ஓய்வுநாளின் ஆண்டவர்
ஒரு ஓய்வுநாளிலே இயேசு தானியம் விளைந்திருந்த வயல்வழியாகப் போகையில், அவருடைய சீடர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறித்து, தங்கள் கைகளால் நிமிட்டி அவற்றைச் சாப்பிடத் தொடங்கினார்கள். உபா 23:25மாற் 2:23-28மத் 12:1-8லேவி 23:7யாத் 12:15லேவி 23:10-11லேவி 23:15உபா 16:9 பரிசேயர்கள் சிலர், “ஓய்வுநாளில் மோசேயின் சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட காரியத்தை ஏன் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். மத் 12:2யோவா 5:16யாத் 35:2யோவா 5:9-11யோவா 9:14-16லூக் 5:33லூக் 6:7-9மாற் 2:24
அதற்கு இயேசு அவர்களிடம், “தாவீதும் அவனுடைய கூட்டாளிகளும் பசியாயிருந்தபோது, அவன் என்ன செய்தான் என்பதைப்பற்றி, நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா? 1 சாமு 21:3-6மாற் 2:25-26மத் 12:3-5மத் 21:16மாற் 12:10மாற் 12:26மத் 22:31மத் 19:4 அவன் இறைவனுடைய வீட்டிற்குள் போய் அர்ப்பணிக்கப்பட்ட அப்பத்தை எடுத்தான்; மோசேயின் சட்டத்தின்படி ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய தேவசமுகத்து அப்பத்தை அவன் சாப்பிட்டு அதில் சிலவற்றைத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே” என்றார். லேவி 24:5-9 மேலும் இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன்” என்றார். மாற் 2:27வெளி 1:10மாற் 9:7மத் 11:5-8
மற்றொரு ஓய்வுநாளிலே அவர் ஜெப ஆலயத்திற்குள் போய், அங்கே போதித்துக் கொண்டிருந்தார். அங்கே சுருங்கிய வலதுகையுடைய ஒருவன் இருந்தான். மாற் 3:1-6மத் 12:9-14யோவா 5:3மத் 4:23யோவா 9:16லூக் 14:3லூக் 4:311 இராஜா 13:4 பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், இயேசுவைக் குற்றப்படுத்துவதற்கான காரணத்தைத் தேடி, ஓய்வுநாளிலே அவர் குணமாக்குவாரோ என்று கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். லூக் 20:20மாற் 3:2சங் 37:32-33சங் 38:12யோவா 5:10-16யோவா 9:26-29லூக் 11:53-54லூக் 13:14 ஆனால் இயேசு அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, சுருங்கிய கையுடையவனைப் பார்த்து, “நீ எழுந்து, எல்லோருக்கும் முன்பாக நில்” என்றார். அப்படியே அவன் எழுந்து நின்றான். ஏசா 42:4மத் 9:4வெளி 2:231 பேது 4:1அப் 20:24யோவா 2:25லூக் 5:22பிலி 1:28
அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளிலே மோசேயின் சட்டத்தின்படி செய்யத் தகுந்தது எது: நன்மை செய்வதா அல்லது தீமை செய்வதா, ஒருவனின் உயிரைக் காப்பாற்றுவதா அல்லது அழிப்பதா? என்று எனக்குச் சொல்லுங்கள் என்று நான் உங்களைக் கேட்கிறேன்” என்றார். மாற் 3:4மத் 12:12-13யோவா 7:19-23லூக் 14:3லூக் 9:56
இயேசு அவர்கள் எல்லோரையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அவனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவன் அப்படியே தன் கையை நீட்டினான். அவனுடைய கை முற்றிலுமாக குணமடைந்தது. யாத் 4:6-7மாற் 3:51 இராஜா 13:6யோவா 5:8சங் 107:20 ஆனால் பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும் கடுங்கோபமடைந்து, தாங்கள் இயேசுவுக்கு என்ன செய்யலாம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். அப் 5:33சங் 2:1-2பிரச 9:3அப் 4:19யோவா 11:47மத் 21:45அப் 26:11அப் 4:15
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
