நீதிமொழிகள் 29

Proverbs 29

அநேகமுறை கண்டிக்கப்பட்டும், பிடிவாதமாகவே இருக்கிறவர்கள், நீதி 6:151 சாமு 2:25நீதி 1:24-31சகரி 7:11-14நீதி 28:18யோவா 13:18யோவா 13:26யோவா 6:70-71

திடீரென தீர்வு இல்லாமல் அழிந்துபோவார்கள்.

நீதிமான்கள் பெருகும்போது, மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்; நீதி 28:12நீதி 11:10நீதி 28:28எஸ்த 8:15பிரச 10:5எஸ்த 3:15வெளி 11:15ஏசா 32:1-2

கொடியவர்கள் ஆளும்போதோ, மக்கள் வேதனைக் குரல் எழுப்புவார்கள்.

ஞானத்தை விரும்புகிறவன் தன் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறான்; நீதி 27:11லூக் 15:30நீதி 10:1நீதி 15:20லூக் 15:13நீதி 28:7நீதி 6:26நீதி 21:17

ஆனால் விபசாரிகளுடன் கூட்டாளியாய் இருப்பவன் தன்னுடைய செல்வத்தைச் சீரழிக்கிறான்.

அரசன் நியாயத்தினால் நாட்டை நிலைநிறுத்துகிறான்; நீதி 29:14தானி 11:20மீகா 7:3நீதி 20:81 இராஜா 2:121 சாமு 13:132 நாளாக 9:82இராஜா 15:18-20

ஆனால் இலஞ்சத்தின்மேல் பேராசை கொண்டவர்கள் நாட்டை அழிக்கிறார்கள்.

தனக்கு அடுத்திருப்போரை முகஸ்துதி செய்கிறவர்கள், ஓசி 5:1யோபு 17:5சங் 12:2சங் 5:91 தெச 2:52 சாமு 14:17-24புலம் 1:13லூக் 20:20-21

அவருடைய கால்களுக்கு வலையை விரிக்கிறார்கள்.

தீயவர் தங்கள் பாவத்திலேயே சிக்கிக்கொள்கிறார்கள், பிரச 9:12யாத் 15:12 தீமோ 2:261 பேது 1:8யோபு 18:7-10சங் 11:6சங் 118:15சங் 132:16

ஆனால் நீதிமான்கள் ஆர்ப்பரித்து மகிழ்கிறார்கள்.

நீதிமான்கள் ஏழைகளுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதில் கவனமாயிருக்கிறார்கள்; யோபு 29:16சங் 41:1நீதி 21:13நீதி 31:8-9கலா 6:11 சாமு 25:9-11எசேக் 22:29-31எரே 22:15-17

ஆனால் கொடியவர்களுக்கு அந்த அக்கறையில்லை.

ஏளனம் செய்பவர்கள் பட்டணத்தில் குழப்பத்தை உண்டுபண்ணுகிறார்கள்; நீதி 11:11எரே 15:1யாக் 3:5-6யாக் 5:15-18நீதி 16:141 தெச 2:15-162 சாமு 24:16-17ஆமோ 7:2-6

ஆனால் ஞானமுள்ளவர்கள் கோபத்தை விலக்குகிறார்கள்.

ஞானமுள்ளவர் மூடரை நீதிமன்றத்திற்குக் கொண்டுபோனால், நீதி 26:4பிரச 10:13மத் 7:6மத் 11:17-19

மூடர் சினங்கொண்டு கேலிசெய்வார், அங்கு அமைதி இருக்காது.

இரத்தவெறியர் உத்தமமானவர்களை வெறுக்கிறார்கள்; 1 யோவா 3:12-13யோவா 15:18-19ஆதி 4:5-81 சாமு 20:31-331 சாமு 22:11-231 இராஜா 21:201 இராஜா 22:81 சாமு 15:11

நீதிமான்களைக் கொல்லும்படி தேடுகிறார்கள்.

மதியீனர்கள் தம் கோபத்தை அடக்காமல் வெளிப்படுத்துகிறார்கள்; நீதி 19:11நீதி 12:16மீகா 7:5ஆமோ 5:13நீதி 12:23நியாயாதி 16:17நீதி 14:33

ஆனால் ஞானமுள்ளவர்கள் அதை அடக்கிக் கொள்கிறார்கள்.

ஒரு ஆளுநர் பொய்களுக்குச் செவிகொடுத்தால், நீதி 20:81 சாமு 22:8-232இராஜா 10:6-7சங் 101:5-7சங் 52:2-41 இராஜா 21:11-131 சாமு 23:19-232 சாமு 3:7-11

அவருடைய ஊழியர்கள் எல்லோரும் கொடியவராவார்கள்.

ஏழைக்கும் அவரை ஒடுக்கிறவருக்கும் பொதுவானது ஒன்று உண்டு: மத் 5:45நீதி 22:2சங் 13:3எபே 2:1யாத் 22:25-26லேவி 25:35-37நெகே 5:5-71 கொரி 6:10

யெகோவாவே அந்த இருவரின் கண்களுக்கும் பார்வையைக் கொடுத்திருக்கிறார்.

