2 சாமுவேல் 6

2 Samuel 6

உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருதல்

தாவீது இஸ்ரயேல் மக்களனைவருக்குள்ளும் தெரிந்தெடுக்கப்பட்ட முப்பதாயிரம்பேரை மறுபடியும் ஒன்று சேர்த்தான். 1 நாளாக 13:1-41 நாளாக 13:6-141 இராஜா 8:1சங் 132:1-62 சாமு 5:1 கேருபீன்களுக்கு நடுவில் வீற்றிருக்கும் சேனைகளின் யெகோவாவின் பெயரால் அழைக்கப்பட்ட இறைவனின் பெட்டியைக் கொண்டுவரும்படி, யூதாவிலுள்ள பாலை என்னும் இடத்திற்கு, தாவீதும் அவன் மனிதர் அனைவரும் புறப்பட்டுச் சென்றார்கள். 1 சாமு 4:41 நாளாக 13:5-61 சாமு 7:1யாத் 25:18-22சங் 80:11 பேது 1:121 இராஜா 8:6-7ஏசா 47:4 அந்த இறைவனின் பெட்டியை ஒரு புதிய வண்டியில் ஏற்றி மலையில் இருந்த அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள். அபினதாபின் மகன்களான ஊசாவும், அகியோவும் அந்தப் புதிய வண்டியை நடத்தினார்கள். 1 சாமு 6:7எண் 7:4-9எண் 4:5-12 இறைவனின் பெட்டி அதில் இருந்தது. அதற்கு முன்னால் அகியோ போய்க்கொண்டிருந்தான். 1 நாளாக 13:71 சாமு 7:1-2 தாவீதும் இஸ்ரயேலின் குடும்பத்தார் அனைவரும் தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட யாழோடும், வீணை, தம்புரா, மேளம், தாளம் ஆகியவற்றோடும் யெகோவாவுக்கு முன்பாக தங்கள் முழு பலத்தோடும் ஆடிப்பாடிக் கொண்டுபோனார்கள். 1 நாளாக 13:8சங் 150:3-5ஆமோ 5:231 நாளாக 15:10-241 சாமு 10:51 சாமு 16:161 சாமு 18:6-72இராஜா 3:15

அவர்கள் நாகோனின் சூடடிக்கும் களத்திற்கு வந்தபோது, மாடுகள் மிரண்டதினால் ஊசா கையை நீட்டி இறைவனின் பெட்டியை எட்டிப்பிடித்தான். 1 நாளாக 13:9எண் 4:15எண் 4:19-20 ஊசாவின் பயபக்தியற்ற இச்செயலினால் ஊசாவுக்கு விரோதமாக யெகோவாவின் கோபம் மூண்டது. எனவே அவர் அந்த இடத்திலேயே ஊசாவை அடித்தார். அவன் இறைவனின் பெட்டிக்கு அருகே விழுந்து செத்தான். 1 சாமு 6:191 நாளாக 15:131 நாளாக 13:101 நாளாக 15:21 கொரி 11:30-32லேவி 10:1-3

யெகோவாவின் கோபம் ஊசாவுக்கு விரோதமாய் மூண்டதினால், தாவீது கோபமடைந்தான். அதனால் இந்நாள்வரை அந்த இடம், பேரேஸ் ஊசா என அழைக்கப்படுகிறது. 1 நாளாக 13:11-12யோனா 4:1யோனா 4:9

தாவீது அன்றையதினம் யெகோவாவுக்குப் பயந்து, “யெகோவாவின் பெட்டி எப்படி என்னிடம் வரமுடியும்?” என்று கூறினான். சங் 119:1201 நாளாக 13:11-121 இராஜா 8:271 சாமு 5:10-111 சாமு 6:20எண் 17:12-13ஏசா 6:5யோபு 25:5-6 எனவே யெகோவாவின் பெட்டியை தன்னுடன் தாவீதின் நகரத்தில் இருக்கும்படி, அதை அங்கு கொண்டுவர அவன் விரும்பவில்லை. அதனால், அவன் அதைப் புறம்பே கொண்டுபோய் கித்தியனான ஓபேத் ஏதோமின் வீட்டிலே வைத்தான். 1 நாளாக 26:4-81 நாளாக 13:13-141 நாளாக 15:181 நாளாக 16:52 சாமு 15:192 சாமு 18:22 சாமு 4:3 யெகோவாவின் பெட்டி கித்தியனான ஓபேத் ஏதோமின் வீட்டில் மூன்று மாதங்கள் இருந்தது. யெகோவா ஓபேத் ஏதோமையும் அவன் குடும்பம் முழுவதையும் ஆசீர்வதித்தார். ஆதி 39:5ஆதி 30:27நீதி 3:9-10மல்கி 3:10ஆதி 39:23

