லூக்கா 9

Luke 9

இயேசு பன்னிரண்டு பேர்களை அனுப்புதல்

இயேசு பன்னிரண்டு சீடர்களையும் ஒன்றாய்க் கூப்பிட்டு, பிசாசுகளையெல்லாம் துரத்தவும், நோய்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையையும், அதிகாரத்தையும் கொடுத்தார். யோவா 14:12லூக் 10:19மத் 16:19அப் 4:30மாற் 16:17-18மாற் 6:7-13அப் 1:8மத் 10:1-5 அத்துடன், இறைவனுடைய அரசைப்பற்றிப் பிரசங்கிக்கவும், நோயுள்ளவர்களை குணமாக்கவும், அவர் அவர்களை அனுப்பினார். மத் 10:7-8லூக் 10:9மத் 3:2லூக் 9:11மத் 13:19மத் 24:14மாற் 6:12லூக் 10:11 இயேசு அவர்களிடம்: “பயணத்திற்கென்று ஒன்றையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஊன்றுகோலையோ, பையையோ, உணவையோ, பணத்தையோ, மாற்று உடையையோ, கொண்டுபோக வேண்டாம். லூக் 22:35சங் 37:3லூக் 10:4-12மத் 10:9-142 தீமோ 2:4லூக் 12:22லூக் 3:11மாற் 6:8-11 நீங்கள் எந்த வீட்டிற்குள் போகிறீர்களோ, அந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்படும்வரை, அங்கேயே தங்கியிருங்கள். மத் 10:11மாற் 6:10லூக் 10:5-8அப் 16:15 அங்கேயுள்ள மக்கள் உங்களை வரவேற்காவிட்டால், நீங்கள் அவர்களின் பட்டணத்தைவிட்டுப் போகும்போது, அவர்களுக்கு எதிரான சாட்சியாக, உங்கள் கால்களிலுள்ள தூசியை உதறிப் போடுங்கள்” என்றார். அப் 13:51அப் 18:6மத் 10:14-15மாற் 6:11லூக் 10:16லூக் 10:10-12லூக் 9:53-56லூக் 9:48 அப்படியே அவர்கள் புறப்பட்டு, கிராமங்கள்தோறும், எல்லா இடங்களிலும் நற்செய்தியை அறிவித்து, மக்களைச் சுகப்படுத்தினார்கள். அப் 4:30அப் 5:15மாற் 16:20மாற் 6:12-13லூக் 9:1-2

சிற்றரசன் ஏரோது, நடந்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டான். யோவான் இறந்தோரிலிருந்து உயிரோடு திரும்பவும் எழுப்பப்பட்டிருக்கிறான் என்று சிலர் சொன்னதால், அவன் குழப்பமடைந்தான். மத் 14:1-12மாற் 6:14-28யோபு 18:11-12லூக் 3:1லூக் 9:19சங் 73:19ஏசா 22:5மீகா 7:4 வேறுசிலர் எலியா தோன்றியிருக்கிறார் என்றும், இன்னும் சிலர் முற்காலத்திலிருந்த இறைவாக்கினர் ஒருவர் உயிர்பெற்று வந்திருக்கிறார் என்றும் சொல்லிக்கொண்டார்கள். யோவா 1:21லூக் 9:19மத் 17:10மாற் 6:15மாற் 8:28 ஆனால் ஏரோது, “நான் யோவானைச் சிரச்சேதம் செய்தேனே. இப்படிப்பட்ட காரியங்களைக் கேள்விப்படுகிறேனே, இவன் யார்?” என்று சொல்லி, அவரைப் பார்க்க முயற்சி செய்தான். லூக் 23:8லூக் 13:31-32

இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு கொடுத்தல்

அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்ததை இயேசுவுக்கு அறிவித்தார்கள். இயேசு அவர்களையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா எனப்பட்ட ஒரு பட்டணத்திற்கு சென்றார். மத் 11:21எபி 13:17மத் 14:13-21யோவா 1:44யோவா 6:5-13லூக் 10:17லூக் 9:10-17மாற் 2:7 ஆனால் மக்கள் அதை அறிந்து, கூட்டமாய் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்களை வரவேற்று, இறைவனுடைய அரசைப்பற்றி அவர்களுடன் பேசி, குணமடைய வேண்டியவர்களைக் குணப்படுத்தினார். 2 தீமோ 4:2அப் 28:31எபி 4:16ஏசா 61:1யோவா 4:34யோவா 6:37லூக் 1:53லூக் 5:31

மாலை வேளையானபோது பன்னிரண்டு பேர்களும் அவரிடம் வந்து, “கூடியிருக்கும் இந்த மக்களை அனுப்பிவிடும். அவர்கள் சுற்றியுள்ள ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் போய், சாப்பாட்டையும் இருப்பிடத்தையும் தேடிக்கொள்ளட்டும். நாம் சற்று தூரமான ஒரு இடத்தில் இருக்கிறோமே” என்றார்கள். ஓசி 13:5யோவா 6:1யோவா 6:5-15மத் 15:23மாற் 6:35-44எசேக் 34:25மத் 14:15-21மத் 15:32

அதற்கு இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார். நீதி 11:24-252இராஜா 4:42-43யோவா 6:5-9மாற் 6:37-38மத் 14:16-17எண் 11:21-23

அவர்கள் அதற்கு, “எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன. இல்லையென்றால், நாங்கள் போய் இந்த மக்களுக்கெல்லாம் உணவை வாங்கவேண்டும்” என்றார்கள். அங்கே ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். 1 கொரி 14:40மாற் 6:39-40மாற் 8:6

ஆனால் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “அவர்களை ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக உட்கார வையுங்கள்” என்றார். சீடர்களும் அப்படியே செய்தார்கள். எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் எடுத்து, மேலே வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அவற்றைத் துண்டுகளாகப் பங்கிட்டார். பின்பு அவர், அந்தத் துண்டுகளைச் சீடர்களிடத்தில் கொடுத்து, மக்களுக்குப் பரிமாறும்படி சொன்னார். மத் 14:191 தீமோ 4:4-5லூக் 24:30மத் 15:36அப் 27:35யோவா 6:11யோவா 6:23லூக் 22:19 அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளை சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள். 2இராஜா 4:44யோவா 6:11-13மத் 14:20-21மத் 15:37-38மத் 16:9-10மாற் 6:42-44மாற் 8:19-20மாற் 8:8-9

பேதுருவின் அறிக்கை

ஒருமுறை இயேசு தனிமையாக மன்றாடிக்கொண்டிருந்தார். அவருடைய சீடர்களும், அவருடனே இருந்தார்கள். அப்பொழுது அவர் அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார். மத் 16:13-16மாற் 8:27-30லூக் 11:1மத் 26:36லூக் 22:39-41

அவர்கள் அதற்கு பதிலாக, “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறுசிலர் எலியா என்றும், இன்னும் சிலர் உம்மைக் குறித்து, வெகுகாலத்திற்கு முன்வாழ்ந்த இறைவாக்கினரில் ஒருவர் உயிர்பெற்று வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்” என்றார்கள். யோவா 1:21லூக் 9:7-8மல்கி 4:5மத் 14:2மாற் 6:15யோவா 1:25யோவா 7:40யோவா 9:17

அப்பொழுது இயேசு அவர்களிடம், “நீங்கள் என்னை யார் என்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். மத் 16:15-17யோவா 1:49யோவா 20:31யோவா 4:29யோவா 4:42யோவா 6:68-69யோவா 7:41அப் 17:3

பேதுரு அதற்கு, “நீர் இறைவனின் கிறிஸ்து!” என்றான்.

