இயேசுவுக்கு எதிரான சதித்திட்டம்
இயேசு இவற்றையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, அவர் தமது சீடருக்குச் சொன்னதாவது: மத் 7:28மத் 19:1 “நீங்கள் அறிந்திருக்கிறபடி, பஸ்கா என்ற பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது. அப்பொழுது மானிடமகனாகிய நான் சிலுவையில் அறையப்படும்படி ஒப்புக்கொடுக்கப்படுவேன்” என்றார். லூக் 22:1-2மாற் 14:1-2யோவா 13:1-2மத் 20:18-19யோவா 11:55யோவா 18:2லூக் 24:6-7மத் 17:22
அவ்வேளையில் தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும், காய்பா என்னும் பெயருடைய பிரதான ஆசாரியனின் அரண்மனையில் ஒன்றுகூடினார்கள். யோவா 11:47-53யோவா 18:24மாற் 14:54அப் 4:25-28அப் 4:5-6யோவா 11:57யோவா 18:13-15யோவா 18:28 அவர்கள் ஏதாவது தந்திரமான முறையில் இயேசுவைக் கைதுசெய்து, கொலைசெய்வதற்குச் சூழ்ச்சி செய்தார்கள். மத் 12:14அப் 13:10சங் 2:2அப் 7:19ஆதி 3:1மத் 23:332 கொரி 11:3 ஆனாலும் பண்டிகைக் காலத்தில் அப்படிச் செய்யக்கூடாது, அப்படிச் செய்தால் மக்கள் மத்தியில் கலகம் ஏற்படலாம் என்று சொல்லிக்கொண்டார்கள். மத் 27:24மத் 14:5மத் 21:26ஏசா 46:10மாற் 14:12மாற் 14:2மாற் 14:27நீதி 19:21
சீமோன் வீட்டில் இயேசு
இயேசு பெத்தானியாவில் குஷ்டவியாதியாயிருந்த சீமோனுடைய வீட்டில் இருந்தபோது, மாற் 14:3-9யோவா 12:1-8லூக் 7:37-39யோவா 11:1-2மத் 21:17மாற் 11:12 ஒரு பெண் மிகவும் விலை உயர்ந்த நறுமணத்தைலம் உள்ள, வெள்ளைக்கல் குடுவையுடன் அவரிடத்தில் வந்தாள். அவர் சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவள் அந்த நறுமணத் தைலத்தை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள். யோவா 12:2-3லூக் 7:46லூக் 7:37-38பிரச 9:8ஏசா 57:9சங் 133:2உன்னத 1:3யாத் 30:23-33
சீடர்கள் இதைக் கண்டபோது ஆத்திரமடைந்து, “ஏன் இந்த வீண்செலவு? யோவா 12:4-6மாற் 14:4யாத் 5:171 சாமு 17:28-29ஆமோ 8:5பிரச 4:4ஆகா 1:2-4மல்கி 1:13 இந்த நறுமணத் தைலத்தை நல்ல விலைக்கு விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்றார்கள். யோவா 12:5-6மாற் 14:51 சாமு 15:211 சாமு 15:92இராஜா 5:20யோசு 7:20-212 பேது 2:15
இயேசு இதை அறிந்து அவர்களிடம், “ஏன் இந்தப் பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவள் ஒரு சிறந்த நோக்கத்துடனேயே இந்தக் காரியத்தை எனக்கு செய்திருக்கிறாள். தீத் 3:8எபி 13:211 தீமோ 3:11 தீமோ 5:102 தீமோ 2:21தீத் 1:16தீத் 2:14தீத் 3:1 ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள், 1 ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன். உபா 15:11மாற் 14:7யோவா 12:8யோவா 16:28யோவா 13:33யோவா 14:19யோவா 16:5அப் 3:21 இவள் இந்த நறுமணத் தைலத்தை என் உடலின்மேல் ஊற்றி, என் அடக்கத்திற்கு ஆயத்தமாகவே இதைச் செய்தாள். யோவா 12:7மாற் 14:82 நாளாக 16:14லூக் 23:56மாற் 16:1யோவா 19:39-40 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்த நற்செய்தி அறிவிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இவள் செய்ததும், இவளுடைய நினைவாகச் சொல்லப்படும்” என்றார். மாற் 14:9மத் 24:14சங் 112:61 சாமு 2:30ஏசா 52:9சங் 98:2-31 தீமோ 2:62 கொரி 10:18
இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாஸ் உடன்படுதல்
பின்னர் யூதாஸ்காரியோத்து என அழைக்கப்படும் பன்னிரண்டு சீடர்களில் ஒருவன் தலைமை ஆசாரியர்களிடம் போய், லூக் 22:3-6மத் 10:4மாற் 14:10-11யோவா 6:70-71மத் 26:47அப் 1:16யோவா 13:2யோவா 13:30 “நான் இயேசுவை உங்களிடம் ஒப்புக்கொடுத்தால், நீங்கள் எனக்கு என்ன கொடுப்பீர்கள்?” என்று கேட்டான். அவர்கள் முப்பது வெள்ளிக்காசை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். சகரி 11:12-13ஆதி 37:26-28யாத் 21:321 தீமோ 6:9-102 பேது 2:31 தீமோ 3:32 பேது 2:14-15அப் 1:18 அவ்வேளையிலிருந்து யூதாஸ், இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தான். மாற் 14:11லூக் 22:6
சீடர்களுடன் பஸ்கா என்ற விருந்து
புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் முதலாம் நாளிலே, சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பஸ்கா உணவைச் சாப்பிடும்படி, நாங்கள் எங்கே உமக்காக ஆயத்தம் பண்ணவேண்டும் என்று விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். லூக் 22:7-13யாத் 12:18-20மாற் 14:12-16யாத் 12:6யாத் 13:6-8உபா 16:1-4லேவி 23:5-6மத் 17:24-25
அதற்கு இயேசு, “பட்டணத்திற்குள்ளே நான் குறிப்பிடும் மனிதனிடம் போய், ‘போதகர் உமக்குச் சொல்கிறதாவது: நியமிக்கப்பட்ட எனது வேளை நெருங்கிவிட்டது. நான் உமது வீட்டில், எனது சீடர்களுடன் பஸ்காவைக் கொண்டாடப் போகிறேன்’ என்று சொல்லுங்கள்” என்றார். மாற் 14:13-16யோவா 7:6யோவா 13:1யோவா 17:1யோவா 7:30யோவா 7:8லூக் 22:10-13யோவா 12:23 இயேசுவின் சீடர்கள் தங்களுக்கு அவர் சொன்னபடியே செய்து, பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். 2 நாளாக 35:10-11யாத் 12:4-8யோவா 15:14யோவா 2:5மத் 21:6
மாலை வேளையானபோது, இயேசு பன்னிரண்டு சீடர்களோடு பந்தியில் அமர்ந்திருந்தார். மாற் 14:17-21யோவா 13:21யாத் 12:11லூக் 22:14-16உன்னத 1:12 அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார். யோவா 13:21எபி 4:13யோவா 6:70-71சங் 55:12-14வெளி 2:23லூக் 22:21-23மத் 26:14-16மத் 26:2
அப்பொழுது அவர்கள் மிகவும் துக்கமடைந்து, ஒருவன்பின் ஒருவனாக அவரிடம், “ஆண்டவரே, நிச்சயமாக அது நான் இல்லை அல்லவா?” என்று கேட்கத் தொடங்கினார்கள். யோவா 13:22-25லூக் 22:23மாற் 14:19-20யோவா 21:17
அதற்குப் பதிலாக இயேசு அவர்களிடம், “பாத்திரத்தில் என்னோடுகூட கை போட்டவனே, என்னைக் காட்டிக்கொடுப்பான். யோவா 13:18சங் 41:9யோவா 13:26-28லூக் 22:21 மானிடமகனாகிய என்னைக்குறித்து எழுதியிருக்கிறபடியே நான் போகிறேன். ஆனால் மானிடமகனாகிய என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுக்கு ஐயோ! அவன் பிறக்காமலே இருந்திருந்தால் அது அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்றார். அப் 26:22-23லூக் 24:46தானி 9:26மத் 18:71 கொரி 15:3ஏசா 53:1-12யோவா 17:12லூக் 22:22
அப்பொழுது இயேசுவைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனான யூதாஸ், “போதகரே, நிச்சயமாக நீர் என்னைக் குறிக்கவில்லை அல்லவா?” என்று கேட்டான். மத் 26:64மத் 27:11யோவா 18:37லூக் 22:702இராஜா 5:25மத் 23:7மத் 26:49நீதி 30:20
அதற்கு இயேசு, “நீயே அதை சொல்லிவிட்டாயே!” என்று பதிலளித்தார்.
அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அப்பத்தை எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்து அவர்களிடம், “இதை வாங்கிச் சாப்பிடுங்கள்; இது எனது உடல்” என்றார். 1 கொரி 11:23-29லூக் 22:18-201 கொரி 10:16-17யோவா 6:33-351 கொரி 10:4மாற் 14:22-25அப் 20:7யோவா 6:47-58
பின்பு அவர் பாத்திரத்தையும் எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர் அவர்களிடம், “நீங்கள் எல்லோரும் இதிலிருந்து குடியுங்கள். 1 கொரி 10:16ஏசா 25:6சங் 116:131 கொரி 11:28ஏசா 55:1லூக் 22:20மாற் 14:23-24உன்னத 5:1 இது என்னுடைய உடன்படிக்கையின் இரத்தமாயிருக்கிறது, அநேகருடைய பாவங்களின் மன்னிப்புக்காக இது சிந்தப்படுகிறது” என்று சொன்னார். எபி 10:4-14எபி 9:14-22லேவி 17:11மத் 20:28யாத் 24:7-8வெளி 7:141 கொரி 11:251 யோவா 2:2 “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இவ்வேளையிலிருந்து, என் பிதாவின் அரசில் இதைப் புதியதாக உங்களோடு நான் குடிக்கும் நாள்வரைக்கும், இந்த திராட்சைப்பழ இரசத்தைக் குடிக்கமாட்டேன்” என்றார். எபி 12:2வெளி 7:17மாற் 14:25லூக் 22:15-18லூக் 22:29-30சங் 40:3அப் 10:41யோவா 17:13
அவர்கள் ஒரு துதிப்பாடலைப் பாடிய பின்பு, ஒலிவமலைக்குச் சென்றார்கள். எபே 5:19-20லூக் 22:39மத் 21:1மாற் 14:26-31கொலோ 3:16-17யோவா 14:31யோவா 18:1-4லூக் 21:37
பேதுரு மறுதலிக்கப் போவதை இயேசு முன்னறிவித்தல்
அப்பொழுது இயேசு அவர்களிடம், “இந்த இரவிலேயே நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில், சகரி 13:7மாற் 14:27-28யோவா 16:32எசேக் 34:5-6சங் 69:20சங் 38:11மத் 24:9-10ஏசா 53:10
“ ‘நான் மேய்ப்பனை அடித்து வீழ்த்துவேன்.
அப்பொழுது மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும்,’ 2
என்று எழுதியிருக்கிறது.
