இயேசுவின் பாதத்தில் நறுமணத்தைலம் ஊற்றுதல்
பஸ்கா என்ற பண்டிகைக்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். இங்குதான் இயேசு மரித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பிய லாசரு வாழ்ந்தான். மாற் 14:3-8யோவா 11:1லூக் 24:50யோவா 11:55மத் 21:17யோவா 11:44யோவா 12:20மத் 26:6-11 அங்கே அவர்கள் இயேசுவுக்கு ஒரு விருந்து கொடுத்தார்கள். மார்த்தாள் உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். லாசருவோ இயேசுவுடனே சாப்பாட்டுப் பந்தியில் உள்ளவர்களில் ஒருவனாக இருந்தான். லூக் 22:27வெளி 3:20லூக் 10:38-42யோவா 12:9-10மாற் 14:3யோவா 11:43-44லூக் 12:37மத் 26:6 அப்பொழுது மரியாள், மிகவும் விலை உயர்ந்த நளதம் என்னும் நறுமணத் தைலத்தில் அரை லிட்டர் 1 கொண்டுவந்து, அதை அவள் இயேசுவின் பாதங்களில் ஊற்றி, அவருடைய பாதங்களைத் தனது கூந்தலால் துடைத்தாள். அந்த நறுமணத் தைலத்தின் வாசனை வீட்டை நிரப்பியது. மாற் 14:3-9யோவா 11:2லூக் 10:38-39லூக் 7:37-38மத் 26:6-13யோவா 11:32யோவா 11:28லூக் 7:46
ஆனால் இயேசுவின் சீடர்களில் ஒருவனான யூதாஸ் ஸ்காரியோத்து இதை எதிர்த்தான். இவனே பின்னர் இயேசுவைக் காட்டிக்கொடுத்தவன். மத் 10:41 சாமு 17:28-29யோவா 13:2யோவா 18:2-5பிரச 4:4யோவா 13:26யோவா 6:70-71லூக் 6:16 அவன், “இந்த நறுமணத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு 2 விற்று, அந்தப் பணத்தை ஏன் ஏழைகளுக்குக் கொடுக்கவில்லை? அதன் மதிப்பு ஒரு வருட சம்பளமாய் இருக்கிறதே!” என்றான். லூக் 12:33லூக் 18:22மத் 26:8-9மாற் 14:4-5லூக் 6:41மல்கி 1:10-13ஆமோ 8:5யாத் 5:17 யூதாஸ் ஏழைகளைக் குறித்து அக்கறையுடையவனாய் இருந்ததினால் இதைச் சொல்லவில்லை; திருடனாயிருந்தபடியாலேயே இப்படிச் சொன்னான். பணப்பைக்குப் பொறுப்பாய் இருந்த அவன், அதில் போடப்படும் பணத்திலிருந்து தனக்காக எடுத்துக்கொள்வதுண்டு. யோவா 13:29சங் 50:16-20யாக் 2:6யாக் 2:22இராஜா 5:20-271 கொரி 6:10கலா 2:102இராஜா 12:14-15
ஆனால் இயேசுவோ, “மரியாளை விட்டுவிடுங்கள். என்னை அடக்கம்பண்ணும் நாளுக்கென்றே இவள் இந்தத் தைலத்தை வைத்திருந்தாள். மத் 26:12மாற் 14:6மத் 26:10மத் 27:57-60யோவா 19:38-42லூக் 23:50மாற் 15:42-47சங் 109:31 ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள், 3 ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன்” என்றார். உபா 15:11மாற் 14:7யோவா 12:35மத் 26:11யோவா 13:33யோவா 8:21அப் 1:9-11யோவா 16:5-7
இதற்கிடையில் இயேசு அங்கே இருக்கிறார் என்று யூதர்கள் அறிந்து, ஒரு பெருங்கூட்டமாய் அங்கே வந்தார்கள். அவர்கள் இயேசுவைப் பார்ப்பதற்காக மாத்திரமல்ல, மரித்ததோரில் இருந்து உயிருடன் அவர் எழுப்பிய லாசருவையும் பார்ப்பதற்கு வந்தார்கள். அப் 4:14அப் 3:10-11யோவா 11:43-45 எனவே தலைமை ஆசாரியர்கள் லாசருவையும் கொல்வதற்குத் திட்டம் வகுத்தார்கள். லூக் 16:31ஆதி 4:4-10யோவா 11:47-53மத் 2:16தானி 5:21-23பிரச 9:3யாத் 10:3யோவா 11:57 ஏனெனில் லாசருவின் நிமித்தம் யூதர்களில் பலர் இயேசுவினிடத்தில் போய் அவரில் விசுவாசம் வைத்தார்கள். யோவா 11:45அப் 13:45யாக் 3:14-16யோவா 12:18யோவா 11:48யோவா 15:18-25யோவா 7:31
இயேசுவின் ஊர்வலம்
மறுநாள் பண்டிகைக்காக வந்திருந்த பெருந்திரளான மக்கள் இயேசு எருசலேமுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டார்கள். மாற் 11:7-10லூக் 19:35-38மத் 21:4-9யோவா 11:55-56 அவர்கள் குருத்தோலைகளை எடுத்துக்கொண்டு அவரைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். அவர்கள், சங் 118:25-26வெளி 15:3லூக் 19:35-38மத் 21:9-11மாற் 11:8-10வெளி 7:9ஓசி 3:5யோவா 1:49
“ஓசன்னா! 4”
“கர்த்தருடைய பெயரால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!”
