மத்தேயு 10

Matthew 10

இயேசு பன்னிரண்டு சீடர்களை அனுப்புதல்

இயேசு தமது பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடம் வரவழைத்து, அசுத்த ஆவிகளை விரட்டவும், எல்லா விதமான நோய்களையும், வியாதிகளையும் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார். லூக் 9:1-6மாற் 3:13-15மாற் 6:7-13லூக் 10:19மாற் 16:17-18லூக் 24:49அப் 1:8லூக் 6:13

இவை அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் 1 பெயர்கள்: அப் 1:13மத் 4:21யோவா 12:22யோவா 6:8லூக் 5:10மத் 4:18யோவா 21:2லூக் 11:49

முதலாவது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவனுடைய சகோதரன் அந்திரேயா;

செபெதேயுவின் மகன் யாக்கோபு, அவனுடைய சகோதரன் யோவான்;

பிலிப்பு, பர்தொலொமேயு; அப் 1:13மாற் 3:18யோவா 1:43-46மத் 9:9மாற் 2:14யோவா 11:16யோவா 12:21-22யோவா 20:24-29

தோமா, வரி வசூலிப்பவனான மத்தேயு,

அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, 2

கானானியனாகிய சீமோன் 3, இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து ஆகியோரே. மத் 26:14யோவா 13:2யோவா 6:71மத் 26:47மாற் 14:43மாற் 3:18-19அப் 1:16-20யோவா 13:26-30

இயேசு இந்தப் பன்னிரண்டு பேருக்கும் இவ்வழிமுறைகளைச் சொல்லி அனுப்பினார்: “நீங்கள் யூதரல்லாதவர்களிடம் போகவேண்டாம், சமாரியர்களின் எந்த பட்டணத்திற்குள்ளும் செல்லவேண்டாம். யோவா 4:9அப் 22:21-232இராஜா 17:24-411 தெச 2:16யோவா 4:22-24ரோம 15:8-9லூக் 17:16அப் 10:45 இஸ்ரயேலின் வழிதவறிப்போன ஆடுகளிடத்திற்கே போங்கள். எரே 50:6எசேக் 34:61 பேது 2:25ஏசா 53:6அப் 13:46சங் 119:176மத் 15:24-26அப் 28:25-28 நீங்கள் போகும்போது, ‘பரலோக அரசு சமீபித்து வருகிறது’ என்ற செய்தியைப் பிரசங்கியுங்கள். அப் 28:31மத் 3:2லூக் 9:60மத் 4:17லூக் 10:9-11லூக் 16:16லூக் 9:2ஏசா 61:1 நோயுற்றோரை குணமாக்குங்கள், இறந்தவர்களை எழுப்புங்கள், குஷ்டவியாதி உள்ளோரைச் சுத்தப்படுத்துங்கள், பிசாசுகளை விரட்டுங்கள். இலவசமாக நீங்கள் பெற்றீர்கள், இலவசமாகவே கொடுங்கள். அப் 3:6லூக் 10:9அப் 4:30மத் 10:1அப் 20:33-35மாற் 16:182இராஜா 5:15-16அப் 5:12-15

