இயேசு முடக்குவாதக்காரனைச் சுகப்படுத்துதல்
இயேசு ஒரு படகில் ஏறி, கடலைக் கடந்து தமது சொந்தப் பட்டணத்திற்கு வந்தார். மத் 4:13லூக் 8:37மத் 7:6மத் 8:18மாற் 5:21வெளி 22:11மத் 8:23 அங்கே சிலர் முடக்குவாதக்காரன் ஒருவனைப் படுக்கையில் கிடத்தியபடியே, அவரிடம் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே, தைரியமாயிரு; உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன” என்றார். மாற் 2:1-12லூக் 5:18-26எரே 31:33-34மத் 9:22லூக் 7:47-50சங் 32:1-2கொலோ 1:12-14யாக் 2:18
இதைக் கேட்ட சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள், “இவன் இறைவனை நிந்திக்கிறான்!” என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். மத் 26:65லேவி 24:16லூக் 5:21யோவா 10:33-36லூக் 7:39-40மாற் 14:64மாற் 2:6-7அப் 6:11-13
அவர்களுடைய சிந்தனைகளை அறிந்த இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் உங்கள் இருதயங்களில் தீயவைகளைச் சிந்திக்கிறீர்கள்? லூக் 6:8மத் 12:25வெளி 2:23யோவா 16:30லூக் 11:17லூக் 9:46-47சங் 139:2சங் 44:21 ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது, ‘எழுந்து நட’ என்று சொல்வதா, எது எளிது? யோவா 5:8-14மாற் 2:9-12அப் 3:16லூக் 5:23-25அப் 14:8-11அப் 3:6-11ஏசா 35:5-6அப் 9:34 ஆனால் பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று விரும்புகிறேன்” என்று சொல்லி, பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார். ஏசா 43:25மத் 9:52 கொரி 2:102 கொரி 5:20யோவா 20:21-23யோவா 5:21-23அப் 5:31அப் 7:59-60 உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான். மக்கள் கூட்டம் இதைக் கண்டபோது, இப்படிப்பட்ட அதிகாரத்தை மனிதருக்கு அளித்த இறைவனைப் பயபக்தியுடன் துதித்தார்கள். லூக் 7:16மத் 15:31அப் 4:21லூக் 17:15லூக் 23:47மாற் 2:12யோவா 15:8லூக் 5:25-26
மத்தேயு அழைக்கப்படுதல்
இயேசு அங்கிருந்து போகும்போது, மத்தேயு என்னும் பெயருடைய ஒருவன் வரி வசூலிக்கிறவர்களுடைய அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவன் எழுந்து அவரைப் பின்பற்றிச் சென்றான். லூக் 5:27-38மாற் 2:14-221 இராஜா 19:19-21லூக் 19:2-10மாற் 3:18அப் 1:13கலா 1:16மத் 21:31-32
பின்பு இயேசு, மத்தேயுவின் வீட்டில் விருந்து சாப்பிடும்போது, வரி வசூலிக்கிறவர்களும், பாவிகளும் அநேகர் வந்து, அவருடனும் அவருடைய சீடர்களுடனும் சாப்பிட்டார்கள். லூக் 5:29-321 தீமோ 1:13-16மாற் 2:15-17யோவா 9:31மத் 5:46-47 இதைப் பரிசேயர் கண்டபோது, அவரது சீடர்களிடம், “ஏன் உங்கள் போதகர் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறார்?” என்று கேட்டார்கள். மத் 11:19லூக் 5:30லூக் 15:1-2மாற் 2:161 கொரி 5:9-11கலா 2:15எபி 5:2ஏசா 65:5
இதைக் கேட்டபோது இயேசு, “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை” என்றார். லூக் 5:31வெளி 3:17-18எரே 33:6லூக் 9:11மாற் 2:17சங் 147:3எரே 17:14ஓசி 14:4 மேலும் அவர், “ ‘நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ 1 என்ற இறைவாக்கின் கருத்து என்னவென்று, போய்க் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே அழைக்கவந்தேன்” என்றார். மாற் 2:17லூக் 19:10ஓசி 6:6லூக் 5:32மத் 12:71 தீமோ 1:13-16நீதி 21:32 பேது 3:9
உபவாசத்தைப் பற்றி இயேசுவிடம் கேள்வி
