ஏசாயா 35

Isaiah 35

மீட்கப்பட்டோரின் மகிழ்ச்சி

பாலைவனமும் வறண்ட நிலமும் மகிழும். எசேக் 36:35ஏசா 51:3ஏசா 55:12-13ஏசா 27:6ஏசா 52:9-10ஏசா 4:2வெளி 19:1-7ஓசி 14:5-6

வனாந்திரம் மகிழ்ந்து பூக்கும்.

அது லீலி பூப்பதுபோல் பூக்கும். அது வளமாய் வளர்ந்து ஏசா 25:9ஏசா 60:13ரோம 10:15ஆப 2:14ஆமோ 9:13-15ஏசா 60:1-3ஏசா 40:5ஏசா 55:12-13

மகிழ்ச்சியுடன் ஆனந்த சத்தமிடும்.

லெபனோனின் மகிமையும்,

கர்மேல், சாரோனின் சிறப்பும் அதற்குக் கொடுக்கப்படும்.

யெகோவாவின் மகிமையையும்,

நமது இறைவனின் மகத்துவத்தையும் காண்பார்கள்.

தளர்ந்த கைகளைப் பலப்படுத்துங்கள், எபி 12:12யோபு 4:3-4லூக் 22:32ஏசா 57:14-16அப் 18:23யோபு 16:5லூக் 22:43நியாயாதி 7:11

தள்ளாடும் முழங்கால்களைத் திடப்படுத்துங்கள்.

இருதயத்தில் பதற்றமுள்ளோருக்கு, யாக் 5:7-9ஏசா 41:10-14செப்ப 3:16-17எபே 6:10ஆகா 2:4ஏசா 34:81 நாளாக 28:20ஏசா 33:22

“திடன்கொள்ளுங்கள், பயப்படாதிருங்கள்;

இதோ, உங்கள் இறைவன்

உங்கள் பகைவரை பழிதீர்க்கவும்,

பதிலளிக்கவும் வருவார்,

அவர் வந்து உங்களை விடுவிப்பார்” என்று சொல்லுங்கள்.

அப்பொழுது குருடரின் கண்கள் பார்வை பெறும், ஏசா 42:6-7லூக் 7:20-23ஏசா 29:18மத் 11:3-5ஏசா 32:3-4சங் 146:8யோவா 9:39ஏசா 50:4

செவிடரின் காதுகளும் திறக்கப்படும்.

முடவன் மானைப்போல் துள்ளுவான், யோவா 5:8-9யோவா 7:37-39லூக் 11:14ஏசா 32:4மத் 12:22மத் 9:32-33சங் 51:15லூக் 1:64

ஊமையின் நாவும் ஆனந்த சத்தமிடும்;

வனாந்திரத்திலிருந்து தண்ணீரும்,

பாலைவனத்திலிருந்து நீரோடைகளும் பாயும்.

சுடுமணல் நீர்த் தடாகமாகும், அப் 26:18ஏசா 49:10யோவா 4:14ஏசா 34:131 யோவா 5:19-20ஏசா 13:22யோவா 7:38வெளி 18:2

வறண்ட நிலம் நீரூற்றுகளுமாய் பொங்கிவரும்.

நரிகள் தங்கும் இடங்களில்

புல்லும், கோரையும், நாணலும் வளர்ந்து நிற்கும்.

அங்கே பிரதான வீதி ஒன்றிருக்கும், மத் 7:13-14ஏசா 42:16யோவா 14:61 பேது 1:14-15வெளி 21:27எபி 10:20-231 பேது 2:9-102 தீமோ 1:9

அது பரிசுத்த வழி எனப்படும்.

அசுத்தர் அதன் வழியே கடந்து செல்லமாட்டார்கள்.

இறைவனுடைய வழியில் நடப்பவர்களுக்கென்றே அது இருக்கும்.

கொடிய மூடர் அதில் திரியமாட்டார்கள்.

அங்கு சிங்கம் இருப்பதில்லை; எசேக் 34:25ஏசா 62:12யாத் 15:13ஓசி 2:18ஏசா 11:6-9ஏசா 30:6ஏசா 63:4ஏசா 65:25

எந்தவொரு கொடிய மிருகமாவது அங்கே செல்வதில்லை,

அங்கே காணப்படுவதுமில்லை.

மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.

யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள். ஏசா 30:19வெளி 21:4ஏசா 25:8ஏசா 51:10-11ஏசா 65:19எரே 33:11யூதா 1:21வெளி 14:1-4

அவர்கள் பாடலுடன் சீயோனுக்குள் செல்வார்கள்;

நித்திய மகிழ்ச்சி அவர்களுடைய தலையின்மேலிருக்கும்.

மகிழ்ச்சியும், ஆனந்தமும் அடைவார்கள்,

துக்கமும் பெருமூச்சும் பறந்தோடிவிடும்.