தாவீதின் சங்கீதம்.
என் கன்மலையாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக, சங் 18:342 சாமு 22:35சங் 18:2சங் 44:3-4எபே 6:10-112 கொரி 10:4உபா 32:30-31ஏசா 45:24
அவர் என் கைகளை யுத்தத்திற்கும்,
என் விரல்களை போர்புரிவதற்கும் பயிற்றுவிக்கிறார்.
அவர் என் அன்பான இறைவன், என் கோட்டை, 2 சாமு 22:2-3சங் 18:2சங் 91:2சங் 59:9எரே 16:19சங் 18:47சங் 84:92 சாமு 22:40-48
என் அரண், என் மீட்பர்,
அவரே நான் தஞ்சம் அடைகிற என் கேடயம்,
நாடுகளை 1 அவர் எனக்குக் கீழ்படுத்துகிறார்.
யெகோவாவே, மனிதனைக் குறித்து நீர் அக்கறை கொள்வதற்கும், சங் 8:4யோபு 7:17எபி 2:6யோபு 15:14சங் 146:3-4
வெறும் மனிதர்களை நீர் நினைப்பதற்கும் அவர்கள் யார்?
மனிதன் ஒரு சுவாசத்தைப்போல் இருக்கிறான்; சங் 102:11யோபு 8:9சங் 109:23சங் 39:5-62 சாமு 14:14பிரச 12:81 நாளாக 29:15பிரச 1:14
அவன் நாட்கள் துரிதமாய் மறையும் நிழலைப்போல் இருக்கின்றன.
யெகோவாவே, உமது வானங்களைப் பிரித்துக் கீழே வாரும்; சங் 104:32சங் 18:9யாத் 19:18ஆப 3:3-6எபி 12:18ஏசா 64:1-2நாகூ 1:3-6
மலைகள் புகையும்படியாக, அவைகளைத் தொடும்.
மின்னல்களை அனுப்பி, பகைவர்களைச் சிதறடியும்; உபா 32:23சங் 18:13-14உபா 32:422 சாமு 22:12-15சங் 21:12சங் 45:5சங் 7:12-13சங் 77:17-18
உமது அம்புகளை எய்து அவர்களை முறியடியும்.
உமது கரத்தை உயரத்திலிருந்து கீழே நீட்டும்; சங் 18:16சங் 69:1-2சங் 54:3வெளி 17:152 சாமு 22:17மத் 27:43சங் 18:44சங் 93:3-4
பெருவெள்ளத்திலிருந்தும், பிறநாட்டினரின் கைகளிலிருந்தும்
என்னை விடுவித்துத் தப்புவியும்.
அவர்களின் வாய்கள் பொய்களினால் நிறைந்திருக்கின்றன; சங் 12:2ஏசா 44:20சங் 41:6சங் 62:4உபா 32:40ஆதி 14:22ஏசா 59:5-7மத் 5:30
அவர்களுடைய வலதுகைகள் வஞ்சனை உடையவைகளாய் இருக்கின்றன.
இறைவனே, நான் உமக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுவேன்; சங் 33:2-3சங் 40:3சங் 149:1சங் 150:3-5சங் 81:1-31 நாளாக 25:1-6சங் 108:2-3சங் 98:1
பத்து நரம்பு வீணையினால் நான் உமக்கு இசை மீட்டுவேன்.
ஏனெனில் அரசர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவரும் சங் 18:50சங் 140:7சங் 33:16-181 சாமு 17:45-462 சாமு 21:16-172 சாமு 5:19-252 சாமு 8:6-14ஏசா 45:1-6
உமது அடியவனாகிய தாவீதை விடுவிப்பவரும் நீரே.
கொடிய வாளினின்று என்னை விடுவித்தருளும்; சங் 144:7-8ஏசா 44:20சங் 12:22 சாமு 10:6-192 சாமு 16:5-142 சாமு 17:1-14
பொய்பேசும் வாய்களையும்,
வஞ்சனையுள்ள வலது கைகளையுமுடைய
வேறுநாட்டைச் சேர்ந்தவரின் கைகளிலிருந்து என்னை விடுவித்துத் தப்புவியும்.
அப்பொழுது எங்கள் மகன்கள் தங்கள் வாலிபத்தில் சங் 128:31 பேது 3:3-6ஏசா 44:3-5சங் 115:14-15யோபு 42:15உன்னத 8:8-9புலம் 4:2ஏசா 3:16-24
நன்றாய்ப் பராமரிக்கப்பட்ட செடிகளைப்போல் இருப்பார்கள்;
எங்கள் மகள்கள் அரண்மனையை அலங்கரிப்பதற்கென
செதுக்கப்பட்ட தூண்களைப்போல் இருப்பார்கள்.
எங்கள் களஞ்சியங்கள் உபா 7:13-14உபா 28:8உபா 28:4லேவி 26:10உபா 8:3ஆதி 30:29-31லேவி 26:5லூக் 12:16-20
சகலவித விளைபொருட்களாலும் நிரப்பப்படும்;
எங்கள் நிலங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரக்கணக்கிலும்,
பதினாயிரக்கணக்கிலும் பெருகும்.
எங்கள் எருதுகள் பாரமான பொதிகளை இழுக்கும்; சகரி 8:3-5உபா 28:71 சாமு 13:17-231 சாமு 31:7உபா 28:25ஏசா 24:11நியாயாதி 5:8நியாயாதி 6:3
எங்கள் நகரத்தின் சுவர்களில் ஒன்றும் உடைக்கப்படுவதில்லை,
கைதிகளாக யாரும் சிறைபிடிக்கப்படுவதில்லை;
எங்கள் வீதிகளில் துன்பத்தின் அழுகையும் கேட்கப்படுவதில்லை.
இவற்றை உண்மையாக அடைந்த மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; சங் 33:12எபே 1:3சங் 146:5உபா 33:29சங் 65:4சங் 89:15
யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்ட மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.