ஏசாயா 46

Isaiah 46

பாபிலோனின் தெய்வங்கள்

பேல் 1 தெய்வம் தலை கவிழ்கிறது; ஏசா 21:9எரே 51:44எரே 50:21 சாமு 5:3யாத் 12:12ஏசா 2:20ஏசா 41:6-7எரே 10:5

நேபோ தெய்வம் குப்புற விழுகிறது.

அவர்களுடைய விக்கிரகங்கள் சுமை சுமக்கும் மிருகங்களால் கொண்டு செல்லப்படுகின்றன;

ஊர்வலத்தில் சுமக்கப்பட்ட அந்த விக்கிரகங்கள்

இப்பொழுது களைத்துப்போன மிருகங்களுக்கு மிகவும் பாரமாயிருக்கின்றன.

அவை ஒன்றாய் குப்புற விழுகின்றன. எரே 48:7நியாயாதி 18:17-182 சாமு 5:21நியாயாதி 18:24எரே 43:12-13ஓசி 10:5-6ஏசா 36:18-19ஏசா 37:12

அந்த உருவச்சிலைகள் தங்களைச் சுமக்கும் மிருகங்களைத் தப்புவிக்கும் ஆற்றலின்றி

தாங்களும் சிறைப்பட்டுப் போகின்றன.

“யாக்கோபின் குடும்பமே, இஸ்ரயேல் குடும்பத்தில் எஞ்சியிருப்பவர்களே, உபா 1:31ஏசா 51:7ஏசா 51:1சங் 71:6உபா 32:11-12யாத் 19:4ஏசா 1:9ஏசா 10:22

நீங்கள் அனைவரும் எனக்குச் செவிகொடுங்கள்;

நீங்கள் கருவில் உருவானதுமுதல் நான் உங்களைத் தாங்கினேன்,

நீங்கள் பிறந்ததுமுதல் நான் உங்களைச் சுமந்தேன்.

நீங்கள் முதிர்வயது அடைந்து, உங்களுக்கு நரைமயிர் உண்டாகும் காலத்திலும், சங் 71:18சங் 48:14எபி 13:8சங் 92:14யாக் 1:17சங் 102:26-27எபி 1:12ரோம 11:29

உங்களைத் தாங்கப்போகிறவர் நானே.

உங்களைப் படைத்த நானே உங்களைச் சுமப்பேன்.

நானே உங்களைத் தாங்குவேன், நானே உங்களைக் காப்பாற்றுவேன்.

“என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? யாருக்கு சமமாக எண்ணுவீர்கள்? ஏசா 40:18ஏசா 40:25சங் 89:6கொலோ 1:15யாத் 15:11எரே 10:16எரே 10:6-7பிலி 2:6

என்னை ஒப்பிடுவதற்கு யாரை எனக்கு ஒப்பிடுவீர்கள்?

சிலர் தங்கள் பைகளிலிருந்து தங்கத்தை அள்ளிக்கொட்டி, அப் 17:29ஏசா 40:19-20எரே 10:141 இராஜா 12:28தானி 3:5-15யாத் 32:2-4ஆப 2:18-20ஓசி 8:4-6

தராசுகளில் வெள்ளியை நிறுக்கிறார்கள்;

அதை ஒரு தெய்வமாகச் செய்யும்படி அவர்கள் ஒரு கொல்லனை கூலிக்கு அமர்த்துகிறார்கள்;

பின் அவர்கள் தாழ்ந்து வீழ்ந்து அதை வணங்குகிறார்கள்.

அதைத் தமது தோள்களில் தூக்கிச் சுமக்கிறார்கள். ஏசா 45:20எரே 10:51 சாமு 5:3ஏசா 46:11 இராஜா 18:261 இராஜா 18:40தானி 3:1நியாயாதி 10:12-14

அவர்கள் அதை அதற்குரிய இடத்தில் வைக்கிறார்கள்.

அது அங்கேயே நிற்கிறது, அந்த இடத்திலிருந்து அதனால் நகரமுடியாது.

ஒருவன் அதை நோக்கி அழுதாலும் அது பதிலளிப்பதில்லை;

ஒருவனை அவனுடைய துன்பங்களிலிருந்து காப்பாற்ற அதனால் இயலாது.

“கலகக்காரரே, இதை நினைவில்கொள்ளுங்கள். 1 கொரி 14:20உபா 32:29எசேக் 18:28ஆகா 1:5ஆகா 1:7ஏசா 44:18-21ஏசா 47:7லூக் 15:17

இதை மனதில் பதித்து வையுங்கள்.

முந்தி நிகழ்ந்த பூர்வீகக் காரியங்களை நினைத்துப் பாருங்கள்; ஏசா 45:21-22ஏசா 42:9ஏசா 46:5சங் 111:4உபா 33:26உபா 32:7ஏசா 45:18ஏசா 65:17

நானே இறைவன், வேறொருவர் இல்லை;

நானே இறைவன், என்னைப்போல் ஒருவரும் இல்லை.

நான் ஆரம்பத்திலிருந்தே முடிவை அறிவிக்கிறவர், நீதி 19:21சங் 33:11எபே 1:9-11ஏசா 43:13ஏசா 45:21நீதி 21:30சங் 135:6ஏசா 44:7

முற்காலங்களிலேயே வரப்போகிறதை அறிவிக்கின்றவர்.

‘என் நோக்கம் நிலைநிற்கும்;

நான் விரும்பிய எல்லாவற்றையும் நிறைவேற்றுவேன்’ என்று நான் சொல்கிறேன்.

நான் கிழக்கிலிருந்து இரைதேடும் பறவையை அழைப்பிக்கின்றேன். எண் 23:19ஏசா 14:24-27யோபு 23:13எபே 1:11ஏசா 41:2அப் 5:39எஸ்றா 1:2ஏசா 38:15

தூரதேசத்திலிருந்து என் நோக்கத்தை நிறைவேற்றும் ஒரு மனிதனை அழைப்பிக்கின்றேன்.

நான் என்ன சொன்னேனோ அதை நிறைவேற்றுவேன்;

நான் எதைத் திட்டமிட்டேனோ அதைச் செய்வேன்.

பிடிவாத இருதயமுள்ள நீதிக்குத் தூரமானவர்களே! எரே 2:5எபே 2:13ஏசா 46:3ஏசா 28:23ஏசா 48:4நீதி 1:22-23நீதி 8:1-5சங் 119:150

எனக்குச் செவிகொடுங்கள்.

நானே எனது நீதியை அருகில் கொண்டுவருகிறேன், ஏசா 12:2ஏசா 62:11ஏசா 51:5ஏசா 61:3ஏசா 43:7ஏசா 44:231 பேது 2:62 தெச 1:10

அது வெகுதூரத்தில் இல்லை;

எனது இரட்சிப்பு தாமதம் அடையாது.

நான் சீயோனுக்கு இரட்சிப்பையும்,

இஸ்ரயேலுக்கு எனது சிறப்பையும் கொடுப்பேன்.