பிரசங்கி 3

Ecclesiastes 3

எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு

எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு, பிரச 3:17மத் 16:3பிரச 8:5-6பிரச 7:142இராஜா 5:26நீதி 15:232 நாளாக 33:12பிரச 2:3

வானத்தின் கீழே ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய காலமுண்டு.

பிறப்பதற்கு ஒரு காலமுண்டு, இறப்பதற்கு ஒரு காலமுண்டு; எபி 9:27யோபு 14:5மத் 15:13எரே 18:7-10கலா 4:4ஏசா 38:1யோவா 16:21யோபு 7:1

நடுவதற்கு ஒரு காலமுண்டு, பிடுங்குவதற்கு ஒரு காலமுண்டு;

கொல்வதற்கு ஒரு காலமுண்டு, சுகப்படுத்துவதற்கு ஒரு காலமுண்டு; ஓசி 6:1-21 சாமு 2:6எரே 45:4எரே 31:28உபா 32:39ஏசா 44:26ஏசா 5:5-61 சாமு 2:25

இடித்து வீழ்த்த ஒரு காலமுண்டு, கட்டி எழுப்ப ஒரு காலமுண்டு;

அழுவதற்கு ஒரு காலமுண்டு, சிரிப்பதற்கு ஒரு காலமுண்டு; சங் 30:5ரோம 12:15யாக் 4:9யோவா 16:20-22சங் 126:1-2சங் 126:5-62 கொரி 7:10யாத் 15:20

துக்கங்கொண்டாட ஒரு காலமுண்டு, நடனம் ஆட ஒரு காலமுண்டு;

கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களை ஒன்றுசேர்க்க ஒரு காலமுண்டு; 2இராஜா 3:25யோசு 10:27யோசு 4:3-9யோவே 2:161 சாமு 21:4-52 சாமு 18:17-18யாத் 19:15உன்னத 2:6-7

அணைத்துக்கொள்ள ஒரு காலமுண்டு, அணைத்துக் கொள்ளாதிருக்க ஒரு காலமுண்டு.

தேடிச் சேர்க்க ஒரு காலமுண்டு, விட்டுவிட ஒரு காலமுண்டு; பிலி 3:7-8லூக் 9:24-25மாற் 8:35-37மத் 16:25-262இராஜா 5:26பிரச 11:1எபி 10:34-35மத் 19:29

வைத்திருக்க ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு;

கிழித்துப் பிரிக்க ஒரு காலமுண்டு, தைத்து ஒன்றுசேர்க்க ஒரு காலமுண்டு; ஆமோ 5:13மீகா 7:5எஸ்த 4:13-14புலம் 3:28அப் 4:20நீதி 31:8-9எஸ்த 7:4யோபு 32:4-22

பேசாமல் இருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு;

அன்பாயிருக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; எபே 5:25எபே 5:28-29லூக் 14:261 இராஜா 5:42 நாளாக 19:2சங் 139:212 சாமு 10:6-19எபே 3:19

யுத்தம் பண்ண ஒரு காலமுண்டு; சமாதானமாயிருக்க ஒரு காலமுண்டு.

வேலையாள் தன் உழைப்பினால் பெறும் இலாபம் என்ன? பிரச 1:3பிரச 5:16நீதி 14:23பிரச 2:11பிரச 2:22-23மத் 16:26 இறைவன், மனிதன்மேல் வைத்திருக்கும் பாரத்தை நான் பார்த்திருக்கிறேன். பிரச 1:13-14ஆதி 3:19பிரச 2:261 தெச 2:92 தெச 3:8 அவர் எல்லாவற்றையும் அதினதின் காலத்தில் அழகாய் செய்திருக்கிறார். மனிதருடைய இருதயங்களில் அவர் நித்திய காலத்தின் உணர்வையும் வைத்திருக்கிறார். ஆனால் இறைவன் ஆரம்பம் முதல் இறுதிவரை செய்திருப்பதை அவர்களால் அளவிடமுடியாது. ரோம 1:19-20ரோம 11:33யோபு 11:7பிரச 8:17யோபு 5:9மாற் 7:37சங் 104:24ஆதி 1:31 மனிதர் வாழும் காலத்தில் சந்தோஷமாய் இருப்பதையும், நன்மை செய்வதையும்விட மேலானது ஒன்றும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. சங் 37:3பிரச 3:221 தீமோ 6:181 தெச 5:15-16அப் 20:35பிலி 4:4-9ஏசா 64:5லூக் 11:41 ஒவ்வொரு மனிதனும் சாப்பிட்டு, குடித்து, தன் பிரசாயத்தில் திருப்தி காண்பதே இறைவன் கொடுத்த கொடை. பிரச 2:24பிரச 9:7ஏசா 65:21-23சங் 128:2பிரச 5:18-20உபா 28:30-31உபா 28:47-48பிரச 6:2 இறைவன் செய்கின்ற எதுவும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று எனக்குத் தெரியும். அதனுடன் ஒன்றையும் சேர்க்கவோ, அல்லது அதிலிருந்து எதையாவது எடுக்கவோ முடியாது. மனிதர் அவரிடத்தில் பயபக்தியாய் இருப்பதற்காகவே இறைவன் அதைச் செய்கிறார். யாக் 1:17சங் 33:11ரோம 11:36அப் 5:39நீதி 30:6தீத் 1:2நீதி 21:30தானி 11:2-4