அந்நாட்களிலே இயேசு ஜெபிப்பதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்; அங்கே இரவு முழுவதும் இறைவனை நோக்கி ஜெபித்தார். எபி 5:7மாற் 6:46மாற் 1:35மாற் 14:34-36மத் 14:23-25தானி 6:10மத் 6:6கொலோ 4:2 காலை நேரம் வந்தபோது, அவர் தமது சீடர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டு பேரைத் தெரிந்தெடுத்து, அவர்களை அப்போஸ்தலர் 1 என அழைத்தார். அவர்கள் யாரெனில்: மாற் 3:13-19வெளி 21:14மத் 9:36மாற் 6:7எபே 2:20எபே 4:11எபி 3:1லூக் 9:1-2
பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், பேதுருவின் சகோதரன் அந்திரேயா, அப் 1:13மத் 4:212 பேது 1:1யோவா 1:40-42யோவா 21:15-24மத் 4:18அப் 12:2யோவா 1:45
யாக்கோபு,
யோவான்,
பிலிப்பு,
பர்தொலொமேயு,
மத்தேயு, மத் 9:9அப் 1:13மாற் 3:18கலா 2:9யாக் 1:1மத் 10:3-4அப் 15:13கலா 1:19
தோமா,
அல்பேயுவின் மகன் யாக்கோபு,
செலோத்தே 2 என அழைக்கப்பட்ட சீமோன்,
யாக்கோபின் சகோதரனாகிய யூதா, யோவா 6:70-71யோவா 14:22யூதா 1:1மத் 26:14-16மத் 27:3-5அப் 1:25மத் 10:3மாற் 3:18
அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
ஆசீர்வாதங்களும் கேடுகளும்
இயேசு அவர்களுடன் கீழே இறங்கிப்போய், சமவெளியான ஒரு இடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீரு, சீதோன் பட்டணங்களின் கரையோரங்களிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். மத் 11:21மத் 14:14சங் 107:17-20மத் 12:15மத் 4:23-25மாற் 3:7-12சங் 103:3லூக் 5:15 அவர்கள் அவர் சொல்வதைக் கேட்கவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமடையவும் வந்திருந்தார்கள். அசுத்த ஆவிகளினால் துன்பப்பட்டவர்கள் குணமடைந்தார்கள். அப் 5:16மத் 15:22மத் 17:15 அவரிலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லோரையும் குணமாக்கினபடியினால், எல்லா மக்களும் அவரைத் தொடுவதற்கு முயற்சிசெய்தார்கள். மத் 14:36மாற் 3:10அப் 5:15-16மாற் 6:56மாற் 5:301 பேது 2:92இராஜா 13:21லூக் 8:45-46
மேலும் இயேசு தமது சீடர்களைப் பார்த்துச் சொன்னதாவது: யாக் 2:52 கொரி 8:9லூக் 6:20-24லூக் 12:32மத் 25:34மத் 5:2-12யாக் 1:9-10வெளி 2:9
“ஏழைகளாய் இருக்கிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
இறைவனுடைய அரசு உங்களுக்கே உரியது.
இப்பொழுது பசியாய் இருக்கிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், யோவா 6:35யாக் 1:12மத் 5:6ஏசா 61:1-3மத் 5:4வெளி 7:16ஏசா 55:1-2லூக் 1:53
நீங்கள் திருப்தியடைவீர்கள்.
இப்பொழுது அழுகிறவர்களாகிய நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
ஏனெனில் நீங்கள் சிரிப்பீர்கள்.
மானிடமகனாகிய என் நிமித்தம் மனிதர் உங்களை வெறுக்கும்போதும், மத் 5:10-12மத் 10:221 பேது 4:12-161 பேது 3:141 தெச 2:14-15ஏசா 66:5யோவா 16:2பிலி 1:28-30
அவர்கள் உங்களைப் புறக்கணிக்கும்போதும்,
உங்களை இகழும்போதும், உங்களைத் தீமையானவர்கள் என்று தள்ளிவிடும்போதும்,
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
“அந்நாளிலே சந்தோஷப்பட்டு, துள்ளி மகிழுங்கள். ஏனெனில், பரலோகத்தில் உங்கள் வெகுமதி மிகப்பெரிதாய் இருக்கும். அவர்களுடைய முன்னோர்களும் இறைவாக்கினரை அப்படித்தான் நடத்தினார்கள். அப் 5:41வெளி 21:7யாக் 1:2மத் 5:12வெளி 3:12வெளி 3:52 நாளாக 36:16அப் 3:8
“ஆனால் செல்வந்தர்களாய் இருக்கிற உங்களுக்கு ஐயோ. 1 தீமோ 6:17மத் 6:2சங் 49:6-7யாக் 5:1-6சங் 49:16-19யாக் 2:6லூக் 18:23-25ஆமோ 6:1-6
ஏனெனில் நீங்கள் ஏற்கெனவே உங்கள் ஆறுதலைப் பெற்றுவிட்டீர்கள்.
நன்றாய் சாப்பிட்டு திருப்தியாய் இருக்கிறவர்களே, உங்களுக்கு ஐயோ. ஏசா 65:13யாக் 4:9நீதி 14:13லூக் 16:14-15ஆமோ 8:10யோபு 20:5-7வெளி 3:171 தெச 5:3
நீங்கள் பட்டினியாய் இருப்பீர்கள்.
