நீதிமொழிகள் 7

Proverbs 7

விபசாரியைக் குறித்த எச்சரிக்கை

என் மகனே, என் வார்த்தைகளைக் கைக்கொள், நீதி 1:8லூக் 11:28வெளி 1:3யோவா 14:23நீதி 2:1-7வெளி 22:9யோவா 15:20யோபு 22:22

என் கட்டளைகளை உனக்குள்ளே பெருஞ்செல்வமாக வைத்துக்கொள்.

என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி, அப்பொழுது நீ வாழ்வடைவாய்; சங் 17:81 யோவா 2:3-4லேவி 18:5நீதி 4:41 யோவா 5:1-3யோவா 14:21உபா 32:10ஏசா 55:3

என் போதனைகளை உன் கண்மணியைப்போல் காத்துக்கொள்.

அவற்றை உன் விரல்களில் நினைவூட்டலாகக் கட்டி, உபா 11:18-20நீதி 3:3உபா 6:8-9எரே 31:332 கொரி 3:3ஏசா 30:8நீதி 6:21எரே 17:1

இருதயத்தில் எழுதி வைத்துக்கொள்.

ஞானத்தை நோக்கி, “நீ என் சகோதரி” என்றும், நீதி 2:2-4நீதி 4:6-8யோபு 17:14உன்னத 8:1லூக் 11:27-28மத் 12:49-50

மெய்யறிவை, “நீ என் நெருங்கிய உறவினர்” என்றும் சொல்.

அவை உன்னை விபசாரியிடமிருந்தும், நீதி 2:16நீதி 6:24நீதி 5:3

மயக்கும் வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும் உன்னைக் காத்துக்கொள்ளும்.

நான் என் வீட்டின் ஜன்னல் அருகே நின்று ஆதி 26:8நியாயாதி 5:282 சாமு 6:16

திரை வழியேப் பார்த்தேன்.

அப்பொழுது அறிவில்லாத நீதி 6:32நீதி 1:22எரே 4:22மத் 15:16நீதி 1:32நீதி 1:4நீதி 10:13நீதி 8:5

இளைஞர்கள் மத்தியில் புத்தியற்ற

ஒரு வாலிபனைக் கண்டேன்.

அவன் அந்த விபசாரி இருக்கும் தெருமுனைக்குச் சென்று, 1 கொரி 6:182 சாமு 11:2-32 தீமோ 2:22நியாயாதி 16:1யூதா 1:23நீதி 4:14-15நீதி 5:8நீதி 7:12

அவளுடைய வீட்டின் வழியே நடந்துபோனான்.

அது பொழுதுபட்டு மாலைமங்கி யோபு 24:13-15ரோம 13:12-14எபே 5:11ஆதி 39:11யாத் 12:6

இருள் சூழ்ந்துகொண்டிருந்த வேளையாயிருந்தது.

அப்பொழுது ஒரு பெண் வேசியின் உடை உடுத்தியவளாய், 1 தீமோ 2:92 கொரி 11:2-3ஏசா 3:16-242இராஜா 9:30எரே 4:302இராஜா 9:22ஆதி 38:14-15ஏசா 23:16

தந்திரமான எண்ணத்தோடு அவனைச் சந்திக்க வெளியே வந்தாள்.

அவள் வாயாடியும் அடக்கமில்லாதவளுமாய் இருந்தாள்; நீதி 9:13தீத் 2:51 தீமோ 5:13-14நீதி 31:10-31ஆதி 18:9நீதி 25:24நீதி 27:14-15

அவள் கால்கள் ஒருபோதும் வீட்டில் தங்குவதில்லை.

அவள் ஒருமுறை வீதியிலும் பின்பு பொது இடங்களிலும் நிற்பாள், நீதி 23:28நீதி 9:14வெளி 18:3எசேக் 16:24-25எசேக் 16:31எரே 2:20எரே 2:33எரே 2:36

மூலையோரங்களில் பதுங்கிக் காத்திருப்பாள்.

