நீதிமொழிகள் 3

Proverbs 3

ஞானம் நல்வாழ்வை அளிக்கிறது

என் மகனே, என் போதனைகளை மறவாதே, யோவா 14:21-24நீதி 4:5உபா 6:6-9சங் 119:16நீதி 1:8சங் 119:34சங் 119:93உபா 8:1

என் கட்டளைகளை உன் இருதயத்தில் வைத்துக்கொள்.

அவை உனக்கு நீண்ட ஆயுளையும், எபே 6:1-3நீதி 4:10சங் 91:16நீதி 9:11சங் 128:6ரோம 15:13சங் 21:4சங் 119:165

சமாதான வாழ்வையும் கொண்டுவரும்.

அன்பும் உண்மையும் உன்னைவிட்டு ஒருபோதும் விலகாதிருப்பதாக; 2 கொரி 3:3நீதி 7:3எபி 10:16உபா 11:18-21மல்கி 2:6நீதி 6:21எபே 5:1-2எபே 5:9

அவற்றை உன் கழுத்திலே அணிந்து,

உன் இருதயத்தில் எழுதி வைத்துக்கொள்.

அப்பொழுது நீ இறைவனின் பார்வையிலும் லூக் 2:521 சாமு 2:26ரோம 14:18சங் 111:10ஆதி 39:2-4ஆதி 39:21அப் 2:47தானி 1:9

மனிதனின் பார்வையிலும் தயவையும் நற்பெயரையும் பெறுவாய்.

உன் முழு இருதயத்தோடும் யெகோவாவிடம் நம்பிக்கைவை, சங் 37:5எரே 17:7-8நீதி 28:26சங் 37:3சங் 62:8ஏசா 26:3-4ஏசா 12:2சங் 37:7

உன் சொந்த அறிவை மட்டுமே சார்ந்திராதே.

நீ செய்யும் எல்லாவற்றிலும் யெகோவாவுக்கே அடங்கியிரு, நீதி 16:3சங் 32:8பிலி 4:6நீதி 16:9எரே 10:23யாக் 1:5ஏசா 30:21ஏசா 48:17

அவர் உன்னை சரியான பாதையில் நடத்துவார்.

உன்னை ஞானியென்று என்று நீயே எண்ணிக்கொள்ளாதே; யோபு 28:28ரோம 12:16நீதி 26:12நீதி 16:6பிரச 12:13யோபு 1:1ஏசா 5:21சங் 34:11-14

யெகோவாவுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகு.

அது உன் உடலுக்கு சுகத்தையும், நீதி 4:22சங் 147:3நீதி 16:24யோபு 21:24எசேக் 16:4-5ஏசா 1:6எரே 30:12-13

உனது எலும்புகளுக்கு ஊட்டத்தையும் கொடுக்கும்.

நீ உன் செல்வத்தினாலும், உபா 26:2-151 கொரி 16:2யாத் 23:19நீதி 14:31பிலி 4:17-18மல்கி 3:8-10யாத் 22:292 கொரி 8:2-3

உனது எல்லா விளைச்சலின் முதற்பலனினாலும் யெகோவாவைக் கனம்பண்ணு.

அப்பொழுது தானியத்தால் உன் களஞ்சியங்கள் நிரம்பியிருக்கும்; நீதி 19:17உபா 28:8நீதி 11:24-25யோவே 2:24நீதி 22:92 கொரி 9:6-11பிரச 11:1-2ஆகா 2:19

திராட்சை இரசத்தினால் உன் தொட்டிகள் நிரம்பிவழியும்.

என் மகனே, யெகோவாவினுடைய கண்டிப்பைத் தள்ளிவிடாதே; யோபு 5:17வெளி 3:19எபி 12:5-12சங் 94:12ஏசா 40:30-311 கொரி 11:322 கொரி 4:16-172 கொரி 4:1

அவர் கடிந்துகொள்ளும்போது கோபங்கொள்ளாதே.

ஏனெனில் ஒரு தகப்பன் தனது அருமை மகனை கண்டித்துத் திருத்துவதுபோல், உபா 8:5வெளி 3:19நீதி 29:17நீதி 13:24சங் 103:13

யெகோவா யாரை நேசிக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார்.

ஞானத்தை அடைகிறவர்களும், நீதி 8:32-35நீதி 4:5-9பிரச 9:15-181 இராஜா 10:1-91 இராஜா 10:23-24நீதி 2:4நீதி 18:1

புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்கிறவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

ஏனெனில் ஞானம் வெள்ளியைவிட மேலானது, நீதி 16:16நீதி 8:19யோபு 28:13-19வெளி 3:182 நாளாக 1:11-12மத் 16:26நீதி 2:4நீதி 8:10-11

தங்கத்தைவிடப் பயனுள்ளது.

அது பவளங்களைவிட பெருமதிப்புள்ளது; நீதி 8:11யோபு 28:18நீதி 31:10சங் 73:25-26ரோம 8:18நீதி 20:15சங் 63:3மத் 13:44-46

நீ விரும்புகிற எதற்கும் அது நிகரல்ல.

அதின் வலதுகையில் நீண்ட ஆயுளும் இருக்கிறது; நீதி 3:22 கொரி 6:10நீதி 22:41 இராஜா 3:131 தீமோ 4:8மாற் 10:301 கொரி 3:21-23நீதி 4:6-10

அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கின்றன.

அதின் வழிகள் இன்பமானது; லூக் 1:79ஏசா 26:3பிலி 4:8-9நீதி 2:10சங் 119:165மத் 11:28-30நீதி 22:18சங் 112:1

அதின் பாதைகள் எல்லாம் சமாதானமானவை.