இருப்பவை எல்லாம் ஏற்கெனவே இருந்தன, பிரச 1:9-10பிரச 6:10

இருக்கப்போகிறவைகளும் முன்பு இருந்தவையே;

கடந்ததையும் இறைவன் விசாரிப்பார்.

சூரியனின் கீழே இன்னுமொன்றை நான் கண்டேன்: பிரச 4:1பிரச 5:81 இராஜா 21:9-21அப் 23:3சங் 58:1-2சங் 82:2-5சங் 94:21-22ஏசா 59:14

நியாயந்தீர்க்கும் இடத்தில் கொடுமை இருந்தது,

நீதி வழங்கும் இடத்திலே கொடுமை இருந்தது.

நீதியுள்ளவர்களையும், 2 கொரி 5:10பிரச 12:14பிரச 3:1மத் 16:272 தெச 1:6-10பிரச 11:9சங் 98:9ரோம 2:5-10

கொடியவர்களையும் இறைவன் நியாயத்தீர்ப்புக்குக் கொண்டுவருவார்.

ஏனெனில் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் ஒரு காலம் உண்டு;

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காலம் உண்டு என

என் இருதயத்தில் நான் நினைத்துக்கொண்டேன்.

மனிதர் தாங்களும் மிருகங்களைப்போலவே இருக்கிறார்கள் என்று கண்டுகொள்ளும்படி, இறைவன் அவர்களைச் சோதனைக்கு உட்படுத்துகிறார். இதையும் நான் நினைத்துக்கொண்டேன். சங் 73:22சங் 49:122 பேது 2:12ஆதி 3:17-19எபி 9:271 பேது 1:24ரோம 9:23யோபு 14:1-4 மனிதருடைய நியதியைப்போலவே, மிருகங்களுடைய நியதியும் இருக்கிறது. ஒரேவிதமான நியதியே மிருகங்களுக்கும், மனிதனுக்கும் காத்திருக்கிறது. மிருகங்கள் சாவதுபோலவே மனிதரும் சாகிறார்கள். எல்லோருக்கும் ஒரேவிதமான சுவாசமே இருக்கின்றது; இதில் மனிதனுக்கு மிருகத்தைவிட மேன்மை இல்லை. எல்லாம் அர்த்தமற்றதே. சங் 49:12சங் 49:20யோபு 14:10-12பிரச 2:14பிரச 2:20-23சங் 39:5-6சங் 89:47-482 சாமு 14:14 எல்லாம் ஒரே இடத்திற்கே போகின்றன; அனைத்தும் தூசியிலிருந்தே வருகின்றன, தூசிக்கே திரும்புகின்றன. ஆதி 3:19யோபு 34:15பிரச 12:7பிரச 3:21பிரச 6:6பிரச 9:10யோபு 10:9-10யோபு 7:9 மனிதனின் ஆவி மேல்நோக்கி எழும்புகிறதென்றோ, மிருகத்தின் ஆவி பூமிக்குள்ளே கீழ்நோக்கி போகிறதென்றோ யாருக்குத் தெரியும்? பிரச 12:72 கொரி 5:1யோவா 14:3லூக் 16:22-23பிலி 1:232 கொரி 5:8அப் 1:25

ஆகவே தனது வேலையில் சந்தோஷப்படுவதைவிட நலமானது எதுவும் ஒரு மனிதனுக்கு இல்லை என்று நான் கண்டேன். ஏனெனில் அதுவே அவன் பங்கு. அவனுக்குப் பிறகு என்ன நிகழும் என்பதைக் காணும்படி அவனைக் கொண்டுவர யாரால் முடியும்? பிரச 2:24பிரச 3:11-12பிரச 10:14பிரச 6:12பிரச 8:7பிரச 11:9பிலி 4:4-5பிரச 2:10-11