அப்போஸ்தலருடைய நடபடிகள் 16

Acts 16

பவுல் சீலாவுடன் தீமோத்தேயு சேர்தல்

பவுல் தெர்பைக்கு வந்து, பின்பு லீஸ்திராவுக்குப் போனான். அங்கே தீமோத்தேயு என்னும் பெயருடைய ஒரு சீடன் இருந்தான். அவனுடைய தாய் விசுவாசியான ஒரு யூதப் பெண், ஆனால் அவனுடைய தகப்பனோ ஒரு கிரேக்கன். 2 தீமோ 1:51 கொரி 4:171 தெச 3:21 தீமோ 1:22 தீமோ 1:2அப் 17:14அப் 18:52 தெச 1:1 தீமோத்தேயு லீஸ்திராவிலும் இக்கோனியாவிலும் இருந்த விசுவாசிகளாலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான். 1 தீமோ 5:102 தீமோ 3:151 தீமோ 3:72 தீமோ 3:11அப் 13:51அப் 14:21அப் 16:40அப் 6:3 பவுல் அந்தப் பயணத்திலே தீமோத்தேயுவையும் தன்னுடன் கூட்டிக்கொண்டுபோக விரும்பினான். ஆனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த யூதர்களின் நிமித்தம், அவனுக்கு விருத்தசேதனம் செய்வித்தான். ஏனெனில் அவர்கள் அனைவரும் அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்பதை அறிந்திருந்தார்கள். கலா 2:31 கொரி 9:20கலா 5:6கலா 5:1-31 கொரி 7:19அப் 15:20அப் 15:40கலா 2:8 அவர்கள் பட்டணங்கள்தோறும் பிரயாணம் செய்து, எருசலேமிலிருந்த அப்போஸ்தலரும் சபைத்தலைவர்களும் எடுத்த தீர்மானங்களை, அங்குள்ளவர்கள் கைக்கொள்ளுவதற்காக அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அப் 15:28-29அப் 15:2அப் 11:30அப் 15:6 இதனால் திருச்சபைகள் விசுவாசத்தில் பெலமடைந்து, நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகின. அப் 9:31அப் 2:47அப் 6:71 பேது 5:10அப் 15:41எபே 4:13-161 கொரி 15:58அப் 12:24

மக்கெதோனியா மனிதனைக்குறித்த பவுலின் தரிசனம்

பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் பிரிகியா, கலாத்தியா நாடுகள் கடந்து பயணம் செய்தார்கள்; ஏனெனில் ஆசியா பகுதியிலே வார்த்தையை அறிவிக்காதவாறு பரிசுத்த ஆவியானவர் அவர்களைத் தடை பண்ணியிருந்தார். அப் 18:23அப் 16:7அப் 11:12அப் 13:2-4கலா 1:21 பேது 1:12 தீமோ 4:10அப் 19:10 அவர்கள் மீசியாவின் எல்லைப் புறமாய் வந்தபோது, அவர்கள் பித்தினியாவுக்குப் போக முயற்சிசெய்தார்கள். ஆனால் இயேசுவின் ஆவியானவரோ அவர்களை அங்கேயும் செல்ல அனுமதிக்கவில்லை. கலா 4:6பிலி 1:19அப் 8:29ரோம 8:91 பேது 1:11 பேது 1:11 எனவே அவர்கள் மீசியாவைக் கடந்து, துரோவா பட்டணத்திற்குச் சென்றார்கள். 2 கொரி 2:122 தீமோ 4:13அப் 16:11அப் 20:5 அந்த இரவிலே, பவுல் ஒரு தரிசனம் கண்டான். அதிலே மக்கெதோனியாவைச் சேர்ந்த ஒரு மனிதன் அவனைப் பார்த்து, “மக்கெதோனியாவுக்கு வந்து, எங்களுக்கு உதவிசெய்யும்” என்று கெஞ்சிக்கேட்டான். அப் 18:5அப் 19:21அப் 9:10-12அப் 18:9-10அப் 20:1ரோம 10:14-15ரோம 15:261 தெச 1:7-8 பவுல் இந்த தரிசனத்தைக் கண்டபின்பு, நாங்கள் உடனே மக்கெதோனியாவுக்குப் போக ஆயத்தமானோம். ஏனெனில், இறைவன் அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க, எங்களை அழைத்தார் என்று நாங்கள் தீர்மானித்தோம். 2 கொரி 2:12-13அப் 14:7அப் 10:29அப் 16:10-17அப் 20:13-15அப் 20:5-8அப் 21:1-18அப் 26:13

