நீதிமொழிகள் 12

Proverbs 12

அறிவுரையை விரும்புகிறவர் அறிவை விரும்புகிறார்கள், நீதி 15:10நீதி 9:7-8சங் 119:97-100நீதி 18:1நீதி 5:12-13நீதி 8:17சங் 32:9சங் 92:6

ஆனால் கண்டித்துத் திருத்தப்படுவதை வெறுப்பவர்களோ மூடர்கள்.

நல்ல மனிதன் யெகோவாவிடமிருந்து தயவு பெறுகிறார், நீதி 8:35அப் 11:24சங் 112:5ரோம 5:7ஏசா 32:5-7நீதி 1:31பிரச 8:8நீதி 6:18

ஆனால் தீயதை திட்டமிடுபவர்களையோ அவர் கண்டிக்கிறார்.

தீமையினால் ஒருவரும் நிலைக்கமாட்டார்கள், நீதி 10:25எபே 3:17கொலோ 2:7நீதி 12:12யோபு 27:16-18சங் 125:1-2யோபு 5:3-5சங் 15:5

நீதிமான்களுடைய வேரையோ பிடுங்க முடியாது.

நற்குணமுள்ள மனைவி தன் கணவனுக்கு மகுடமாயிருப்பாள்; நீதி 31:10-25நீதி 14:1நீதி 14:30நீதி 19:13-141 கொரி 11:11நீதி 21:19நீதி 21:9நீதி 27:15-16

ஆனால் அவமானத்தைக் கொண்டுவரும் மனைவியோ, அவனுக்கு எலும்புருக்கி போலிருக்கிறாள்.

நீதிமான்களின் திட்டங்கள் நியாயமானவை, சங் 139:23ஏசா 55:7எரே 4:14சங் 140:1-3சங் 41:6-71 கொரி 4:52 கொரி 4:2மத் 2:16

ஆனால் கொடியவர்களின் ஆலோசனைகளோ வஞ்சனையானவை.

கொடியவர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்துவதற்கு பதுங்கிக் காத்திருக்கின்றன, நீதி 14:3எரே 5:26ஏசா 59:7நீதி 1:11-192 சாமு 17:1-4அப் 23:12அப் 23:15எஸ்த 4:7-14

ஆனால் நீதிமான்களின் சொற்களோ அவர்களைத் தப்புவிக்கும்.

கொடியவர்கள் வீழ்த்தப்பட்டு இல்லாமல் போவார்கள், மத் 7:24-27நீதி 10:25நீதி 11:212 சாமு 7:162 சாமு 7:26எஸ்த 9:14எஸ்த 9:6-10யோபு 11:20

ஆனால் நீதிமான்களின் குடும்பமோ உறுதியாய் நிலைத்திருக்கும்.

ஒரு மனிதர் அவருடைய விவேகத்திற்குத் தக்கதாகப் புகழப்படுவார், 2 கொரி 10:18நீதி 3:351 கொரி 3:10-151 கொரி 4:5மல்கி 2:8-9மத் 27:4-5அப் 12:23தானி 12:2

ஆனால் சீர்கெட்ட சிந்தையுள்ளவரோ அலட்சியம் செய்யப்படுவார்.

உணவு இல்லாமல் இருந்தும் வெளியே தன்னைப் பெரிய ஆளாக காட்டுவதைவிட, லூக் 14:11நீதி 13:7

வேலைக்காரனாக உழைத்து சாதாரணமான நபராக இருப்பதே மேல்.

நீதிமான்கள் தங்கள் மிருகங்களின் தேவையிலும் கரிசனையாய் இருக்கிறார்கள்; உபா 25:4ஆதி 33:13-14எண் 22:28-32யாக் 2:13-161 யோவா 3:171 சாமு 11:2ஆதி 37:26-28நியாயாதி 1:7

ஆனால் கொடியவர்களின் தயவான செயல்களும் கொடூரமானவை.

தங்கள் நிலத்தைப் பண்படுத்தி பயிரிடுகிறவர்களுக்கு நிறைவான உணவு கிடைக்கும், நீதி 28:19நீதி 14:231 தெச 4:11-12சங் 128:2எபே 4:282 தெச 3:8நீதி 9:6நீதி 14:4

ஆனால் பகற்கனவு காண்பதில் நேரத்தை செலவிடுபவர்கள் மதியீனர்கள்.

தீயவர்களின் கொள்ளைப்பொருளுக்கு கொடியவர்கள் ஆசைப்படுகிறார்கள்; எரே 17:7-8யோவா 15:5லூக் 8:13-15நீதி 29:5-6சங் 1:3ஏசா 27:6ஏசா 37:31யோவா 15:16

ஆனால் நீதிமான்களின் வேரோ நிலைநிற்கும்.

தீயவர் தங்களுடைய பாவப் பேச்சுக்களினால் அகப்பட்டுக் கொள்கிறார்கள், நீதி 21:23நீதி 11:8சங் 64:8தானி 6:24நீதி 6:22 பேது 2:9பிரச 7:18நீதி 18:6-7

ஆனால் நீதிமான்கள் துன்பத்திற்குத் தப்புகிறார்கள்.

