நீதிமொழிகள் 19

Proverbs 19

வஞ்சக உதடுகளுள்ள மூடரைப் பார்க்கிலும், நீதி 28:6நீதி 16:8மத் 16:26நீதி 19:22நீதி 14:2நீதி 15:16நீதி 20:7ஏசா 59:3

குற்றமற்றவராய் நடக்கிற ஏழையே சிறந்தவர்.

அறிவில்லாமல் எதையாவது பற்றி வைராக்கியம் கொள்வது நல்லதல்ல; நீதி 21:5நீதி 29:20பிலி 1:9பிரச 7:9ஏசா 28:16ஓசி 4:6யோவா 16:3ரோம 10:2

அவசரப்பட்டால் வழிதவறி விடுவது எவ்வளவு நிச்சயம்!

ஒருவருடைய மூடத்தனமே அவருடைய வாழ்க்கையை பாழாக்குகிறது; வெளி 16:9-11சங் 37:7நீதி 11:31 சாமு 22:13-232 நாளாக 16:9-10எண் 16:19-411 இராஜா 20:42-431 சாமு 13:13

ஆனாலும் அவர்களுடைய இருதயமோ யெகோவாவுக்கு எதிராகக் கோபம்கொள்கிறது.

செல்வம் அநேக நண்பர்களைக் கொண்டுவரும்; நீதி 14:20நீதி 19:6-7யோபு 19:13-17லூக் 15:13-15யோபு 6:15-23நீதி 10:15

ஆனால் ஏழைகளை நெருங்கிய நண்பரும் கைவிடுவார்கள்.

பொய்ச்சாட்சி சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள்; நீதி 21:28யாத் 23:1நீதி 6:19நீதி 19:9தானி 6:24உபா 19:16-21உபா 5:111 இராஜா 2:9

பொய்யைத் தாராளமாய்ப் பேசுபவரும் தப்பமுடியாது.

ஆளுநரின் தயவைப் பெற அநேகர் நாடுகின்றனர்; நீதி 18:16நீதி 29:26நீதி 17:8ஆதி 42:6ரோம 6:23நீதி 19:12நீதி 21:142 சாமு 19:19-39

அன்பளிப்பு கொடுப்பவருக்கு அனைவரும் நண்பர்கள்.

ஏழைகளின் உறவினர்கள் அவர்களை வெறுக்கிறார்கள், சங் 88:81 யோவா 3:17-18யாக் 2:15-16நீதி 18:23நீதி 19:4சங் 38:11பிரச 9:15-16நீதி 21:13

அவர்களுடைய சிநேகிதர்கள் எவ்வளவு அதிகமாய் அவர்களைப் புறக்கணிப்பார்கள்!

ஏழைகளோ அவர்களிடம் கெஞ்சினாலும்,

அவர்களுடைய நண்பர்கள் போய்விடுகிறார்கள்.

ஞானத்தைப் பெறுகிறவர் தன் வாழ்வை நேசிக்கிறார்கள், நீதி 16:20நீதி 8:35-36நீதி 3:18நீதி 4:61 பேது 3:10யோவா 14:21நீதி 2:1-9சங் 19:11

புரிந்துகொள்ளுதலைக் காப்பவர்கள் நன்மையடைவார்கள்.

பொய்ச்சாட்சி சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள்; வெளி 22:15நீதி 19:5வெளி 19:202 பேது 2:1-3எரே 28:15-17வெளி 21:81 தீமோ 4:1-22 தெச 2:8-10

பொய்யைத் தாராளமாய்ப் பேசுபவரும் தப்பமுடியாது.

ஆடம்பர வாழ்வு மதியீனருக்குத் தகுந்ததல்ல; நீதி 30:21-22நீதி 26:1லூக் 16:19லூக் 16:231 சாமு 25:362 சாமு 3:24-252 சாமு 3:39ஆமோ 6:3-6

ஒரு அடிமை இளவரசர்களை ஆட்சி செய்வது எவ்வளவு மோசமானது!

ஒருவருடைய ஞானம் அவருக்கு பொறுமையைக் கொடுக்கிறது; நீதி 16:32நீதி 14:29யாக் 1:19கொலோ 3:12-13நீதி 15:18நீதி 20:3எபே 4:32நீதி 12:16

குற்றத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பது அவர்களுக்கு மகிமை.

அரசனின் கடுங்கோபம் ஒரு சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; ஓசி 14:5லூக் 12:4-5நீதி 16:14-15நீதி 20:2நீதி 28:15தானி 2:12-13தானி 3:19-23பிரச 8:4

ஆனால் அவனுடைய தயவோ புல்லின்மேலுள்ள பனியைப்போலிருக்கும்.

மதிகெட்ட மகன் தன் தகப்பனுக்கு அழிவு; நீதி 21:9நீதி 27:15நீதி 10:1நீதி 25:242 சாமு 13:1-18யோபு 14:19நீதி 15:20நீதி 17:21

வாக்குவாதம் செய்யும் மனைவி,

ஓட்டைக் கூரையிலிருந்து ஓயாமல் ஒழுகும் நீரைப்போல் இருக்கிறாள்.

வீடுகளும் செல்வமும் பெற்றோரிடமிருந்து உரிமைச்சொத்தாய் கிடைக்கின்றன; நீதி 18:22நீதி 31:10-31நீதி 13:22நீதி 3:6யாக் 1:172 கொரி 12:14ஆதி 28:1-4உபா 21:16

ஆனால் விவேகமுள்ள மனைவியோ யெகோவாவிடமிருந்து கிடைக்கிறாள்.

