யோபு 37

Job 37

“அந்த முழக்கத்தினால் என் இருதயம் நடுங்கி, அப் 16:26அப் 16:29தானி 10:7-8யாத் 19:16ஆப 3:16எரே 5:22யோபு 21:6யோபு 4:14

அதின் இடத்தைவிட்டுத் துடிக்கிறது.

இறைவனுடைய குரலின் கர்ஜனையையும், யோபு 36:33யோபு 37:5யாத் 19:16-19யோபு 38:1சங் 104:7சங் 29:3-9யோபு 36:29

அவர் வாயிலிருந்து வரும் முழக்கத்தையும் கேளுங்கள்.

வானத்தின் கீழெங்கும் தமது மின்னலைக் கட்டவிழ்த்து, யோபு 38:13மத் 24:27ஏசா 11:12சங் 97:4சங் 77:13வெளி 11:19

அதைப் பூமியின் கடைமுனைகளுக்கும் அனுப்புகிறார்.

பின்பு அவருடைய கர்ஜனையின் சத்தம் வருகிறது, சங் 29:3-9சங் 68:33உபா 33:26யாத் 15:7-8யோபு 36:27-33

அவர் தனது கெம்பீரமான குரலினால் முழங்குகிறார்;

அவருடைய சத்தம் தொனிக்கும்போது

அவர் ஒன்றையும் அடக்குவதில்லை.

இறைவனது குரல் ஆச்சரியமான விதங்களில் முழங்குகிறது; யோபு 5:9ரோம 11:33பிரச 3:11ஏசா 40:28யோபு 9:10யோபு 26:14யோபு 36:26வெளி 15:3

அவர் நம்மால் விளங்கிக்கொள்ள முடியாத அளவு பெரிய காரியங்களைச் செய்கிறார்.

அத்துடன் அவர் பனியைப் பார்த்து, ‘பூமியின்மேல் விழு’ என்றும், யோபு 36:27யோபு 38:22எசேக் 13:13சங் 147:16-18ஆமோ 9:6எசேக் 13:11எஸ்றா 10:13எஸ்றா 10:9

மழையைப் பார்த்து, ‘கடுமையாய்ப் பெய்’ என்றும் கூறுகிறார்.

அவ்வேளைகளில் அவர் தாம் படைத்த எல்லா மனிதர்களும் தமது செயலை அறியும்படி, சங் 111:2சங் 109:27பிரச 8:17ஏசா 26:11ஏசா 5:12யோபு 12:14யோபு 36:24யோபு 5:12

ஒவ்வொரு மனிதனையும் அவனுடைய வேலையிலிருந்து நிறுத்துகிறார்.

காட்டு மிருகங்கள் குகைகளுக்குள் சென்று, சங் 104:22யோபு 38:40

தங்கள் கெபிகளில் தங்குகின்றன.

தெற்கிலிருந்து சூறாவளியும், யோபு 9:9ஏசா 21:1சங் 104:3யோபு 38:1சகரி 9:14

வடதிசை காற்றினால் குளிரும் வருகிறது.

இறைவனின் சுவாசத்தால் பனிக்கட்டி உருவாகிறது; யோபு 38:29-30சங் 147:16-18சங் 78:47

அப்பொழுது பரந்த நீர்ப்பரப்புகளும் உறைந்துபோகின்றன.

அவர் மேகங்களை ஈரத்தினால் பாரமாக்கி, யோபு 36:27-30ஏசா 18:4யோபு 36:32மத் 17:5

தமது மின்னலை அவற்றினுள் சிதறப்பண்ணுகிறார்.

அவரின் திசையில் மேகங்கள் சுழல்கின்றன; சங் 148:8யாக் 5:17-18யோவே 2:23சங் 104:24ஆமோ 4:7எரே 14:22சங் 65:9-10வெளி 11:6

அவை பூமியின் மேற்பரப்பெங்கும்

அவர் கட்டளையிடுவதைச் செய்கின்றன.