இப்பொழுது சிரித்து மகிழ்கிறவர்களே உங்களுக்கு ஐயோ,
ஏனெனில் நீங்கள் புலம்பி அழுவீர்கள்.
எல்லா மனிதரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது உங்களுக்கு ஐயோ, யோவா 15:19யாக் 4:4மத் 7:151 யோவா 4:5-6மீகா 2:112 பேது 2:1-3ஏசா 30:102 பேது 2:18-19
ஏனெனில் அவர்களுடைய முன்னோரும் பொய் தீர்க்கதரிசிகளை
அப்படித்தான் புகழ்ந்தார்கள்.
பகைவரில் அன்பு
“எனக்குச் செவிகொடுக்கிறவர்களுக்கு நான் சொல்கிறேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு காட்டுங்கள், உங்களை வெறுக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், 1 தெச 5:15லூக் 6:35நீதி 24:17நீதி 25:21-22ரோம 12:17-21மத் 5:43-45கலா 6:10யாத் 23:4-5 உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக ஜெபியுங்கள். 1 பேது 3:91 கொரி 4:12ரோம 12:14லூக் 23:34யாக் 3:10லூக் 6:27மத் 5:44அப் 7:60 ஒருவன் உங்களை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவன் உங்கள் மேலுடையை எடுத்துக்கொண்டால், உங்களது ஆடையை எடுப்பதற்கு அவனைத் தடுக்காதேயுங்கள். எபி 10:34மத் 5:39-422 கொரி 11:201 கொரி 6:7ஏசா 50:6யோவா 18:22புலம் 3:30மத் 26:67 உங்களிடத்தில் கேட்கிற எவருக்கும் கொடுங்கள், உங்களுக்கு உரியதை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பி வற்புறுத்திக் கேட்காதீர்கள். உபா 15:7-10அப் 20:352 கொரி 8:92 கொரி 9:6-14ஏசா 58:7-10மத் 6:12சங் 41:1லூக் 18:22 மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள். மத் 7:12கலா 5:14மத் 22:39யாக் 2:8-16
“உங்களிடம் அன்பாய் இருக்கிறவர்களிடத்தில் நீங்களும் அன்பாய் இருந்தால், உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளுங்கூட அவர்களுக்கு அன்பு காட்டுகிறவர்களுக்கு அன்பு காட்டுகிறார்கள். மத் 5:46-471 பேது 2:19-20 உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்களும் நன்மை செய்தால், உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. மீண்டும் திருப்பிக் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் மற்றவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், உங்களுக்கு என்ன மேன்மை? கடனாகக் கொடுத்ததை முழுவதுமாக பெற்றுக்கொள்ளும்படி, பாவிகளும் பாவிகளுக்கு கடன் கொடுக்கிறார்களே. மத் 5:42லூக் 14:12-14லூக் 6:35உபா 15:8-11 ஆனால் நீங்கள் உங்கள் பகைவரில் அன்பாயிருங்கள், அவர்களுக்கு நன்மை செய்யுங்கள், திரும்பிப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பின்றி அவர்களுக்குக் கடன்கொடுங்கள். அப்பொழுது உங்கள் வெகுமதி பெரிதாயிருக்கும், நீங்கள் மகா உன்னதமான இறைவனுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்; ஏனெனில் அவர் நன்றிகெட்டவர்களுக்கும் கொடுமையானவர்களுக்கும் தயவுள்ளவராயிருக்கிறாரே. மத் 5:44-45யோவா 13:35நீதி 19:17ரோம 5:8-10சங் 145:92 கொரி 8:9லேவி 25:35-37நீதி 22:9 உங்கள் பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள். எபே 5:1-2மத் 5:481 பேது 1:15-16எபே 4:31
நியாயத்தீர்ப்பு வழங்குதல்
“மற்றவர்கள்மேல் நியாயத்தீர்ப்பு வழங்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் நியாயத்தீர்ப்பு பெறமாட்டீர்கள். மற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பு செய்யாதிருங்கள், அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளாகத் தீர்க்கப்படமாட்டீர்கள். மன்னியுங்கள், அப்பொழுது நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள். எபே 4:32யாக் 5:9மத் 7:1-5மாற் 11:251 கொரி 13:4-7ரோம 2:1-2ரோம 14:10-16மத் 5:7 கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும். அமுக்கி குலுக்கி நிரம்பி வழியத்தக்கதாக சரியான அளவினாலே அளக்கப்பட்டு, உங்கள் மடியிலே கொட்டப்படும். நீங்கள் எந்த அளவை பயன்படுத்துகிறீர்களோ, அதனாலேயே உங்களுக்கும் அளக்கப்படும்” என்றார். 2 கொரி 9:6-8உபா 15:10மாற் 4:24நீதி 3:9-10மத் 7:2நீதி 22:9நீதி 19:17நீதி 10:22