“நீங்கள் போகும்போது, எவ்வித தங்கம், வெள்ளி, செப்புக் காசுகளை உங்கள் மடிப்பையில் கொண்டுபோக வேண்டாம்; லூக் 22:35லூக் 9:3-51 கொரி 9:7-27லூக் 10:4-12மாற் 6:8-11 பயணத்திற்கென்று பையையோ, மாற்று உடையையோ, பாதரட்சைகளையோ, ஊன்றுகோலையோ கொண்டுபோக வேண்டாம்; ஏனெனில் வேலையாள் தன் உணவுக்குப் பாத்திரவானாயிருக்கிறான். 1 தீமோ 5:17-18லூக் 10:7-121 கொரி 9:4-14கலா 6:6-7லூக் 3:111 சாமு 9:72 தீமோ 4:131 சாமு 17:40 நீங்கள் எந்தப் பட்டணத்திற்கோ கிராமத்திற்கோ சென்றாலும் அங்கே தகுதியுள்ள ஒருவனைத் தேடி, நீங்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்படும்வரை அவனுடைய வீட்டிலேயே தங்கியிருங்கள். லூக் 10:7-81 இராஜா 17:9-24அப் 18:1-3யோபு 31:32அப் 16:15ஆதி 19:1-3நியாயாதி 19:16-21லூக் 10:38-42 அந்த வீட்டிற்குள் செல்லும்போது, உங்கள் வாழ்த்துக்களை அறிவியுங்கள். 1 சாமு 25:6லூக் 10:5-62 கொரி 5:20அப் 10:363 யோவா 1:14 அந்த வீடு தகுதியுள்ளதாக இருந்தால், உங்கள் சமாதானம் அவ்வீட்டில் தங்கட்டும்; இல்லையானால், உங்கள் சமாதானம் உங்களிடம் திரும்பிவரும். லூக் 10:6சங் 35:132 கொரி 2:16 யாராவது உங்களை வரவேற்காமலோ, உங்கள் வார்த்தைக்குச் செவிகொடுக்காமலோ இருந்தால், நீங்கள் அந்த வீட்டையோ, பட்டணத்தையோ விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களிலுள்ள தூசியை உதறிவிடுங்கள். அப் 18:6லூக் 10:10-11நெகே 5:13அப் 13:51லூக் 9:5மாற் 6:111 தெச 4:8யோவா 13:20 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளில் அந்தப் பட்டணத்திற்கு நடக்கப்போவது, சோதோம், கொமோரா 4 பட்டணங்களுக்கு நடக்கப்போவதைப் பார்க்கிலும் கடினமானதாயிருக்கும். 2 பேது 2:6யோவா 15:22-241 யோவா 4:17எசேக் 16:48-56லூக் 10:11-12மத் 11:22-242 பேது 2:92 பேது 3:7

“ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல நான் உங்களை அனுப்புகிறேன். ஆகையால் பாம்புகளைப்போல புத்திக்கூர்மை உள்ளவர்களாயும், புறாக்களைப்போல் கபடற்றவர்களாயும் இருங்கள். பிலி 2:15லூக் 10:31 கொரி 14:20கொலோ 4:5எபே 5:15-17ரோம 16:18-19அப் 20:29லூக் 21:15 மனிதரைக் குறித்து விழிப்பாயிருங்கள்; அவர்கள் உங்களைத் தங்கள் நீதிமன்றங்களில் ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சவுக்கால் அடிப்பார்கள். மாற் 13:9மத் 23:34அப் 26:11யோவா 16:2லூக் 12:11மத் 5:22மத் 24:9-10அப் 22:19 என் நிமித்தமாக ஆளுநர்களுக்கும், அரசர்களுக்கும் முன்பாக நீங்கள் கொண்டுபோகப்படுவீர்கள். அவர்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும் முன்னால், நீங்கள் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள். அப் 24:1-26அப் 5:25-27மத் 8:4மாற் 13:9சங் 2:1-62 தீமோ 1:82 தீமோ 4:16-17அப் 12:1-4 அவர்கள் உங்களைக் கைது செய்யும்போது, என்ன சொல்வது, எப்படிச் சொல்வது எனக் கவலைப்படாதிருங்கள். அந்த நேரத்தில், என்ன சொல்லவேண்டும் என்பது உங்களுக்குக் கொடுக்கப்படும். யாத் 4:12மாற் 13:11-132 தீமோ 4:17லூக் 12:11லூக் 21:12-17யாத் 4:15தானி 3:16-18எரே 1:9 ஏனெனில் பேசுவது நீங்களாய் இருக்கமாட்டீர்கள். உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்கள் மூலமாகப் பேசுவார். 2 சாமு 23:2அப் 6:10லூக் 21:15லூக் 12:122 பேது 1:21அப் 2:4அப் 4:82 கொரி 13:3