“இஸ்ரயேலின் அரசர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!”
என்று ஆர்ப்பரித்தார்கள்.
இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன்மேல் உட்கார்ந்தார். ஏனெனில் அவரைக்குறித்து எழுதப்பட்டிருக்கிறதாவது: சகரி 9:9மத் 21:1-7மாற் 11:1-7லூக் 19:29-35
“சீயோன் மகளே, பயப்படாதே; சகரி 9:9ஏசா 62:11செப்ப 3:16-17ஏசா 35:4-52 சாமு 16:2உபா 17:16ஏசா 40:9-10ஏசா 41:14
இதோ உன்னுடைய அரசர்
கழுதைக் குட்டியின்மேல் வருகிறார்.” 5
ஆரம்பத்திலே அவருடைய சீடர்கள் இதையெல்லாம் விளங்கிக்கொள்ளவில்லை. இயேசு மகிமைப்பட்ட பின்பே, இவை எல்லாம் அவரைக்குறித்து இறைவாக்கினரால் எழுதப்பட்டிருந்தன என்றும், இவற்றை மக்கள் அவருக்கு அப்படியே செய்தார்கள் என்றும் உணர்ந்துகொண்டார்கள். யோவா 2:22யோவா 14:26யோவா 7:39அப் 2:36யோவா 12:23அப் 2:33அப் 3:13எபி 12:2
இயேசு லாசருவைக் கல்லறையிலிருந்து கூப்பிட்டு, அவனை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினபோது, அவருடன் இருந்த மக்கள் கூட்டம் தொடர்ந்து இந்தச் செய்தியைப் பரப்பினார்கள். 1 யோவா 5:9-12வெளி 1:2அப் 1:22அப் 5:32யோவா 12:9யோவா 19:35யோவா 1:19யோவா 1:32 அநேக மக்கள் இயேசு இப்படிப்பட்ட ஒரு அடையாளத்தைச் செய்தார் என்று கேள்விப்பட்டதினால், அவரைச் சந்திப்பதற்குச் சென்றார்கள். யோவா 12:11 அப்பொழுது பரிசேயர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “நம்மால் ஒன்றுமே செய்யமுடியாமல் இருக்கிறதே. பாருங்கள்! முழு உலகமும் அவருக்குப் பின்னால் எப்படிப்போகிறது” என்றார்கள். அப் 17:6அப் 4:16-17சங் 22:271 யோவா 2:2அப் 5:27-28ஏசா 27:6யோவா 17:21யோவா 3:26
இயேசு தன்னுடைய மரணத்தை முன்னறிவித்தல்
பண்டிகையிலே ஆராதிப்பதற்காகப் போனவர்களிடையே சில கிரேக்கர்கள் இருந்தார்கள். யோவா 7:35அப் 17:4ஏசா 11:101 இராஜா 8:41-43அப் 8:27மாற் 7:26கலா 2:3அப் 14:1 அவர்கள் பிலிப்புவினிடத்தில் வந்து, “ஐயா, நாங்கள் இயேசுவைப் பார்க்க விரும்புகிறோம்” என்றார்கள். இந்த பிலிப்பு கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்தவன். மத் 2:2லூக் 19:2-4யோவா 14:8-9யோவா 6:40யோவா 1:36-39யோவா 1:43-47மத் 11:21மத் 15:22-28 பிலிப்பு போய் அந்திரேயாவுக்கு அதைச் சொன்னான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் போய் இயேசுவினிடத்தில் அதைப்பற்றி சொன்னார்கள். யோவா 1:40-41லூக் 9:49-50மாற் 10:13-14யோவா 6:8மத் 10:5
