ஏசாயா 25

Isaiah 25

யெகோவாவுக்குத் துதி

யெகோவாவே, நீரே என் இறைவன்; யாத் 15:2சங் 118:28எண் 23:19சங் 98:1சங் 40:5ஏசா 28:29ஏசா 61:10எபே 1:11

நான் உம்மைப் புகழ்ந்துயர்த்தி, உமது பெயரைத் துதிப்பேன்.

அற்புதமான செயல்களைச் செய்திருக்கிறீர்;

நீர் பூர்வகாலத்தில் அவைகளை திட்டமிட்டபடி,

பரிபூரண உண்மையுடன் நிறைவேற்றியுள்ளீர்.

நீர் அந்நியரின் பட்டணத்தை இடிபாடுகளின் குவியலாக்கினீர்; ஏசா 13:22ஏசா 17:1ஏசா 25:12உபா 13:16ஏசா 14:23ஏசா 21:9ஏசா 23:13எரே 51:26

அரணான பட்டணத்தைப் பாழாக்கினீர்.

அந்நியரின் அரண் இனிமேலும் ஒரு பட்டணமாயிராது;

அது இனியொருபோதும் திரும்பக் கட்டப்படுவதுமில்லை.

ஆகவே வலிமையுள்ள மக்கள் கூட்டங்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; ஏசா 49:23-26சங் 46:10-11சகரி 14:16சகரி 14:9எசேக் 38:23எசேக் 39:21-22ஏசா 13:11ஏசா 60:10-14

இரக்கமற்ற நாடுகளின் பட்டணங்கள் உம்மைக் கனம்பண்ணும்.

நீர் ஏழைகளுக்கு அடைக்கலமாயிருந்தீர்; செப்ப 3:12யாக் 2:5ஏசா 32:2மத் 7:25-27யோபு 5:15-16சங் 12:5ஏசா 29:19ஏசா 32:18-19

வறுமையுற்றோரின் துயரில் அவர்களுக்கு அடைக்கலமாயிருந்தீர்.

புயலிலிருந்து காக்கும் புகலிடமாகவும்,

வெயிலிலிருந்து காக்கும் நிழலாகவும் இருந்தீர்.

முரடர்களின் மூச்சு,

ஒரு மதிலுக்கு எதிராக வீசும் புயலைப்போல் இருக்கிறது.

அது பாலைவன வெப்பத்தைப் போலவும் இருக்கிறது. ஏசா 54:15-17தானி 11:36-45தானி 7:23-27எசேக் 32:18-32எசேக் 38:9ஏசா 10:32-34ஏசா 10:8-15ஏசா 13:11

அந்நியரின் ஆர்ப்பாட்டத்தை நீர் அடக்குகிறீர்;

மேகத்தின் நிழலால் வெப்பம் தணிவதுபோல,

இரக்கமற்றோரின் பாடலும் அடங்கிப் போகிறது.

சேனைகளின் யெகோவா இந்த மலைமேல் எல்லா மக்கள்கூட்டங்களுக்கும் மத் 8:11எரே 31:12-13சங் 63:5சகரி 9:16-17லூக் 22:30வெளி 19:9எபி 12:22ஏசா 2:2-3

சிறப்பான விருந்தொன்றை ஆயத்தம் பண்ணுவார்.

நன்றாகப் பதப்படுத்தப்பட்ட பழைய திராட்சை இரசமும்,

சிறந்த இறைச்சிகளும்,

உயர்வகை திராட்சை இரசமும் நிறைந்த விருந்தாக அது இருக்கும்.

இந்த எல்லா மக்கள் கூட்டங்களையும் எபே 4:18ஏசா 60:1-3மத் 27:512 கொரி 3:13-18எபி 10:19-21அப் 17:30எபே 3:5-6எபே 5:8

மூடியிருந்த மூடுதிரையை அவர் இந்த மலையில் அழிப்பார்;

இதுவே எல்லா நாடுகளையும் மூடியிருந்த திரைச்சீலையாகும்.

மரணம் என்றென்றும் இல்லாதபடி அவர் அதை விழுங்கிவிடுவார். வெளி 21:4வெளி 7:171 கொரி 15:54ஓசி 13:141 கொரி 15:26ஏசா 35:10வெளி 20:142 தீமோ 1:10

ஆண்டவராகிய யெகோவா எல்லா முகங்களிலுமுள்ள

கண்ணீரைத் துடைத்துவிடுவார்.

அவர் பூமியெங்குமுள்ள தன் மக்களின்

அவமானத்தை நீக்கிவிடுவார்.

யெகோவாவே இதைப் பேசியிருக்கிறார்.

அந்த நாளிலே மக்கள் கூட்டங்கள், சங் 27:14ஆதி 49:18மீகா 7:7ஏசா 26:8-9ஏசா 35:2சங் 20:5வெளி 1:7வெளி 19:1-7

“நிச்சயமாக இவரே நம் இறைவன்; நாம் இவரில் நம்பிக்கை வைத்தோம்,

இவர் எங்களை மீட்டார்.

இவரே யெகோவா, இவரில் நாம் நம்பிக்கை வைத்தோம்;

இவர் கொடுக்கும் இரட்சிப்பில் நாம் மகிழ்ந்து களிகூருவோம்” என்பார்கள்.

யெகோவாவின் கரம் இந்த சீயோன் மலையில் தங்கும்; ஆமோ 2:1-3ஏசா 18:4ஏசா 25:6ஏசா 26:6எரே 48:2செப்ப 2:9செப்ப 3:15-17ஏசா 10:31

வைக்கோல் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல்,

மோவாபியர் அவரின்கீழ் மிதிக்கப்படுவார்கள்.

நீந்துபவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல், ஏசா 14:26ஏசா 16:14ஏசா 16:6ஏசா 2:11ஏசா 5:25கொலோ 2:15தானி 4:37ஏசா 65:2

மோவாபியர் தங்கள் கைகளை விரிப்பார்கள்;

அவர்களுடைய கைகளில் திறமை இருந்தபோதிலும்,

இறைவன் அவர்களுடைய பெருமையைச் சிறுமைப்படுத்துவார்.

மோவாபின் உயரமான அரண்செய்யப்பட்ட மதில்களை ஏசா 26:5வெளி 18:212 கொரி 10:4-5எபி 11:30ஏசா 13:19-22ஏசா 14:23ஏசா 15:1எரே 51:58

அவர் கீழே தள்ளி விழ்த்துவார்.

அவைகளை அவர் நிலத்தின் புழுதியில் கீழே

தள்ளிப் போடுவார்.