லீதியாள் மனந்திரும்புதல்

துரோவாவிலிருந்து நாங்கள் கப்பலில் புறப்பட்டு, நேரே சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாள் நெயாப்போலிக்குப் போனோம். அப் 21:1அப் 16:8 அங்கிருந்து ரோமருடைய குடியேற்ற இடமான பிலிப்பி பட்டணத்திற்குப் பயணமானோம். அது மக்கெதோனியா பகுதியின் தலைமைப் பட்டணமாக இருந்தது. நாங்கள் அங்கே பல நாட்கள் தங்கியிருந்தோம். 1 தெச 2:2பிலி 1:1அப் 20:6அப் 16:21அப் 16:9

ஓய்வுநாளிலே, நாங்கள் பட்டணத்துக்கு வெளியே ஆற்றங்கரைக்குப் போனோம். அங்கே மன்றாடுவதற்கான ஒரு இடம் இருக்குமென்று எதிர்ப்பார்த்து நாங்கள் உட்கார்ந்து, அங்கே கூடியிருந்த பெண்களுடன் பேசத் தொடங்கினோம். அப் 13:14அப் 18:4அப் 21:5கொலோ 1:23அப் 13:42அப் 16:6அப் 17:2அப் 20:7 நாங்கள் சொன்னதை லீதியாள் என்னும் பெயருடைய ஒரு பெண் கேட்டுக்கொண்டிருந்தாள். தியத்தீரா ஊரைச்சேர்ந்த அவள், செம்பட்டுத் துணி விற்கிறவள். அவள் இறைவனை வழிபட்டு வந்தாள். பவுலின் செய்தியை ஏற்றுக்கொள்வதற்கு கர்த்தர் அவளின் இருதயத்தைத் திறந்தார். லூக் 24:45எபே 1:17-18ஏசா 50:5யோவா 6:44-45வெளி 3:202 கொரி 3:14-162 கொரி 4:4-6ரோம 9:16 லிதியாளும் அவளுடைய குடும்பத்தார் அனைவரும் திருமுழுக்கு பெற்றபின், அவள் எங்களைத் தனது வீட்டுக்கு அழைத்தாள். “நான் கர்த்தரின் விசுவாசி என்று நீங்கள் எண்ணினால், நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து தங்குங்கள்” என்று சொல்லி, எங்களை வற்புறுத்தினாள். அப் 11:14எபி 13:2அப் 16:33ஆதி 19:3லூக் 24:291 கொரி 1:13-161 பேது 5:123 யோவா 1:5

சிறையில் பவுலும் சீலாவும்

ஒருமுறை, நாங்கள் மன்றாடும் இடத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, நாங்கள் ஒரு அடிமைப் பெண்ணைச் சந்தித்தோம். அவளிலே ஒரு தீய ஆவி இருந்தது. அவள் அந்த ஆவியைக் கொண்டு, எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னறிவித்தாள். அவள் இவ்வாறு குறிசொல்வதன் மூலம் தனது எஜமானர்களுக்குப் பெருந்தொகைப் பணத்தைச் சம்பாதித்துக் கொடுத்துக்கொண்டிருந்தாள். லேவி 19:31உபா 18:9-11ஏசா 8:191 நாளாக 10:131 சாமு 28:71 தீமோ 6:10கலா 5:20அப் 16:18 இந்தப் பெண் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து, “இந்த மனிதர் மகா உன்னதமான இறைவனின் ஊழியர்கள்; இவர்கள் உங்களுக்கு இரட்சிக்கப்படுவதற்கான வழியை அறிவிக்கிறார்கள்” என்று சத்தமிடுவாள். யோவா 14:61 பேது 2:16மாற் 5:7தானி 6:20தானி 3:26தானி 3:28யோனா 1:9லூக் 1:79 அவள் இப்படி பல நாட்களாய்ச் செய்துகொண்டிருந்தாள். கடைசியாக பவுல் மிகவும் சலிப்படைந்து, அந்த தீய ஆவியிடம், “இயேசுகிறிஸ்துவின் பெயரிலே நான் உனக்குக் கட்டளையிடுகிறேன், நீ இவளை விட்டு வெளியே வா!” என்றான். அந்த வினாடியே அந்தத் தீய ஆவி அவளைவிட்டு வெளியே வந்தது. மாற் 16:17லூக் 10:17-19அப் 19:12-17அப் 3:6அப் 9:34மாற் 1:34மாற் 9:25-26கொலோ 2:15

