யோபு 29

Job 29

யோபுவின் முன்னைய நிலை

யோபு மேலும் தன் பேச்சைத் தொடர்ந்து சொன்னதாவது: யோபு 27:1யோபு 13:12எண் 23:7

“கடந்துபோன மாதங்களை, இறைவன் என்னைக் கண்காணித்த நாட்களை, எரே 31:28யோபு 1:1-5யோபு 1:10யோபு 7:3யூதா 1:1சங் 37:28

நான் எவ்வளவாய் விரும்புகிறேன்!

அந்நாட்களில் அவருடைய விளக்கு என் தலைமேல் பிரகாசித்தது; சங் 18:28யோவா 8:12எபே 5:8யோவா 12:46யோபு 18:6யோபு 11:17யோபு 22:28நீதி 24:20

அவருடைய ஒளியினால் நான் இருளில் நடந்தேன்.

வாலிப நாட்களில், சங் 25:14நீதி 3:32யோபு 1:10யோபு 15:8சங் 27:5சங் 91:1கொலோ 3:3

இறைவனின் நெருங்கிய நட்பு என் வீட்டை ஆசீர்வதித்தது.

எல்லாம் வல்லவர் என்னோடு இருந்தார், சங் 128:3சங் 127:3-5உபா 33:27-29யோசு 1:9சங் 30:7உன்னத 2:4உன்னத 3:1-2நியாயாதி 6:12-13

என் பிள்ளைகளும் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.

என் காலடிகள் வெண்ணெயால் கழுவப்பட்டது; சங் 81:16யோபு 20:17உபா 32:13-14உபா 33:24ஆதி 49:11

கற்பாறையிலிருந்து எனக்காக ஒலிவ எண்ணெய் ஊற்றெடுத்துப் பாய்ந்தது.

“அந்நாட்களில் நான் பட்டணத்தின் வாசலுக்குச் சென்று, உபா 16:18ரூத் 4:1-2சகரி 8:16ரூத் 4:11உபா 21:19யோபு 31:21

பொது இடத்தில் எனது இருக்கையில் அமரும்போது,

வாலிபர்கள் என்னைக் கண்டு ஒதுங்கி நின்றார்கள்; லேவி 19:321 பேது 5:5நீதி 16:31ரோம 13:7தீத் 3:11 பேது 2:17நீதி 20:8ரோம 13:3-4

முதியவர்கள் எழுந்து நின்றார்கள்.

அதிகாரிகள் பேச்சை நிறுத்திவிட்டு யோபு 21:5யோபு 40:4நீதி 10:19யாக் 1:19நீதி 30:32நியாயாதி 18:19யோபு 4:2யோபு 7:11

தங்கள் கைகளால் வாயை மூடிக்கொண்டார்கள்.

உயர்குடி மக்களின் குரல்களும் அடங்கின, சங் 137:6எசேக் 3:26

அவர்களுடைய நாவுகள் மேல்வாயோடு ஒட்டிக்கொண்டன.

என்னைக் கேட்டவர்கள் என்னைப்பற்றி நன்றாக பேசினார்கள், லூக் 4:22யோபு 31:20நீதி 29:2லூக் 11:27

என்னைக் கண்டவர்களும் என்னைப் பாராட்டினார்கள்.

ஏனெனில் உதவிக்காக அழுத ஏழைகளையும், சங் 72:12நீதி 21:13யாத் 22:22-24யாக் 1:27உபா 10:18நீதி 24:11-12சங் 68:5சங் 82:2-4

உதவுவாரில்லாத தந்தையற்றவர்களையும் நான் காப்பாற்றினேன்.

செத்துக்கொண்டிருந்த மனிதன் என்னை ஆசீர்வதித்தான்; 2 தீமோ 1:16-18ஏசா 27:13யோபு 22:9யோபு 31:19-20பிலே 1:72 கொரி 9:12-14அப் 9:39-41உபா 16:11

நான் விதவையைத் தன் உள்ளத்தில் மகிழ்ந்து பாடச்செய்தேன்.

