கள்ளத்தராசுகளை யெகோவா அருவருக்கிறார், உபா 25:13-16நீதி 16:11நீதி 20:23லேவி 19:35-36நீதி 20:10ஓசி 12:7ஆமோ 8:5-6எசேக் 45:10-12
ஆனால் சரியான நிறையுள்ள படிக்கற்கள் அவருக்கு விருப்பம்.
அகந்தை வரும்பொழுது அவமானமும் வரும்; நீதி 29:23நீதி 16:18-19லூக் 18:14நீதி 15:33நீதி 18:12நீதி 3:34-351 கொரி 8:1-2லூக் 14:8-11
ஆனால் தாழ்மையுடனோ ஞானம் வரும்.
உத்தமமானவர்களுக்கு அவர்கள் நேர்மையே வழிகாட்டும்; நீதி 28:18நீதி 13:6சங் 25:21சங் 26:1யோவா 7:17நீதி 19:3பிரச 7:17நீதி 11:5
ஆனால் துரோகிகளின் கொடூரம் அவர்களை அழிக்கிறது.
நியாயத்தீர்ப்பின் நாளில் செல்வம் பயனற்றது; செப்ப 1:18நீதி 10:2ஆதி 7:1எசேக் 7:191 தீமோ 4:8சங் 49:6-8லூக் 12:20மத் 16:26
ஆனால் நீதி மரணத்தினின்று விடுவிக்கும்.
குற்றமற்றவர்களின் நீதி அவர்களுடைய வழியை நேராக்கும்; நீதி 5:22சங் 9:15-16எஸ்த 7:3-10மத் 27:4-5நீதி 1:31-32நீதி 11:3நீதி 3:62 சாமு 17:23
ஆனால் கொடியவர்களை அவர்களுடைய கொடுமையே அழிக்கும்.
நீதிமான்களின் நீதி அவர்களை விடுவிக்கும்; பிரச 10:81 இராஜா 2:441 சாமு 12:3-4நீதி 5:22சங் 7:15-161 இராஜா 2:32-33ஆதி 30:33ஆதி 31:37
ஆனால் துரோகிகளோ தங்கள் தீய ஆசைகளில் அகப்படுவார்கள்.
கொடியவர்கள் சாகும்போது, அவர்களுடைய நம்பிக்கையும் அழியும்; நீதி 10:28யோபு 8:13-14யோபு 11:20யாத் 15:9-10லூக் 12:19-20நீதி 14:32சங் 146:4எசேக் 28:9
அவர்கள் தங்கள் பலத்தினால் எதிர்பார்த்த யாவும் ஒன்றுமில்லாமல் போகும்.
நீதிமான்கள் கஷ்டத்திலிருந்து தப்புவிக்கப்படுகிறார்கள்; தானி 6:23-24நீதி 21:18எஸ்த 7:9-10ஏசா 43:3-4
கொடியவர்கள் அதற்குப் பதிலாக கஷ்டப்படுவார்கள்.
இறைவனற்றவர்கள் தம் வார்த்தையினால் தமது அயலாரை அழிக்கிறார்கள்; நீதி 2:10-16நீதி 4:5-61 யோவா 2:271 யோவா 2:211 தீமோ 4:1-32 கொரி 11:13-152 பேது 2:1-32 பேது 3:16-18
ஆனால் நீதிமான்கள் அறிவினால் தப்பிக்கொள்கிறார்கள்.
நீதிமான்கள் செழிப்படையும்போது, பட்டணம் மகிழ்ச்சியடையும்; நீதி 28:12சங் 58:10-11எஸ்த 8:15-16நியாயாதி 5:31நீதி 28:28யாத் 15:21யோபு 27:23வெளி 19:1-7
கொடியவர்கள் அழியும்போது, அங்கே மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு உண்டாகும்.
