பிரசங்கி 4

Ecclesiastes 4

ஒடுக்குதலும் நட்பின்மையும்

மீண்டும் நான் பார்த்தபோது: பிரச 3:16பிரச 5:82 தீமோ 4:16-17ஏசா 5:7ஏசா 51:23ஏசா 59:13-15யாக் 5:4யோபு 35:9

சூரியனுக்குக் கீழே அநேக ஒடுக்குதல்களைக் கண்டேன்.

ஒடுக்கப்படுகிறவர்களின் கண்ணீரையும்,

அவர்களை ஆறுதல்படுத்த யாரும் இல்லாதிருப்பதையும் கண்டேன்;

அவர்களை ஒடுக்குவோரின் பக்கத்திலேயே வல்லமை இருந்தது,

அவர்களை ஆறுதல்படுத்த யாருமே இல்லை.

ஆதலால் இன்னும் உயிரோடிருந்து யோபு 3:11-26பிரச 2:17பிரச 9:4-6

வாழ்கிறவர்களைப் பார்க்கிலும்,

ஏற்கெனவே செத்து மடிந்துபோனவர்களே

மகிழ்ச்சிக்குரியவர்கள் என்று அறிவித்தேன்.

இவ்விரு கூட்டத்தினரைவிட, லூக் 23:29பிரச 6:3-5மத் 24:19பிரச 2:17எரே 20:17-18எரே 9:2-3யோபு 10:18-19யோபு 3:10-16

இன்னமும் பிறவாதவர்களே மேலானவர்கள்.

அவர்கள் சூரியனுக்குக் கீழே

செய்யப்படும் தீமையைக் காணவில்லையே.

தனது அயலவனைக் குறித்து மனிதன் கொண்டிருக்கும் பொறாமையிலிருந்தே, எல்லா உழைப்பும் திறமையும் ஏற்படுகிறது என்று நான் கண்டுகொண்டேன். இதுவும் அர்த்தமற்றதே; காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே. 1 யோவா 3:12பிரச 1:14பிரச 2:21பிரச 2:261 சாமு 18:14-161 சாமு 18:29-301 சாமு 18:8-9பிரச 4:16

மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு ஏசா 9:20நீதி 6:10-11நீதி 13:4யோபு 13:14நீதி 20:4நீதி 11:17நீதி 12:27நீதி 24:33-34

தன்னையே அழித்துக்கொள்கிறான் 1.

காற்றைத் துரத்திப்பிடிப்பது போன்ற பயனற்ற உழைப்பினால், நீதி 15:16-17நீதி 16:8சங் 37:16நீதி 17:1

இரு கைகளையும் நிரப்புவதைவிட,

மன அமைதியுடன் ஒரு கையை நிரப்பிக்கொள்வது மேலானது.

சூரியனுக்குக் கீழே இன்னும் அர்த்தமற்ற ஒன்றை நான் கண்டேன்: பிரச 4:1சங் 78:33சகரி 1:6

தனிமையாய் இருக்கும் ஒரு மனிதன் இருந்தான். 1 யோவா 2:16நீதி 27:20லூக் 12:20பிரச 1:8பிரச 1:13மத் 11:28பிரச 4:9-12பிரச 5:10

அவனுக்கு மகனோ, சகோதரனோ இல்லை.

அப்படியிருந்தும் அவனுடைய கடும் உழைப்பிற்கோ முடிவே இருக்கவில்லை.

ஆனாலும் அவன் கண்கள் அவனுடைய செல்வத்தில் திருப்தியடையவுமில்லை.

அவன், “நான் யாருக்காக கஷ்டப்பட்டு உழைக்கிறேன்;

ஏன் நான் என் வாழ்வை சந்தோஷமாய் அனுபவியாதிருக்கிறேன்” என்று கேட்டான்.

இதுவும் அர்த்தமற்றதும்,

அவலத்துக்குரிய ஒரு நிலையாயும் இருக்கிறது.

தனியொருவனாய் இருப்பதைப் பார்க்கிலும், இருவராய் இருப்பது நல்லது. நீதி 27:17ஆதி 2:181 கொரி 12:18-21மாற் 6:7எண் 11:14யோவா 4:36ரூத் 2:12அப் 13:2

ஏனெனில் அவர்கள் தங்கள் வேலையிலிருந்து நல்ல பயனைப் பெறுவார்கள்.

ஒருவன் விழுந்தால், 1 தெச 5:111 தெச 4:18கலா 6:1ஏசா 35:3-4யோபு 4:3-41 சாமு 23:16லூக் 22:31-322 சாமு 12:7-14

அவன் நண்பன் அவன் எழும்ப உதவிசெய்ய முடியும்.

ஆனால் கீழே விழும்போது எழுந்திருக்க உதவிசெய்ய யாரும் இல்லாத மனிதனோ,

பரிதாபத்திற்குரியவன்.

அத்துடன் இருவர் ஒன்றாய்ப் படுத்திருந்தால், 1 இராஜா 1:1-4

தங்களை சூடாக வைத்துக்கொள்வார்கள்.

ஆனால் ஒருவன் தனிமையாய் தன்னை எப்படிச் சூடாக வைத்துக்கொள்ள முடியும்.

ஒரு தனி மனிதன் இலகுவில் வீழ்த்தப்படலாம்; தானி 3:16-17எபே 4:32 சாமு 23:92 சாமு 23:232 சாமு 23:18-192 சாமு 23:16

ஆனால் இருவராய் இருந்தால் அவர்கள் தங்களைக் காத்துக்கொள்வார்கள்.

முப்புரிக்கயிறு விரைவில் அறாது.

உயர்வும் அர்த்தமற்றது

எச்சரிப்பை ஏற்றுக்கொள்ளத் தெரியாத முதியவனும் மூடனுமான அரசனைவிட, ஞானமுள்ள ஏழை வாலிபனே சிறந்தவன். 2 நாளாக 25:16நீதி 19:12 நாளாக 16:9-10நீதி 28:15-161 இராஜா 22:8பிரச 9:15-16ஆதி 37:2நீதி 28:6 அந்த வாலிபன் சிறையில் இருந்து அரச பதவிக்கு உயர்ந்திருக்கலாம். அல்லது தனது ஆட்சிக்குரிய பிரதேசத்தில் ஏழ்மையில் பிறந்திருக்கலாம். ஆதி 41:14சங் 113:7-8யோபு 5:11புலம் 4:202இராஜா 24:122இராஜா 24:62இராஜா 25:27-302இராஜா 25:7 சூரியனுக்குக் கீழே வாழ்ந்து நடந்த யாவரும் அரசனுக்குப்பின், அவனுடைய இடத்தில் வந்த வாலிபனையே பின்பற்றுவதைக் கண்டேன். 2 சாமு 15:6 அப்படி அவனைப் பின்பற்றுகிற மக்களுக்கு முடிவே இல்லை. ஆனால் அதற்குப் பிறகு வந்த சந்ததியோ புதிதாக ஆட்சிக்கு வந்தவனில் பிரியப்படவில்லை. இதுவும் அர்த்தமற்றதே, காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே. பிரச 1:141 இராஜா 1:40பிரச 2:171 இராஜா 1:5-71 இராஜா 12:10-162 சாமு 15:12-132 சாமு 18:7-82 சாமு 19:9