தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, என்னை நியாயப்படுத்திக் காட்டும், சங் 28:7சங் 7:8நீதி 20:71 சாமு 24:152இராஜா 20:3சங் 21:71 சாமு 2:9சங் 25:2
ஏனெனில் நான் உத்தமமாய் நடக்கிறேன்;
நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன்,
நான் தடுமாறுவதில்லை.
யெகோவாவே, என்னைச் சோதியும், என்னைப் பரிசோதித்துப் பாரும், சங் 139:23-24சங் 7:9சங் 17:3சகரி 13:9யோபு 13:23எரே 20:12யோபு 31:4-6சங் 66:10
என் இருதயத்தையும் என் மனதையும் ஆராய்ந்து பாரும்;
ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு 1 யோவா 1:72இராஜா 20:32 கொரி 8:92 யோவா 1:4எபே 4:321 யோவா 4:19-212 கொரி 3:183 யோவா 1:3-4
எப்பொழுதும் என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது;
நான் உமது சத்தியத்தின்படியே வாழ்கிறேன்.
ஏமாற்றுகிறவர்களோடு நான் உட்காருவதில்லை, எரே 15:17சங் 1:1நீதி 13:202 கொரி 6:17சங் 119:1151 கொரி 15:33சங் 119:63நீதி 12:11
வஞ்சகரிடத்தில் நான் சேருகிறதுமில்லை;
தீமை செய்கிறவர்களின் கூட்டத்தை நான் அருவருக்கிறேன், சங் 31:6சங் 101:3-8சங் 139:21-22சங் 1:11 கொரி 5:9-11மத் 9:11-12
கொடியவர்களுடன் உட்காரவும் மறுக்கிறேன்.
யெகோவாவே, நான் குற்றமில்லாமை விளங்கும்படி என் கைகளைக் கழுவி, சங் 73:13ஏசா 1:16-18யாத் 30:19-20தீத் 3:51 கொரி 11:28-291 தீமோ 2:8எபி 10:19-22மல்கி 2:11-13
உமது துதியைப் பிரசித்தப்படுத்தி,
உமது அதிசயமான செயல்களையெல்லாம் விவரித்துக்கொண்டு, சங் 9:1சங் 71:17-19சங் 145:51 சாமு 1:241 சாமு 1:272 நாளாக 20:26-29லூக் 19:37-40சங் 100:4-5
உமது பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
யெகோவாவே, உமது மகிமை குடியிருக்கும் இடமாகிய, சங் 84:10யோவா 2:14-17சங் 27:4-6சங் 122:9சங் 84:1-2ஏசா 38:22லூக் 2:461 நாளாக 29:3
நீர் வாழும் ஆலயத்தை நான் நேசிக்கிறேன்.
பாவிகளோடு என் ஆத்துமாவையும், மத் 25:32சங் 139:19வெளி 22:14-151 சாமு 22:18-191 சாமு 25:292 சாமு 16:72 சாமு 21:1மல்கி 3:18
இரத்தப் பிரியரோடு என் உயிரையும் எடுத்துக் கொள்ளாதேயும்.
அவர்களுடைய கைகளில் கொடுமையான சதித்திட்டங்களிருக்கின்றன; உபா 16:19யாத் 23:81 சாமு 8:3மீகா 7:3சங் 52:2அப் 23:12ஆமோ 5:12எசேக் 22:12-13
அவர்களின் வலதுகைகள் இலஞ்சங்களால் நிறைந்திருக்கின்றன.
ஆனால் நான் என் உத்தமத்திலே வாழ்வேன்; சங் 26:1சங் 69:181 பேது 1:18-191 தெச 2:10ஏசா 38:3தீத் 2:141 சாமு 12:2-52 நாளாக 31:20-21
என்னை மீட்டெடுத்து என்மீது இரக்கமாயிரும்.
என் பாதங்கள் நேர்மையான இடத்தில் நிற்கின்றன; சங் 27:11சங் 40:21 சாமு 2:9சங் 111:1நீதி 10:9சங் 22:22-25எபி 2:12சங் 26:7
நான் யெகோவாவை மகா சபையில் துதிப்பேன்.