நீதிமான்களின் ஆசீர்வாதத்தால் பட்டணம் உயர்ந்தோங்கும்; நீதி 14:34நீதி 29:8யாக் 3:62 நாளாக 32:20-22பிரச 9:15யோபு 22:302 சாமு 20:1எஸ்த 3:8-15
ஆனால் கொடியவர்களின் வார்த்தையினாலோ அது அழிந்துபோகும்.
மதியீனர்கள் தங்களுக்கு அயலாரை ஏளனம் செய்கிறார்கள்; 1 பேது 2:23நீதி 10:19லூக் 16:14லூக் 18:9நீதி 14:21சங் 123:3-41 சாமு 10:272இராஜா 18:36
ஆனால் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் தங்கள் நாவை அடக்குகிறார்கள்.
புறங்கூறித் திரிகிறவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்; நீதி 20:19லேவி 19:16நீதி 25:91 தீமோ 5:13நீதி 26:20-22யோசு 2:14எரே 38:27யோசு 2:20
ஆனால் நம்பகமானவர்கள் இரகசியத்தைக் காத்துக்கொள்வார்கள்.
ஞானமுள்ள வழிகாட்டலின்றி ஒரு நாடு வீழ்ச்சியடைகிறது, நீதி 24:6நீதி 15:22நீதி 20:18நீதி 16:221 இராஜா 12:1-19அப் 15:6-21ஏசா 19:11-14
ஆனால் அநேக ஆலோசகர்களால் வெற்றி நிச்சயமாகும்.
இன்னொருவருடைய கடனுக்கு வாக்குறுதி கொடுப்பவர் துன்பத்தை அனுபவிப்பார்கள்; நீதி 17:18நீதி 6:1-5நீதி 20:16நீதி 22:26-27
ஆனால் உறுதியளிப்பதில் கைகளை உதறித் தள்ளுகிறவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.
இரக்ககுணமுடைய பெண் நன்மதிப்பு பெறுவாள்; நீதி 31:30-31லூக் 10:42அப் 16:14-151 சாமு 25:32-33அப் 9:392 யோவா 1:12 சாமு 20:16-22எஸ்த 9:25
ஆனால் உழைக்கும் மனிதர்களோ செல்வத்தை மட்டுமே சேர்ப்பார்கள்.
இரக்கமுள்ளவர்கள் தங்களுக்கு நன்மையை உண்டாக்குகிறார்கள்; மத் 5:7யாக் 2:13மத் 25:34-402 கொரி 9:6-14தானி 4:27யாக் 5:1-5மத் 6:14-15பிலி 4:17
ஆனால் கொடூரமானவர்கள் தங்களுக்குக் கேட்டை வருவித்துக் கொள்கிறார்கள்.
கொடியவர்கள் பெறும் கூலி ஏமாற்றமாய் முடியும்; கலா 6:8-9பிரச 10:8ஓசி 10:12-13யாக் 3:18நீதி 22:8சங் 126:5-6நீதி 1:18நீதி 5:22
ஆனால் நீதியை விதைப்பவர்கள் உண்மையான பலனை அறுவடை செய்வார்கள்.
உண்மையாகவே நீதிமான்கள் வாழ்வைப் பெறுவார்கள்; நீதி 10:16நீதி 12:28நீதி 19:23ரோம 2:8-9நீதி 1:16-19நீதி 7:22-23நீதி 8:361 யோவா 3:10
ஆனால் தீமையைப் பின்பற்றுபவர்கள் மரணத்தைக் காண்பார்கள்.
யெகோவா இருதயத்தில் வஞ்சகமுள்ளோரை அருவருக்கிறார்; சங் 119:11 நாளாக 29:17நீதி 21:29சங் 140:13நீதி 6:14நீதி 8:13சங் 11:7சங் 18:25-26
ஆனால் குற்றமற்ற வழியில் நடப்போரில் அவர் மகிழ்ச்சியடைகிறார்.
இது நிச்சயம்: கொடியவர்கள் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள், சங் 112:1-2அப் 2:39எரே 32:39சங் 37:26நீதி 16:5நீதி 13:22ஆதி 17:7-8யாத் 23:2
ஆனால் நீதிமான்கள் விடுவிக்கப்படுவார்கள்.