“சகோதரன் தன் சகோதரனைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். தகப்பன் தனது பிள்ளையைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். பிள்ளைகள் அவர்கள் பெற்றோருக்கு எதிராக எழும்பி, அவர்களை கொலைசெய்வார்கள். லூக் 21:16-17மீகா 7:5-6மாற் 13:12-13மத் 24:10லூக் 12:51-53மத் 10:34-36சகரி 13:32 சாமு 17:1-4 என் நிமித்தமாக எல்லோரும் உங்களை வெறுப்பார்கள். ஆனால் முடிவுவரை பொறுமையாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான். மத் 24:13யாக் 1:12வெளி 2:10மாற் 13:13மத் 10:391 யோவா 3:13மத் 24:9ரோம 2:7 நீங்கள் ஒரு இடத்தில் துன்புறுத்தப்படுகையில், மற்றொரு இடத்திற்குத் தப்பியோடுங்கள். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், மானிடமகனாகிய நான் வருவதற்கு முன்னால், நீங்கள் இஸ்ரயேலின் பட்டணங்கள் முழுவதையும் சுற்றி முடிக்கமாட்டீர்கள், என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 16:28யோவா 11:53-54அப் 17:10அப் 8:1லூக் 4:29-31மாற் 13:26யோவா 10:39-42லூக் 18:8

“ஒரு மாணவன் ஆசிரியரைவிட மேலானவன் அல்ல. ஒரு வேலைக்காரன் தன் எஜமானைவிட மேலானவன் அல்ல. யோவா 15:20லூக் 6:40யோவா 13:16எபி 12:2-42 சாமு 11:11 ஒரு மாணவன் தனது ஆசிரியரைப் போலவும், வேலைக்காரன் தனது எஜமானைப் போலவும் இருந்தால், அதுவே போதுமானது. ஒரு வீட்டின் தலைவன் பெயல்செபூல் என அழைக்கப்பட்டால், அவன் குடும்பத்தார் அதைவிட எவ்வளவு அதிகமாக அழைக்கப்படுவார்கள்! லூக் 11:15மத் 12:24மத் 9:34யோவா 7:20மாற் 3:22யோவா 8:48யோவா 10:20யோவா 8:52

“எனவே, அவ்வாறு பயமுறுத்துகிறவர்களுக்குப் பயப்படவேண்டாம். மறைத்தது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை, ஒளித்து வைக்கப்படுவது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை. லூக் 8:17மாற் 4:22எரே 1:81 கொரி 4:5ஏசா 43:1-2லூக் 12:2-9மத் 10:28ஏசா 41:10 நான் உங்களுக்கு இருளிலே சொன்னவற்றை, பகல் வெளிச்சத்தில் சொல்லுங்கள்; உங்கள் காதில் மெதுவாய் சொன்னதை, வீட்டின் கூரையின் மேலிருந்து அறிவியுங்கள். அப் 5:20யோவா 16:13யோவா 16:1நீதி 1:20-23யோவா 16:29லூக் 8:10மத் 13:1-17மத் 13:34-35 உடலைக் கொல்லுகிறவர்களுக்கு பயப்படவேண்டாம். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாதே. உடலையும், ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லமையுள்ள இறைவனுக்கு மட்டுமே பயப்படுங்கள். லூக் 12:4-5ஏசா 8:12-13வெளி 2:10யாக் 4:12பிரச 8:12-13ரோம 8:35-39ஏசா 51:12எரே 5:22 இரண்டு சிட்டுக் குருவிகள் ஒரு காசுக்கு விற்கப்படுவதில்லையா? ஆனால் அவற்றில் ஒன்றேனும் உங்கள் பிதாவின் அனுமதி இல்லாமல் நிலத்திலே விழுவதில்லை. லூக் 12:6-7சங் 104:27-30 உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன. லூக் 12:71 சாமு 14:45அப் 27:34லூக் 21:182 சாமு 14:111 இராஜா 1:52 எனவே பயப்படவேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும் அதிக மதிப்புடையவர்கள். லூக் 12:24சங் 8:5மத் 6:261 கொரி 9:9-10மத் 12:11-12

