறலை அவர் கேட்டிருக்கிறார்.

யெகோவாவே என் பெலனும் என் கேடயமுமாயிருக்கிறார்; சங் 30:11-12சங் 56:3-4எபே 6:10ஏசா 61:10ஏசா 12:2சங் 40:3சங் 13:5சங் 118:6-9

என் இருதயம் அவரில் நம்பியிருக்கிறது, அவர் எனக்கு உதவி செய்கிறார்.

என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது;

நான் அவருக்குப் பாட்டினால் துதிகளைச் செலுத்துவேன்.

யெகோவா தமது மக்களின் பெலனானவர்; சங் 20:6சங் 140:7ஏசா 61:11 சாமு 16:13சங் 2:2

தாம் அபிஷேகித்தவருக்கு இரட்சிப்பின் கோட்டையும் அவரே.

இறைவனே உமது மக்களைக் காப்பாற்றி, ஏசா 40:11சங் 78:71உபா 9:29ஏசா 63:91 இராஜா 8:51எபே 1:18மத் 2:61 இராஜா 8:53

உமது உரிமைச்சொத்தான அவர்களை ஆசீர்வதியும்;

அவர்களுடைய மேய்ப்பராயிருந்து அவர்களை என்றென்றும் தாங்கிக்கொள்ளும்.