ஏசாயா 56

Isaiah 56

அந்நியருக்கும் இரட்சிப்பு

யெகோவா சொல்வது இதுவே: சங் 85:9ரோம 13:11-14ஏசா 1:16-19மத் 3:2ரோம 1:17சங் 24:4-6ரோம 10:6-10ஏசா 55:7

“நியாயத்தைக் கைக்கொண்டு

நீதியைச் செய்யுங்கள்.

ஏனெனில், எனது இரட்சிப்பு சமீபமாய் இருக்கிறது;

எனது நீதி விரைவில் வெளிப்படுத்தப்படும்.

இதை செய்கிறவர்களும், இவற்றை உறுதியாய் பற்றிக்கொண்டு கைக்கொண்டு, யாத் 31:13-16ஏசா 58:13எசேக் 20:12சங் 112:1யாத் 20:10எசேக் 20:20எரே 17:21-22லூக் 11:28

ஓய்வுநாளை தூய்மைக்கேடாக்காமல் கடைபிடித்து,

தீமைசெய்யாதபடி தன் கையை விலக்கிக் காத்துக்கொள்கிற மனிதர்கள்

ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.”

யெகோவாவோடு தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் அந்நியர், 1 கொரி 6:17அப் 10:34மத் 19:12-30அப் 10:1-2அப் 17:4தானி 1:3-21எபே 2:22ஏசா 14:1

“யெகோவா என்னைத் தமது மக்களிடமிருந்து நிச்சயமாகப் பிரித்துவிடுவார்”

என்று சொல்லாமல் இருக்கட்டும்.

அவ்வாறே அண்ணகன் எவனும், “நான் பட்டுப்போன மரந்தானே”

என்று முறைப்பாடு சொல்லாமலும் இருக்கட்டும்.

யெகோவா சொல்வது இதுவே: ஏசா 27:5யோசு 24:15லூக் 10:42சங் 119:1112 சாமு 23:5ஏசா 56:6எபி 6:17ஏசா 55:3

“எனது ஓய்வுநாளை கடைப்பிடித்து,

எனக்கு விருப்பமானவற்றைத் தெரிந்துகொண்டு

என் உடன்படிக்கையை உறுதியாய்க் கைக்கொள்கிறவர்களான அண்ணகர்களுக்கு,

என் ஆலயத்திற்குள்ளும், அதின் சுவர்களிலும் ஒரு நினைவுச் சின்னத்தையும், வெளி 3:12வெளி 3:51 யோவா 3:11 தீமோ 3:15ஏசா 55:13யோவா 1:12ஏசா 26:1ஏசா 48:19

மகன்கள் மற்றும் மகள்களுக்குமுரிய பெயர்களைவிடச் சிறந்த

ஒரு பெயரையும் கொடுப்பேன்.

ஒருபோதும் அழிந்துபோகாதிருக்கிற

நித்திய பெயரையும் அவர்களுக்குக் கொடுப்பேன்.

யெகோவாவை அண்டியிருந்து, எரே 50:5ஏசா 56:2-4ஏசா 58:13கலா 5:6ஏசா 44:5யாக் 2:5அப் 2:41மாற் 12:30-34

அவருக்கு ஊழியம் செய்து,

யெகோவாவினுடைய பெயரை நேசித்து அவரை வழிபடும் பிறதேசத்தார் அனைவருக்கும்,

ஓய்வுநாட்களை தூய்மைக்கேடாக்காமல்

அதைக் கைக்கொண்டு எனது உடன்படிக்கையை

உறுதியாய் பற்றிக்கொள்ளும் அனைவருக்கும் சொல்வதாவது:

நான் அவர்களை என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவந்து, மாற் 11:17ஏசா 2:2-3மல்கி 1:11லூக் 19:46மத் 21:13மீகா 4:1-2ரோம 12:1எபே 2:11-13

என் ஜெபவீட்டில் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பேன்.

அவர்களின் தகனபலிகளும்,

மற்ற பலிகளும் எனது பலிபீடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஏனெனில், எனது வீடு எல்லா நாடுகளுக்கும்

ஜெபவீடு என்று அழைக்கப்படும்.

நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரைச் சேர்க்கும் யோவா 10:16ஏசா 54:7ஏசா 60:3-11எபே 1:10எபே 2:14-16ஆதி 49:10ஏசா 66:18-21எரே 30:17

ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்:

ஏற்கெனவே சேர்க்கப்பட்டவர்களோடுகூட

இன்னும் மற்றவர்களையும் நான் கூட்டிச்சேர்ப்பேன்.”

கொடியோருக்கு விரோதமான இறைவன்

வயலின் மிருகங்களே, எல்லோரும் வாருங்கள். எரே 12:9உபா 28:26எசேக் 29:5எசேக் 39:17ஏசா 18:6வெளி 19:17-18

காட்டு மிருகங்களே, எல்லோரும் வந்து இரையை விழுங்குங்கள்.

இஸ்ரயேலின் காவலாளிகள் அனைவரும் எசேக் 33:6ஏசா 29:10ஏசா 58:1மத் 15:14பிலி 3:2ஓசி 9:7-8மாற் 13:34-37நாகூ 3:18

அறிவில்லாத குருடர்;

அவர்கள் எல்லோரும் குரைக்கமாட்டாத

ஊமையான நாய்கள்;

அவர்கள் படுத்துக் கிடந்து கனவு காண்கிறார்கள்,

நித்திரை செய்யவே விரும்புகிறவர்கள்.

அவர்கள் பெரும் பசிகொண்ட நாய்கள்; எசேக் 34:2-3எசேக் 13:19யோவா 8:43மீகா 3:11ஏசா 1:3ஏசா 57:17மீகா 3:5-6வெளி 22:15

அவர்கள் ஒருபோதும் திருப்தியடைவதில்லை.

பகுத்தறிவு இல்லாத மேய்ப்பர்கள்,

அவர்கள் எல்லாரும் தங்கள் சொந்த வழிக்குத் திரும்பி,

ஒவ்வொருவனும் தன் சுய இலாபத்தையே தேடுகிறார்கள்.

ஒவ்வொருவரும் சத்தமிட்டு, “வாருங்கள்; சங் 10:6லூக் 12:19-20நீதி 27:1ஏசா 5:221 கொரி 15:32ஓசி 4:11லூக் 12:45-46நீதி 23:35

நாம் போய் திராட்சைமது கொண்டுவருவோம்;

நாம் மதுவை நிறையக் குடிப்போம்,

நாளைய தினமும் இன்றுபோல் இருக்கும்,

அல்லது இதைவிடச் சிறப்பாகவும் இருக்கும்” என்கிறார்கள்.