நீதிமொழிகள் 14

Proverbs 14

ஞானமுள்ள பெண் தன் குடும்பத்தைக் கட்டுகிறாள்; நீதி 31:10-31நீதி 24:3-4நீதி 21:9நீதி 21:19ரூத் 4:11நீதி 9:13-15நீதி 19:131 இராஜா 16:31

ஆனால் அறிவில்லாதவளோ தன் கைகளினாலேயே அதை இடித்துப்போடுகிறாள்.

நேர்மையான வழியில் செல்கிறவர்கள் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறார்கள், 2 தீமோ 3:2-3அப் 10:35நீதி 28:6யோபு 28:28சங் 112:1ரோம 2:4-5அப் 9:31பிரச 12:13

அவரை அசட்டை பண்ணுகிறவர்கள் தங்கள் வழிகளில் மாறுபாடுள்ளவர்கள்.

மூடரின் பெருமையான பேச்சு அவர்களுடைய முதுகுக்கே பிரம்படி; நீதி 12:6யாக் 3:5-6வெளி 12:11வெளி 3:10ரோம 10:9-101 சாமு 2:3தானி 7:20யோபு 5:21

ஆனால் ஞானிகளின் உதடுகளோ அவர்களைப் பாதுகாக்கும்.

எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; 1 கொரி 9:9-11நீதி 13:23ஆமோ 4:6

ஆனால் எருதின் பலத்தினால் மிகுந்த அறுவடை உண்டு.

மெய்ச்சாட்சிக்காரர் பொய்ப் பேசமாட்டார்கள், யாத் 23:1நீதி 19:5நீதி 6:19நீதி 12:17நீதி 14:251 இராஜா 22:12-14நீதி 13:5நீதி 19:9

ஆனால் பொய்சாட்சிக்காரர் மூச்சுக்கு மூச்சு பொய்ப் பேசுவார்கள்.

ஏளனம் செய்பவர்கள் ஞானத்தைத் தேடியும் அதைக் கண்டுபிடிப்பதில்லை, யாக் 1:5மத் 13:11-121 கொரி 3:18-19மத் 11:25-271 கொரி 8:2நீதி 8:92 பேது 3:3-5ஏசா 8:20

ஆனால் பகுத்தறிவு உள்ளவர்களுக்கோ புத்தி இலகுவாக வருகிறது.

மூடரின் வழியைவிட்டு விலகியிரு, நீதி 13:201 கொரி 5:11எபே 5:11நீதி 9:6நீதி 19:27

ஏனெனில் அவர்களுடைய உதடுகளில் நீ அறிவைக் காணமாட்டாய்.

தங்கள் வழியைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதே விவேகிகளின் ஞானம், எபே 5:172 தீமோ 3:13யாக் 3:13கொலோ 1:9-10நீதி 11:18நீதி 2:9நீதி 8:20சங் 111:10

ஆனால் மூடர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள்.

பாவத்திற்கு பரிகாரம் செய்வதை மூடர்கள் ஏளனம் செய்கிறார்கள், நீதி 10:23நீதி 26:18-19ரோம 14:17-18யூதா 1:18நீதி 13:15நீதி 30:20நீதி 8:35யோபு 34:7-9

ஆனால் நீதிமான்களின் மத்தியில்தான் அதற்கு நல்லெண்ணம் காணப்படுகிறது.

ஒவ்வொரு இருதயத்தின் கசப்பும் அதற்கு மட்டுமே தெரியும்; பிலி 4:7நீதி 18:14யோவா 14:18நீதி 15:13யோபு 10:1வெளி 2:171 பேது 1:81 சாமு 1:10

அதின் மகிழ்ச்சியையும் வேறு யாராலும் பகிர்ந்துகொள்ள முடியாது.

கொடியவர்களின் வீடு அழிக்கப்படும், நீதி 3:33நீதி 12:7மத் 7:26-27யோபு 21:28நீதி 21:12சகரி 5:4யோபு 18:14-15ஏசா 58:11-12

ஆனால் நீதிமான்களின் கூடாரமோ செழித்தோங்கும்.

மனிதனுக்கு சரியெனத் தோன்றும் வழி ஒன்று உண்டு; நீதி 16:25மத் 7:13-14நீதி 12:15கலா 6:3லூக் 13:24ரோம 6:21நீதி 30:12யாக் 1:22

முடிவில் அது மரணத்திற்கே வழிநடத்தும்.

சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; பிரச 2:2யாக் 4:9பிரச 11:9பிரச 2:10-11பிரச 7:5-6லூக் 16:25நீதி 5:4வெளி 18:7-8

மகிழ்ச்சியும்கூட துயரத்தில் முடிவடையலாம்.

பின்வாங்கிப் போகிற இருதயமுள்ளவர்கள் தங்கள் வழிகளுக்கான தண்டனையை முழுமையாக அனுபவிப்பார்கள்; கலா 6:8நீதி 12:14எபி 3:12எரே 8:5எரே 2:192 பேது 2:20-22கலா 6:4யோவா 4:14

நல்லவர்கள் தங்களுடைய வழிகளுக்கான வெகுமதியைப் பெறுவார்கள்.

அறிவில்லாதவர்கள் எதையும் நம்புகிறார்கள்; எபே 5:17நீதி 14:81 யோவா 4:1நீதி 27:12நீதி 4:26எபே 4:14நீதி 22:3ரோம 16:18-19

ஆனால் விவேகமுள்ளவர்கள் தங்கள் நடைகளைக் குறித்துக் கவனமாயிருப்பார்கள்.

ஞானமுள்ளவர்கள் யெகோவாவுக்குப் பயந்து, தீமைக்கு விலகி நடக்கிறார்கள்; நீதி 22:3நீதி 3:71 தெச 5:22ஆதி 42:18நீதி 29:91 இராஜா 20:10-11ஆதி 33:9யோபு 31:21-23

ஆனால் மூடர்கள் மோசமான மனநிலையிலிருந்தும் பாதுகாப்பாய் உணர்கிறார்கள்.

முன்கோபக்காரன் முட்டாள்தனமான காரியங்களைச் செய்கிறான்; நீதி 14:29பிரச 7:9யாக் 1:19நீதி 29:22நீதி 15:18நீதி 16:32நீதி 22:24எஸ்த 3:6

தீயத் தந்திரமுள்ளவன் வெறுக்கப்படுகிறான்.

அறிவற்றவர்கள் மூடத்தனத்தை உரிமையாக்கிக் கொள்கிறார்கள்; 1 பேது 1:181 பேது 5:42 தீமோ 4:8எரே 16:19நீதி 11:29-30நீதி 3:35நீதி 4:7-9தானி 12:3

ஆனால் விவேகிகளுக்கு அறிவு மகுடமாயிருக்கிறது.

தீயவர்கள் நல்லவர்கள் முன்னும், ஆதி 42:6மல்கி 4:3யாத் 8:81 சாமு 2:362இராஜா 3:12யாத் 11:8யாத் 9:27-28ஆதி 43:28

கொடியவர்கள் நீதிமான்களின் வாசல்களிலும் விழுந்து பணிவார்கள்.

ஏழைகள் தங்கள் அயலவர்களாலும் வெறுக்கப்படுகிறார்கள்; நீதி 19:4நீதி 10:15யோபு 30:10நீதி 19:6-7எஸ்த 3:2எஸ்த 5:10-11யோபு 19:13-14யோபு 6:21-23

ஆனால் செல்வந்தர்களுக்கோ அநேக சிநேகிதர்கள் உண்டு.

தன் அயலாரை அலட்சியம் செய்வது பாவம்; நீதி 11:12நீதி 19:17நீதி 28:27நீதி 17:51 யோவா 3:17-22நீதி 14:31நீதி 18:3அப் 20:35

ஏழைகளுக்கு இரங்குகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

தீமைக்காக சதிசெய்கிறவர்கள் வழிதப்பிப் போவார்கள் அல்லவா? நீதி 12:2யோவா 1:17மத் 5:7சங் 25:102 நாளாக 6:8ஆதி 24:27ஏசா 32:7-8நீதி 14:17

ஆனால் நன்மையைத் திட்டமிடுபவர்கள் அன்பையும் உண்மையையும் கண்டுகொள்கிறார்கள்.

கடும் உழைப்பெல்லாம் இலாபத்தைக் கொண்டுவரும்; நீதி 28:19நீதி 12:242 தெச 3:10-12எபி 6:10-11பிரச 5:3யோவா 6:271 தீமோ 5:13நீதி 10:10

ஆனால் வெறும் பேச்சோ ஏழ்மைக்கே வழிநடத்தும்.

