ஏசாயா 2

Isaiah 2

யெகோவாவின் மலை

ஆமோஸின் மகன் ஏசாயா, யூதா நாட்டையும், எருசலேம் பட்டணத்தையும் பற்றிக் கண்ட தரிசனம். ஏசா 1:1ஏசா 13:1ஆமோ 1:1ஆப 1:1மீகா 1:1மீகா 6:9

கடைசி நாட்களிலே, மீகா 4:1-3ஏசா 56:7சகரி 8:3ஏசா 27:13வெளி 11:15எபி 1:22 பேது 3:32 தீமோ 3:1

யெகோவாவினுடைய ஆலயத்தின் மலை,

எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாக நிலைநிறுத்தப்படும்;

எல்லா குன்றுகளுக்கு மேலாக உயர்த்தப்படும்,

எல்லா தேசத்தார்களும் அதை நாடி ஓடி வருவார்கள்.

அநேக மக்கள் கூட்டங்கள் வந்து, எரே 50:4-5லூக் 24:47சகரி 8:20-23ஏசா 51:4-5சங் 110:2சங் 25:8-9உபா 6:1யோவா 7:17

“வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்கு ஏறிப்போவோம்,

யாக்கோபின் இறைவனுடைய ஆலயத்திற்குப் போவோம்.

நாம் அவர் பாதைகளில் நடப்பதற்கு

அவர் தம் வழிகளை நமக்கு போதிப்பார்” என்பார்கள்.

சீயோனிலிருந்து அவரது சட்டமும்,

எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் வெளிவரும்.

அவர் நாடுளுக்கிடையில் நியாயம் விசாரித்து, ஓசி 2:18மீகா 4:3ஏசா 11:6-9சகரி 9:10ஏசா 60:17-18சங் 46:9ஏசா 32:18ஏசா 9:7

அநேக மக்கள் கூட்டங்களின் வழக்குகளைத் தீர்த்துவைப்பார்.

அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும்,

ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடித்துச் செய்துகொள்வார்கள்.

அதன்பின் ஒரு நாடு வேறு நாட்டை எதிர்த்து பட்டயத்தை எடுப்பதுமில்லை,

போருக்கான பயிற்சியையும் அவர்கள் கற்பதுமில்லை.

யாக்கோபின் குடும்பமே, வாருங்கள், எபே 5:81 யோவா 1:7ஏசா 60:19-20லூக் 1:791 யோவா 1:5யோவா 12:35-36வெளி 21:23-241 தெச 5:5-6

யெகோவாவின் வெளிச்சத்தில் நடப்போம்.

யெகோவாவின் நாள்

யாக்கோபின் குடும்பமான ரோம 11:202இராஜா 1:2உபா 18:10-141 நாளாக 10:131 இராஜா 11:1-22 நாளாக 15:22 நாளாக 24:202இராஜா 16:7-8

உமது மக்களை நீர் கைவிட்டுவிட்டீர்.

அவர்கள் கிழக்குத் தேசத்தவர்களின் போதனைகளால் நிறைந்து,

பெலிஸ்தியரைப்போல் குறிபார்க்கிறவர்களாய் இருக்கிறார்கள்.

வேற்று நாட்டு மக்களுடன் கைகோர்த்துத் திரிகிறார்கள்.

அவர்களுடைய நாடு வெள்ளியாலும், தங்கத்தாலும், நிறைந்திருக்கிறது; உபா 17:16-17ஏசா 30:16ஏசா 31:1சங் 20:7மீகா 5:101 இராஜா 10:21-271 இராஜா 4:262 நாளாக 9:20-25

அவர்களுடைய பொக்கிஷங்களுக்கு அளவேயில்லை.

அவர்களுடைய நாடு குதிரைகளால் நிறைந்திருக்கிறது;

அவர்களிடத்தில் தேர்களும் ஏராளமாயிருக்கின்றன.

அவர்களின் நாடு விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறது; சங் 115:4-8வெளி 9:20ஏசா 37:19எரே 2:282 நாளாக 27:22 நாளாக 28:2-42 நாளாக 28:23-252 நாளாக 33:3-7

அவர்கள் தங்களுடைய கைகளினாலும்,

விரல்களினாலும் செய்தவைகளையே விழுந்து வணங்குகிறார்கள்.

இவற்றால் மனிதன் தாழ்நிலைக்குக் கொண்டுவரப்படுவான், ஏசா 5:15ஏசா 27:11எரே 18:23யோசு 24:19மாற் 3:29நெகே 4:5ரோம 3:23கொலோ 2:23

மனுக்குலமும் தாழ்த்தப்படும்;

நீர் அவர்களை மன்னியாதிரும்.

யெகோவாவின் பயங்கரத்திற்கும், வெளி 6:15-16ஏசா 2:19-21ஓசி 10:8லூக் 23:30ஏசா 6:3-5நியாயாதி 6:1-2எரே 10:7யோபு 37:22-24

அவரின் மாட்சிமையின் சிறப்புக்கும் ஒதுங்கி,

கன்மலைக்குள் புகுந்து, மண்ணில் ஒளிந்துகொள்ளுங்கள்!

