யோபு 16

Job 16

யோபு பேசுதல்

அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:

“நான் இதுபோன்ற அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்; யோபு 13:4-5யாக் 1:19யோபு 11:2-3யோபு 19:2-3யோபு 26:2-3யோபு 6:25யோபு 6:6பிலி 1:16

நீங்கள் எல்லோரும் துன்பத்துக்குள்ளாக்கும் தேற்றரவாளர்கள்!

காற்றைப்போன்ற உங்கள் வீண் வார்த்தைகளுக்கு முடிவே இல்லையா? யோபு 6:26யோபு 15:2யோபு 20:3யோபு 32:3-6யோபு 8:2மத் 22:46தீத் 1:11தீத் 2:8

உங்களை இப்படித் தொடர்ந்து பேசவைப்பது என்ன?

நீங்கள் என் நிலையில் இருந்தால், சங் 109:25சங் 22:7புலம் 2:152இராஜா 19:21எரே 18:161 கொரி 12:26பிரச 10:14யோபு 11:2

என்னாலும் உங்களைப்போல் பேசமுடியும்;

நான் உங்களுக்கு விரோதமாய்ச் சிறந்த சொற்பொழிவாற்றி,

உங்களுக்கு எதிரே என் தலையை ஏளனமாய் அசைக்கவும் முடியும்.

ஆனால் என் வாயினால் உங்களைத் தைரியப்படுத்துவேன், கலா 6:1ஏசா 35:3-4நீதி 27:9யோபு 29:25யோபு 4:3-4யோபு 6:14நீதி 27:17சங் 27:14

என் உதடுகளிலிருந்து வரும் ஆறுதல் உங்கள் துன்பத்தை ஆற்றும்.

“நான் பேசினாலும் என் துயரம் என்னைவிட்டு நீங்காது; யோபு 10:1சங் 88:15-18சங் 77:1-9

பேசாவிட்டால் அது அகன்று போவதுமில்லை.

இறைவனே, நீர் என்னை இளைக்கப் பண்ணிவிட்டீர்; யோபு 7:3யோபு 1:15-19ஏசா 50:4யோபு 10:1யோபு 29:5-25யோபு 3:17யோபு 7:16மீகா 6:13

என் குடும்பத்தையும் நீர் பாழாக்கிவிட்டீர்.

நீர் என்னை ஒடுங்கப்பண்ணினீர், அதுவே சாட்சியாகிவிட்டது; யோபு 10:17யோபு 19:20சங் 109:24ரூத் 1:21எபே 5:27ஏசா 10:16ஏசா 24:16சங் 106:15

என் மெலிவு எனக்கு விரோதமாக எழுந்து சாட்சி கூறுகிறது.

இறைவன் என்னைத் தாக்கி, தமது கோபத்தில் என்னைக் கிழித்து, யோபு 13:24புலம் 2:16சங் 35:16ஓசி 6:1யோபு 19:11அப் 7:54யோபு 10:16-17யோபு 13:27

என்னைப் பார்த்து தமது பற்களை கடிக்கிறார்;

என் எதிரி தமது கண்களால் என்னை கூர்ந்து பார்க்கிறார்.

மனிதர் என்னைக் கேலிசெய்யத் தங்கள் வாய்களைத் திறக்கிறார்கள்; சங் 35:15சங் 22:13ஏசா 50:6புலம் 3:30அப் 23:2மீகா 5:1சங் 22:16-171 இராஜா 22:24

ஏளனத்துடன் என்னைக் கன்னத்தில் அறைந்து

எனக்கு விரோதமாய் ஒன்றுகூடுகிறார்கள்.

இறைவன் என்னைத் தீய மனிதரிடம் ஒப்புக்கொடுத்து, சங் 27:12சங் 31:8சங் 7:141 சாமு 24:182 கொரி 12:7யோவா 19:16யோபு 1:13-19யோபு 2:7

கொடியவர்களின் பிடிக்குள் என்னை சிக்கவைத்தார்.

நான் நலமாய் இருந்தேன், அவர் என்னைச் சிதறடித்தார்; யோபு 7:20புலம் 3:11-12புலம் 3:4யோபு 9:17சங் 44:19எசேக் 29:7யோபு 15:26யோபு 29:18-19

அவர் என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கினார்.

அவர் என்னைத் தமது இலக்காக ஆக்கினார்;

அவருடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள். யோபு 20:25யோபு 6:4புலம் 2:11உபா 29:20எசேக் 5:11ஆதி 49:23யோபு 19:27யோபு 6:10

இரக்கமின்றி, அவர் என் ஈரலைக் குத்தி

எனது பித்தத்தை நிலத்தில் சிந்தப்பண்ணுகிறார்.

திரும்பத்திரும்ப அவர் என்னை நொறுக்கி, நியாயாதி 15:8யோபு 9:17யோவே 2:7புலம் 3:3-5சங் 42:7

ஒரு போர்வீரனைப்போல் என்னைத் தாக்குகிறார்.

“நான் துக்கவுடையைத் தைத்து என் உடலுக்குப் போர்த்தினேன்; ஆதி 37:34சங் 7:51 இராஜா 21:27ஏசா 22:12சங் 75:51 சாமு 2:10யோபு 30:19சங் 75:10

என் மேன்மையைப் தூசியில் புதைத்தேன்.

என் முகம் அழுகையால் சிவந்து, புலம் 1:16மாற் 14:34சங் 102:3-5ஏசா 52:14யோபு 17:7யோனா 2:1-10சங் 102:9சங் 31:9

என் கண்கள் இருளடைந்தது;

இருப்பினும், என் கைகள் வன்செயலுக்கு உட்படாதவை; நீதி 15:8சங் 66:18-19யோபு 27:6-7யோபு 8:5-6ஏசா 59:6யோபு 11:14யோபு 15:20யோபு 15:34

என் ஜெபம் தூய்மையானது.

“பூமியே என் இரத்தத்தை மூடி மறைக்காதே 1; எசேக் 24:7ஏசா 26:21ஆதி 4:11சங் 66:18-19ஏசா 1:15ஏசா 58:9-10யாக் 4:3-4எரே 22:29

என் கதறல் ஒருபோதும் ஓய்ந்து போகாதிருக்கட்டும்!

இப்போதும் என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது; ரோம 1:91 தெச 2:10ஆதி 31:501 சாமு 12:51 தெச 2:52 கொரி 1:232 கொரி 11:31யோபு 25:2

எனக்காக வழக்காடுபவர் உன்னதத்தில் இருக்கிறார்.

என் கண்கள் இறைவனை நோக்கிக் கண்ணீர் வடிக்கிறபோது, எபி 5:7சங் 142:2யோபு 12:4-5யோபு 16:4யோபு 17:2லூக் 6:11-12சங் 109:4ஓசி 12:4-5

எனக்காகப் பரிந்துபேசுகிறவர் என் சிநேகிதர்.

ஒருவன் தன் சிநேகிதனுக்காகப் பரிந்துபேசுகிறதுபோல, பிரச 6:10ஏசா 45:9ரோம 9:20யோபு 13:22யோபு 13:3யோபு 23:3-7யோபு 31:35யோபு 40:1-5

அவரும் மனிதனுக்காக இறைவனுடன் பேசுகிறார்.

“நான் திரும்பி வரமுடியாத பயணத்திற்குப் போவதற்கு, யோபு 14:10யோபு 14:14யோபு 14:5யோபு 7:9-10பிரச 12:5

இன்னும் சில வருடங்களே இருக்கின்றன.