இயேசுவோ ஒலிவமலைக்குச் சென்றார். மத் 21:1மாற் 11:1லூக் 19:37மாற் 13:3
அதிகாலையிலே அவர் மீண்டும் ஆலய முற்றத்திற்கு வந்தார். மக்கள் எல்லோரும் அவரைச் சுற்றிக் கூடிவந்தனர். இயேசு அவர்களுக்கு போதிப்பதற்காக உட்கார்ந்தார். மத் 26:55லூக் 21:37லூக் 4:20லூக் 5:3மத் 5:1-2பிரச 9:10எரே 25:3எரே 44:4 அப்பொழுது மோசேயின் சட்ட ஆசிரியரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை அங்கு கொண்டுவந்தார்கள். அவர்கள் அவளை அங்கிருந்த எல்லோருக்கும் நடுவாக நிறுத்தினார்கள். அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசேயின் சட்டத்தில் மோசே எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். இப்பொழுது நீர் என்ன சொல்கிறீர்?” என்றார்கள். லேவி 20:10உபா 22:21-24எசேக் 16:38-40மத் 5:17மத் 19:6-8மத் 22:16-18எசேக் 23:47 இயேசுவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவரும்படி, ஒரு சூழ்ச்சியாக அவர்கள் இந்தக் கேள்வியை கேட்டார்கள். எரே 17:13லூக் 10:25பிரச 3:7சங் 38:12-14ஆமோ 5:10மத் 19:31 கொரி 10:9ஆமோ 5:13
ஆனால் இயேசுவோ, குனிந்து தமது விரலினால் தரையிலே எழுதத் தொடங்கினார். அவர்கள் தொடர்ந்து அவரைக் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்ததினால், இயேசு நிமிர்ந்து அவர்களைப் பார்த்து, “உங்களில் யாராவது பாவமில்லாதவன் இருந்தால், அவன் முதலாவதாக இவள்மேல் கல்லெறியட்டும்” என்றார். மத் 7:1-5ரோம 2:21-25ரோம 2:1-3உபா 17:6-7மத் 23:25-28கொலோ 4:6எபி 4:12-13சங் 50:16-20 இயேசு மீண்டும் குனிந்து தரையில் எழுதினார்.
அப்பொழுது, இதைக் கேட்டவர்களில், முதியோர் தொடங்கி சிறியோர் வரை ஒவ்வொருவராகப் போகத் தொடங்கினார்கள். இயேசு மட்டும் அங்கே இருந்தார். அந்தப் பெண்ணும் அங்கே நடுவே நின்றுகொண்டிருந்தாள். பிரச 7:22ரோம 2:151 யோவா 3:20ஆதி 42:21-22ரோம 2:22யோவா 8:10யோபு 5:12-13சங் 71:13 இயேசு நிமிர்ந்து அவளைப் பார்த்து, “மகளே, அவர்கள் எங்கே? ஒருவனும் உன்னைக் குற்றவாளியாகத் தீர்க்கவில்லையோ?” என்று கேட்டார். ஏசா 41:11-12
அதற்கு அவள், “இல்லை ஆண்டவரே” என்றாள். யோவா 3:17யோவா 5:14ஏசா 1:16-18யோவா 8:15லூக் 15:7லூக் 5:32யோபு 34:31நீதி 28:13
அப்பொழுது இயேசு அவளிடம், “நானும் உன்னை குற்றவாளியாகத் தீர்க்கமாட்டேன். இப்பொழுது நீ போகலாம், இனிப் பாவம் செய்யாதே” என்றார்.