ஞானிகளின் செல்வமே அவர்களுக்கு மகுடம், பிரச 7:11-12லூக் 12:19-20லூக் 16:19-25லூக் 16:9சங் 112:9ஏசா 33:6நீதி 27:22சங் 49:10-13

ஆனால் மூடர்களின் மடமை மூடத்தனத்தையே பிறப்பிக்கிறது.

மெய்ச்சாட்சி உயிர்களைக் காப்பாற்றுகிறது, நீதி 14:5அப் 26:16-201 தீமோ 4:1-32 பேது 3:3அப் 20:26-27அப் 20:21

ஆனால் பொய்ச்சாட்சி ஏமாற்றுகிறது.

யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு உறுதியான நம்பிக்கையுண்டு; நீதி 19:23எரே 32:39-40நீதி 18:10சங் 115:13-14நீதி 3:7-8சங் 34:7-11மல்கி 3:16-18மல்கி 4:2

அது அவர்களுடைய பிள்ளைகளுக்கு அடைக்கலம்.

யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே வாழ்வின் ஊற்று; நீதி 13:14வெளி 21:6நீதி 2:10-18ஏசா 33:6நீதி 22:5சங் 18:5பிரச 7:26

அது மனிதரை மரணக் கண்ணிகளிலிருந்து காப்பாற்றுகிறது.

அதிக மக்கட்தொகை அரசனின் மகிமை, 1 இராஜா 4:20-212இராஜா 13:7யாத் 1:22யாத் 1:121 இராஜா 20:272இராஜா 10:32-33

ஆனால் குடிமக்கள் குறைய இளவரசன் அழிந்துவிடுவான்.

பொறுமையுள்ளவர் மிகுந்த புரிந்துகொள்ளுதல் உள்ளவர்; யாக் 1:19பிரச 7:9நீதி 14:17நீதி 15:18நீதி 19:11நீதி 16:32நீதி 25:28மத் 11:29

ஆனால் முற்கோபக்காரர்கள் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

மன அமைதி உடலுக்கு சுகத்தைக் கொடுக்கிறது; நீதி 17:22யோபு 5:2நீதி 3:8நீதி 4:23நீதி 12:42 தீமோ 1:7சங் 112:10சங் 119:80

ஆனால் பொறாமை எலும்புகளில் புற்றுநோய் போன்றது.

ஏழைகளை ஒடுக்குகிறவர்கள் அவர்களைப் படைத்தவரை அவமதிக்கிறார்கள்; நீதி 22:2நீதி 17:5நீதி 22:16நீதி 19:171 யோவா 4:21பிரச 5:81 யோவா 3:17-21சங் 12:5

ஆனால் ஏழைகளுக்குத் தயவு பண்ணுகிறவர்கள் இறைவனைக் கனம்பண்ணுகிறார்கள்.

பேரழிவு வரும்போது கொடியவர்கள் வீழ்ச்சியடைகிறார்கள்; 2 தீமோ 4:18சங் 23:42 கொரி 5:8ஆதி 49:18யோபு 19:25-27வெளி 14:132 கொரி 1:9யோபு 13:15

ஆனால் நீதிமான்களோ மரணத்திலும் இறைவனில் புகலிடம் தேடுகிறார்கள்.

பகுத்தறிகிறவர்களின் இருதயத்திலே ஞானம் தங்கியிருக்கிறது; நீதி 12:16நீதி 12:23நீதி 15:28பிரச 10:3நீதி 13:16நீதி 29:11நீதி 15:2

மூடர்களிடம் அதற்கு வாய்ப்பில்லை.

நீதி ஒரு நாட்டையே உயர்த்தும், சங் 107:34உபா 28:1-68உபா 29:18-28உபா 4:6-8எசேக் 16:1-63ஓசி 13:1நியாயாதி 2:6-14எசேக் 22:1-23

ஆனால் பாவம் எந்த மக்களுக்கும் அவமானம்.

ஞானமுள்ள பணியாளனால் அரசன் மகிழ்ச்சி அடைகிறான், மத் 24:45-51லூக் 12:42-48மத் 25:21மத் 25:23நீதி 22:11நீதி 25:5நீதி 29:12நீதி 10:5

ஆனால் வெட்கத்திற்குரிய பணியாளன் அரசனின் கடுங்கோபத்திற்கே உள்ளாகிறான்.