இயேசு முடக்குவாதக்காரனைக் குணப்படுத்துதல்
சில நாட்களுக்குப்பின், இயேசு மீண்டும் கப்பர்நகூமுக்குச் சென்றபோது, அவர் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டார்கள். லூக் 5:18யோவா 4:47லூக் 18:35-38மத் 9:1மாற் 1:45மாற் 7:24அப் 2:6 எனவே மக்கள் அங்கு திரளாய் கூடிவந்தார்கள்; இதனால் வீட்டின் வாசலுக்கு வெளியேயும் இடம் இல்லாமல் போயிற்று. இயேசு மக்களுக்கு வார்த்தையைப் போதித்தார். மாற் 2:13மாற் 1:452 தீமோ 4:2லூக் 5:17லூக் 8:1மத் 5:2மாற் 1:14மாற் 1:33 அப்பொழுது சிலர் முடக்குவாதக்காரன் ஒருவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவர்களில் நாலுபேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தார்கள். லூக் 5:18-26மத் 9:1-8மத் 4:24 ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால், அவர்களால் அவனை இயேசுவினிடத்தில் கொண்டு வரமுடியவில்லை; எனவே அவர்கள் இயேசு இருந்த இடத்துக்கு மேலாக உள்ள கூரையைப் பிரித்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதக்காரனைப் படுத்திருந்த படுக்கையோடு கீழே இறக்கினார்கள். லூக் 5:19உபா 22:8 இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். மத் 9:2யாக் 5:15மாற் 2:9-10லூக் 7:47-50லூக் 5:20அப் 5:31எபே 2:8மத் 9:22
அங்கிருந்த சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள், தங்கள் இருதயங்களில், லூக் 5:21-22மாற் 8:172 கொரி 10:5மத் 16:7-8 “இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் இறைவனை நிந்திக்கிறானே! இறைவனால் மாத்திரமேயன்றி, வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். ஏசா 43:25தானி 9:9லூக் 5:21மீகா 7:18லூக் 7:49யோவா 10:33யோவா 20:20-23யோபு 14:4
உடனே இயேசு தமது ஆவியில் அவர்கள் தங்களுடைய இருதயங்களில் இவ்வாறு சிந்திக்கிறார்கள் என அறிந்துகொண்டார். எனவே இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் இவ்விதமாகச் சிந்திக்கிறீர்கள்? சங் 139:2அப் 5:3அப் 8:22எசேக் 38:10எபி 4:13யோவா 2:24-25யோவா 6:64லூக் 24:38 நான் இந்த முடக்குவாதக்காரனிடம், ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது, ‘நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று சொல்வதா, எது எளிது?” என்று கேட்டார். லூக் 5:22-25மத் 9:5 ஆனால், “பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்” என்று விரும்புகிறேன். தானி 7:13-14மத் 9:6-8அப் 5:31யோவா 5:20-27மத் 16:131 தீமோ 1:13-16 பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார். மாற் 1:41யோவா 5:8-10யோவா 6:63 உடனே அவன் எழுந்து தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக நடந்துபோனான். இதனால் எல்லோரும் வியப்படைந்து, “இப்படிப்பட்ட காரியத்தை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை” என்று சொல்லி, இறைவனைத் துதித்தார்கள். மத் 9:33மத் 9:8யோவா 9:32லூக் 7:16அப் 4:21யோவா 7:31லூக் 13:13லூக் 17:15
இயேசு லேவியை அழைத்தல்
மீண்டும் இயேசு புறப்பட்டு, கடற்கரை அருகே சென்றார். மக்கள் கூட்டமாகத் திரண்டு அவரிடம் வந்தார்கள்; இயேசு அவர்களுக்குப் போதித்தார். மாற் 4:1நீதி 1:20-22லூக் 19:48லூக் 21:38மத் 13:1மத் 9:9மாற் 1:45மாற் 2:2 பின்பு அவர் தொடர்ந்து நடந்துபோகையில் அல்பேயுவின் மகனான லேவி, வரி வசூலிக்கிறவர்களுடைய அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். இயேசு அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அப்பொழுது லேவி எழுந்து, அவரைப் பின்பற்றிச் சென்றான். லூக் 5:27-32லூக் 6:15மத் 9:9-13மாற் 1:17-20மாற் 3:18மத் 4:19-22அப் 1:13