மேலும் இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? அப்படிச் செய்தால், அவர்கள் இருவரும் குழியிலே விழுவார்கள் அல்லவா? மத் 15:142 தீமோ 3:13ஏசா 9:161 தீமோ 6:3-5எரே 14:15-16மத் 23:16-26ஏசா 56:10எரே 6:15 ஒரு மாணவன் ஆசிரியரைவிட மேலானவன் அல்ல, ஆனால் முழுமையாய் பயிற்சி பெற்ற ஒவ்வொருவனும் தன் ஆசிரியரைப்போல் இருப்பான். யோவா 13:16மத் 10:24-25யோவா 15:20மத் 23:15
“நீ உனது கண்ணிலுள்ள உத்திரத்தைக் கவனிக்காமல், உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பைப் பார்ப்பது ஏன்? யோவா 8:7யாக் 1:24ரோம 2:1ரோம 2:21-24மத் 7:3-52 சாமு 12:5-7எரே 17:9யோவா 8:40-44 உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் நீ உனது சகோதரனிடம், ‘நான் உனது கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடுகிறேன்,’ என எப்படிச் சொல்லலாம்? வேஷக்காரனே, முதலில் உன் கண்ணிலுள்ள உத்திரத்தை எடுத்துப்போடு; பிறகு உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடத்தக்கதாக நீ தெளிவாகப் பார்க்கமுடியும். ரோம 2:21-291 தெச 2:10-12மத் 23:13-15சங் 51:9-132 கொரி 5:182 தீமோ 2:21அப் 13:10அப் 2:38
மரமும் அதன் பழமும்
“நல்ல மரம் கெட்ட கனியைக் கொடுப்பதில்லை, கெட்டமரம் நல்ல கனியைக் கொடுப்பதில்லை. எரே 2:21மத் 12:33மத் 7:16-20மத் 3:10சங் 92:12-14ஏசா 5:4ஏசா 61:3 ஒவ்வொரு மரமும் அதன் கனியினாலேயே இனம் தெரியப்படுகிறது. முட்புதர்களிலிருந்து ஒருவரும் அத்திப்பழங்களையோ அல்லது திராட்சைப் பழங்களையோ பறிக்கிறதில்லை. யாக் 3:12மத் 12:33கலா 5:19-23தீத் 2:11-13யூதா 1:12 நல்ல மனிதன் தன் இருதயத்தில் நிரப்பி வைத்திருக்கிற நன்மையிலிருந்து, நல்ல காரியங்களை வெளியே கொண்டுவருவான்; தீய மனிதன் தன் இருதயத்தில் நிரப்பி வைக்கப்பட்டிருக்கிற தீமையிலிருந்து, தீய காரியங்களை வெளியே கொண்டுவருவான். ஏனெனில் இருதயத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும். நீதி 4:23மத் 12:34-37எபே 4:29யோவா 7:38சங் 37:30-31சங் 59:12கொலோ 3:16சங் 52:2-4
ஞானியும் மூடனும்
“நான் சொல்கிறதைச் செய்யாமல், ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று ஏன் என்னைக் கூப்பிடுகிறீர்கள்? கலா 6:7மத் 7:21-23மல்கி 1:6லூக் 13:25-27மத் 25:44யோவா 13:13-17மத் 25:24மத் 25:11 என்னிடம் வந்து, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செயல்படுகிறவன், எதற்கு ஒப்பானவன் என்று நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். யாக் 1:22-25மத் 7:24-27லூக் 11:28யோவா 14:15யாக் 4:17மத் 12:50ரோம 2:7-10யோவா 13:17 அவன் கற்பாறையிலே ஆழமாய்த் தோண்டி, அதில் அஸ்திபாரமிட்டு வீடு கட்டுகிறவனுக்கு ஒப்பாயிருக்கிறான். வெள்ளம் வந்தபோது, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியது. ஆனால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்ததால் அதை அசைக்கமுடியவில்லை. 1 கொரி 3:10-15மத் 7:25-26சங் 62:2ஏசா 28:16யூதா 1:24ஏசா 26:41 பேது 2:4-6எபே 2:20 ஆனால் என் வார்த்தைகளைக் கேட்டும், அதன்படி செயல்படாதவனோ, அஸ்திபாரமின்றி நிலத்திலே வீட்டைக் கட்டியவனைப்போல் இருக்கிறான். நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதிய உடனே அது இடிந்து விழுந்து, முற்றுமாய் ஒழிந்தது.” எசேக் 33:31யாக் 1:22-261 யோவா 2:3-42 பேது 1:5-9மத் 13:20-22மத் 23:3யாக் 2:17-26யோவா 15:2