ஒருவருடைய பேச்சினால் அவருக்கு நன்மையும், நீதி 18:20-21ஏசா 3:10-11நீதி 13:2சங் 63:5மத் 10:41-42நீதி 15:232 தெச 1:6-7மத் 16:27

அவருடைய கைவேலையினால் பலனும் பெறுகிறார்.

மூடருடைய வழி அவர்களுக்கு சரியானதாகவே காணப்படும், நீதி 3:7நீதி 14:16நீதி 19:20நீதி 26:12நீதி 14:12நீதி 16:2நீதி 16:25கலா 6:3

ஆனால் ஞானமுள்ளவர்கள் ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறார்கள்.

மூடர்கள் கோபத்தை உடனடியாக வெளிக்காட்டுவார்கள், நீதி 29:11யாக் 1:19நீதி 10:12நீதி 17:9நீதி 25:28நீதி 14:33நீதி 16:221 இராஜா 19:1-2

ஆனால் விவேகிகள் ஏளனத்தைப் பொருட்படுத்தமாட்டார்கள்.

நேர்மையான சாட்சி உண்மையை சொல்கிறார்கள்; நீதி 14:25நீதி 14:5நீதி 24:28நீதி 6:19மத் 15:19நீதி 19:28நீதி 19:5நீதி 21:28

ஆனால் பொய்ச்சாட்சி பொய்களையே சொல்கிறார்கள்.

முன்யோசனையற்ற வார்த்தைகள் வாளைப்போல் குத்தும், நீதி 16:24நீதி 15:4நீதி 10:20-21சங் 57:4யாக் 3:6-8சங் 52:2நீதி 15:7நீதி 25:18

ஆனால் ஞானமுள்ளவர்களின் நாவு சுகப்படுத்தும்.

உண்மைபேசும் உதடுகள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும், நீதி 19:9சங் 52:4-5யோபு 20:5சகரி 1:4-6அப் 5:3-10மத் 24:35

ஆனால் பொய்பேசும் நாவு சொற்ப நேரமே நிலைக்கும்.

தீமையான சூழ்ச்சி செய்வோரின் இருதயங்களில் வஞ்சனை உண்டு, மத் 5:91 பேது 3:8-13மாற் 7:21-22எபி 12:14எரே 17:16நீதி 12:12நீதி 26:24-26சகரி 6:13

ஆனால் சமாதானத்திற்காக முயற்சிப்பவர்களுக்கு மகிழ்ச்சி உண்டு.

நீதிமான்களுக்கு ஒரு தீங்கும் நேரிடாது, 1 பேது 3:13சங் 91:10ரோம 8:28எரே 13:12-14நீதி 1:311 கொரி 3:22-23ஆப 2:16நீதி 14:14

ஆனால் கொடியவர்கள் தொல்லையினால் நிரப்பப்படுவார்கள்.

பொய்பேசும் உதடுகளை யெகோவா அருவருக்கிறார், சங் 5:6நீதி 11:20நீதி 6:16-17வெளி 22:15எரே 9:24ஏசா 9:15நீதி 11:1எசேக் 13:22

ஆனால் உண்மையானவர்களில் அவர் மகிழ்வார்.

விவேகமுள்ள மனிதர்கள் தன் அறிவைத் தனக்குள்ளே வைத்திருக்கிறார்கள்; நீதி 13:16நீதி 10:19நீதி 11:13நீதி 10:14நீதி 15:2பிரச 10:12-14பிரச 10:3

ஆனால் மூடர்களின் இருதயமோ மூடத்தனத்தை வெளிப்படுத்தும்.

சுறுசுறுப்பான கைகள் ஆட்சிசெய்யும்; நீதி 12:27நீதி 10:4நீதி 21:25-26நீதி 13:4நீதி 19:15நீதி 22:291 இராஜா 11:28ஆதி 49:15

ஆனால் சோம்பற்தனமோ அடிமை வேலையிலேயே முடியும்.

கவலை ஒருவருடைய உள்ளத்தை சோர்வடையச் செய்யும், நீதி 16:24நீதி 15:13நீதி 17:22ஏசா 50:4நீதி 15:23நீதி 12:18நீதி 27:9சங் 42:11

ஆனால் தயவான வார்த்தை உற்சாகப்படுத்தும்.

நீதிமான்கள் தங்கள் நட்பில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்; 1 யோவா 2:26யாக் 1:13-14மத் 5:46-48நீதி 17:27சங் 18:12-132 பேது 2:18-22லூக் 6:32-36நீதி 12:13

ஆனால் கொடியவர்களின் வழியோ அவர்களை வழிதவறச் செய்யும்.

சோம்பேறிகள் தாங்கள் வேட்டையாடிய இறைச்சியை சமைக்காமல் இருக்கிறார்கள்; நீதி 13:4நீதி 26:15சங் 37:16நீதி 15:16நீதி 16:8நீதி 23:2

ஆனால் சுறுசுறுப்பான மனிதர்கள் தங்களுடைய பொருளை அருமையாய் மதிக்கிறார்கள்.

நீதியின் பாதையில் வாழ்வு உண்டு; 3 யோவா 1:11ரோம 5:21எசேக் 18:20-24நீதி 11:19தீத் 2:11-121 யோவா 2:291 யோவா 3:7உபா 30:15

அப்பாதையில் மரணம் இல்லை.