அரசன் ஏழைகளுக்கு நியாயத்துடன் தீர்ப்பளித்தால், நீதி 16:12ஏசா 11:4நீதி 20:28நீதி 29:4சங் 72:2-4எபி 1:8-9ஏசா 9:6-7நீதி 25:5

அவனுடைய சிங்காசனம் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.

பிரம்பும் கண்டனமும் ஞானத்தைக் கொடுக்கும், நீதி 10:1நீதி 17:25நீதி 29:17நீதி 13:24நீதி 22:15நீதி 22:6நீதி 17:21நீதி 23:13-14

ஆனால் தன் விருப்பப்படி வளரவிடப்படுகிற பிள்ளையோ, தன் தாய்க்கு அவமானத்தைக் கொண்டுவரும்.

கொடியவர்கள் பெருகும்போது பாவமும் பெருகும், சங் 37:34சங் 37:36சங் 58:10சங் 91:8சங் 92:11நீதி 29:2சங் 112:8வெளி 15:4

ஆனால் நீதிமான்கள் அவர்களுடைய வீழ்ச்சியைக் காண்பார்கள்.

உன் பிள்ளைகளை கண்டித்துத் திருத்து, அவர்கள் உனக்கு மன ஆறுதலைக் கொடுப்பார்கள்; நீதி 10:1நீதி 29:15நீதி 13:24நீதி 23:13-14நீதி 19:18நீதி 22:15

அவர்கள் உன் மனதை சந்தோஷப்படுத்துவார்கள்.

இறைவெளிப்பாடு இல்லாத இடத்தில் மக்கள் கட்டுக்கடங்காதிருப்பார்கள்; யாக் 1:25லூக் 11:28ஓசி 4:6யோவா 13:17சங் 1:1-2நீதி 19:16சங் 119:21 சாமு 3:1

ஆனால் ஞானத்தின் சட்டத்தைக் கைக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

வேலைக்காரர்களை வெறும் வார்த்தையினால் திருத்தமுடியாது; யோபு 19:16நீதி 26:3நீதி 30:22

அவர்கள் அதை விளங்கிக்கொண்டாலும் அதை கவனத்தில் கொள்ளமாட்டார்கள்.

பதற்றப்பட்டுப் பேசுபவனை நீ பார்த்திருக்கிறாயா? யாக் 1:19நீதி 26:12நீதி 14:29பிரச 5:2நீதி 29:11நீதி 21:5

அவரைவிட மூடராவது திருந்துவாரென்று நம்பலாம்.

ஒருவர் தன் வேலைக்காரர்களை இளமையில் கட்டுப்பாடில்லாமல் விட்டால்,

இறுதியில் அவர்கள் ஆணவம் பிடித்தவர்களாவார்கள்.

கோபக்காரர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள்; நீதி 15:18நீதி 17:19நீதி 26:21நீதி 10:12நீதி 14:17நீதி 22:24யாக் 3:16நீதி 30:33

முற்கோபிகள் அநேக பாவங்களைச் செய்கிறார்கள்.

ஒருவருடைய அகந்தை அவரை வீழ்த்தும், மத் 23:12லூக் 14:11நீதி 11:2ஏசா 66:2யாக் 4:6-101 பேது 5:5நீதி 15:33நீதி 16:18

ஆனால் மனத்தாழ்மை கனத்தைக் கொண்டுவரும்.

திருடர்களுக்கு உடந்தையாய் இருப்பவர்கள் தங்களுக்கே பகைவராய் இருக்கிறார்கள்; லேவி 5:1நீதி 1:11-19நீதி 8:36ஏசா 1:23சங் 50:18-22நீதி 15:32நியாயாதி 17:2மாற் 11:17

அவர்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டதினால் சாட்சி சொல்லத் துணியமாட்டார்கள்.

மனிதருக்குப் பயப்படுவது கண்ணியாயிருக்கும்; சங் 118:8லூக் 12:4நீதி 18:10சங் 91:14நீதி 16:20யோவா 12:42-43நீதி 30:5சங் 125:1

ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கை வைப்பவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

அநேகர் ஆளுநரின் தயவை தேடுகிறார்கள்; நீதி 19:6நீதி 19:21சங் 20:9ஏசா 46:9-11சங் 62:121 கொரி 4:4தானி 4:35எஸ்த 4:16

ஆனால் யெகோவாவிடமிருந்தே மனிதர் நியாயத்தைப் பெறுகிறார்கள்.

நீதிமான்கள் நேர்மையற்றவர்களை வெறுக்கிறார்கள்; 1 யோவா 3:13யோவா 15:17-19சங் 139:21யோவா 15:23யோவா 7:7நீதி 29:10நீதி 24:9சகரி 11:8

கொடியவர்கள் நீதிமான்களை வெறுக்கிறார்கள்.