இயேசுவின் சாட்சியைப் பற்றி விவாதம்
மீண்டும் இயேசு மக்களுடன் பேசத்தொடங்கி, “நானே உலகத்தின் வெளிச்சமாய் இருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் ஒருபோதும் இருளில் நடக்கமாட்டான். ஜீவ வெளிச்சம் அவர்களுடன் இருக்கும்” என்றார். யோவா 12:46யோவா 9:5யோவா 12:35மத் 5:14யோபு 33:28யோவா 1:4-9சங் 18:28யோவா 3:19
அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், “இதோ பார், நீயே உன்னைக் குறித்த சாட்சி கொடுக்கிறாயே; உனது சாட்சி உண்மையல்ல” என்றார்கள். யோவா 5:31-47
இயேசு அதற்குப் பதிலாக, “நானே என்னைக்குறித்து சாட்சி கொடுத்தாலும், எனது சாட்சி உண்மையானதே. ஏனெனில் நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும், நான் எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் நீங்களோ நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறியாதிருக்கிறீர்கள். யோவா 13:3யோவா 16:28யோவா 14:10யோவா 8:42யோவா 17:8எண் 12:3வெளி 3:142 கொரி 11:31 நீங்கள் மனிதருக்கேற்றபடி தீர்ப்புச் செய்கிறீர்கள்; நானோ ஒருவருக்கும் தீர்ப்புச் செய்வதில்லை. 1 சாமு 16:7யோவா 12:47யோவா 3:17யோவா 7:24யோவா 18:36ரோம 2:11 கொரி 2:151 கொரி 4:3-5 நான் தீர்ப்பு செய்தாலும், எனது தீர்ப்பு உண்மையானதாகவே இருக்கும். ஏனெனில் நான் தனியாக தீர்ப்பு கொடுப்பதில்லை. என்னை அனுப்பிய என் பிதாவும் என்னுடனேகூட இருக்கிறார். யோவா 8:29அப் 17:311 சாமு 16:7ஏசா 32:1-2யோவா 16:32யோவா 5:22-30ஏசா 11:2-5எரே 23:5-6 இரண்டு பேருடைய சாட்சி உண்மையானது என்று உங்கள் சொந்த சட்டத்திலே எழுதியிருக்கிறது. உபா 19:15உபா 17:6எபி 10:28மத் 18:16கலா 3:242 கொரி 13:1கலா 4:21வெளி 11:3 நான் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கிறேன்; என்னை அனுப்பிய பிதாவே எனது இரண்டாவது சாட்சியாயிருக்கிறார்” என்றார். யோவா 8:38யோவா 8:58வெளி 1:17-181 யோவா 5:6-12எபி 2:4யோவா 10:11யோவா 10:14யோவா 10:9
அப்பொழுது அவர்கள் அவரிடம், “உமது பிதா எங்கே?” என்றார்கள். யோவா 16:3யோவா 8:54-55யோவா 14:6-92 கொரி 4:4-61 கொரி 15:34யோவா 1:10யோவா 7:28மத் 11:25
அதற்கு இயேசு, “என்னையோ, என் பிதாவையோ நீங்கள் அறியாமல் இருக்கிறீர்கள். நீங்கள் என்னை அறிந்தால், என் பிதாவையுங்கூட அறிந்திருப்பீர்கள்” என்றார். இயேசு ஆலயப் பகுதியில் போதிக்கும்போது, காணிக்கை போடுகிற இடத்தின் அருகே நின்று, இந்த வார்த்தைகளைப் பேசினார். ஆனால் ஒருவனும் அவரைக் கைதுசெய்யவில்லை. ஏனெனில் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை. யோவா 7:30யோவா 7:8மாற் 12:41யோவா 7:44மத் 27:6மாற் 12:431 நாளாக 9:26யோவா 10:39
இயேசு யார் என்ற சர்ச்சை
மீண்டும் இயேசு அவர்களிடம், “நான் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் பாவத்திலேயே சாவீர்கள். நான் போகிற இடத்திற்கு உங்களால் வரமுடியாது” என்றார். யோவா 7:34யோவா 8:241 கொரி 15:17-18எசேக் 3:18-19யோவா 13:331 இராஜா 18:102இராஜா 2:16-17ஏசா 65:20