சோம்பல் ஆழ்ந்த நித்திரையைக் கொண்டுவரும். நீதி 23:21நீதி 20:132 தெச 3:10நீதி 6:9-10நீதி 24:33ரோம 13:11-12நீதி 10:4-5எபே 5:14

வேலைசெய்ய மறுப்பவர்கள் பசியாயிருப்பார்கள்.

கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் தங்கள் வாழ்வைக் காத்துக்கொள்கிறார்கள்; லூக் 10:28நீதி 13:131 யோவா 5:3லூக் 11:281 யோவா 3:22நீதி 16:17பிரச 8:5மத் 16:26

ஆனால் தங்கள் வழிகள்மேல் கவனமாயிராதவர்கள் சாவார்கள்.

ஏழைக்கு உதவுகிறவர்கள் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறார்கள், நீதி 28:27எபி 6:10லூக் 6:382 கொரி 9:6-8மத் 25:40பிரச 11:1ஏசா 58:7-11மத் 10:41-42

அவர்கள் உதவியதற்கு சரியாக அவர்களுக்கு திரும்பக் கொடுப்பார்.

உன் பிள்ளைகள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கும்போதே கண்டித்துத் திருத்து; நீதி 13:24நீதி 29:15நீதி 22:15நீதி 23:13-14எபி 12:7-10நீதி 29:17

இல்லாவிட்டால் நீ அவர்களின் வாழ்க்கை அழிய காரணமாகி விடுவாய்.

முற்கோபமுள்ள மனிதர் தனக்குரிய தண்டனையைப் பெறவேண்டும்; நீதி 25:281 சாமு 24:17-222 சாமு 16:5-6நீதி 29:221 சாமு 22:7-231 சாமு 26:21-25நீதி 22:24-251 சாமு 20:30-31

அவரைத் தப்புவித்தால், திரும்பவும் தப்புவிக்க வேண்டிவரும்.

ஆலோசனையைக் கேட்டு ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்; நீதி 12:15நீதி 8:34-35நீதி 2:1-9நீதி 1:8நீதி 4:1லூக் 16:19-23எண் 23:10சங் 90:14

முடிவில் நீ ஞானமுள்ளவராவாய்.

மனிதனின் இருதயத்தின் திட்டங்கள் அநேகம்; நீதி 16:9ஏசா 14:24நீதி 16:1சங் 33:10-11ஏசா 46:10நீதி 21:30எபே 1:11யோபு 23:13

ஆனாலும் யெகோவாவின் நோக்கமே நிறைவேறுகிறது.

எல்லோரும் நேர்மையான அன்பையே விரும்புகிறார்கள்; 2 கொரி 8:122 நாளாக 6:8மாற் 14:6-8மாற் 12:41-442 கொரி 8:2-3நீதி 19:1தீத் 1:21 நாளாக 29:2-3

பொய்யராய் இருப்பதைவிட ஏழையாய் இருப்பது சிறந்தது.

யெகோவாவுக்குப் பயந்து நடப்பது வாழ்விற்கு வழிநடத்தும்; மத் 5:6நீதி 14:26-27ஏசா 58:10-11நீதி 12:211 தீமோ 4:8எபி 13:5-6பிலி 4:11-12சங் 90:14

அவ்வாறு இருந்தால் பிரச்சனை இல்லாமல், மனநிறைவுடன் இருக்கலாம்.

சோம்பேறிகள் தங்கள் கையில் உணவை எடுத்துக்கொள்வார்கள்; நீதி 15:19நீதி 26:13-16நீதி 6:9-10நீதி 24:30-34மாற் 14:20நீதி 12:27நீதி 19:15மத் 26:23

ஆனால் அதைத் தங்கள் வாய்க்குக்கூட கொண்டுபோகமாட்டார்கள்.

ஏளனம் செய்பவர்களுக்கு அடி கிடைக்கும், அப்பொழுது அறிவற்றவர்கள் விவேகத்தைக் கற்றுக்கொள்வார்கள்; நீதி 21:11நீதி 17:10நீதி 15:5வெளி 3:19நீதி 9:8-10உபா 13:11உபா 21:21

பகுத்தறிவுள்ளவர்களைக் கடிந்துகொள், அவர்கள்மேலும் அறிவைப் பெறுவார்கள்.

தங்கள் தகப்பனின் பொருட்களை அபகரித்து, நீதி 10:5நீதி 17:2நீதி 28:24நீதி 30:17உபா 21:18-21நீதி 10:1நீதி 17:25நீதி 23:22-25

தங்கள் தாயைத் துரத்திவிடுகிறார்கள் வெட்கமும் அவமானமும் கொண்டுவருகிற பிள்ளைகள்.

என் பிள்ளையே, நீ அறிவுரைகளைக் கேட்பதை நிறுத்தினால், 1 தீமோ 6:3-5மாற் 4:241 யோவா 4:1மத் 7:15நீதி 14:72 கொரி 11:13-152 யோவா 1:101 இராஜா 22:22-28

அறிவுள்ள வார்த்தைகளிலிருந்து விலகிப்போவாய்.

சீர்கெட்ட சாட்சி நீதியைக் கேலி செய்கிறது, யோபு 15:16அப் 6:11-13யோபு 34:7லூக் 18:2-41 இராஜா 21:13யோபு 20:12-131 இராஜா 21:10ஓசி 4:8

கொடியவர்களின் வாயோ தீமையை விழுங்குகிறது.

ஏளனம் செய்வோருக்கு தண்டனையும், நீதி 26:3நீதி 10:13நீதி 9:122 பேது 3:3-7அப் 13:40-41எபி 12:6ஏசா 28:22ஏசா 29:20

மூடருடைய முதுகிற்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.