அப்பொழுது, இறைவனின் பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டில் இருப்பதால், அவனையும், குடும்பத்தாரையும் அவனுக்குள்ள எல்லாவற்றையும் யெகோவா ஆசீர்வதிக்கிறார் என தாவீதுக்குச் சொல்லப்பட்டது. எனவே தாவீது போய் இறைவனின் பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் தாவீதின் நகரத்திற்குக் கொண்டுவந்தான். 1 நாளாக 15:251 இராஜா 8:1மத் 10:42சங் 24:7-10சங் 68:24-271 நாளாக 15:1-3சங் 132:6-8 யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து வந்தவர்கள் ஆறு அடி எடுத்து வைத்ததும் தாவீது ஒரு மாட்டையும், ஒரு கொழுத்த கன்றையும் அங்கே பலிசெலுத்தினான். 1 நாளாக 15:151 இராஜா 8:5எண் 4:151 நாளாக 15:2யோசு 3:3எண் 7:91 நாளாக 15:25-262 நாளாக 5:6 அப்பொழுது தாவீது நார்ப்பட்டு ஏபோத்தை அணிந்துகொண்டு யெகோவாவுக்கு முன்பாகத் தன் முழு பலத்தோடும் நடனமாடினான். 1 சாமு 2:18யாத் 15:20நியாயாதி 11:34சங் 149:3சங் 150:41 சாமு 2:28கொலோ 3:23சங் 30:11 தாவீதும் இஸ்ரயேல் குடும்பத்தார் யாவரும் ஆரவாரத்தோடும், எக்காள சத்தத்தோடும் யெகோவாவின் பெட்டியைக் கொண்டுவந்தார்கள். சங் 68:24-271 நாளாக 15:161 நாளாக 15:251 நாளாக 15:28எஸ்றா 3:10-11யோசு 6:4-5எண் 10:1-10சங் 150:3

யெகோவாவின் பெட்டி தாவீதின் நகரத்திற்குள்ளே வருகின்றபோது, சவுலின் மகள் மீகாள் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாள். அரசன் தாவீது யெகோவாவுக்கு முன்பாகத் துள்ளிக் குதித்து ஆடுவதைக் கண்டதும் அவள் தன் இருதயத்தில் அவனை அவமதித்தாள். 1 கொரி 2:141 நாளாக 15:292 சாமு 3:14அப் 2:13சங் 69:7ஏசா 53:3

அவர்கள் யெகோவாவின் பெட்டியைக் கொண்டுவந்து தாவீது அதற்காக அமைத்திருந்த கூடாரத்திற்குள் அதற்குரிய இடத்தில் அதை வைத்தார்கள். அப்பொழுது தாவீது யெகோவாவுக்கு முன்பாக தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினான். 1 நாளாக 15:12 நாளாக 1:41 இராஜா 8:51 இராஜா 8:62-65சங் 132:82 நாளாக 5:62 நாளாக 7:5-7எஸ்றா 6:16-17 தாவீது தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தியபின் சேனைகளின் யெகோவாவின் பெயராலே மக்களை ஆசீர்வதித்தான். 1 நாளாக 16:21 இராஜா 8:551 இராஜா 8:142 நாளாக 30:18-192 நாளாக 30:272 நாளாக 6:3அப் 3:26யாத் 39:43 பின்பு அவன் அங்கேயிருந்த இஸ்ரயேலின் திரள்கூட்டமான ஆண்கள், பெண்கள் என ஒவ்வொருவருக்கும் ஒரு அப்பத்தையும், ஒரு பேரீச்சம்பழ அடையையும், ஒரு திராட்சைப்பழ அடையையும் கொடுத்தான். பின்பு எல்லா மக்களும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள். நெகே 8:101 இராஜா 8:662 நாளாக 30:242 நாளாக 7:101 நாளாக 16:32 நாளாக 35:12-132 நாளாக 35:7-8அப் 20:35

தாவீது தன் குடும்பத்தாரை ஆசீர்வதிக்கும்படி வீட்டிற்குத் திரும்பியபோது, சவுலின் மகள் மீகாள் தாவீதைச் சந்திக்கும்படி அவனிடம் வந்தாள். அவள், “இஸ்ரயேலின் அரசன் தன் பணியாட்களான அடிமைப் பெண்கள் முன்னிலையில் இழிவான ஒருவன் செய்வதுபோல, தன் உடைகளைக் கழற்றியதினால் தன்னை எவ்வளவாய் மேன்மைப்படுத்திக் கொண்டார்!” என்று சொன்னாள். 2 சாமு 6:162 சாமு 6:14நியாயாதி 9:4மாற் 3:21பிலி 2:7-81 நாளாக 16:431 சாமு 19:23-242 சாமு 6:18

அதற்குத் தாவீது மீகாளிடம், “நான் யெகோவாவுக்கு முன்பாகவே ஆடினேன். அவர் யெகோவாவின் மக்களான இஸ்ரயேலரின்மேல் என்னை ஆளுநனாக நியமித்தபோது, உன்னுடைய தகப்பனையோ அல்லது அவருடைய வீட்டாரில் ஒருவனையோவிட, என்னையே தெரிந்துகொண்டார். நான் யெகோவாவுக்கு முன்பாக ஆடிப்பாடுவேன். அப் 13:221 சாமு 13:142 சாமு 6:16சங் 89:19-201 சாமு 15:28சங் 78:70-721 சாமு 16:12 சாமு 6:14 நான் அதைப் பார்க்கிலும் இன்னும் அதிகமாய் மதிப்பற்றவனாவேன்; எனது பார்வையிலுங்கூட நான் தாழ்மைப்படுவேன். ஆனால் நீ சொல்லிக் குறிப்பிட்ட அந்த அடிமைப் பெண்களால் நான் கனம்செய்யப்படுவேன்” என்றான். 1 பேது 4:14எபி 12:2ஏசா 51:71 தீமோ 1:15அப் 5:41-42ஆதி 32:10ஏசா 50:6யோபு 40:4

சவுலின் மகள் மீகாள் சாகும் நாள்வரை பிள்ளையற்றவளாய் இருந்தாள். மத் 1:251 சாமு 1:6-81 சாமு 15:35ஓசி 9:11ஏசா 22:14ஏசா 4:1லூக் 1:25