இயேசு தமது மரணத்தைக் குறித்து அறிவித்தல்

இயேசு அவர்களிடம், “இதை யாருக்கும் சொல்லவேண்டாம்” என கண்டிப்பாய் எச்சரித்தார். மத் 16:20மத் 17:9மாற் 8:30-31 பின்பு இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் பல துன்பங்களை அனுபவிக்கவேண்டும். நான் யூதரின் தலைவர்களாலும், தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்படவும், கொல்லப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழும்பவும் வேண்டும்” என்றார். ஏசா 53:1-12லூக் 24:7லூக் 18:31-34லூக் 9:441 பேது 1:11அப் 4:25-28மாற் 10:33-34மாற் 9:31

பின்பு இயேசு, அவர்கள் எல்லோரையும் நோக்கி, “யாராவது என் பின்னே வரவிரும்பினால், அவர்கள் தம்மையே வெறுத்து, தினந்தோறும் தம் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும். மத் 10:38-39லூக் 14:26-27ரோம 8:13யோவா 12:25-26மாற் 8:34-38கொலோ 3:5தீத் 2:122 தீமோ 3:12 ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் யாரும் அதை இழந்துபோவார்கள். என் நிமித்தம் தம் உயிரை இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள். லூக் 17:33யோவா 12:25அப் 20:23-24வெளி 2:10வெளி 12:11எபி 11:35 யாராவது முழு உலகத்தையும் தமக்கு உரிமையாக்கிக் கொண்டாலும், தம் ஆத்துமாவை இழந்துபோனாலோ அல்லது பறிகொடுத்தாலோ, அதனால் அவர்களுக்குப் பலன் என்ன? மத் 16:26மாற் 8:36லூக் 12:19-21சங் 49:6-8லூக் 4:5-72 பேது 2:15-171 கொரி 9:27அப் 1:25 யாராவது என்னைக்குறித்தும் என் வார்த்தையைக் குறித்தும் வெட்கப்பட்டால், மானிடமகனாகிய நானும் எனது மகிமையிலும் எனது தந்தையின் மகிமையிலும் பரிசுத்த தூதர்களின் மகிமையிலும் வரும்போது, அவர்களைக்குறித்து வெட்கப்படுவேன். மத் 10:32-332 தீமோ 2:12லூக் 12:8-9ரோம 1:16மத் 16:27மாற் 8:38வெளி 21:8மத் 25:31

“இங்கே நிற்கிறவர்களில் சிலர் இறைவனுடைய அரசைக் காணும்முன் மரணமடைய மாட்டார்கள் என்று நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்” என்றார். மத் 16:28மாற் 9:1யோவா 21:22-23லூக் 2:26எபி 2:9யோவா 8:51-52லூக் 22:18மாற் 14:25

இயேசு மறுரூபமடைதல்

இயேசு இதைச் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குபின், அவர் பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் தன்னுடனே கூட்டிக்கொண்டு, மன்றாடும்படி ஒரு மலைக்குச் சென்றார். லூக் 6:12மத் 17:1-13மத் 26:37-39மாற் 14:33-36மாற் 9:2-13சங் 109:4எபி 5:7லூக் 8:51 அவர் மன்றாடிக்கொண்டிருக்கையில், அவருடைய முகத்தின் தோற்றம் மாறியது. அவருடைய உடைகள், வெண்மையாய் மின்னியது. மத் 17:2மாற் 9:2-32 பேது 1:16-18யாத் 34:29-35ஏசா 33:17ஏசா 53:2பிலி 3:7-8வெளி 20:11 மோசே, எலியா ஆகிய இரண்டுபேர்களும் மகிமையான பிரகாசத்தில் தோன்றி, அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள். 2 கொரி 3:7-11எபி 3:3-6யோவா 1:17லூக் 1:17லூக் 24:27லூக் 24:44லூக் 9:19மத் 17:3-4 எருசலேமில் சீக்கிரமாய் இயேசு நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக் குறித்தே அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். பிலி 3:211 பேது 1:11-121 பேது 5:102 பேது 1:15கொலோ 3:4யோவா 1:29லூக் 13:32-34லூக் 9:22 பேதுருவும் அவனுடைய கூட்டாளிகளும், கடுமையான தூக்க மயக்கத்திலிருந்தார்கள். ஆனால் அவர்கள் தூக்கம் தெளிந்து விழித்தபோது, அவருடைய மகிமையையும், அவருடன் நின்ற இரண்டுபேரையும் கண்டார்கள். தானி 8:18யோவா 1:14தானி 10:9மத் 26:40-43யாத் 33:18-23ஏசா 60:1-3ஏசா 60:19யோவா 17:24 அவ்விருவர் இயேசுவைவிட்டுப் புறப்படும்போது, பேதுரு அவரிடம், “ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது நல்லது, நாம் இங்கு மூன்று கூடாரங்களை அமைப்போம். ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக இருக்கட்டும்” என்றான். அவன் தான் சொல்வது என்னவென்று அறியாமல் சொன்னான். மாற் 9:5-6மாற் 10:382 கொரி 4:6யோவா 14:8லூக் 5:5சங் 27:4சங் 4:6-7சங் 63:2-5