அந்த அடிமைப் பெண்ணுடைய எஜமானர், பணம் சம்பாதிக்கும் தங்கள் எதிர்பார்ப்பு போய்விட்டது என்று அறிந்தபோது, அவர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைகூடும் இடத்தில் அதிகாரிகளிடம் இழுத்துக்கொண்டு வந்தார்கள். அப் 17:6அப் 21:302 கொரி 6:5அப் 16:16அப் 18:12-13அப் 8:3அப் 14:19அப் 14:5 அவர்கள் இவர்களை தலைமை நீதிபதிகளுக்கு முன்பாகக் கொண்டுவந்து, “இவர்கள் யூதர்கள், இந்த மனிதர் நமது பட்டணத்தில் குழப்பம் உண்டாக்குகிறார்கள், யாக் 4:4அப் 28:22யோவா 15:18-20ரோம 12:21 இராஜா 18:17-18அப் 17:6-8அப் 18:2அப் 19:34 ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவோ, நடைமுறைப்படுத்தவோ முடியாத, சட்டத்திற்கு முரணான முறைமைகளை இவர்கள் போதிக்கிறார்கள்” என்றார்கள். எஸ்த 3:8அப் 16:12அப் 26:3எரே 10:3

அப்பொழுது கூடியிருந்தவர்கள், பவுலையும் சீலாவையும் தாக்கத் தொடங்கினார்கள். தலைமை நீதிபதிகள் இவர்களுடைய உடைகளைக் கழற்றி, இவர்களை அடிக்கும்படி உத்தரவிட்டார்கள். 1 தெச 2:22 கொரி 6:52 கொரி 11:23-25அப் 22:22-26எபி 11:361 பேது 2:24அப் 16:37அப் 17:5 அவர்கள் சவுக்கினால் கடுமையாக அடித்தபின், சிறையில் போட்டார்கள். சிறைக்காவலனிடம், இவர்களைக் கவனமாய் காவல் செய்யும்படியும் உத்தரவிட்டார்கள். வெளி 2:102 தீமோ 2:91 சாமு 23:22-23மத் 27:63-66அப் 12:18அப் 12:4அப் 16:27அப் 16:36 இக்கட்டளைகளைப் பெற்றபோது, அந்தச் சிறைக்காவலன் இவர்களை உட்சிறையில் போட்டு, இவர்களுடைய கால்களை மர சங்கிலியினால் மாட்டிவைத்தான். யோபு 13:27யோபு 33:11எரே 29:26எரே 38:261 இராஜா 22:272 நாளாக 16:10எரே 20:2-3எரே 37:15-16

கிட்டத்தட்ட நடு இரவில் பவுலும் சீலாவும் மன்றாடிக்கொண்டும், இறைவனுக்குப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தார்கள். மற்ற சிறைக் கைதிகள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 1 தெச 5:16-18சங் 119:62யாக் 1:2ரோம 5:31 பேது 1:6-8பிலி 4:4-7சங் 77:6எபி 5:7 திடீரென ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. அதனால் அந்தச் சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசைந்தன. அப்பொழுது சிறைச்சாலைக் கதவுகள் எல்லாம் திறவுண்டன. சிறையிலிருந்த ஒவ்வொருவரையும் கட்டியிருந்த சங்கிலிகள் கழன்று விழுந்தன. அப் 4:31அப் 5:19அப் 12:10அப் 12:7சங் 146:7மத் 28:2ஏசா 42:7சங் 102:20 சிறைக்காவலன் எழுந்திருந்து, சிறைச்சாலைக் கதவுகள் திறந்து கிடந்ததைக் கண்டபோது, அவன் தன் வாளை உருவித், தற்கொலைசெய்ய முயன்றான். ஏனெனில், சிறைக் கைதிகள் தப்பியோடிவிட்டார்கள் என்று அவன் நினைத்தான். அப் 12:191 இராஜா 16:181 சாமு 31:4-52 சாமு 17:23நியாயாதி 9:54மத் 27:5அப் 16:23-24 ஆனால் பவுல் சத்தமிட்டு அவனிடம், “நீ உனக்குத் தீங்கு செய்யாதே! நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்” என்றான். 1 தெச 5:15லூக் 23:34லூக் 6:27-28பிரச 7:17யாத் 20:13லூக் 10:32-37மத் 5:44லேவி 19:18

அந்தச் சிறைக்காவலன் விளக்கைக் கொண்டுவரச்செய்து, உள்ளே விரைந்து ஓடினான். அவன் நடுங்கிக்கொண்டு பவுலுக்கும், சீலாவுக்கும் முன்பாக விழுந்தான். வெளி 3:9தானி 6:26எரே 10:10அப் 24:25அப் 9:5-6ஏசா 60:14ஏசா 66:2ஏசா 66:5 அவன் அவர்களை வெளியே கொண்டுவந்து, “ஐயாமாரே, நான் இரட்சிக்கப்பட என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். அப் 2:37யோவா 6:27-29அப் 22:10லூக் 3:10அப் 14:15ஏசா 58:9யாக் 2:13மத் 3:8

