பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, அரசன் உமது பெலத்தில் களிகூருகிறார். எபி 12:2மத் 2:2சங் 28:7சங் 62:7சங் 59:16-17சங் 2:6சங் 118:14-15சங் 20:5-6
நீர் கொடுக்கும் வெற்றிகளில் அவருடைய மகிழ்ச்சி எவ்வளவு பெரிதாயிருக்கிறது.
அவருடைய இருதயத்தின் வாஞ்சையை நீர் அவருக்குக் கொடுத்திருக்கிறீர்; சங் 37:4சங் 20:4-5சங் 2:8-9எபி 7:25ஏசா 49:6-12சங் 92:11
அவருடைய உதடுகளின் வேண்டுதலை நீர் புறக்கணிக்கவில்லை.
நிறைவான ஆசீர்வாதங்களுடன் நீர் அவரை வரவேற்று, 2 சாமு 12:30எபே 1:31 நாளாக 20:2சங் 31:19சங் 59:10எபி 2:9ரோம 11:351 சாமு 16:13
சுத்தத் தங்கத்தினாலான மகுடத்தை நீர் அவர் தலையின்மேல் வைத்தீர்.
அவர் உம்மிடம் ஆயுளைக் கேட்டார், அதை நீர் அவருக்குக் கொடுத்தீர்; சங் 91:16வெளி 1:18சங் 119:77சங் 133:3சங் 61:5-6சங் 119:175சங் 89:29சங் 89:36-37
அவர் என்றென்றும் வாழ, நீடித்த ஆயுளைக் கொடுத்தீர்.
நீர் கொடுத்த வெற்றிகளின் மூலம் அவருடைய மகிமை பெரியதாயிருக்கிறது; 1 பேது 3:22எபே 1:20-22எபி 8:1வெளி 5:8-13யோவா 17:221 நாளாக 17:11-151 நாளாக 17:272 சாமு 7:19
நீர் அவரை மகிமையாலும் மகத்துவத்தாலும் நிரப்பியிருக்கிறீர்.
நிச்சயமாகவே நீர் அவருக்கு நித்திய ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறீர்; அப் 2:28சங் 45:7சங் 16:11கலா 3:9அப் 3:26எபே 1:3லூக் 2:10-111 நாளாக 17:27
உமது சமுகத்தின் ஆனந்தத்தால், அவரை மகிழ்ச்சியாக்கினீர்.
ஏனெனில் அரசன் யெகோவாவிலேயே நம்பிக்கை வைக்கிறார்; சங் 16:8சங் 91:2தானி 7:14சங் 18:2சங் 20:7-8சங் 26:1சங் 9:21 சாமு 30:6
உன்னதமானவரின் உடன்படிக்கையின் அன்பினிமித்தம்
அவர் அசைக்கப்படமாட்டார்.
உமது கரம் உம்முடைய பகைவர் எல்லோரையும் பிடிக்கும்; 1 கொரி 15:25சங் 110:1-2லூக் 19:27சங் 72:9வெளி 19:15ஆமோ 9:2-3எபி 10:28-29லூக் 19:14
உமது வலதுகரம் உம்முடைய எதிரிகளைப் பிடித்துக்கொள்ளும்.
நீர் வரும் நேரத்தில் மல்கி 4:1சங் 18:8சங் 50:32 தெச 1:8புலம் 2:2நாகூ 1:6உபா 32:22ஏசா 26:11
அவர்களை ஒரு நெருப்புச் சூளையைப்போல் ஆக்கிவிடுவீர்.
யெகோவா தமது கடுங்கோபத்தில் அவர்களை அழித்துவிடுவார்;
அவருடைய நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்.
நீர் அவர்களுடைய சந்ததிகளைப் பூமியிலிருந்து அழிப்பீர், சங் 37:281 இராஜா 13:34ஏசா 14:20யோபு 20:28சங் 109:13மல்கி 4:1யோபு 18:16-19
அவர்களுடைய சந்ததிகளை மனுக்குலத்திலிருந்து அழிப்பீர்.
உமது பகைவர் உமக்கு எதிராக தீமையான சதி செய்தார்கள், சங் 10:2சங் 2:1எரே 11:18-19சங் 31:13ஏசா 7:6-7ஏசா 8:9-10மத் 2:16அப் 4:17-18
பொல்லாத சதித்திட்டங்களை வகுத்தார்கள்; ஆனாலும் அவர்களால் வெற்றி பெறமுடியாது.
நீர் வில்லை நாணேற்றி அவர்களை குறிபார்த்து எய்யும்போது, சங் 7:12-13சங் 18:40புலம் 3:12சங் 64:7யோபு 16:12-13யோபு 7:20சங் 44:10சங் 56:9
அவர்களை புறமுதுகு காட்டப்பண்ணுவீர்.
யெகோவாவே, உமது பெலத்தில் நீர் உயர்த்தப்பட்டிருப்பீராக; வெளி 16:5-7வெளி 19:1-6சங் 113:5சங் 57:11வெளி 15:3-4மத் 6:10சங் 57:5சங் 72:18-19
நாங்கள் உமது வல்லமையைப் பாடித் துதிப்போம்.