கர்வமுள்ள மனிதரின் பார்வை தாழ்த்தப்படும், ஏசா 5:15-16சங் 18:27ஏசா 2:17ஏசா 12:4ஏசா 13:11ஏசா 24:21மல்கி 4:1மீகா 4:6

மனிதரின் பெருமையும் தாழ்நிலைக்குக் கொண்டுவரப்படும்;

அந்த நியாயத்தீர்ப்பின் நாளில் யெகோவா மட்டுமே உயர்த்தப்படுவார்.

அகந்தையும் இறுமாப்பும் உள்ள யாவருக்கும், மல்கி 4:1ஏசா 23:9லூக் 14:11நீதி 16:51 கொரி 5:51 தெச 5:2ஆமோ 5:18தானி 4:37

உயர்த்தப்பட்ட அனைத்திற்கும்

சேனைகளின் யெகோவா நாளொன்றை வைத்திருக்கிறார்;

அவர்கள் எல்லோரும் தாழ்த்தப்படுவார்கள்.

அந்த நாளில் லெபனோனிலே ஓங்கி வளர்ந்த எல்லா கேதுரு மரங்களும், ஏசா 14:8சகரி 11:1-2ஆமோ 2:5எசேக் 31:3-12ஏசா 10:33-34ஏசா 37:24

பாசானின் எல்லா கர்வாலி மரங்களும்,

உயர்ந்த எல்லா மலைகளும், ஏசா 30:25ஏசா 40:42 கொரி 10:5சங் 110:5-6சங் 68:16

உயரமான எல்லாக் குன்றுகளும்,

உயர்வான ஒவ்வொரு கோபுரமும், ஏசா 25:12

அரண்செய்யப்பட்ட ஒவ்வொரு மதிலும்,

தர்ஷீஸின் கப்பல் 1 ஒவ்வொன்றும், 1 இராஜா 10:22ஏசா 23:11 இராஜா 22:48-49ஏசா 60:9எண் 33:52சங் 47:7வெளி 18:11வெளி 18:17-19

கம்பீரமான ஒவ்வொரு மரக்கலமும் தாழ்த்தப்படும்.

மனிதரின் கர்வம் அடக்கப்படும், ஏசா 2:11எரே 48:29-30ஏசா 13:11எசேக் 28:2-7

மனிதரின் பெருமையும் தாழ்த்தப்படும்.

அந்த நாளில் யெகோவா மட்டுமே உயர்ந்திருப்பார்;

விக்கிரகங்களோ, முழுவதும் இல்லாதொழிந்து போகும். எசேக் 36:25எசேக் 37:23ஏசா 21:9ஏசா 27:9சகரி 13:2செப்ப 1:3ஓசி 14:8

யெகோவா பூமியை அதிரப்பண்ணுவதற்காக எழும்பும்போது, ஏசா 2:10லூக் 23:30ஓசி 10:8ஏசா 2:21ஆகா 2:6எபி 12:26வெளி 11:19வெளி 6:12-15

மக்கள் அவருடைய மாட்சிமையின் சிறப்புக்கும்,

யெகோவாவின் பயங்கரத்திற்கும் தப்புவதற்காக

கன்மலைகளின் குகைகளுக்குள்ளும்,

மண்ணிலுள்ள குழிகளுக்குள்ளும் புகுந்துகொள்வார்கள்.

அந்த நாளிலே, மனிதர் தாம் வணங்குவதற்காகச் செய்த ஏசா 30:22ஏசா 31:7ஓசி 14:8ஏசா 46:1ஏசா 46:6லேவி 11:19பிலி 3:7-8

வெள்ளி விக்கிரகங்களையும், தங்க விக்கிரகங்களையும்

பெருச்சாளிகளுக்கும் வவ்வால்களுக்கும்

எறிந்துவிடுவார்கள்.

பூமியை அதிரப்பண்ணுவதற்காக யெகோவா எழும்பும்போது, ஏசா 2:19யாத் 33:22ஏசா 2:10யோபு 30:6உன்னத 2:14

மனிதர்கள் அவருடைய மாட்சிமையின் சிறப்புக்கும்,

யெகோவாவின் பயங்கரத்திற்கும் தப்புவதற்காக,

கன்மலைகளின் வெடிப்புகளுக்குள்ளும்,

பாறைச் சரிவுகளின் கீழும் புகுந்துகொள்வார்கள்.

மனிதனில் நம்பிக்கை வைப்பதை நிறுத்துங்கள், எரே 17:5சங் 146:3யாக் 4:14சங் 144:3-4சங் 8:4ஆதி 2:7ஏசா 40:15சங் 62:9

அவனுடைய உயிர் அவனுடைய நாசியின் மூச்சில்தானே இருக்கிறது.

மதிக்கப்படுவதற்கு அவனில் என்ன ஆற்றல் இருக்கிறது?