பிரசங்கி 12

Ecclesiastes 12

நீ உன் வாலிப காலத்தில் புலம் 3:27பிரச 11:8சங் 71:17-18நீதி 22:6லூக் 18:16சங் 34:112 தீமோ 3:151 சாமு 16:12-13

உன்னைப் படைத்தவரை நினைவில்கொள்;

துன்ப நாட்கள் வராததற்குமுன்னும்,

“வாழ்க்கையில் எனக்கு இன்பம் இல்லை”

என்று நீ சொல்லும் வருடங்கள் வரும்முன்னும் அவரை நினைவிற்கொள்.

அதாவது சூரியனும், வெளிச்சமும், ஏசா 5:301 சாமு 3:21 சாமு 4:151 சாமு 4:18பிரச 11:7-8எசேக் 32:7-8ஆதி 27:1ஆதி 48:10

சந்திரனும், நட்சத்திரங்களும் உங்கள் கண்களுக்கு மங்கலாய்த் தோன்றுமுன்னும்,

மழைக்குப்பின் மேகங்கள் திரும்பவும் தோன்றுமுன்னும் அவரை நினைவிற்கொள்.

வீட்டுக் காவலாளிகள் 1 தங்கள் முதுமையில் தள்ளாட, சங் 90:9-10சங் 102:231 சாமு 3:22 சாமு 21:15-17ஆதி 27:1ஆதி 48:10சகரி 8:4

பெலமுள்ளவர் கூனிப்போய் 2,

அரைக்கும் பெண்கள் 3 வெகுசிலராகி,

ஜன்னல் வழியாகப் பார்ப்பவர்கள் 4 ஒளி இழக்குமுன்னும் அவரை நினைவிற்கொள்.

வீதிக்குப் போகும் கதவுகள் அடைக்கப்பட்டு எரே 25:102 சாமு 19:35வெளி 18:22

அரைக்கும் சத்தம் குறைந்துபோக,

பறவைகளின் சத்தத்திற்கும் உறக்கம் கலைக்க,

இசைக்கும் மகளிரின் சத்தம் தொய்ந்து போகுமுன்னும் உன்னைப் படைத்தவரை நினை.

மேடான இடங்களுக்கும், யோபு 17:13எரே 9:17-20யோபு 30:23நீதி 16:31ஆதி 50:3-10யோபு 15:10லேவி 19:32சங் 49:10-14

வீதியிலுள்ள ஆபத்திற்கும் பயப்படும் முன்னும்,

வாதுமை மரம் பூக்கும் 5 முன்னும்,

வெட்டுக்கிளியைப் போல நடை தளர்ந்து போகுமுன்னும்,

ஆசையும் அற்றுப்போகுமுன்னும்,

மனிதன் தன் நித்திய வீட்டிற்குப் போகிறதினாலே

துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியில் கடந்து செல்வதற்கு முன்னும்

படைத்தவரை நினைவில்கொள்.

வெள்ளிக் கயிறு அறுந்து, சகரி 4:2-3

தங்கக் கிண்ணம் உடைவதற்கு முன்னும்,

ஊற்றின் அருகே குடம் நொறுங்க,

கிணற்றில் உள்ள கயிற்றுச் சக்கரம் உடைந்து போகுமுன்னும்,

மண்ணிலிருந்து வந்த உடல் மண்ணுக்குத் திரும்பி, தானி 12:2பிரச 3:20-21சங் 146:4ஆதி 3:19யோபு 34:14-15சகரி 12:1ஏசா 57:16ஆதி 2:7

ஆவி அதைக் கொடுத்தவரான இறைவனிடம் திரும்பும் முன்

உன்னைப் படைத்தவரை நினைவிற்கொள்.

“அர்த்தமற்றவை! அர்த்தமற்றவை! பிரச 1:2பிரச 6:12பிரச 8:8பிரச 1:14பிரச 2:17பிரச 4:4சங் 62:9

எல்லாமே அர்த்தமற்றவை!” என்று பிரசங்கி சொல்கிறான்.

பொருளின் முடிவு

பிரசங்கி ஞானமுள்ளவனாய் இருந்தது மட்டுமல்ல, அவன் மக்களுக்கு அறிவையும் புகட்டினான். இதனாலேயே அவன் ஆழ்ந்து யோசித்துப் பார்த்து, அநேக நீதிமொழிகளை தொகுத்து எழுதிவைத்தான். 1 இராஜா 4:32நீதி 1:1நீதி 25:11 இராஜா 10:8நீதி 10:11 இராஜா 8:12-21 பிரசங்கி சரியான சொற்களையே கண்டுபிடிக்கத் தேடினான். அதினால் அவன் எழுதியவையெல்லாம் நேர்மையும் உண்மையுமானவை. கொலோ 1:51 தீமோ 1:15நீதி 16:21-24நீதி 1:1-6நீதி 15:26நீதி 22:17-21நீதி 25:11-12நீதி 8:6-10

ஞானமுள்ளவர்களின் வார்த்தைகள் நல்வழிக்கு உந்தித் தள்ளும் தாற்றுக்கோல் போன்றது. தொகுக்கப்பட்ட அவர்களின் முதுமொழிகள் உறுதியாய் அடிக்கப்பட்ட ஆணிகளைப் போன்றவை. அவை ஒரே மேய்ப்பனாலேயே கொடுக்கப்பட்டன. அப் 2:37எபி 4:12எரே 23:29எசேக் 34:232 கொரி 10:4ஏசா 40:11யோவா 3:10நீதி 1:6 என் மகனே, இவைகளினாலே எச்சரிப்பாயிருப்பாயாக. பிரச 1:18யோவா 21:252 பேது 1:19-21யோவா 5:391 இராஜா 4:32லூக் 16:29-31யோவா 20:31

புத்தகங்களை எழுதுவது முடிவற்றது, மேலும் அதிக படிப்பு உடலை இளைக்கப்பண்ணும்.

எல்லாவற்றையும் கேட்டு, உபா 10:12மீகா 6:8உபா 6:2சங் 111:10யோபு 28:28சங் 145:19லூக் 1:50பிரச 8:12

நான் இந்த முடிவுக்கு வந்துவிட்டேன்:

இறைவனுக்குப் பயந்து நட, அவர் கட்டளைகளைக் கைக்கொள்;

மனிதனின் பிரதான கடமை இதுவே.

ஏனெனில் நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும், 2 கொரி 5:10ரோம 2:16மத் 12:361 கொரி 4:5மத் 10:26ரோம 14:10-12பிரச 11:9லூக் 12:1-2

அந்தரங்கமான செயல்களுக்கும்,

நல்லதோ, தீயதோ இறைவனே நியாயத்தீர்ப்பு வழங்குவார்.