யெகோவாவின் இரக்கமும் யோனாவின் கோபமும்
ஆனால் யோனாவோ அதிருப்தியடைந்து கோபங்கொண்டான். யோனா 4:9லூக் 15:28மத் 20:15யோனா 4:4யாக் 4:5-6லூக் 7:39அப் 13:46 அவன் யெகோவாவிடம், “யெகோவாவே இதைத்தானே நான் எனது சொந்த நாட்டில் இருக்கும்போது சொன்னேன். இதனால்தான் நான் தர்ஷீசுக்குத் தப்பியோட விரைந்தேன்; நீர் மிகுந்த கிருபையும் கருணையும் உள்ள இறைவன். கோபிக்கத் தாமதிப்பவர், அன்பு நிறைந்தவர், பேரழிவை அனுப்பாமல் மனமிரங்குகிற இறைவன் என்பது எனக்குத் தெரியும். சங் 86:15யாத் 34:6-7எண் 14:18-19யோவே 2:13-14சங் 145:8மீகா 7:18சங் 86:5யாத் 32:14 இப்பொழுதும், யெகோவாவே, என் உயிரை எடுத்துவிடும், நான் வாழ்வதைவிட சாவது மேலானது. ஏனெனில் நான் நினிவேயின் அழிவைக்குறித்து இறைவாக்குரைத்திருக்கிறேன்” என மன்றாடினான். 1 இராஜா 19:4பிரச 7:1எரே 20:14-18எண் 11:15யோனா 4:8எண் 20:31 கொரி 9:15யோபு 3:20-21
ஆனால் யெகோவா அவனிடம், “நீ கோபமடைவது சரியானதோ?” எனக் கேட்டார். மத் 20:15யோனா 4:9சங் 106:32-33யாக் 1:19-20மீகா 6:3எண் 20:11-12எண் 20:24
யோனா வெளியே போய் பட்டணத்தின் கிழக்கே ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் தனக்கென ஒரு குடிசையைப் போட்டு, அதன் நிழலில் அமர்ந்து அந்தப் பட்டணத்திற்குச் சம்பவிக்கப் போகிறதைப் பார்ப்பதற்காக அங்கு காத்திருந்தான். 1 இராஜா 19:91 இராஜா 19:13ஆதி 19:27-28ஏசா 57:17எரே 17:15-16எரே 20:9யோனா 1:5லூக் 19:41-44 அப்பொழுது யெகோவாவாகிய இறைவன், யோனாவுக்கு மேலாக ஒரு ஆமணக்குச்செடியை முளைக்கப்பண்ணி, அதை வளரச்செய்தார். அது யோனாவுக்கு மேலாக வளர்ந்து, படர்ந்து அவனுக்கு நிழல் கொடுத்து, அவனுடைய கஷ்டத்தை நீக்கியது. யோனா அந்த ஆமணக்குச்செடியைக் குறித்து மிகவும் சந்தோஷமடைந்தான். சங் 103:10-141 கொரி 7:30எஸ்த 5:9ஏசா 39:2யோனா 1:17லூக் 10:20ஆமோ 6:13நீதி 23:5 ஆனால் மறுநாள் அதிகாலையில் இறைவன் ஒரு புழுவை அனுப்பினார், அது அந்த ஆமணக்குச்செடி முழுவதையும் அரித்ததினால் அது வாடிப்போயிற்று. யோவே 1:12சங் 90:5-6ஏசா 40:6-8யோபு 1:21சங் 102:10சங் 30:6-7 சூரியன் உதித்து மேலே எழும்பியபோதோ, இறைவன் கடுஞ்சூடான கொண்டற்காற்றை அனுப்பினார், உச்சிவெயில் யோனாவின் தலையைச் சுட்டதினால், அவன் மிகவும் சோர்வுற்றுத் தளர்ந்துபோனான். “வாழ்வதைவிட எனக்கு சாவதே மேல்” எனக் கூறினான். யோனா 4:3சங் 121:6எசேக் 19:12ஏசா 49:10வெளி 3:19வெளி 7:161 சாமு 3:182 சாமு 15:25-26
ஆனால் இறைவன் யோனாவிடம், “இந்த ஆமணக்குச்செடிக்கு ஏற்பட்டதைப் பற்றி நீ கோபமடைவது சரியானதோ?” என்றார். ஆதி 4:5-14நியாயாதி 16:16யோபு 18:4யோபு 40:4-5யோபு 5:22 கொரி 7:10மத் 26:38வெளி 9:6
அதற்கு அவன், “ஆம், சாகுமளவுக்கு எனக்குக் கோபம் உண்டு” என்றான்.
அதற்கு யெகோவா, “நீ அந்த ஆமணக்குச்செடியைப் பராமரிக்கவும் இல்லை, வளர்க்கவும் இல்லை. ஒரே இரவில் தானாகவே முளைத்து, ஒரே இரவில் அது செத்துப்போயிற்று. அதைக்குறித்து நீ கவலைப்படுகிறாயே. 1 சாமு 20:31ஆதி 17:12 ஆனால் வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசங்கூட தெரியாத, இலட்சத்து இருபதாயிரம்பேருக்கும் அதிகமான மக்கள் நினிவேயில் இருக்கிறார்கள். ஏராளமான வளர்ப்பு மிருகங்களும் அங்கு இருக்கின்றன. அந்த பெரிய பட்டணத்தைக் குறித்து நான் அக்கறைகொள்ள வேண்டாமோ?” என்று கேட்டார். மத் 18:33லூக் 15:28-32யோனா 1:2சங் 145:8-9சங் 36:6உபா 1:39ஏசா 1:18சங் 104:14