அப்பொழுது இயேசு, “மானிடமகன் மகிமைப்படுவதற்கான வேளை வந்துவிட்டது. யோவா 13:31-32யோவா 17:1-5மாற் 14:411 பேது 2:9-10ஏசா 49:5-6ஏசா 60:9ஏசா 53:10-12ஏசா 55:5 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்கிறேன், ஒரு கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகாவிட்டால், அது ஒரு தனித்த விதையாகவே இருக்கும். ஆனால் அது செத்தாலோ, அநேக விதைகளை விளையச் செய்யும். 1 கொரி 15:36-38ஏசா 53:10-12எபி 2:9-10யோவா 12:32-33சங் 72:16வெளி 7:9-17சங் 22:22-31சங் 22:15 தமது வாழ்வை நேசிக்கிறவர்கள், அதை இழந்துபோவார்கள். ஆனால் இந்த உலகத்திலே தமது வாழ்வை வெறுக்கிறவர்களோ, நித்திய வாழ்வுக்கென அதைக் காத்துக்கொள்வார்கள். மத் 10:39லூக் 9:23-24மாற் 8:35லூக் 17:33மத் 16:25லூக் 14:26அப் 20:24மத் 19:29 எனக்கு ஊழியம் செய்கிறவர்கள் யாரோ அவர்கள் என்னைப் பின்பற்றவேண்டும். நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என்னுடைய ஊழியக்காரர்களும் இருப்பார்கள். எனக்கு ஊழியம் செய்கிறவர்களை என் பிதா கனம்பண்ணுவார். கொலோ 3:241 சாமு 2:30கலா 1:10யோவா 10:27யோவா 17:241 யோவா 5:3ரோம 1:11 தெச 4:17-18
“இப்பொழுது என் உள்ளம் கலங்குகிறது. நான் என்ன சொல்வேன்? ‘பிதாவே, இந்தத் துன்ப வேளையிலிருந்து என்னை காத்துக்கொள்ளும்’ என்று சொல்வேனோ? இல்லையே, இந்தக் காரணத்திற்காகத்தானே நான் வந்தேன்; இதற்காகவே நான் இந்த வேளைக்குள் வந்தேன். யோவா 12:23எபி 5:7ஏசா 38:15யோவா 13:21மத் 26:38-39மத் 26:42மாற் 14:33-36சங் 88:3 ‘பிதாவே உம்முடைய பெயரை மகிமைப்படுத்தும்!’ ” என்றார். யோவா 13:31-32மத் 26:42யோவா 11:40-44வெளி 5:9-14ஏசா 49:3-7மத் 17:5மத் 3:17பிலி 1:6-11
அப்பொழுது, “நான் அதை மகிமைப்படுத்தியிருக்கிறேன். அதைத் திரும்பவும் மகிமைப்படுத்துவேன்” என்று பரலோகத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. அங்கு கூடியிருந்து அதைக்கேட்ட மக்கள், “வானத்தில் முழக்கம் உண்டாகியது” என்றார்கள். வேறுசிலரோ, “ஒரு இறைத்தூதன் இயேசுவுடனே பேசினான்” என்றார்கள். யோபு 37:2-5வெளி 14:2வெளி 6:1யாத் 19:16யாத் 20:18எசேக் 10:5யோபு 40:9அப் 23:8-9
இயேசுவோ, “இந்தக் குரல் உங்களுக்காகத் தொனித்ததே ஒழிய, எனக்காக அல்ல. யோவா 11:422 கொரி 8:9யோவா 11:15யோவா 5:34 இதுவே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு ஏற்படும் வேளையாக இருக்கிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி வெளியே துரத்தப்படுவான். 2 கொரி 4:41 யோவா 3:81 யோவா 5:19யோவா 14:30எபே 6:12கொலோ 2:15எபி 2:14வெளி 20:2-3 ஆனால் நானோ, இந்தப் பூமியிலிருந்து உயர்த்தப்படும்போது, எல்லாரையும் என்னிடமாய் கவர்ந்துகொள்வேன்” என்றார். யோவா 3:14யோவா 8:281 பேது 2:241 யோவா 2:2யோவா 1:71 தீமோ 2:6கலா 3:13எபி 2:9 எவ்விதமான மரணம் அவருக்கு ஏற்படப்போகிறது என்பதைக் காண்பிப்பதற்காகவே அவர் இதைச் சொன்னார். யோவா 18:32யோவா 21:19