“ஆனால் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னதாகவே கலிலேயாவுக்குப் போவேன்” என்றார். மத் 28:10லூக் 18:33-34மத் 28:16மத் 20:19மத் 16:21மத் 27:63-64மாற் 14:28மாற் 16:7
அதற்குப் பேதுரு, “மற்ற எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப்போனாலும் நான் ஒருபோதும் ஓடிப் போகமாட்டேன்” என்றான். லூக் 22:331 பேது 5:5-6எரே 17:9யோவா 13:36-38மாற் 14:29பிலி 2:3நீதி 16:18-19நீதி 20:6
இயேசு அதற்கு அவனிடம், “நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்த இரவிலே சேவல் கூவுவதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்று பதிலளித்தார். யோவா 13:38லூக் 22:34மத் 26:75மாற் 14:30-31
ஆனால் பேதுருவோ, “நான் உம்முடன் சாகவேண்டிய நிலைமை ஏற்பட்டாலும், உம்மை ஒருபோதும் மறுதலிக்கமாட்டேன்” என்றான். சீடர்கள் எல்லோரும் அவ்விதமாகவே சொன்னார்கள். யோவா 13:37ரோம 11:201 கொரி 10:121 பேது 1:17யாத் 19:8மத் 20:22-24பிலி 2:12நீதி 28:14
கெத்செமனேயில் இயேசு
பின்பு இயேசு தமது சீடர்களுடன் கெத்செமனே என்னும் ஒரு இடத்திற்குச் சென்றார். அங்கே அவர் அவர்களிடம், “நான் அங்குபோய் மன்றாடும்வரை இங்கே உட்கார்ந்திருங்கள்” என்றார். மாற் 14:32-42லூக் 22:39-46மத் 26:42மத் 26:39எபி 5:7சங் 22:1-2சங் 69:13-15யோவா 18:1-11 இயேசு பேதுருவையும், செபெதேயுவின் மகன்கள் இருவரையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு சென்றார். பின்பு அவர் மிகவும் துயரமுற்றுக் கலங்கத் தொடங்கினார். மத் 4:21மத் 17:1மாற் 5:37மாற் 14:33-34யோவா 12:27லூக் 22:44மத் 20:20மத் 4:18 இயேசு அவர்களிடம், “என் ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, என்னுடன் விழித்துக் காத்திருங்கள்” என்றார். யோவா 12:271 பேது 2:241 பேது 3:181 பேது 4:7கலா 3:13ஏசா 53:10மத் 26:40-412 கொரி 5:21
இயேசு சற்றுத் தூரமாய்ப் போய்த் தரையில் முகங்குப்புற விழுந்து, “என் பிதாவே, முடியுமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிச் செய்யும்; ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது” என்று மன்றாடினார். யோவா 6:38பிலி 2:8லூக் 22:41-42மத் 26:42எபி 5:7யோவா 5:30மாற் 14:35-36யோவா 12:27-28
பின்பு இயேசு தமது சீடர்களிடம் திரும்பிவந்தபோது, அவர்கள் நித்திரையாயிருப்பதைக் கண்டார். அவர் பேதுருவிடம், “ஒருமணி நேரமாவது என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா?” என்று கேட்டார். லூக் 22:45மாற் 14:37மத் 26:43லூக் 9:32மத் 25:5மத் 26:35மத் 26:381 இராஜா 20:11 “விழித்திருந்து மன்றாடுங்கள், அப்பொழுது நீங்கள் சோதனைக்குள் விழமாட்டீர்கள். ஆவி ஆர்வமாயிருக்கிறது, ஆனால் உடலோ பலவீனமுள்ளது” என்றார். லூக் 22:46எபே 6:18மாற் 14:38மத் 6:13கலா 5:16-17வெளி 16:15லூக் 21:361 கொரி 16:13
இயேசு இரண்டாவது முறையும் போய், “என் பிதாவே, இந்தப் பாத்திரத்திலிருந்து நான் குடித்தாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது” என்று மன்றாடினார். மத் 26:39மாற் 14:39-40எபி 4:15எபி 5:7-8சங் 88:1-2சங் 22:1-2சங் 69:1-3சங் 69:17-18
இயேசு திரும்பவும் வந்தபோது சீடர்கள் மீண்டும் நித்திரையாயிருப்பதை அவர் கண்டார்; ஏனெனில் அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கத்தில் இருந்தன. லூக் 9:321 தெச 5:6-8அப் 20:9யோனா 1:6நீதி 23:34ரோம 13:1 எனவே இயேசு அவர்களைவிட்டு விலகிப்போய், திரும்பவும் மூன்றாவது முறையாக அதே வார்த்தைகளைச் சொல்லி மன்றாடினார். 2 கொரி 12:8லூக் 18:1தானி 9:17-19மத் 6:7