அப்பொழுது யூதர்கள், “இவன் தற்கொலை செய்துகொள்ள போகிறானா? அதனால்தான், ‘நான் போகிற இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்று சொல்கிறானோ!” என்று கேட்டார்கள். யோவா 8:52சங் 22:6எபி 12:3யோவா 8:48சங் 31:18எபி 13:13யோவா 10:20யோவா 7:20
இயேசு தொடர்ந்து அவர்களிடம், “நீங்கள் கீழேயிருந்து வந்தவர்கள்; நான் மேலேயிருந்து வந்தவன். நீங்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள்; நான் இந்த உலகத்தைச் சேர்ந்தவன் அல்ல. யோவா 3:311 யோவா 2:15-16யோவா 17:14யோவா 17:161 யோவா 4:5-6சங் 17:41 யோவா 5:19-20யாக் 4:4 நீங்கள் உங்கள் பாவங்களிலேயே சாவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள்” என்றார். யோவா 3:36மாற் 16:16யோவா 3:18எபி 10:26-29எபி 12:25நீதி 8:36எபி 2:3யோவா 13:19
அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நீர் யார்?” என்று கேட்டார்கள். யோவா 5:17-29யோவா 1:22யோவா 8:12லூக் 22:67யோவா 10:24யோவா 19:9யோவா 1:19
அதற்கு பதிலாக, “அதைத்தான் நான் தொடக்கத்திலிருந்தே உங்களுக்குச் சொல்கிறேனே” என்று இயேசு சொல்லி, “உங்களைப் பற்றிச் சொல்லவும், நியாயத்தீர்ப்பு அளிக்கவும் என்னிடம் அநேக காரியங்கள் இருக்கிறது. ஆனால் என்னை அனுப்பியவரிடமிருந்து கேட்டதை மட்டும் நான் உலகத்திற்கு அறிவிக்கிறேன். ஏனென்றால் என்னை அனுப்பியவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார்” என்றார். யோவா 15:15யோவா 12:47-50யோவா 8:40யோவா 17:8யோவா 7:282 கொரி 1:18எபி 5:11-12யோவா 16:12
இயேசு பிதாவாகிய இறைவனைக் குறித்தே பேசுகிறார் என்று அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. ஏசா 6:9ஏசா 59:102 கொரி 4:3-4ஏசா 42:18-20யோவா 8:43யோவா 8:47ரோம 11:7-10 எனவே இயேசு அவர்களிடம், “நீங்கள் மானிடமகனாகிய என்னை உயர்த்திய பின்பு, நானே அவர் என்றும், எனது சுயமாக நான் ஒன்றும் செய்கிறதில்லையென்றும், பிதா எனக்கு போதித்தபடியே நான் இவற்றைச் சொல்கிறேன் என்றும் அறிந்துகொள்வீர்கள். யோவா 5:19யோவா 5:30யோவா 6:38யோவா 12:49-50யோவா 3:141 தெச 2:15-16யோவா 12:32-34அப் 2:41 என்னை அனுப்பிய பிதா என்னுடனே இருக்கிறார்; அவர் என்னைத் தனிமையாய் விட்டுவிடவில்லை. ஏனெனில் அவருக்குப் பிரியமானதையே நான் எப்பொழுதும் செய்கிறேன்” என்றார். யோவா 6:38யோவா 16:32யோவா 15:10யோவா 4:34யோவா 5:30ஏசா 42:1யோவா 8:16யோவா 14:10-11 அவர் இந்தக் காரியங்களைக் குறித்துச் சொன்னபோது, பலர் அவரில் விசுவாசம் வைத்தார்கள். யோவா 7:31யோவா 2:23யோவா 10:42யோவா 11:45யோவா 6:14
ஆபிரகாமின் பிள்ளைகள்
இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களிடம், “நீங்கள் எனது உபதேசத்தில் தொடர்ந்து நிலைத்திருந்தால், நீங்கள் உண்மையாகவே எனது சீடர்களாய் இருப்பீர்கள். 2 யோவா 1:9யோவா 15:4-92 தீமோ 3:141 தீமோ 4:16யாக் 1:25கொலோ 1:231 சாமு 12:14யோவா 6:66-71 அப்பொழுது நீங்கள் சத்தியத்தை அறிந்துகொள்வீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்றார். ரோம 8:2யோவா 8:36யோவா 17:171 பேது 2:16யோவா 14:6ரோம 6:22ரோம 6:14-18ஏசா 61:1
அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம். நாங்கள் ஒருபோதும் ஒருவருக்கும் அடிமைகளாய் இருந்ததில்லை. அப்படியிருக்க நாங்கள் விடுதலையாவோம் என்று நீர் எப்படிச் சொல்லலாம்?” என்றார்கள். மத் 3:9யோவா 8:39நெகே 5:4-8ஆதி 15:13யோவா 8:37நெகே 9:27-28யாத் 1:13-14எஸ்றா 9:9
அதற்கு இயேசு பதிலாக, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். பாவம் செய்கிற ஒவ்வொருவரும் பாவத்திற்கு அடிமையாய் இருக்கிறார்கள். ரோம 6:162 பேது 2:19நீதி 5:221 யோவா 3:8-10ரோம 6:12ரோம 6:6தீத் 3:3ரோம 6:19-20 ஒரு அடிமைக்குக் குடும்பத்தில் நிரந்தர இடம் இருப்பதில்லை. ஆனால் மகனோ குடும்பத்திற்கு என்றென்றும் சொந்தமானவனாயிருக்கிறான். கலா 4:4-7லூக் 15:31ஆதி 21:10ரோம 8:15-17கலா 4:30-31எசேக் 46:17எபி 3:5-61 பேது 1:2-5 ஆகவே இறைவனின் மகன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் உண்மையாகவே விடுதலை பெறுவீர்கள். 2 கொரி 3:17கலா 5:1ரோம 8:2யோவா 8:31-32லூக் 4:18சகரி 9:11-12ஏசா 61:1ஏசா 49:24-25 நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் என்னைக் கொல்வதற்கு ஆயத்தமாய் இருக்கிறீர்கள். ஏனெனில் எனது வார்த்தைக்கு உங்கள் உள்ளத்தில் இடமில்லை. 1 கொரி 2:14யோவா 8:45-47ரோம 9:7யோவா 7:1யோவா 8:59அப் 13:26யோவா 8:43யோவா 11:53 எனது பிதாவின் முன்னிலையில் கண்டவற்றையே நான் அறிவிக்கிறேன். ஆனால் நீங்களோ உங்கள் தகப்பனிடமிருந்து கேள்விப்பட்டதையே செய்கிறீர்கள்” என்றார். யோவா 5:19யோவா 8:44யோவா 12:49-50யோவா 5:30யோவா 8:411 யோவா 3:8-10யோவா 14:10யோவா 14:24
அதற்கு அவர்கள், “ஆபிரகாமே எங்கள் தந்தை” என்றார்கள். கலா 3:7யோவா 8:37ரோம 9:7ரோம 2:28-29மத் 3:9மத் 5:45கலா 3:29யாக் 2:22-24
இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளானால் ஆபிரகாம் செய்தவற்றையே நீங்களும் செய்வீர்கள். ஆனால் நீங்களோ, இறைவனிடம் கேட்டறிந்த சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனிதனான என்னைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள். ஆபிரகாம் இப்படியான காரியங்களைச் செய்யவில்லையே. யோவா 8:26கலா 4:29கலா 4:16சங் 37:32வெளி 12:12-131 யோவா 3:12-15யோவா 8:37-38யோவா 8:56 நீங்கள் உங்கள் சொந்தத் தகப்பன் செய்ததையே செய்கிறீர்கள்” என்றார். ஏசா 64:8ஏசா 63:16யோவா 8:38யோவா 8:44மல்கி 2:11உபா 14:1உபா 32:6யாத் 4:22
அதற்கு அவர்கள் அவரிடம், “நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்கள் இல்லை. இறைவன் ஒருவரே எங்களுக்கும் பிதா” என்றார்கள்.
அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவன் உங்கள் பிதாவாக இருந்தால், நீங்கள் என்னிலும் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் இப்பொழுது இங்கே இருக்கின்ற நான் இறைவனிடமிருந்தே வந்தேன். நான் எனது சுயவிருப்பத்தின்படி வரவில்லை; அவரே என்னை அனுப்பினார். யோவா 12:49யோவா 14:10யோவா 17:8யோவா 17:25யோவா 15:23-24மல்கி 1:6யோவா 1:141 யோவா 5:1-2 நான் சொல்வது ஏன் உங்களுக்குத் தெளிவாய் இல்லை? நான் சொல்வதைக் கேட்க உங்களுக்கு மனதில்லாமல் இருக்கிறதினால்தானே. யோவா 12:39-40யோவா 5:43யோவா 7:17ரோம 8:7-8நீதி 28:5அப் 7:51எரே 6:10யோவா 6:60 நீங்கள் உங்கள் தகப்பனான சாத்தானுக்கு உரியவர்கள். உங்கள் தகப்பனின் ஆசைகளைச் செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள். அவன் தொடக்கத்திலிருந்தே கொலைகாரனாய் இருக்கிறான். அவனிடம் சத்தியமில்லை. அதனால் அவன் சத்தியத்தில் நிலைத்திருப்பதில்லை. அவன் பொய் பேசும்போது தன் சொந்த மொழியையே பேசுகிறான். ஏனெனில் அவன் ஒரு பொய்யன், பொய்களின் தகப்பன். அப் 13:101 யோவா 3:121 யோவா 3:8-102 கொரி 11:3வெளி 12:9யோவா 8:38வெளி 20:7-10யோவா 8:41 இருந்தும் நானோ உங்களுக்கு சத்தியத்தை சொல்கிறபடியால், நீங்கள் என்னை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள். 2 தீமோ 4:3-42 தெச 2:10கலா 4:16யோவா 18:37யோவா 3:19-20யோவா 7:7 நான் பாவம் செய்தேன் என்று என்னைக் குற்றம் சாட்டி நிரூபிக்க உங்களில் எவனால் முடியும்? நான் உங்களுக்கு சத்தியத்தைச் சொல்லியும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்? எபி 4:15யோவா 16:81 பேது 2:222 கொரி 5:21யோவா 15:10யோவா 8:7மத் 21:25எபி 7:26 யார் இறைவனுக்குரியவராய் இருக்கிறவர்கள், அவன் இறைவன் சொல்லும் வார்த்தையைக் கேட்கிறான். நீங்களோ இறைவனுக்குரியவர்கள் அல்லாதபடியினாலே, இறைவனுடைய வார்த்தையைக் கேளாமல் இருக்கிறீர்கள்” என்றார். 2 யோவா 1:9யோவா 10:26-27யோவா 18:371 யோவா 3:10யோவா 6:45-46யோவா 8:37யோவா 8:451 யோவா 4:1-6
தம்மைப்பற்றிய இயேசுவின் உரிமை
அப்பொழுது யூதத்தலைவர்கள் அவரிடம், “நீ ஒரு சமாரியன். நீ பிசாசு பிடித்தவன் என்று நாங்கள் சொன்னது சரியல்லவா?” என்றார்கள். யோவா 7:20யோவா 8:52யாக் 2:19யோவா 10:20யோவா 4:9மத் 10:25மத் 10:5மத் 12:24
அதற்கு இயேசு, “நான் பிசாசு பிடித்தவன் அல்ல. நான் என் பிதாவைக் கனம்பண்ணுகிறேன். நீங்களோ என்னை அவமதிக்கிறீர்கள். 1 பேது 2:23பிலி 2:6-11ஏசா 49:3யோவா 11:4யோவா 12:28யோவா 13:31-32யோவா 14:13யோவா 17:4 நான் எனது சுய மகிமையைத் தேடவில்லை; ஆனால் எனக்காக மகிமையைத் தேடுகிறவரும் நியாயந்தீர்க்கிறவரும் ஒருவர் இருக்கிறாரே. யோவா 5:41யோவா 8:54யோவா 5:20-23யோவா 7:18யோவா 12:47-48யோவா 5:45 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது எனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் ஒருபோதும் மரணத்தைக் காணமாட்டார்கள்” என்றார். யோவா 11:25-26யோவா 5:24யோவா 3:15-16யோவா 15:20யோவா 6:50எபி 11:5லூக் 2:26யோவா 8:55