புத்தியில்லாத பெண்ணின் அழகு 1 பேது 3:3-4நீதி 31:30நாகூ 3:4-62 பேது 2:22நீதி 7:10நீதி 9:13ஆதி 24:47எசேக் 16:15-22
பன்றியின் மூக்கிலுள்ள தங்க மூக்குத்தியைப் போன்றது.
நீதிமான்களின் ஆசை நன்மையில் முடியும், மத் 5:6சங் 37:4ரோம 2:8-9ஏசா 26:9எரே 17:16நீதி 10:28சங் 10:17சங் 119:10
ஆனால் கொடியவர்கள் நியாயத்தீர்ப்பை மட்டுமே எதிர்பார்க்க முடியும்.
ஒருவர் தாராளமாய்க் கொடுத்தும், இன்னும் அதிகமாய் பெற்றுக்கொள்கிறார்; நீதி 19:17லூக் 6:38உபா 15:10சங் 112:9பிரச 11:6ஆகா 1:6ஆகா 1:9-112 கொரி 9:5-11
இன்னொருவர் தேவைக்கதிகமாய் வைத்துக்கொண்டும் வறுமை அடைகிறார்.
தாராள குணம் உள்ளவர்கள் செழிப்படைவார்கள்; மத் 5:72 கொரி 9:6-9ஏசா 58:7-11மத் 25:34-35ஏசா 32:8நீதி 28:27யோபு 29:13-18யோபு 31:16-20
மற்றவர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறவர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும்.
தானியத்தைத் தனக்கென்று பதுக்கிவைக்கும் மனிதரை மக்கள் சபிப்பார்கள்; ஆதி 42:6யோபு 29:13ஆமோ 8:4-6நீதி 24:24
ஆனால் அவற்றை விற்க மனதுடையவர்களை மக்கள் ஆசீர்வதிப்பார்கள்.
நன்மையைத் தேடுகிறவர்கள் தயவைப் பெறுவார்கள்; சங் 7:15-16நீதி 17:11எஸ்த 7:10சங் 57:6சங் 9:15-16சங் 10:2
தீமையைத் தேடுகிறவர்களுக்கோ தீமையே வரும்.
தனது செல்வத்தை நம்பியிருக்கிறவர்கள் வீழ்ந்து போவார்கள், 1 தீமோ 6:17எரே 17:8சங் 52:7-8சங் 1:3மாற் 10:24-25சங் 62:10சங் 92:12-14உபா 8:12-14
ஆனால் நீதிமான்கள் பசுந்தளிரைப்போல் செழிப்பார்கள்.
தனது குடும்பத்திற்கு துன்பத்தைக் கொண்டுவருபவர்கள், வெறும் காற்றையே சுதந்தரிப்பார்கள்; பிரச 5:16நீதி 14:19ஆப 2:9-10நீதி 15:271 சாமு 25:171 சாமு 25:31 சாமு 25:38ஆதி 34:30
மூடர்களோ ஞானிக்கு வேலைக்காரர்களாய் இருப்பார்கள்.
நீதிமான்களின் பலனோ வாழ்வுதரும் மரம், தானி 12:3யாக் 5:201 கொரி 9:19-231 தெச 2:19நீதி 3:18யோவா 4:36லூக் 5:9-10மத் 4:19
ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துகிறவர்கள் ஞானமுள்ளவர்கள்.
நீதிமான்கள் தங்கள் வெகுமதியைப் பூமியில் பெறுவார்களானால், 1 பேது 4:17-18எரே 25:291 கொரி 11:30-322 சாமு 12:9-12நீதி 13:212 சாமு 7:14-151 இராஜா 13:24
இறை பக்தியற்றவர்களும் பாவிகளும் தங்களுக்குரிய தண்டனையைப் பெறுவது எவ்வளவு நிச்சயம்!