மனிதரைத் தண்டிப்பதற்கோ, 1 இராஜா 18:451 சாமு 12:18-19யோபு 38:26-27யோபு 36:312 சாமு 21:10யாத் 9:18-25எஸ்றா 10:9யோபு 37:6

அல்லது தனது பூமியை வளமுள்ளதாக்கி தமது அன்பைக் காட்டுவதற்கோ

அவர் மேகங்களைக் கொண்டுவருகிறார்.

“யோபுவே, இதைக் கேளும்; யாத் 14:13சங் 111:2சங் 145:10-12ஆப 2:20யோபு 36:24சங் 145:5-6யோபு 26:6-14சங் 46:10

சற்று நின்று இறைவனின் அதிசயங்களைக் கவனித்துப் பாரும்.

இறைவன் மேகங்களை எவ்வாறு கட்டுப்படுத்தி ஏசா 40:26யோபு 36:30-32யோபு 37:11யோபு 38:4-41யோபு 28:24-27யோபு 34:13சங் 119:90-91

தமது மின்னலை மின்னப் பண்ணுகிறார் என்று உமக்குத் தெரியுமா?

அவர் மேகங்களை எப்படி ஆகாயத்தில் தொங்கவிட்டிருக்கிறார் என்பதையும், யோபு 36:4ஏசா 40:22எரே 10:12-13யோபு 36:29நீதி 3:19-20யோபு 26:8சங் 104:2-3சங் 104:24

பூரண அறிவுள்ளவரின் அதிசயங்களையும் நீர் அறிவீரோ?

தென்றலினால் பூமி அடங்கிக் கிடக்கும்போது, யோபு 38:31யோபு 6:17லூக் 12:55சங் 147:18

உமது ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையை அறிவீரோ?

வார்க்கப்பட்ட வெண்கல கண்ணாடியைப் போன்ற, ஏசா 44:24சங் 104:2யாத் 38:8ஏசா 40:22ஆதி 1:6-8ஏசா 40:12யோபு 9:8-9நீதி 8:27

கடினமான ஆகாயத்தை அவருடன் சேர்ந்து உம்மால் விரிக்க முடியுமோ?

“அவருக்குச் சொல்லவேண்டியதை நீர் எங்களுக்குச் சொல்லும்; 1 கொரி 13:121 யோவா 3:2யோபு 12:3யோபு 13:3யோபு 13:6யோபு 26:14யோபு 28:20-21யோபு 38:2

இருளின் காரணமாக எங்களால் வழக்காட முடியாதிருக்கிறது.

‘நான் பேச விரும்புகிறேன்’ என்று அவருக்குச் சொல்லலாகுமோ? யோபு 11:7-8யோபு 6:3மத் 12:36-37சங் 139:4

தான் விழுங்கப்படுவதை எவனும் விரும்பிக் கேட்பானோ?

காற்று ஆகாயத்தைச் சுத்தப்படுத்திய பின், யோபு 26:9யோபு 36:32யோபு 38:25

சூரியனை எந்த மனிதனாலும் பார்க்க முடியாதே!

ஏனெனில் அதின் ஒளி பிரகாசமாயிருக்கும்.

வடக்கிலிருந்து தங்கமயமான மகிமையிலே அவர் வருகிறார்; சங் 104:1எபி 12:29யூதா 1:251 நாளாக 29:11ஆப 3:3-19எபி 1:3யோபு 40:10நாகூ 1:3

திகைப்பூட்டும் மாட்சிமையுடன் இறைவன் வருகிறார்.

எல்லாம் வல்லவர் நமக்கு எட்டாத தூரத்திலே 1 தீமோ 6:16ரோம 11:33யோபு 36:5புலம் 3:32-33சங் 99:4யோபு 9:4எசேக் 18:23எசேக் 18:32

அவர் வல்லமையில் உயர்ந்திருக்கிறார்;

அவர் நீதியும் நியாயமும் நிறைந்தவர்; அவர் ஒடுக்குகிறதில்லை.

ஆகையால், மனிதர்கள் அவரிடம் பயபக்தியாயிருக்கிறார்கள்; மத் 10:281 கொரி 1:26ஏசா 5:21யோபு 5:13மத் 11:25-26சங் 130:4ரோம 2:41 கொரி 3:19

ஏனெனில், இருதயத்தில் ஞானமுள்ள ஒருவரையும் அவர் மதிப்பதில்லை.”