அப்பொழுது யூதத்தலைவர்கள், “உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்று இப்பொழுது நாங்கள் நன்றாய் தெரிந்துகொண்டோம். ஆபிரகாம் இறந்தார், இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் நீயோ, யாராவது உனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் எவ்விதத்திலும் மரணத்தை அனுபவிப்பதில்லை என்று சொல்கிறாய். எபி 2:9யோவா 8:48யோவா 8:51யோவா 9:24எபி 11:13சகரி 1:5-6 நீ எங்கள் தகப்பன் ஆபிரகாமைப் பார்க்கிலும் பெரியவனோ? அவர் மரித்தார், அப்படியே இறைவாக்கினரும் மரித்தார்கள். நீ உன்னை யார் என்று எண்ணுகிறாய்?” என்று கேட்டார்கள். யோவா 4:12எபி 7:1-7ஏசா 9:6ரோம 9:5எபி 3:2-3யோவா 10:29-30யோவா 10:33யோவா 12:34
இயேசு அதற்கு மறுமொழியாக, “நானே என்னை மகிமைப்படுத்தினால், எனது மகிமை அர்த்தமற்றது. நீங்கள் உங்கள் இறைவன் என்று உரிமையோடு சொல்கிற, எனது பிதாவே என்னை மகிமைப்படுத்துகிறவர். யோவா 8:50நீதி 25:272 பேது 1:172 கொரி 10:18யோவா 16:14-15சங் 110:1-4அப் 3:13தானி 7:13-14 நீங்கள் அவரை அறியாதிருந்தாலும், நான் அவரை அறிந்திருக்கிறேன். நான் அவரை அறியவில்லை என்று சொன்னால், நானும் உங்களைப்போலவே ஒரு பொய்யனாய் இருப்பேன். ஆனால் நானோ அவரை அறிந்திருக்கிறேன். அவரின் வார்த்தையைக் கைக்கொள்கிறேன். யோவா 8:19யோவா 7:28-29யோவா 8:44யோவா 8:51மத் 11:27வெளி 3:91 யோவா 5:10எரே 4:22 உங்கள் முற்பிதாவான ஆபிரகாம் எனது நாளைக் காண்பதை எண்ணி மகிழ்ச்சி கொண்டிருந்தான்; அதைக்கண்டு அவன் சந்தோஷப்பட்டான்” என்றார். எபி 11:13கலா 3:7-9ஆதி 22:18யோவா 8:39மத் 13:17லூக் 10:241 பேது 1:10-12எபி 11:39
அப்பொழுது யூதத்தலைவர்கள் அவரிடம், “உனக்கோ இன்னும் ஐம்பது வயதாகவில்லை. நீ ஆபிரகாமைக் கண்டாயோ!” என்றார்கள்.
அதற்கு இயேசு, “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்கிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்னமே இருக்கிறவர் நானே” என்றார். யாத் 3:14கொலோ 1:17யோவா 17:5யோவா 1:1-2ஏசா 44:6யோவா 17:24வெளி 1:8எபி 13:8 இதைக் கேட்டவுடன் அவர்மேல் எறியும்படி அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இயேசுவோ அவர்கள் நடுவே கடந்து ஆலயப் பகுதியை விட்டு வெளியே போய்விட்டார். யோவா 11:8யோவா 10:30-33யோவா 10:39-40லேவி 24:16லூக் 4:29-302இராஜா 6:18-20அப் 7:57அப் 8:39-40