நான் நேர்மையை என் உடையாக அணிந்திருந்தேன்; ஏசா 61:10ஏசா 59:17சங் 132:9எபே 6:14யோபு 27:6வெளி 19:81 தெச 5:82 கொரி 6:7

நியாயம் என் அங்கியாகவும், தலைப்பாகையாகவும் அமைந்திருந்தது.

நான் குருடனுக்குக் கண்களாயும், எண் 10:31மத் 11:51 கொரி 12:12-31

முடவனுக்குக் கால்களாயும் இருந்தேன்.

நான் தேவையுள்ளோருக்கு தகப்பனாக இருந்து, நீதி 29:7சங் 68:5எஸ்த 2:7யோபு 24:4யோபு 31:18நீதி 25:21 இராஜா 3:16-28உபா 13:14

அறியாதவனின் வழக்கில் நான் அவனுக்கு உதவினேன்.

நான் கொடியவர்களின் கூர்மையானப் பற்களை உடைத்து, சங் 3:7நீதி 30:141 சாமு 17:35சங் 124:6சங் 58:8சங் 124:3

அவர்களின் பற்களில் சிக்குண்டவர்களை விடுவித்தேன்.

“நான், ‘என் வீட்டில் சாவேனென்றும், சங் 30:6-7ஆதி 32:12எரே 49:16யோபு 42:16-17யோபு 5:26ஒபதி 1:4சங் 91:16ஆதி 41:49

என் நாட்கள் கடற்கரை மணலைப்போல் பெருகும்’ என்றும் நினைத்தேன்.

என் வேர் தண்ணீரை எட்டும் என்றும், எரே 17:8சங் 1:3ஓசி 14:5-7யோபு 18:16

என் கிளைகளில் இரவு முழுவதும் பனி படர்ந்திருக்கும் என்றும் எண்ணினேன்.

என் மகிமை மங்காது; ஆதி 49:24ஏசா 40:312 கொரி 4:16ஆதி 45:13சங் 103:5சங் 18:34சங் 3:3யோபு 19:9

என் வில் எப்போதும் கையில் புதுப்பெலனுடன் இருக்கும். என எண்ணினேன்.

“அந்நாட்களில் மனிதர் ஆவலுடன் எனக்குச் செவிகொடுத்து, யோபு 29:9-10யோபு 32:11-12

என் ஆலோசனைக்கு மவுனமாய்க் காத்திருந்தார்கள்.

நான் பேசியபின் அவர்கள் தொடர்ந்து பேசவில்லை; உபா 32:2எசேக் 20:46ஏசா 52:15மத் 22:46உன்னத 4:11ஆமோ 7:16யோபு 32:15-16யோபு 33:31-33

என் வார்த்தைகள் அவர்கள் செவிகளில் மெதுவாய் விழுந்தன.

மழைக்குக் காத்திருப்பதுபோல் அவர்கள் எனக்குக் காத்திருந்து, ஓசி 6:3சங் 72:6சகரி 10:1

கோடை மழையைப்போல் என் வார்த்தைகளைப் பருகினார்கள்.

நான் அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்தபோது, சங் 126:1சங் 4:6சங் 89:15ஆதி 45:26லூக் 24:41

அவர்களால் அதை நம்பமுடியவில்லை;

என் முகமலர்ச்சியை மாற்றவுமில்லை.

நானே அவர்களுக்கு வழியைத் தெரிந்தெடுத்து, அவர்களின் தலைவனாயிருந்தேன்; 2 கொரி 1:3-41 தெச 3:2-3ஆதி 14:14-17ஆதி 41:40ஏசா 35:3-4ஏசா 61:1-3நியாயாதி 11:81 நாளாக 13:1-4

தன் படைகளின் மத்தியில் உள்ள ஒரு அரசனைப்போலவும்,

கவலைப்படுகிறவர்களைத் தேற்றுகிறவன்போலவும் நான் இருந்தேன்.