அதற்கு அவர்கள், “கர்த்தராகிய இயேசுவை விசுவாசி, நீ இரட்சிக்கப்படுவாய். நீயும், உனது குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்றார்கள். யோவா 1:12யோவா 3:36அப் 2:38-39ரோம 10:9-10அப் 11:13-14மாற் 16:16கலா 3:26ஏசா 45:22 பின்பு அவர்கள் அவனுக்கும், அவனுடைய வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வார்த்தையைச் சொன்னார்கள். கொலோ 1:27-28ரோம 1:161 தெச 2:81 தீமோ 1:13-16அப் 10:33-43எபே 3:8மாற் 16:15ரோம 1:14 அந்த இரவு வேளையிலேயே அந்தச் சிறைக்காவலன் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான்; பின்பு உடனே, அவனும் அவனுடைய குடும்பத்தார் யாவரும் திருமுழுக்குப் பெற்றார்கள். 1 கொரி 1:16அப் 16:15அப் 16:25லூக் 10:33-34அப் 16:23கலா 5:13கலா 5:6ஏசா 11:6-9 அந்தச் சிறைக்காவலன் அவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று, அவர்களுக்கு உணவு கொடுத்தான்; அவன் தானும், தன்னுடைய குடும்பத்தார் அனைவரும், இறைவனில் விசுவாசம் வைத்ததைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தான். ரோம 15:13அப் 2:46அப் 11:14அப் 8:39ஏசா 12:1-3ஏசா 55:12ஏசா 58:7-11ஏசா 61:10

பொழுது விடிந்ததும், தலைமை நீதிபதிகள், “அவர்களை விட்டுவிடுங்கள்” என்ற உத்தரவுடன், அதிகாரிகளைச் சிறைக்காவலனிடம் அனுப்பினார்கள். அப் 5:40அப் 4:21எரே 5:22சங் 76:10 சிறைக்காவலன் பவுலிடம், “தலைமை நீதிபதிகள் உங்களை விடுதலையாக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்கள். நீயும் சீலாவும் வெளியே சமாதானத்துடன் போங்கள்” என்றான். அப் 15:33யோவா 14:271 சாமு 1:171 சாமு 20:421 சாமு 25:351 சாமு 29:72இராஜா 5:19அப் 16:27

ஆனால் பவுல் அந்த அதிகாரிகளிடம்: “நாங்கள் ரோம குடிமக்களாய் இருந்தபோதும், எவ்விதக் குற்ற விசாரணையும் இல்லாமல், எங்களை பொதுமக்கள் முன்பாக அடித்துச் சிறையில் போட்டார்கள். இப்பொழுது இரகசியமாய் அவர்கள் எங்களை விடுதலையாக்கப் போகிறார்களோ? இல்லை! அவர்களே வந்து எங்களை வெளியே கூட்டிக்கொண்டுபோய் விடட்டும்” என்றான். அப் 22:25-29அப் 16:20-24தானி 3:25-26மத் 10:16நீதி 28:1சங் 58:1-2சங் 94:20தானி 6:18-19

அந்த அதிகாரிகள், இதைத் தலைமை நீதிபதிகளுக்கு அறிவித்தார்கள். பவுலும் சீலாவும் ரோம குடிமக்கள் எனக் கேள்விப்பட்டபோது, அவர்கள் மிகவும் பயந்தார்கள். அப் 22:29மத் 14:5மத் 21:46 எனவே தலைமை நீதிபதிகள் இவர்களை சமாளிப்பதற்காக வந்து, இவர்களைச் சிறையிலிருந்து வெளியே கூட்டிக்கொண்டுபோய், பட்டணத்தைவிட்டுப் போகும்படி கேட்டுக்கொண்டார்கள். மத் 8:34தானி 6:23மாற் 5:17தானி 6:16யாத் 11:8ஏசா 45:14ஏசா 49:23ஏசா 60:14 எனவே பவுலும் சீலாவும் சிறையைவிட்டு வெளியே வந்து, லீதியாளின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் சகோதரர்களைச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். பின்பு அவ்விடத்தைவிட்டுச் சென்றார்கள். 1 தெச 3:2-3அப் 14:22அப் 16:142 கொரி 1:3-72 கொரி 4:16-182 கொரி 4:8-12அப் 12:12-17அப் 4:23