பின்பு இயேசு தமது சீடர்களிடம் திரும்பிவந்து, அவர்களைப் பார்த்து, “நீங்கள் இன்னும் நித்திரை செய்து இளைப்பாறுகிறீர்களோ? இதோ பாருங்கள், வேளை வந்துவிட்டது. மானிடமகனாகிய நான் பாவிகளின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறேன். யோவா 13:1யோவா 12:27யோவா 17:1லூக் 22:53மாற் 14:41-42மத் 26:14-15மத் 26:18மத் 26:2 எழுந்திருங்கள், நாம் போவோம்! என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ வருகிறான்!” என்றார். 1 சாமு 17:48அப் 21:13யோவா 14:31லூக் 12:50லூக் 9:51லூக் 22:15
இயேசு கைதுசெய்யப்படுதல்
இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில், பன்னிரண்டு சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் அங்கே வந்தான். அவனுடன் ஒரு பெருங்கூட்டம் வாள்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு வந்தது. இவர்கள் தலைமை ஆசாரியர்களாலும் யூதரின் தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தார்கள். அப் 1:16மத் 26:55யோவா 18:1-11லூக் 22:47-53மத் 26:14மாற் 14:43-50 இயேசுவைக் காட்டிக்கொடுப்பவன், தான் அவர்களுக்கு ஒரு சைகையைக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்தான்: “நான் முத்தமிடுகிறவனே, அந்த மனிதர்; அவரைக் கைதுசெய்யுங்கள்” என்று சொல்லியிருந்தான். 2 சாமு 20:9-102 சாமு 3:27மாற் 14:44சங் 28:3சங் 55:20-21 யூதாஸ் இயேசுவுக்குச் சமீபமாக வந்து, “போதகரே வாழ்க!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான். 1 தெச 5:26மத் 26:251 சாமு 10:12 சாமு 20:9ஆதி 27:26யோவா 19:3லூக் 7:45மத் 27:29-30
இயேசு யூதாஸிடம், “நண்பனே, நீ எதற்காக வந்தாயோ, அதைச் செய்!” என்றார். மத் 20:13மத் 22:122 சாமு 16:17லூக் 22:48சங் 41:9சங் 55:13-14
அப்பொழுது அவனுடன் வந்தவர்கள் முன்னேவந்து, இயேசுவைப் பிடித்து அவரைக் கைது செய்தார்கள். அவ்வேளையில் இயேசுவுடன் இருந்தவர்களில் ஒருவன் தனது வாளை உருவி பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின் காதை வெட்டினான். 2 கொரி 10:4யோவா 18:36மாற் 14:47லூக் 22:49-51யோவா 18:10-11லூக் 22:36-38மத் 26:35லூக் 9:55
இயேசு அவனிடம், “உன் வாளை அதன் உறையிலே போடு, ஏனெனில் வாளை எடுக்கிற அனைவரும் வாளினாலேயே சாவார்கள். ஆதி 9:6வெளி 13:10ரோம 12:191 பேது 2:21-231 பேது 3:9வெளி 16:6சங் 55:231 தெச 5:15 என் பிதாவை நோக்கி, என்னால் கூப்பிட முடியாது என்று நீ நினைக்கிறாயா? நான் கேட்டால் அவர் உடனே எனக்காக பன்னிரண்டுக்கும் அதிகமான தூதர் சேனையை அனுப்புவார் அல்லவா? 2இராஜா 6:17மத் 4:11தானி 7:10லூக் 8:302 தெச 1:7யூதா 1:14மத் 25:31மத் 10:1-2 ஆனால் நான் அப்படிச் செய்தால், இவ்விதமாக நிகழவேண்டும் என்று சொல்கிற வேதவசனம், எப்படி நிறைவேறும்?” என்றார். சகரி 13:7லூக் 24:25-26மத் 26:24அப் 1:16ஏசா 53:1-12யோவா 10:35லூக் 24:44-46சங் 22:1-31