அவள் அவனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு, ஆதி 39:12எண் 25:6-8எசேக் 16:33எசேக் 2:4எசேக் 2:6எசேக் 3:7-9ஆதி 39:7ஏசா 50:7

நாணமில்லாத முகத்துடனே அவனிடம்:

“நான் என் வீட்டில் சமாதான பலிகளைச் செலுத்தி, நீதி 21:27லேவி 7:11உபா 12:6-7யோவா 18:28நீதி 15:8நீதி 17:11 இராஜா 21:9-102 சாமு 15:7-9

இன்று என் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினேன்.

அதினால் நான் உம்மைச் சந்திக்க வெளியே வந்தேன்;

நான் உம்மைத் தேடினேன், இப்பொழுது கண்டுகொண்டேன்.

நான் எகிப்தின் பலவர்ண மென்பட்டுத் துணியை விரித்து ஏசா 19:9எசேக் 27:71 இராஜா 10:28நீதி 31:22வெளி 2:22உன்னத 3:7-10உன்னத 1:16

எனது கட்டிலை அழகுபடுத்தியிருக்கிறேன்.

நான் வெள்ளைப் போளத்தினாலும், சந்தனத்தினாலும், சங் 45:8ஏசா 57:7-9யாத் 30:23உன்னத 3:6உன்னத 4:13-14

இலவங்கப் பட்டையாலும் என் படுக்கைக்கு நறுமணமூட்டியிருக்கிறேன்.

வாரும், நாம் காலைவரை ஆழ்ந்த காதலில் மூழ்கியிருப்போம்;

நாம் இன்பத்தில் மகிழ்ந்திருப்போம்!

எனது கணவன் வீட்டில் இல்லை; லூக் 12:45-46மத் 20:11லூக் 12:39மத் 24:43மத் 24:48மாற் 13:34-36

அவன் நீண்டதூரப் பிரயாணமாய் போய்விட்டான்.

அவன் தனது பையில் பணத்தை நிரப்பிக்கொண்டு போனான், 2 நாளாக 2:4

அவன் பெளர்ணமி நாள்வரை வீட்டிற்கு வரமாட்டான்” என்று சொன்னாள்.

இவ்வாறு அவள் தனது வசப்படுத்தும் வார்த்தையினால் அவனை மயக்கி, நீதி 5:3நீதி 7:52இராஜா 4:8லூக் 24:29சங் 12:22 கொரி 5:14நியாயாதி 16:15-17நீதி 6:24

அவள் தன் மிருதுவான பேச்சினால் அவனை தவறிழைக்கத் தூண்டினாள்.

உடனேயே அவன் அவளுக்குப் பின்னே போனான்; யோபு 13:27அப் 14:13அப் 16:24எரே 20:2

வெட்டுவதற்காகக் கொண்டுபோகப்படும் மாட்டைப்போலவும்

வலையில் விழப்போகும் மானைப்போலவும்

தானாய் கண்ணிக்குள் பிடிபடும் பறவையைப் போலவும் அவன் போனான்; பிரச 9:12நீதி 9:18எண் 25:8-9நீதி 1:17

அது அம்பினால் தனது நெஞ்சைப் பிளந்து

உயிரையே வாங்கிவிடும் என அறியாமல் போனான்.

ஆகையால் என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; நீதி 5:7நீதி 4:11 யோவா 2:1கலா 4:19நீதி 8:32-331 கொரி 4:14-15

நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.

உங்கள் இருதயத்தை அவளுடைய வழிகளின் பக்கம் திரும்ப விடவேண்டாம்; நீதி 5:8ஏசா 53:6நீதி 6:25மத் 5:28நீதி 23:31-33நீதி 4:14-15நீதி 5:23சங் 119:176

அவளுடைய பாதைகளின் பக்கம் இழுப்புண்டு போகாதீர்கள்.

அவளால் வீழ்த்தப்பட்டுப் பலியானவர்கள் அநேகர்; 1 பேது 2:11நெகே 13:261 கொரி 10:81 இராஜா 11:1-2நீதி 6:332 கொரி 12:212 சாமு 12:9-112 சாமு 3:27

அவளால் கொல்லப்பட்டவர்கள் வலிமையான கூட்டம்.

அவளுடைய வீடு பாதாளத்திற்குப் போகும் பெரும்பாதை; நீதி 5:5நீதி 9:18நீதி 2:18-19வெளி 22:15பிரச 7:26

அது மரணத்தின் மண்டபங்களுக்கு வழிநடத்துகிறது.