அதற்குப் பின்பு யோவானுடைய சீடர்கள் இயேசுவிடம் வந்து, “நாங்களும், பரிசேயரும் உபவாசிக்கிறோம். ஆனால் உமது சீடர்கள் உபவாசிப்பதில்லை, அது ஏன்?” என்று கேட்டார்கள். லூக் 5:33-39மாற் 2:18-22மத் 6:16மத் 11:18-19யோவா 3:25லூக் 18:9-12நீதி 20:6யோவா 4:1
அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, மணமகனின் விருந்தினர் துக்கங்கொண்டாடுவது எப்படி? மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அப்பொழுது அவர்கள் உபவாசிப்பார்கள்” என்று சொன்னார். வெளி 19:9யோவா 3:29வெளி 21:2அப் 13:1-3அப் 14:23யோவா 16:20-22மத் 25:1-10சங் 45:14-15
“ஒருவனும் பழைய ஆடையில், புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால், புதிய துணி ஆடையைக் கிழித்துவிடும், கிழிசலும் முன்னிருந்ததைவிட பெரிதாகிவிடும். 1 கொரி 3:1-2யோவா 16:12சங் 125:31 கொரி 13:13ஏசா 40:11ஆதி 33:14 மக்கள் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அப்படி செய்தால், தோல் பைகள் வெடித்து விடும்; திராட்சை இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் பாழாய்ப்போகும். அப்படிச் செய்யாமல், புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும்” என்றார். யோபு 32:19யோசு 9:4சங் 119:83
இறந்த மகளும் வியாதியான பெண்ணும்
இயேசு இதைச் சொல்லிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத் தலைவன் ஒருவன் வந்து அவர்முன் முழங்காற்படியிட்டு, அவரிடம், “எனது மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள். ஆனாலும் நீர் வந்து உமது கையை அவள்மேல் வையும். அப்பொழுது அவள் உயிர் பெறுவாள்” என்று சொன்னான். லூக் 8:41-56மாற் 5:22-43மத் 8:22இராஜா 5:11லூக் 13:14யோவா 11:21-22யோவா 11:32யோவா 4:47-49 இயேசு எழுந்து ஜெப ஆலயத் தலைவனுடன் சென்றார். இயேசுவின் சீடர்களும் அவருக்குப் பின்சென்றார்கள். அப் 10:38கலா 6:9-10யோவா 4:34மத் 8:7
அவ்வேளையில், பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண், இயேசுவுக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள். லூக் 8:43-56மாற் 6:56மத் 14:36மாற் 5:25-43உபா 22:12அப் 5:15லேவி 15:25-33மத் 23:5 அவள், “நான் அவரது மேலுடையைத் தொட்டால் போதும். குணமடைவேன்” எனத் தனக்குள் சொல்லிக்கொண்டாள். மாற் 5:26-33லூக் 8:45-47அப் 19:12
இயேசு அவளை திரும்பிப்பார்த்து, “மகளே, தைரியமாயிரு; உனது விசுவாசம் உன்னை குணப்படுத்தியது” என்றார். அந்தப் பெண் அந்த நேரத்திலேயே குணமானாள். லூக் 7:50மத் 15:28மத் 9:2லூக் 17:19லூக் 18:42லூக் 8:48மாற் 10:52மாற் 5:34
பிறகு இயேசு ஜெப ஆலயத் தலைவனின் வீட்டிற்குள் போனவுடன் குழல் ஊதுவோரையும், கூச்சலிட்டு அழும் மக்கள் கூட்டத்தையும் கண்டார். 2 நாளாக 35:25மாற் 5:35-40லூக் 8:49-51மத் 9:18-19எரே 9:17-20மத் 11:17அப் 9:39லூக் 7:32 இயேசு அவர்களிடம், “வெளியே போங்கள். இந்த சிறுமி சாகவில்லை, அவள் தூங்குகிறாள்” என்றார். அவர்களோ அதைக்கேட்டு நகைத்தார்கள். அப் 20:10யோவா 11:11-131 இராஜா 17:18-24அப் 9:40ஏசா 49:7ஏசா 53:3யோவா 11:4மத் 27:39-43 மக்கள் கூட்டத்தை வெளியே அனுப்பியபின், இயேசு உள்ளேப் போய், அந்தச் சிறுமியின் கையைப் பிடித்துத் தூக்கினார், அவள் உடனே எழுந்திருந்தாள். மாற் 9:272இராஜா 4:32-36லூக் 8:54மாற் 1:31மாற் 5:41அப் 9:40-41மாற் 8:23 இச்செய்தி, அப்பகுதிகள் எங்கும் பரவியது. மத் 4:24மத் 14:1-2மாற் 1:45அப் 26:26மாற் 6:14
