தாவீதின் சங்கீதம்.
பூமியும் அதிலிருக்கும் ஒவ்வொன்றும் யெகோவாவினுடையவை, சங் 89:111 கொரி 10:261 நாளாக 29:11யோபு 41:11உபா 10:14யாத் 9:29யாத் 19:5சங் 50:12
உலகமும் அதில் வாழும் அனைவரும் அவருடையவர்கள்.
ஏனென்றால் அவர் பூமியைக் கடலின்மேல் நிறுவி, எரே 5:22சங் 136:6ஆதி 1:9-10சங் 104:5-6யோபு 38:4எரே 10:11-16சங் 33:62 பேது 3:5-7
தண்ணீரின்மேல் நிலைநிறுத்தினார்.
யெகோவாவினுடைய மலையில் ஏறத்தகுந்தவன் யார்? சங் 15:1எபி 12:28சங் 2:6சங் 65:4மல்கி 3:1எபி 12:22-24சங் 132:13-14சங் 68:18
அவருடைய பரிசுத்த இடத்தில் நிற்கத் தகுந்தவன் யார்?
சுத்தமான கைகளுடையவனும் தூய்மையான இருதயமுடையவனும் மத் 5:8சங் 51:10யாக் 4:8யோபு 17:9சங் 73:12 கொரி 7:1ஏசா 33:15-16சங் 26:6
தன் ஆத்துமாவை பொய்யானவைகளுக்கு ஒப்புக்கொடாதவனும்
பொய் சத்தியம் செய்யாதவனுமே.
அவர்கள் யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவார்கள், பிலி 3:9எபே 1:3தீத் 3:4-61 பேது 3:9ஏசா 12:2ஏசா 46:13கலா 3:14எண் 6:24-27
தங்கள் இரட்சகரான இறைவனால் நியாயத்தைப் பெறுவார்கள்.
அவரைத் தேடுகிறவர்களின் சந்ததி இப்படிப்பட்டதே, சங் 105:4சங் 27:8யோவா 1:47சங் 22:30சங் 73:15ரோம 4:161 பேது 2:9ஏசா 53:10
யாக்கோபின் இறைவனே, உமது முகத்தைத் தேடுகிறவர்கள் இவர்களே.
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; ஏசா 26:2சங் 118:19-20வெளி 4:11சங் 97:61 கொரி 2:8எபே 4:8-10ஆகா 2:7மல்கி 3:1
பூர்வீகக் கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்;
மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள்.
இந்த மகிமையின் அரசன் யார்? யாத் 15:3வெளி 19:11-21வெளி 6:2கொலோ 2:15ஏசா 63:1-6சங் 45:3-6சங் 93:1ஏசா 9:6
அவர் பலமும் வலிமையும் உள்ள யெகோவா,
அவர் போரில் வல்லமையுள்ள யெகோவா.
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்;
பூர்வீக கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்;
மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள்.
மகிமையின் அரசனான இவர் யார்? தீத் 2:13மத் 25:34ஏசா 54:5யோவா 12:40யோவா 14:9லூக் 9:26மத் 25:31சகரி 2:8-11
அவர் சேனைகளின் யெகோவா;
அவரே மகிமையின் அரசன்.