அவ்வேளையில் இயேசு அந்தப் பெருங்கூட்டத்தைப் பார்த்து, “நான் ஆபத்தான புரட்சியை உண்டாக்குகிறேனா, அதனாலேயா என்னைப் பிடிப்பதற்கு நீங்கள் வாள்களுடனும் தடிகளுடனும், வந்திருக்கிறீர்கள்? நான் ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்தில் உட்கார்ந்து போதித்துக் கொண்டிருந்தேனே; அப்பொழுது நீங்கள் என்னைக் கைதுசெய்யவில்லை. யோவா 8:2மாற் 12:35யோவா 18:20-21யோவா 7:14யோவா 7:28லூக் 21:37-38லூக் 22:52-53மாற் 14:48-50 ஆனால் இறைவாக்கினர் எழுதி வைத்தவை நிறைவேறும்படியே இவையெல்லாம் நிகழ்கின்றன” என்றார். அப்பொழுது சீடர்கள் எல்லோரும் இயேசுவைத் தனியே விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். சகரி 13:7யோவா 16:32மாற் 14:50-522 தீமோ 4:16மத் 26:31மத் 26:54அப் 1:16யோவா 18:15-16
நீதிமன்றத்தில் இயேசு
இயேசுவைக் கைது செய்தவர்கள், அவரைப் பிரதான ஆசாரியன் காய்பாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மோசேயின் சட்ட ஆசிரியர்களும் யூதரின் தலைவர்களும் கூடியிருந்தார்கள். மத் 26:3யோவா 11:49யோவா 18:12-14யோவா 18:19-24லூக் 22:54-55மாற் 14:53-65சங் 56:5-6 பேதுரு சிறிது தூரத்தில் இயேசுவைப் பின்தொடர்ந்து போய், பிரதான ஆசாரியனுடைய முற்றம் வரைக்கும் போனான். அவன் உள்ளேப் போய் நடக்கப்போவதை அறியும்படி காவலருடன் உட்கார்ந்திருந்தான். யோவா 7:32யோவா 18:15-16யோவா 18:25யோவா 7:45
தலைமை ஆசாரியர்களும், ஆலோசனைச் சங்கத்தில் இருந்த அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை கொடுப்பதற்காக, அவருக்கு எதிரான சாட்சியைத் தேடிக்கொண்டிருந்தார்கள்; ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அப் 6:11-13உபா 19:16-21மாற் 14:55-561 இராஜா 21:8-13அப் 24:1-13மத் 5:22நீதி 25:18சங் 27:12 பல பொய் சாட்சிகள் முன்வந்தார்கள். ஆனால், அவர்களுக்கு ஏற்ற சாட்சியம் கிடைக்கவில்லை. உபா 19:15சங் 27:12சங் 35:111 பேது 3:16தானி 6:4-5மாற் 14:57-59தீத் 2:8
கடைசியாக இரண்டு பொய் சாட்சிகள் முன்வந்தார்கள். அவர்களோ, “இவன் இறைவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், அதை மூன்று நாட்களில் திரும்பக் கட்டவும் தன்னால் முடியும் என்று சொன்னான்” என்றார்கள். யோவா 2:19-21மத் 27:40மாற் 15:29அப் 18:13ஏசா 49:7ஏசா 53:3சங் 22:6-72இராஜா 9:11
அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நின்று இயேசுவிடம், “பதில் சொல்லமாட்டாயோ? இவர்கள் உனக்கு எதிராய் கொடுக்கிற சாட்சி என்ன?” கேட்டான். யோவா 18:19-24யோவா 19:9-11லூக் 23:9மத் 27:12-14மாற் 14:60 ஆனால் இயேசுவோ ஒன்றும் பேசாதிருந்தார். பிரதான ஆசாரியன் அவரிடம், “உயிருள்ள இறைவன் பெயரில் ஆணையிட்டுக் கேட்கிறேன்: நீ இறைவனின் மகனான கிறிஸ்து என்றால், அதை எங்களுக்குச் சொல்” என்றான். லேவி 5:1ஏசா 53:7மத் 16:16மத் 27:121 சாமு 14:26யோவா 6:691 யோவா 5:11-131 இராஜா 22:16
இயேசு அதற்குப் பதிலாக, “ஆம், நீர் சொல்கிறபடிதான்; ஆனால் நான் உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன்: இதுமுதல் மானிடமகனாகிய நான் வல்லமையுள்ள இறைவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” 3 என்றார். தானி 7:13மாற் 14:62சங் 110:1எபி 1:3வெளி 1:7லூக் 21:27மத் 24:30எபி 12:2
அப்பொழுது பிரதான ஆசாரியன் தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு, “இவன் இறைவனை நிந்தித்துப் பேசுகிறான்! இனியும் நமக்குச் சாட்சிகள் வேண்டுமோ? பாருங்கள், இவன் இறைவனை நிந்தித்துப் பேசியதை நீங்கள் இப்பொழுது கேட்டீர்களே. எரே 36:24யோவா 10:33யோவா 10:36மத் 9:3மாற் 14:63-64எண் 14:61 இராஜா 21:10-132இராஜா 18:37 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான். யோவா 19:7அப் 7:52அப் 13:27-28யாக் 5:6லேவி 24:11-16
அதற்கு அவர்கள், “இவன் சாக வேண்டியவன்” என்றார்கள்.