இயேசு பார்வையற்றோரையும் ஊமையனையும் குணமாக்குதல்
இயேசு அங்கிருந்து போகும்போது, இரண்டு பார்வையற்றோர் அவரைப் பின்தொடர்ந்து சென்று, “தாவீதின் மகனே! எங்கள்மேல் இரக்கமாயிரும்!” என்று சத்தமிட்டார்கள். மத் 15:22மத் 20:30-31மாற் 10:46-48லூக் 18:38-39மத் 11:5மத் 17:15மத் 22:41-45யோவா 7:42
அவர் வீட்டிற்குள் சென்றபோது, அந்த பார்வையற்றோர் அவரைப் பின்தொடர்ந்து அவரிடம் வந்தார்கள். இயேசு அவர்களிடம், “என்னால் இதைச் செய்யமுடியும் என நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” எனக் கேட்டார். மாற் 9:23-24மத் 13:58மத் 8:2மத் 9:22யோவா 11:26யோவா 11:40மத் 8:14யோவா 4:48-50
“ஆம் ஆண்டவரே!” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
பின்பு இயேசு, அவர்களுடைய கண்களைத் தொட்டு, “உங்களுடைய விசுவாசத்தின்படியே உங்களுக்குச் செய்யப்படும்” என்றார். மத் 15:28மாற் 10:52மத் 9:22மத் 8:13மத் 20:34மத் 8:6-7யோவா 9:6-7 உடனே அவர்களுக்கு பார்வை கிடைத்தது. இயேசு அவர்களிடம், “இதைப்பற்றி ஒருவரும் அறியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்” எனக் கடுமையாக எச்சரித்தார். லூக் 5:14மத் 8:4லூக் 8:56மத் 12:16மத் 17:9மாற் 5:43சங் 146:8ஏசா 35:5 ஆனால் குணமடைந்தவர்களோ வெளியே போய், அவரைப் பற்றியச் செய்தியை அப்பகுதியெங்கும் பரப்பினார்கள். மாற் 7:36மத் 9:26மாற் 1:44-45
அவர்கள் வெளியே சென்றுகொண்டிருந்தபோது, பிசாசு பிடித்ததினால் பேச முடியாதிருந்த ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். மத் 4:24லூக் 11:14மத் 12:22-24மாற் 9:17-27 அந்த பிசாசு துரத்தப்பட்டபோது, ஊமையாயிருந்தவன் பேசத் தொடங்கினான். மக்கள் கூட்டம் வியப்படைந்து, “இஸ்ரயேலில் இதுபோன்ற எதுவும், ஒருபோதும் காணப்பட்டதில்லை” என்றார்கள். ஏசா 35:6யாத் 4:11-12மாற் 7:32-372இராஜா 5:8எரே 32:20லூக் 11:14லூக் 7:9மத் 15:30-31
ஆனால் பரிசேயரோ, “பிசாசுகளின் தலைவனாலேயே, இவன் பிசாசுகளைத் துரத்துகிறான்” என்றார்கள். லூக் 11:15மாற் 3:22மத் 12:23-24யோவா 3:20
வேலையாட்கள் குறைவு
இயேசு எல்லாப் பட்டணங்கள்தோறும், கிராமங்கள்தோறும் நடந்துபோய், அங்கே யூதருடைய ஜெப ஆலயங்களில் போதித்து, பரலோக அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார். அத்துடன் எல்லா விதமான வியாதிகளையும், நோய்களையும் குணமாக்கினார். அப் 10:38மத் 4:23-24லூக் 4:43-44மாற் 6:56மத் 11:5அப் 2:22லூக் 13:22மத் 11:1 அவர் திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டபோது, அவர்கள்மேல் மனதுருகினார். ஏனெனில் அவர்கள், மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் துன்புறுத்தப்பட்டு, உதவியற்றவர்களாக இருந்தார்கள். எண் 27:17மாற் 6:34எரே 50:6எசேக் 34:3-6மத் 14:14சகரி 10:22 நாளாக 18:16மத் 10:6 அப்பொழுது இயேசு தமது சீடர்களிடம், “அறுவடை மிகுதியாய் இருக்கிறது, ஆனால் வேலையாட்களோ, கொஞ்சமாய் இருக்கிறார்கள். லூக் 10:2மாற் 16:151 கொரி 3:9யோவா 4:35-36மத் 28:192 கொரி 6:1லூக் 24:471 தெச 5:12-13 ஆகையால் அறுவடையின் ஆண்டவரிடம், தமது அறுவடைக்கு வேண்டிய வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள்” என்றார். லூக் 10:1-2எரே 3:152 தெச 3:1அப் 13:2யோவா 20:211 கொரி 12:28அப் 8:4சங் 68:11