அதை அணைத்துக் கொள்கிறவர்களுக்கு அது வாழ்வு கொடுக்கும் மரம், நீதி 11:30நீதி 15:4வெளி 2:7ஆதி 2:9ஆதி 3:22நீதி 13:12வெளி 22:2

அதனைப் பற்றிக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

யெகோவா ஞானத்தினால் பூமிக்கு அஸ்திபாரமிட்டார், சங் 104:24எரே 10:12யோவா 1:3எரே 51:15சங் 136:5நீதி 8:27-29

அவருடைய புரிந்துகொள்ளுதலினால் வானங்களை அமைத்தார்;

அவருடைய அறிவினால் ஆழங்கள் பிரிக்கப்பட்டன, ஆதி 7:11சங் 65:9-12ஆதி 1:9ஆதி 27:28யோபு 36:27-28யோபு 38:26-28யோபு 38:8-11உபா 33:28

மேகங்கள் பனித்துளியை விழப்பண்ணின.

என் மகனே, ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் உன் பார்வையிலிருந்து விலகவிடாதே, யோசு 1:8உபா 6:6-9உபா 32:46-47நீதி 4:21எபி 2:1-3உபா 4:91 யோவா 2:27யோவா 8:31

சரியான நிதானிப்பையும் அறிவுடைமையையும் காத்துக்கொள்.

அவை உனக்கு வாழ்வாகவும், நீதி 4:22நீதி 1:9ஏசா 38:16யோவா 12:49-50

உன் கழுத்துக்கு அலங்காரமாகவும் இருக்கும்.

அப்பொழுது நீ உன் வழியில் பாதுகாப்புடன் போவாய்; நீதி 10:9நீதி 4:12சங் 121:3சங் 91:11-12சங் 121:8சங் 37:23-24சங் 37:31நீதி 2:8

உன் கால்களும் இடறாது.

நீ படுத்திருக்கும்போது பயப்படமாட்டாய்; சங் 3:5சங் 4:8நீதி 6:22யோபு 11:19சங் 121:4-7எரே 31:26லேவி 26:6சங் 127:2

நீ படுக்கும்போது உன் நித்திரை இன்பமாக இருக்கும்.

திடீரென வரும் பேராபத்திற்கும் ஏசா 41:10-14சங் 112:71 பேது 3:14சங் 91:5ஏசா 8:12-13யோவா 14:1யோபு 11:13-15லூக் 21:18-28

கொடியவர்கள்மேல் வரும் அழிவுக்கும் நீ பயப்படவேண்டாம்.

யெகோவா உனது நம்பிக்கையாயிருப்பார்; நீதி 14:26சங் 91:31 சாமு 2:9சங் 91:9-10ஆப 3:17-18

அவர் உன் கால் இடறாமல் காப்பார்.

நன்மைசெய்ய உன்னால் இயலும்போது, கலா 6:10யாக் 2:15-16ரோம 13:7யாக் 5:4ஆதி 31:29மீகா 2:1தீத் 2:14

அதை பெறத்தக்கவர்களுக்கு கொடுக்காமல் விடாதே.

உன்னிடம் இருக்கும்போதே, லேவி 19:13உபா 24:12-152 கொரி 8:11பிரச 9:101 தீமோ 6:18பிரச 11:62 கொரி 9:3நீதி 27:1

உன் அயலவனிடம்,

“போய்வா; நாளைக்கு உனக்குத் தருவேன்” எனச் சொல்லாதே.

உன் அருகே நம்பிக்கையுடன் வாழும் நீதி 6:14மீகா 2:1-2நீதி 16:29-30சங் 35:20சங் 55:20சங் 59:3எரே 18:18-20நீதி 6:18

அயலவனுக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்யாதே.

ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதபோது 2 தீமோ 2:24நீதி 29:22ரோம 12:18-21நீதி 18:6நீதி 25:8-9நீதி 17:14மத் 5:39-411 கொரி 6:6-8

காரணம் இல்லாமல் அவர்கள்மேல் குற்றம் சாட்டாதே.

வன்முறையாளர்மேல் பொறாமை கொள்ளாதே; நீதி 24:1சங் 37:1பிரச 5:8கலா 5:21நீதி 23:17நீதி 12:12நீதி 24:19-20நீதி 1:15-18

அவர்களுடைய வழிகளில் எதையும் தெரிந்தெடுக்காதே.

ஏனெனில் நேர்மையற்றவர்களை யெகோவா அருவருக்கிறார்; சங் 25:14நீதி 11:20யோவா 15:15நீதி 17:15நீதி 8:13யோவா 14:21-24மத் 13:11சங் 18:26

ஆனால் நீதிமான்கள்மேல் தனது நம்பிக்கையை வைத்திருக்கிறார்.

கொடியவர்களின் வீட்டின்மேல் யெகோவாவின் சாபம் இருக்கும், சங் 37:22லேவி 26:14-46யோபு 8:6-7சங் 91:10மல்கி 2:2உபா 7:26நீதி 21:122 சாமு 6:11

ஆனால் நீதிமான்களுடைய வீட்டிலோ, அவருடைய ஆசீர்வாதம் இருக்கும்.

பெருமைகொண்ட பரியாசக்காரர்களை யெகோவா ஏளனம் செய்கிறார்; யாக் 4:61 பேது 5:5சங் 138:6நீதி 9:12நீதி 21:24ஏசா 57:15நீதி 9:7-8நீதி 19:29

ஆனால் தாழ்மையுள்ளவர்களுக்கோ, கிருபையைக் கொடுக்கிறார்.

ஞானிகள் மதிப்பைப் பெறுவார்கள்; சங் 132:18ஏசா 65:13-151 சாமு 2:30தானி 12:2-3சங் 73:24நீதி 13:8நீதி 4:8

மூடர்கள் வெட்கப்படுவார்கள்.