“மனிதருக்கு முன்பாக என்னை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ, பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை ஏற்றுக்கொள்வேன். வெளி 3:5லூக் 12:8-9ரோம 10:9-101 யோவா 4:152 தீமோ 1:81 சாமு 2:30வெளி 2:131 தீமோ 6:12-13 மனிதருக்கு முன்பாக யார் என்னை மறுதலிக்கிறார்களோ, பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை மறுதலிப்பேன். 2 தீமோ 2:12லூக் 9:26லூக் 12:91 யோவா 2:232 பேது 2:1மாற் 14:30மாற் 8:38மத் 26:70-75

“பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என நீங்கள் நினைக்கவேண்டாம். நான் சமாதானத்தை அல்ல, ஒரு போர்வாளைக் கொண்டுவருவதற்காகவே வந்தேன். லூக் 12:49-53அப் 14:4அப் 13:45-50அப் 14:2யோவா 7:40-52எரே 15:10

“எப்படியெனில், ‘மகனுக்கும் தகப்பனுக்கும், மீகா 7:5-6மத் 10:21லூக் 21:16மத் 24:10மாற் 13:12

மகளுக்கும் தாய்க்கும்,

மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்;

ஒருவருடைய எதிரிகள் அவரது வீட்டாரே ஆவர்.’ 5 மீகா 7:6எரே 12:6சங் 41:9ஆதி 4:8-10யோபு 19:13-19சங் 55:13ஆதி 37:17-281 சாமு 17:28

“தம் தகப்பனையோ, தாயையோ என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல; தம் மகனையோ மகளையோ, என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல; லூக் 14:26மத் 22:37பிலி 3:7-92 கொரி 5:14-15உபா 33:9யோவா 21:15-17லூக் 21:36மத் 22:8 தம் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல. லூக் 14:27மாற் 8:34மத் 16:24லூக் 9:23-24யோவா 19:17மாற் 10:21மத் 27:32 தம் வாழ்வைக் காக்கிறவர்கள், அதை இழந்துபோவார்கள். தம் வாழ்வை எனக்காக இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள். யோவா 12:25மாற் 8:35-36லூக் 17:33மத் 16:25-26லூக் 9:24வெளி 2:10பிலி 1:20-212 தீமோ 4:6-8

“உங்களை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னையும் ஏற்றுக்கொள்கிறார்கள். என்னை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறார்கள். யோவா 13:20லூக் 9:48லூக் 10:16மத் 18:52 யோவா 1:9கலா 4:14யோவா 20:21மத் 25:40 ஒருவர் இறைவாக்கினராய் இருப்பதனால், அவரை இறைவாக்கினர் என்று யாராவது ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்டவர்கள் இறைவாக்கினருக்குரிய வெகுமதியைப் பெறுவார்கள். ஒருவர் நீதிமான் என்பதால் யாராவது அவரை ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்டவர்கள் நீதிமானுக்குரிய வெகுமதியைப் பெறுவார்கள். 3 யோவா 1:5-8எபி 6:102இராஜா 4:16-172இராஜா 4:8-10லூக் 14:13-141 இராஜா 18:3-42 யோவா 1:82இராஜா 4:32-37 இந்தச் சிறியவர்களான எனது சீடர்களுக்கு யாராவது ஒரு குவளை குளிர்ந்த நீரைக் கொடுத்தால், கொடுத்தவர்கள் தமக்குரிய வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டார்கள் என்று உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். எபி 6:10மத் 25:40மாற் 9:41-422 கொரி 9:6-15மத் 18:10பிலி 4:15-19லூக் 6:352 கொரி 8:12