இயேசு லேவியின் வீட்டில் விருந்து சாப்பிடுகையில், வரி வசூலிக்கிறவர்களும், பாவிகளும் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் பந்தியில் இருந்தார்கள்; ஏனெனில் இவர்களில் அநேகர் இயேசுவைப் பின்பற்றினார்கள். லூக் 15:1லூக் 5:29-30மத் 9:10-11லூக் 6:17மத் 21:31-32 பாவிகளோடும் வரி வசூலிக்கிறவர்களோடும் இயேசு சாப்பிட்டுக் கொண்டிருப்பதை மோசேயின் சட்ட ஆசிரியர்களான பரிசேயர் கண்டபோது, அவர்கள் இயேசுவின் சீடர்களிடம், “அவர் ஏன் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறார்?” என்று கேட்டார்கள். லூக் 18:11லூக் 19:10லூக் 19:71 கொரி 2:15அப் 23:9ஏசா 65:5எபி 12:3லூக் 15:2-7
இதைக் கேட்டபோது, இயேசு அவர்களிடம், “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை. நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே அழைக்கவந்தேன்” என்றார். லூக் 15:7மத் 9:12-13லூக் 19:10லூக் 5:31-321 தீமோ 1:15-16தீத் 3:3-7ரோம 5:6-8ஏசா 55:7
உபவாசத்தைப் பற்றி இயேசுவிடம் கேள்வி
அந்நாட்களில் யோவானின் சீடர்களும் பரிசேயரும் உபவாசித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிலர் இயேசுவினிடத்தில் வந்து, “யோவானின் சீடர்களும், பரிசேயருடைய சீடர்களும் உபவாசிக்கிறார்கள், ஆனால் உம்முடைய சீடர்கள் ஏன், உபவாசிப்பதில்லை?” என்று கேட்டார்கள். லூக் 18:12மத் 6:18மத் 9:14-17மத் 6:16லூக் 5:33-39மத் 23:5ரோம 10:3
அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, மணமகனின் விருந்தினர் எப்படி உபவாசிப்பார்கள்? மணமகன் தங்களோடு இருக்கும்வரைக்கும், அவர்களால் உபவாசிக்கமுடியாது. மத் 25:1-10ஆதி 29:22நியாயாதி 14:10-11சங் 45:14உன்னத 6:8 ஆனால், மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அந்த நாளில், அவர்கள் உபவாசிப்பார்கள். லூக் 17:22வெளி 21:9ஏசா 54:5ஏசா 62:5வெளி 19:7சகரி 13:71 கொரி 7:52 கொரி 11:2
“யாரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் இன்னும் அதிகமாகும்.” மத் 9:161 கொரி 10:13ஏசா 57:16சங் 103:13-15 யாரும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. இல்லையென்றால், அந்த திராட்சை இரசம் தோல் பைகளை வெடிக்கச்செய்யும்; திராட்சை இரசம், தோல் பை ஆகிய இரண்டுமே பாழாய்ப்போகும். அப்படிச் செய்யாமல், புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும். மத் 9:17சங் 119:83லூக் 5:37-38யோபு 32:19யோசு 9:13யோசு 9:4சங் 119:80
இயேசு ஓய்வுநாளின் கர்த்தர்
ஒரு ஓய்வுநாளில் இயேசுவும் அவருடைய சீடர்களும் தானியம் விளைந்திருந்த வயல்வழியாகப் போகையில், சீடர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறிக்கத் தொடங்கினார்கள். உபா 23:24-25மத் 12:1-8லூக் 6:1-5 பரிசேயர்கள் இயேசுவிடம், “ஓய்வுநாளில் மோசேயின் சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட காரியத்தை அவர்கள் ஏன் செய்கிறார்கள்?” என்று கேட்டார்கள். யாத் 20:10எபி 12:3மத் 12:2யாத் 31:15யாத் 35:2-3ஏசா 56:2ஏசா 56:4ஏசா 56:6
இயேசு அதற்குப் பதிலாக அவர்களிடம், “தாவீதும் அவனுடைய கூட்டாளிகளும், பசியாயிருந்தபோது என்ன செய்தார்கள் என்பதைப்பற்றி நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா? 1 சாமு 21:3-6லூக் 10:26மத் 19:4மத் 21:16மத் 21:42மத் 22:31மாற் 12:20மாற் 12:26 அபியத்தார் பிரதான ஆசாரியனாக இருந்த நாட்களில், தாவீது இறைவனுடைய வீட்டிற்குள் போய், மோசேயின் சட்டத்தின்படி ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய தேவசமுகத்து அப்பத்தை அவன் சாப்பிட்டு அதில் சிலவற்றைத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே” என்றார். 2 சாமு 8:171 சாமு 21:1லேவி 24:5-91 நாளாக 24:61 இராஜா 2:26-271 சாமு 22:20-221 இராஜா 1:71 இராஜா 2:22
பின்பு இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளுக்காக மனிதன் அல்ல; மனிதனுக்காக ஓய்வுநாள் உண்டாக்கப்பட்டது. கொலோ 2:16லூக் 6:9உபா 5:14எசேக் 20:12ஏசா 58:13யாத் 23:12எசேக் 20:20யோவா 7:23 அந்தப்படியே மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன்” என்றார். மத் 12:8யோவா 9:14வெளி 1:10எபே 1:22யோவா 5:17யோவா 5:9-11யோவா 9:16யோவா 9:5-11