பேதுரு பேசிக்கொண்டிருக்கையில், ஒரு மேகம் தோன்றி அவர்களை மூடிக்கொண்டது. அம்மேகம் சூழ்ந்தபோது அவர்கள் பயந்தார்கள். யாத் 40:34-38மத் 17:5-7யாத் 14:19-20ஏசா 19:1நியாயாதி 13:22நியாயாதி 6:22மாற் 9:7-8சங் 18:9-11 அப்பொழுது மேகத்திலிருந்து, “இவர் என் மகன், நான் தெரிந்துகொண்டவர்; இவருக்குச் செவிகொடுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. லூக் 3:22அப் 3:22-23மத் 3:17உபா 18:18-19எபி 3:15எபி 5:9ஏசா 42:1யோவா 3:35-36 அந்தக் குரலைக் கேட்டபொழுது, இயேசு மட்டும் இருப்பதை சீடர்கள் கண்டார்கள். அவர்களோ, இந்த சம்பவத்தை தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டார்கள். தாங்கள் கண்டதை அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லவில்லை. மத் 17:9மாற் 9:9-10பிரச 3:7மாற் 9:6

தீய ஆவி பிடித்த சிறுவனை இயேசு குணமாக்குதல்

மறுநாள் அவர்கள் மலையில் இருந்து இறங்கி வந்தபோது, ஒரு பெருங்கூட்டம் அவரைச் சந்தித்தது. மத் 17:14-20மாற் 9:14-29 மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன் அவரைக் கூப்பிட்டு, “போதகரே, என் பிள்ளையை வந்து பார்க்கும்படி உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன். அவன் எனக்கு ஒரே பிள்ளை. யோவா 4:47சகரி 12:10லூக் 7:12லூக் 8:41-42மத் 15:22ஆதி 44:20 ஒரு தீய ஆவி அவனைப் பிடித்துக் கொள்கிறது. அவன் திடீரென கூச்சலிடுகிறான்; அது அவனை வலிப்புக்குள்ளாக்கும்போது, அவனுடைய வாய் நுரைக்கிறது. அது அவனைவிட்டுப் போகாமல் அலைக்கழிக்கிறது. மாற் 9:20லூக் 4:35லூக் 8:29மாற் 5:4-5மாற் 9:261 பேது 5:8யோவா 8:44வெளி 9:11 அதைத் துரத்தும்படி உமது சீடர்களிடம் கெஞ்சிக்கேட்டேன். ஆனால் அவர்களால் முடியவில்லை” என்றான். லூக் 9:1அப் 19:13-162இராஜா 4:31லூக் 10:17-19மத் 17:20

அப்பொழுது இயேசு, “விசுவாசமில்லாத, சீர்கெட்ட தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? உன் மகனை இங்கே கொண்டுவா” என்று அந்த பிள்ளையின் தகப்பனிடம் சொன்னார். உபா 32:5யோவா 14:9யோவா 20:27மத் 16:4மத் 17:17மாற் 9:19ரோம 2:42இராஜா 5:8

