பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட கோராகின் மகன்களின் சங்கீதம்.
யெகோவாவே, நீர் உமது நாட்டுக்குத் தயவு காட்டினீர்; எரே 30:18சங் 14:7எசேக் 39:25சங் 77:7யோவே 2:18யோவே 3:1லேவி 26:42சங் 126:1-2
யாக்கோபின் மக்கள் இழந்த நல்ல நிலையை அவர்களுக்குத் திரும்பக் கொடுத்தீர்.
நீர் உமது மக்களின் அநியாயத்தை மன்னித்து, மீகா 7:18கொலோ 2:13சங் 32:1அப் 13:39எரே 50:20எண் 14:19சங் 79:8-9சங் 78:38
அவர்களுடைய பாவங்களையெல்லாம் மூடிவிட்டீர்.
நீர் உமது கடுங்கோபத்தையெல்லாம் விலக்கிவிட்டு, உபா 13:17சங் 106:23ஏசா 12:1யோனா 3:9ஏசா 6:7யோவா 1:29சங் 78:38யாத் 32:11-12
உமது பெருங்கோபத்திலிருந்தும் திரும்பினீர்.
எங்கள் இரட்சகராகிய இறைவனே, மறுபடியும் எங்களைப் புதுப்பியும்; புலம் 5:21சங் 80:3சங் 80:7மீகா 7:7எரே 31:18மல்கி 4:6மீகா 7:18-20சங் 25:2
எங்கள் மேலுள்ள உமது கோபத்தை அகற்றும்.
நீர் எங்களுடன் என்றென்றும் கோபமாய் இருப்பீரோ? சங் 79:5சங் 80:4ஏசா 64:9-12சங் 74:1லூக் 21:24மீகா 7:18சங் 77:9சங் 89:46
உமது கோபத்தைத் தலைமுறைகள்தோறும் நீடிக்கச் செய்வீரோ?
உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி ஆப 3:2சங் 80:18ஏசா 57:15சங் 90:14ஓசி 6:2சங் 71:20சங் 53:6சங் 138:7
நீர் எங்களை மீண்டும் உயிர்ப்பிக்கமாட்டீரோ?
யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பை எங்களுக்குக் காண்பித்து, சங் 91:16சங் 50:23எரே 42:12
உமது இரட்சிப்பை எங்களுக்குத் தாரும்.
யெகோவாவாகிய இறைவன் சொல்வதை நான் கேட்பேன்; சங் 29:11வெளி 3:19யோவா 14:27ஆப 2:1சகரி 9:102 தீமோ 2:19எபி 10:26-29ஆதி 34:7
அவர் தமது மக்களுக்கும் தமது பரிசுத்தவான்களுக்கும் சமாதானத்தை வாக்குப் பண்ணுகிறார்;
ஆனால் அவர்கள் மதியீனத்துக்குத் திரும்பாதிருக்கட்டும்.
அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்கு, ஏசா 46:13சகரி 2:5யோவா 7:17சகரி 2:8லூக் 2:32சங் 24:4-5அப் 11:13-14எசேக் 26:20
அவருடைய இரட்சிப்பு நிச்சயமாகவே சமீபமாய் இருப்பதால்,
அவருடைய மகிமையும் நமது நாட்டில் தங்கியிருக்கும்.
அன்பும் உண்மையும் ஒன்றாய்ச் சந்திக்கின்றன; நீதி 3:3சங் 89:14ஏசா 32:16-18யோவா 1:17சங் 100:5சங் 72:3ரோம 5:21ஏசா 45:24
நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தம் செய்கின்றன.
உண்மை பூமியிலிருந்து முளைத்தெழும்புகிறது, ஏசா 45:8யோவா 14:61 யோவா 5:20-21ஏசா 42:21மத் 17:52 கொரி 5:21எபே 1:6ஏசா 4:2
நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கிறது.
யெகோவா உண்மையாகவே நன்மையானதைத் தருவார்; யாக் 1:17சங் 84:11சங் 67:6லேவி 26:4ஏசா 30:23-241 கொரி 1:30எபே 1:3அப் 21:20
நம்முடைய நாடும் அதின் விளைச்சலைக் கொடுக்கும்.
நீதி அவருக்கு முன்சென்று, யோவா 13:34சங் 89:141 யோவா 2:61 பேது 2:18-241 பேது 4:12 கொரி 3:18கலா 2:20ஏசா 58:8
அவருடைய காலடிகளுக்காக வழியை ஆயத்தப்படுத்துகிறது.