அப்பொழுது அங்கு கூடியிருந்த மக்கள், “கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று சட்டத்திலிருந்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்க மானிடமகன் உயர்த்தப்பட வேண்டும் என்று நீர் எப்படிச் சொல்லலாம்? யார் அந்த மானிடமகன்?” என்றார்கள். எசேக் 37:24-25ஏசா 9:7தானி 7:14சங் 110:4தானி 2:44தானி 7:272 சாமு 7:13யோவா 3:14-16
அப்பொழுது இயேசு அவர்களிடம், “இன்னும் சிறிது காலத்திற்கே வெளிச்சம் உங்களோடு இருக்கப்போகிறது. இருள் உங்களை மூடிக்கொள்ளும் முன்னதாக, வெளிச்சம் உங்களுடன் இருக்கும்போதே, நீங்கள் அதில் நடந்துகொள்ளுங்கள். இருளிலே நடக்கிறவன், தான் எங்கே போகிறான் என்று அறியாதிருக்கிறான். யோவா 12:46யோவா 16:161 யோவா 1:6-7எபே 5:8யோவா 8:12யோவா 11:10எரே 13:16-17யோவா 12:36 வெளிச்சம் உங்களிடம் இருக்கும்போதே, அந்த வெளிச்சத்தை விசுவாசியுங்கள். அப்பொழுது நீங்கள் வெளிச்சத்திற்குரிய மகன்களாயிருப்பீர்கள்” என்றார். இயேசு இதைச் சொன்னபின்பு அவர்களைவிட்டுப் புறப்பட்டு மறைவாக சென்றுவிட்டார். எபே 5:81 தெச 5:5யோவா 8:59அப் 13:47-48ஏசா 60:1யோவா 1:7லூக் 16:81 யோவா 2:9-11
யூதர்களின் அவிசுவாசம்
இயேசு இத்தனை அடையாளங்களை எல்லாம் யூதர்களுக்கு முன்பாக செய்த போதிலும், அவர்களில் பலர் அவரில் விசுவாசம் வைக்காமலேயே இருந்தார்கள். லூக் 16:31யோவா 1:11யோவா 15:24யோவா 11:42மத் 11:20 இறைவாக்கினன் ஏசாயாவின் மூலம் கூறப்பட்ட வார்த்தை நிறைவேறும்படியாகவே இது நடந்தது: ஏசா 53:1ரோம 10:16ரோம 10:201 கொரி 1:242 கொரி 4:3-62 கொரி 3:14-18அப் 13:27-29அப் 8:28-30
“ஆண்டவரே, எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்?
கர்த்தருடைய கரம் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?” 6
என்று அவன் கூறியிருக்கிறான்.
இந்தக் காரணத்தினாலேயே அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. ஏனெனில் ஏசாயா வேறொரு இடத்தில் சொல்லியிருப்பதாவது: 2 பேது 2:14ஏசா 6:9-10யோவா 10:38யோவா 5:44யோவா 6:44ஏசா 44:18-20
“கர்த்தர் அவர்களுடைய கண்களைக் குருடாக்கிவிட்டார். ஏசா 6:10மத் 13:13-15லூக் 8:10மாற் 4:12ஓசி 6:1ஏசா 29:10ஏசா 57:18-19யோசு 11:20
அவர்களுடைய இருதயத்தையோ கடினப்படுத்திவிட்டார்.
இதனாலேயே அவர்கள் தங்களுடைய கண்களால் காணாமலும்,
தங்கள் இருதயங்களினால் உணராமலும் இருக்கிறார்கள்.
