நீதிமொழிகள் 9

Proverbs 9

ஞானம் மற்றும் முட்டாள்தனத்தின் அழைப்பு

ஞானம் தனக்கென ஒரு வீட்டைக் கட்டி, மத் 16:18வெளி 3:121 கொரி 3:9-151 இராஜா 7:2-31 பேது 2:5-6எபே 2:20-22கலா 2:91 இராஜா 7:21

அதின் ஏழு தூண்களையும் செதுக்கி அமைத்திருக்கிறது.

ஞானம் இறைச்சியைத் தயாரித்து திராட்சை இரசத்தையும் கலந்திருக்கிறது; ஏசா 25:6மத் 22:3-14லூக் 14:16-17நீதி 9:5நீதி 23:301 கொரி 5:7-8ஆதி 43:16உன்னத 8:2

அது தனது பந்தியையும் ஆயத்தப்படுத்தியிருக்கிறது.

தன் பணிப்பெண்களை வெளியே அனுப்பிவிட்டு, நீதி 9:14நீதி 8:1-3மத் 22:3-4நீதி 1:20-23சங் 68:112 கொரி 5:20-21யோவா 18:20யோவா 7:37

பட்டணத்தில் உயரமான இடங்களில் நின்று இப்படி அழைத்தது,

“அறிவற்றவர்களே நீங்கள் எல்லோரும் இங்கே வாருங்கள்!” நீதி 6:32மத் 11:25நீதி 8:5நீதி 9:16நீதி 1:22சங் 119:130சங் 19:7வெளி 22:17

பின்பு மதிகேடர்களுக்கு இப்படிச் சொன்னது,

“வாருங்கள், எனது உணவைச் சாப்பிட்டு யோவா 6:27உன்னத 5:1எரே 31:12-14நீதி 9:17ஏசா 55:1-3யோவா 6:49-58மத் 26:26-28நீதி 9:2

நான் கலந்த திராட்சை இரசத்தையும் குடியுங்கள்.

நீங்கள் உங்கள் மூடவழிகளை விட்டுவிடுங்கள், அப்பொழுது வாழ்வடைவீர்கள்; நீதி 13:20நீதி 4:11லூக் 13:242 கொரி 6:17அப் 2:40மத் 7:13-14நீதி 4:14-15நீதி 8:35

மெய்யறிவின் வழியில் நடங்கள்.”

ஏளனம் செய்பவர்களைத் திருத்துகிறவர்கள் தங்களுக்கு அவமதிப்பைத் தேடிக்கொள்கிறார்கள்; நீதி 15:12நீதி 23:92 நாளாக 36:162 நாளாக 24:20-222 நாளாக 25:15-161 இராஜா 18:171 இராஜா 21:201 இராஜா 22:24

கொடியவர்களைக் கடிந்துகொள்கிறவர்கள் பழிச்சொல்லுக்கு ஆளாகிறார்கள்.

ஏளனம் செய்பவர்களை கடிந்துகொள்ளாதே, அவர்கள் உன்னை வெறுப்பார்கள்; நீதி 13:18சங் 141:5நீதி 23:9நீதி 15:12மத் 7:6நீதி 29:1நீதி 28:23லேவி 19:17

ஞானமுள்ளவர்களைக் கடிந்துகொள், அவர்கள் உன்னை நேசிப்பார்கள்.

ஞானமுள்ளவர்களுக்கு அறிவுரை கூறு, அவர்கள் இன்னும் ஞானத்தில் வளருவார்கள்; நீதி 1:51 யோவா 5:13மத் 13:11-121 யோவா 2:20-21நீதி 25:12ஓசி 6:32 பேது 3:18

நீதிமான்களுக்குக் கற்றுக்கொடு, அவர்கள் அறிவில் இன்னும் வளருவார்கள்.

யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம், சங் 111:10யோபு 28:28நீதி 1:7பிரச 12:13நீதி 2:51 யோவா 5:20யோவா 17:31 நாளாக 28:9

பரிசுத்தரைப் பற்றிய அறிவே புரிந்துகொள்ளுதல்.

ஏனெனில் ஞானத்தினாலே உன் வாழ்நாட்கள் அதிகரிக்கும், நீதி 10:27நீதி 3:2நீதி 3:16உபா 6:2

உன் ஆயுளுடன் பல வருடங்கள் கூட்டப்படும்.

நீ ஞானியாய் இருந்தால், உன் ஞானம் உனக்கு வெகுமதியைக் கொடுக்கும்; யோபு 22:2-32 பேது 3:3-4எசேக் 18:20யோபு 22:21நீதி 16:262 பேது 3:16ஏசா 28:22யோபு 35:6-7

நீ ஏளனம் செய்பவனாய் இருந்தால், தனிமையாகவே துன்பத்தை அனுபவிப்பாய்.

மூடத்தனம் ஒரு முட்டாள் பெண்போல் இருக்கிறது; நீதி 7:11நீதி 5:61 தீமோ 6:4நீதி 21:19நீதி 21:9

அவள் அறிவற்றவளாயும் ஒன்றும் அறியாதவளுமாய் இருக்கிறாள்.

அவள் தனது வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்திருக்கிறாள், நீதி 9:3நீதி 7:10-12

பட்டணத்தின் உயர்ந்த இடத்திலுள்ள இருக்கையில் உட்கார்ந்திருக்கிறாள்.

அவள் தன்னைக் கடந்து தங்கள் வழியில் நீதி 23:27-28நீதி 7:25-27நீதி 7:13-15

நேராய் செல்பவர்களைக் கூப்பிட்டு,

“அறிவற்றவர்களே, நீங்கள் எல்லோரும் இங்கே வாருங்கள்!” நீதி 9:4

பின்பு அவள் மதிகேடர்களுக்கு இப்படிச் சொன்னாள்,

“திருட்டுத்தண்ணீர் இனிமையானது; நீதி 20:17நீதி 23:31-32யாக் 1:14-15நீதி 30:202இராஜா 5:24-27எபே 5:12ஆதி 3:6நீதி 7:18-20

இரகசியமாகச் சாப்பிடும் உணவு சுவையானது!”

ஆனால் அங்கு செத்தவர்கள் இருக்கிறார்கள் என்றும், நீதி 7:27நீதி 2:18-19நீதி 5:5நீதி 1:7நீதி 6:26சங் 82:52 பேது 3:5

அவளின் விருந்தாளிகள் பாதாளத்தின் ஆழங்களில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அறியாதிருக்கிறார்கள்.