அந்தச் சிறுவன் வந்துகொண்டிருக்கும் போதே, பிசாசு அவனை வலிப்புக்குள்ளாக்கித் தரையில் தள்ளி வீழ்த்தியது. இயேசுவோ அந்த அசுத்த ஆவியை அதட்டி சிறுவனைக் குணமாக்கி, அவனை அவனுடைய தகப்பனிடம் ஒப்படைத்தார். 2இராஜா 4:36லூக் 7:15லூக் 9:39மாற் 9:20மாற் 9:26-27வெளி 12:121 இராஜா 17:23அப் 9:41 அவர்கள் எல்லோரும், இறைவனுடைய மகத்துவத்தைக் குறித்து வியப்படைந்தார்கள். லூக் 9:43-45லூக் 5:26அப் 3:10-13லூக் 8:25மத் 17:22மாற் 9:30-322 பேது 1:16லூக் 4:36

இயேசு தமது மரணத்தைக் குறித்து இரண்டாம்முறை முன் அறிவித்தல்

இயேசு செய்த எல்லாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தபோது, அவர் தனது சீடர்களிடம், “நான் உங்களுக்குச் சொல்லப்போவதைக் கவனமாய்க் கேளுங்கள்: மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன்” என்றார். அப் 2:23லூக் 9:22எபி 2:1லூக் 2:19மாற் 9:311 தெச 3:3-42 சாமு 24:14எபி 12:2-5 அவர்களோ அதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்ளவில்லை. அது அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்ததினால், அவர்களால் அதை அறிந்துகொள்ள முடியவில்லை. அதைக்குறித்து அவரிடம் கேட்கவும் தயங்கினார்கள். லூக் 18:34லூக் 2:50யோவா 12:16மாற் 9:322 கொரி 3:14-16யோவா 16:17-18மாற் 9:10யோவா 12:34

சீடர்களுக்கிடையில் தங்களில் யார் பெரியவன் என்பதை பற்றி ஒரு வாக்குவாதமும் எழுந்தது. மத் 18:1-5மத் 20:20-22மாற் 9:33-373 யோவா 1:9பிலி 2:3கலா 5:20-21கலா 5:25-26லூக் 14:7-11 இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, ஒரு சிறுபிள்ளையைத் தூக்கியெடுத்து, தம் அருகே நிறுத்தினார். யோவா 16:30லூக் 5:22சங் 139:231 கொரி 14:20எபி 4:13யோவா 2:25மத் 19:13-15மத் 9:4 பின்பு அவர் சீடர்களிடம், “இந்தச் சிறுபிள்ளையை என் பெயரில் ஏற்றுக்கொள்கிறவர்கள் யாரோ, அவர்கள் என்னையே ஏற்றுக்கொள்கிறார்கள்; என்னை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்கள். உங்கள் எல்லோரிலும் மிகவும் சிறியவராய் இருக்கிறவர்களே மிகப்பெரியவர்களாய் இருக்கிறார்கள்” என்றார். 1 பேது 5:6லூக் 14:11மாற் 9:37யோவா 13:20லூக் 10:16லூக் 22:26மத் 10:40-42மத் 23:11-12

அப்பொழுது யோவான் இயேசுவிடம், “ஆண்டவரே, ஒருவன் உமது பெயரில் பிசாசுகளைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் நம்மில் ஒருவனல்லாதபடியால், நாங்கள் அவனைத் தடுக்க முயற்சித்தோம்” என்றான். மாற் 9:38-40எண் 11:27-29மாற் 10:13-14அப் 4:18-19அப் 5:281 தெச 2:16லூக் 5:53 யோவா 1:9-10

அதற்கு இயேசு, “அவனைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், நமக்கு விரோதமாய் இராதவன், நமது சார்பாகவே இருக்கிறான்” என்றார். லூக் 11:23மத் 12:30பிலி 1:15-181 கொரி 12:3லூக் 16:13நீதி 3:5-6மாற் 9:41மத் 17:26