நான் அவர்களை குணமாக்கும்படி,
அவர்களால் என்னிடம் மனந்திரும்பி வரமுடியவும் இல்லை.” 7
ஏசாயா கர்த்தரின் மகிமையைக் கண்டு அவரைக்குறித்துப் பேசியபோதே இதைச் சொன்னான். ஏசா 6:1-5ஏசா 6:9-10யோவா 1:142 கொரி 4:6யோவா 1:18யோவா 5:39எபி 1:3யோவா 14:9
ஆனால் அதிகாரிகளில் பலர், அவரில் விசுவாசம் வைத்தார்கள். ஆனாலும் பரிசேயர்களின் நிமித்தம் அவர்கள் தங்கள் விசுவாசத்தைக்குறித்து வெளிப்படையாய் பேசவில்லை. அப்படிப் பேசினால் யூதருடைய ஜெப ஆலயத்திலிருந்து தாங்கள் வெளியேற்றப்படலாம் என்று அவர்கள் பயந்தார்கள். ஏசா 51:7யோவா 7:13யோவா 9:22மத் 10:32நீதி 29:25ஏசா 66:5யோவா 19:38யோவா 11:45 ஏனெனில் இறைவனிடமிருந்து வரும் புகழ்ச்சியைவிட, மனிதரிடமிருந்து வந்த புகழ்ச்சியை அவர்கள் விரும்பினார்கள். யோவா 5:44மத் 23:5-7யோவா 5:41லூக் 16:152 கொரி 10:181 தெச 2:6லூக் 19:171 பேது 1:7-8
அப்பொழுது இயேசு உரத்த குரலில் சொன்னதாவது: “யாராவது என்னில் விசுவாசம் வைக்கும்போது, அவர்கள் என்னிடத்தில் மாத்திரம் அல்ல என்னை அனுப்பியவரிலும் விசுவாசம் வைக்கிறார்கள். மத் 10:40யோவா 5:24யோவா 13:20மாற் 9:37யோவா 7:281 பேது 1:21நீதி 8:1ஏசா 55:1-3 அவர்கள் என்னை நோக்கிப் பார்க்கும்போது, என்னை அனுப்பியவரை அவர்கள் காண்கிறார்கள். யோவா 14:9-102 கொரி 4:6கொலோ 1:15எபி 1:3யோவா 12:41யோவா 15:241 யோவா 5:20 என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவர்கள் தொடர்ந்து இருளில் இராதபடிக்கே, நான் இந்த உலகத்திற்கு வெளிச்சமாய் வந்திருக்கிறேன். யோவா 8:12சங் 36:9ஏசா 42:7யோவா 9:5யோவா 12:35-36அப் 26:18யோவா 1:4-5யோவா 3:19
“என்னுடைய வார்த்தையைக் கேட்டும் அதைக் கைக்கொள்ளாதவனையோ, நான் இப்போது நியாயந்தீர்ப்பதில்லை. ஏனெனில் உலகத்தை நியாயந்தீர்க்க நான் வரவில்லை. அதை இரட்சிக்கவே நான் வந்தேன். யோவா 3:17யோவா 12:48யோவா 8:15-161 தீமோ 1:15-161 யோவா 4:14லூக் 19:10யோவா 5:45மத் 20:28 என்னைப் புறக்கணித்து என் வார்த்தையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு ஒரு நீதிபதி உண்டு; அது நான் பேசிய இந்த வார்த்தையே ஆகும். அது கடைசி நாளில் அவர்களை நியாயந்தீர்க்கும். லூக் 10:16எபி 9:27-28ரோம 2:162 தெச 1:8யோவா 11:24யோவா 3:17-20எபி 12:25எபி 10:29-31 ஏனெனில் நான் என்னுடைய சுயவிருப்பத்தின்படி பேசவில்லை. என்னை அனுப்பிய பிதாவே நான் என்ன சொல்லவேண்டும் என்றும், அதை எப்படிச் சொல்லவேண்டும் என்றும் எனக்குக் கட்டளையிட்டார். யோவா 14:10யோவா 5:30யோவா 8:26யோவா 17:8உபா 18:18யோவா 14:31யோவா 15:15யோவா 8:42 அவருடைய கட்டளை நித்திய வாழ்வுக்கு வழிநடத்துகிறது என்று எனக்குத் தெரியும். எனவே பிதா எனக்குச் சொல்லும்படி சொன்னதையே நான் சொல்கிறேன்” என்றார். யோவா 17:3யோவா 6:681 யோவா 5:20யோவா 6:631 யோவா 2:251 யோவா 3:23-241 யோவா 5:11-131 தீமோ 1:16