பின்பு அவர்கள் அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள். மற்றவர்கள் அவரை முகத்தில் அறைந்து, ஏசா 50:6ஏசா 53:3யோவா 18:22மத் 27:30மத் 5:39மாற் 14:65எபி 12:2ஏசா 52:14 “கிறிஸ்துவே, உம்மை அடித்தது யார் என்று இறைவாக்குச் சொல்லும்” என்றார்கள். லூக் 22:63-65மாற் 14:651 பேது 2:4-8ஆதி 37:19-20நியாயாதி 16:25யோவா 19:14-15யோவா 19:2-3மத் 27:28-29
பேதுரு இயேசுவை மறுதலித்தல்
பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான், அப்பொழுது ஒரு வேலைக்காரப் பெண் அவனிடம் வந்து, “நீயும் கலிலேயாவைச் சேர்ந்த இயேசுவுடன் இருந்தாயே” என்றாள். 1 இராஜா 19:13மத் 26:71அப் 5:37யோவா 18:16-181 இராஜா 19:92 பேது 2:7-9யோவா 1:46யோவா 18:25-27
அதற்கு அவன், “நீ என்ன பேசுகிறாய் என்றே எனக்குத் தெரியாது” என்று சொல்லி எல்லோருக்கும் முன்பாக அவரை மறுதலித்தான். 1 கொரி 10:12வெளி 21:8ஏசா 57:11எரே 17:9மத் 26:34-35மத் 26:40-43மத் 26:51மத் 26:56
பின்பு பேதுரு வெளியே முற்ற வாசலுக்குச் சென்றான்; அங்கே வேறொரு வேலைக்காரி அவனைக் கண்டு, அங்கிருந்த மக்களிடம், “இவன் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவோடு இருந்தவன்” என்றாள். யோவா 18:25-27லூக் 22:58மாற் 14:68-69
அதற்கு அவன், “அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சத்தியம் செய்து மீண்டும் மறுதலித்தான். அப் 5:3-4யாத் 20:7ஏசா 48:1லூக் 22:34மல்கி 3:5மத் 26:74மத் 5:34-36சகரி 5:3-4
சிறிது நேரத்திற்குப் பின்பு அங்கு நின்றவர்கள் பேதுருவிடம் போய், “நிச்சயமாகவே நீ அவர்களில் ஒருவன். நீ பேசும் விதம் உன்னைக் காட்டிக்கொடுக்கிறது” என்றார்கள். நியாயாதி 12:6யோவா 18:26-27லூக் 22:59-60நெகே 13:24
அப்பொழுது பேதுரு, “அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கினான். வெளி 3:191 கொரி 16:22அப் 23:12-14யோவா 18:27மத் 10:28மாற் 14:71-721 சாமு 14:24-28நியாயாதி 21:18
உடனே சேவல் கூவியது. “சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளைப் பேதுரு நினைவுகூர்ந்தான். அவன் வெளியே போய் மனங்கசந்து அழுதான். மத் 26:34ரோம 7:18-20யோவா 13:38லூக் 22:31-34லூக் 22:61-62கலா 6:1மத் 27:3-51 கொரி 4:7