இயேசுவின் உயிர்த்தெழுதல்
ஓய்வுநாள் முடிவடைந்தபோது, மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமியும், இயேசுவின் உடலுக்கு வாசனைத் தைலம் பூசும்படி, நறுமணப் பொருட்களை வாங்கினார்கள். லூக் 23:56யோவா 20:1-10மத் 28:1-10மாற் 15:402 நாளாக 16:14யோவா 19:25மாற் 14:3மாற் 14:8 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, பொழுது விடிகையில், அவர்கள் கல்லறையை நோக்கிச் சென்றார்கள். யோவா 20:1லூக் 24:1மத் 28:1 “கல்லறையின் வாசலில் இருக்கும் கல்லை யார் நமக்காகப் புரட்டித்தள்ளுவான்?” என்று, அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். மாற் 15:46-47மத் 27:60-66
ஆனால் அவர்கள் வந்து பார்த்தபோதோ, மிகவும் பெரிதான அந்தக் கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள். யோவா 20:1லூக் 24:2மத் 28:2-4 அவர்கள் கல்லறைக்குள்ளே நுழைந்தபோது, வெள்ளை உடை உடுத்திய ஒரு இளைஞன் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதை அவர்கள் கண்டு பயந்தார்கள். யோவா 20:11-12யோவா 20:8லூக் 24:3-5மத் 28:3லூக் 1:29-30லூக் 1:12மாற் 6:49-50மாற் 9:15
அப்பொழுது அவன் அவர்களிடம், “பயப்படவேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவை நீங்கள் தேடுகிறீர்கள். ஆனால் அவரோ உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் இங்கு இல்லை. அவரைக் கிடத்திய இடத்தைப் பாருங்கள். வெளி 1:17-181 கொரி 15:3-7லூக் 24:46யோவா 2:19-22மத் 28:4-7அப் 2:22-23அப் 4:10நீதி 8:17 நீங்கள் போய், அவருடைய சீடர்களுக்கும், பேதுருவுக்கும் சொல்லுங்கள், ‘இயேசு உங்களுக்குச் சொன்னதுபோலவே, உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போகிறார். நீங்களும் அவரை அங்கே காண்பீர்கள்’ என்று சொல்லுங்கள்” என்றான். மாற் 14:28மத் 26:32மத் 28:10மத் 28:7மத் 28:16-17யோவா 21:11 கொரி 15:5அப் 13:31
அவர்கள் நடுக்கத்துடனும், திகைப்புடனும் வெளியே வந்து, கல்லறையைவிட்டு ஓடிப்போனார்கள். அவர்கள் பயந்ததினால், ஒருவருக்குமே ஒன்றும் சொல்லவில்லை. லூக் 24:22-24லூக் 24:37லூக் 24:9-11மத் 28:8மாற் 16:5-62இராஜா 4:29லூக் 10:4
வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் இயேசு உயிர்த்தெழுந்தபோது, அவர் முதலில், மகதலேனா மரியாளுக்குக் காட்சியளித்தார். அவளிடத்திலிருந்து ஏழு பிசாசுகளை அவர் துரத்தியிருந்தார். யோவா 20:14-19லூக் 8:2யோவா 20:12மாற் 15:47லூக் 24:10மத் 27:56மாற் 15:401 கொரி 16:2 அவள் போய் அவரோடு இருந்தவர்கள் அழுது புலம்பிக்கொண்டிருக்கையில், அதைச் சொன்னாள். யோவா 20:18யோவா 16:6லூக் 24:17மத் 9:15மாற் 14:72யோவா 16:20-22மத் 24:30 இயேசு உயிரோடிருக்கிறார் என்றும், அவரை அவள் கண்டாள் என்றும் அவள் சொன்னதை சீடர்கள் நம்பவில்லை. லூக் 24:11மாற் 16:13-14லூக் 24:23-35மாற் 9:19யாத் 6:9யோபு 9:16
இதற்குப் பின்பு இயேசு நாட்டுப்புறமாக நடந்து சென்றுகொண்டிருந்த அவர்களில் இருவருக்குத் தம்மை வேறொரு உருவத்தில் வெளிப்படுத்தினார். லூக் 24:13-32யோவா 21:1யோவா 21:14மாற் 16:14 இவர்கள் திரும்பிப்போய், இதை மற்ற சீடர்களுக்கும் அறிவித்தார்கள்; ஆனால் அவர்களோ இவர்கள் சொன்னதையும் நம்பவில்லை. யோவா 20:25லூக் 24:33-35யோவா 20:8லூக் 16:31
பின்பு சீடர்கள் பதினொருபேரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, இயேசு அவர்களுக்குக் காட்சியளித்தார்; அவர் சீடர்களுடைய விசுவாசக் குறைவைக் குறித்தும், தாம் உயிர்த்தெழுந்த பின்பு தம்மைக் கண்டவர்கள் சொன்னதைப் பிடிவாதமாய் நம்ப மறுத்ததைக் குறித்தும், அவர்களைக் கடிந்துகொண்டார். 1 கொரி 15:5லூக் 24:36-43எபி 3:7-8யோவா 20:27மாற் 16:11-13மாற் 8:17-18சங் 95:8-11வெளி 3:19
இயேசு சீடர்களிடம், “நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள். மத் 28:19மாற் 13:10அப் 1:8லூக் 24:47-48சங் 96:3யோவா 15:161 யோவா 4:14யோவா 20:21 யாரெல்லாம் நற்செய்தியை விசுவாசித்து, திருமுழுக்கு பெறுகிறார்களோ, அவர்கள் எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள். யாரெல்லாம் நற்செய்தியை விசுவாசிக்கவில்லையோ, அவர்கள் குற்றவாளியாய்த் தீர்க்கப்படுவார்கள். யோவா 11:25-26யோவா 3:36ரோம 10:9-14யோவா 3:18-19யோவா 3:15-16அப் 2:38யோவா 5:24யோவா 8:24 விசுவாசிக்கிறவர்கள் மத்தியில், இந்த அடையாளங்கள் காணப்படும்: எனது பெயரில் அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்; அவர்கள் புதிய மொழிகளில் பேசுவார்கள்; அப் 5:161 கொரி 12:28அப் 8:7லூக் 10:171 கொரி 12:10யோவா 14:12அப் 10:46அப் 19:6 அவர்கள் பாம்புகளைக்கூட தங்கள் கைகளினால் பிடித்துத் தூக்குவார்கள்; சாகவைக்கக் கூடிய நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குக் கேடுவிளைவிக்காது; அவர்கள் நோயாளிகளின்மேல் தங்கள் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சுகமடைவார்கள்” என்றார். லூக் 10:19யாக் 5:14-15அப் 28:3-6அப் 19:12அப் 4:30அப் 28:8-9அப் 3:16மாற் 5:23
கர்த்தராகிய இயேசு அவர்களுடன் பேசி முடித்தபின்பு, அவர் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டு, இறைவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார். 1 பேது 3:22எபி 1:3எபி 12:2சங் 110:1ரோம 8:34அப் 2:33அப் 7:55-56கொலோ 3:1 அதற்குப் பின்பு, அவருடைய சீடர்கள் புறப்பட்டுப்போய், எல்லா இடங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். கர்த்தர் அவர்களுடன் செயலாற்றி, தமது வார்த்தையை அற்புத அடையாளங்களினால் உறுதிப்படுத்தினார். 1 1 கொரி 2:4-5அப் 14:3அப் 8:4-6எபி 2:4ரோம 15:19அப் 5:121 கொரி 3:6-9அப் 2:1-28