சமாரியர்கள் எதிர்ப்பு

இயேசு தான் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம் நெருங்கியபோது, மனவுறுதியோடு அவர் எருசலேமை நோக்கிப் புறப்பட்டார். ஏசா 50:5-9லூக் 18:31லூக் 13:22மாற் 16:191 தீமோ 3:16அப் 1:2அப் 1:9அப் 20:22-24 அவருக்கான ஆயத்தங்களைச் செய்யும்படி, அவர் தமக்கு முன்பாகவே சீடர்களை அனுப்பினார். அவர்கள் சமாரியாவின் ஒரு கிராமத்திற்குச் சென்றார்கள். மத் 10:52இராஜா 17:24-33லூக் 10:1யோவா 8:48லூக் 10:33லூக் 17:16எஸ்றா 4:1-5லூக் 7:27 அவர் எருசலேமை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபடியால், அந்தக் கிராமத்திலுள்ள மக்கள் அவரை வரவேற்கவில்லை. யோவா 4:9யோவா 4:40-42லூக் 9:48 அவருடைய சீடரான யாக்கோபும், யோவானும் இதைக் கண்டபோது அவரிடம், “ஆண்டவரே, எலியா செய்ததுபோல், இவர்களை அழிக்கும்படி நாங்கள் வானத்திலிருந்து நெருப்பை வரவழைக்க நீர் விரும்புகிறீரா?” என்றார்கள். 2இராஜா 1:10-14யாக் 1:19-20யாக் 3:14-18அப் 4:29-302இராஜா 10:312 சாமு 21:22இராஜா 10:16வெளி 13:3 ஆனால் இயேசுவோ அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். 1 பேது 3:9யோபு 2:10யோபு 26:4மத் 16:23வெளி 3:19எரே 17:9யோபு 31:29-31மத் 26:51 அவர்கள் அதற்குப் பின்பு வேறு கிராமத்திற்குச் சென்றார்கள். மத் 20:28யோவா 3:17ரோம 12:21யோவா 10:10லூக் 19:101 பேது 2:21-23மத் 18:101 தீமோ 1:15

இயேசுவைப் பின்பற்றுவதற்கான விலை

அவர்கள் வழியில் நடந்து போய்க்கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடம், “நீர் போகும் இடமெல்லாம் நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்றான். மத் 8:19-22யோவா 13:37லூக் 9:57-60யாத் 19:8லூக் 9:51

இயேசு அதற்குப் பதிலாக, “நரிகளுக்கு பதுங்கு குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, ஆனால் மானிடமகனாகிய எனக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்றார். மத் 8:20லூக் 14:26-332 கொரி 8:9லூக் 18:22-23யாக் 2:5யோவா 6:60-66சங் 84:3யோசு 24:19-22

அவர் இன்னொருவனைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” என்றார். மத் 16:241 இராஜா 19:20மத் 6:33மத் 8:21-22ஆகா 1:2மத் 4:19-22மத் 9:9

ஆனால் அவனோ, “ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனின் மரண அடக்கத்தை செய்துவிட்டு வர எனக்கு அனுமதிகொடும்” என்றான்.

அப்பொழுது இயேசு அவனிடம், “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும். நீ போய் இறைவனுடைய அரசைப் பிரசித்தப்படுத்து” என்றார். 2 தீமோ 2:3-41 தீமோ 5:6யோவா 21:15-172 தீமோ 4:22 தீமோ 4:5லூக் 15:32வெளி 3:11 கொரி 9:16

இன்னொருவன் அவரிடம், “ஆண்டவரே, நான் உம்மைப் பின்பற்றுவேன்; ஆனால், நான் முதலில் திரும்பிப்போய், எனது குடும்பத்தாரிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றான். லூக் 14:261 இராஜா 19:20லூக் 14:18-20மத் 10:37-38உபா 33:9பிரச 9:10

அதற்கு இயேசு, “கலப்பையில் கையை வைத்துவிட்டு, பின்னே திரும்பிப் பார்க்கிற எவனும், இறைவனுடைய அரசின் பணிக்குத் தகுதியற்றவன்” என்றார். பிலி 3:13எபி 10:382 பேது 2:20-22லூக் 17:31-32யாக் 1:6-8சங் 78:8-92 தீமோ 4:10அப் 15:37-38