நீதிமொழிகள் 24

Proverbs 24

பழமொழி 20

கொடியவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே; சங் 37:7யாக் 4:5-6நீதி 23:17நீதி 3:31கலா 5:19-21நீதி 13:20சங் 37:1சங் 73:3

அவர்களுடன் கூட்டுச்சேர விரும்பாதே.

ஏனெனில் அவர்கள் இருதயம் மற்றவர்களைக் காயப்படுத்தத் திட்டமிடுகின்றன, சங் 7:14சங் 10:7சங் 28:3ஏசா 59:41 சாமு 23:9யோபு 15:35அப் 13:10எஸ்த 3:6-7

அவர்களுடைய உதடுகள் கலகம் விளைவிப்பதையே பேசும்.

பழமொழி 21

ஞானத்தால் வீடு கட்டப்பட்டு நீதி 14:1நீதி 9:11 கொரி 3:9கொலோ 2:7எரே 10:122 சாமு 7:26

புரிந்துகொள்ளுதலினால் அது நிலைநாட்டப்படுகிறது;

அறிவினால் அதின் அறைகள், நீதி 15:6நீதி 21:20நீதி 20:15நீதி 8:21மத் 13:52நெகே 13:5-131 நாளாக 27:25-311 நாளாக 29:2-9

அபூர்வமான அழகிய பொருட்களால் நிரப்பப்படுகின்றன.

பழமொழி 22

ஞானமுள்ளவன் மிகுந்த வல்லமையுடையவன், பிரச 7:19கொலோ 1:11ஏசா 40:31நீதி 21:22நீதி 8:14சங் 84:7பிரச 9:14-18நீதி 10:29

அறிவுள்ளவன் தன் பெலத்தை பெருக்குகிறான்.

போர் செய்ய வழிநடத்துதல் தேவை, நீதி 11:14நீதி 20:18எபே 6:10-20லூக் 14:31நீதி 15:221 தீமோ 6:11-121 கொரி 9:25-272 தீமோ 4:7

வெற்றிபெற அநேக ஆலோசகர்கள் தேவை.

பழமொழி 23

ஞானம் மூடனுக்கு எட்டாத உயரத்திலுள்ளது; நீதி 14:61 கொரி 2:14சங் 10:5சங் 92:5-6ஆமோ 5:10ஆமோ 5:12ஆமோ 5:15ஏசா 29:21

பட்டண வாசலில் கூடும் சபையில் சொல்வதற்கு அவனுக்கு ஒன்றும் இல்லை.

பழமொழி 24

தீமையான சூழ்ச்சி செய்பவன் சங் 21:11எசேக் 38:10-11நாகூ 1:11நீதி 14:22நீதி 6:14நீதி 6:18ரோம 1:301 இராஜா 2:44

சதிகாரன் என அழைக்கப்படுவான்.

மூடரின் திட்டங்கள் பாவமாகும், மத் 15:192 கொரி 10:5ஏசா 55:7அப் 8:22நீதி 29:8மத் 9:4நீதி 24:8ஆதி 6:5

ஏளனம் செய்பவர்களை மனிதர் வெறுக்கிறார்கள்.

பழமொழி 25

துன்ப காலத்தில் நீ மனம் சோர்ந்துபோனால், ஏசா 40:28-31எபே 3:13எரே 51:461 சாமு 27:1எபி 12:3-5யோபு 4:52 கொரி 4:1வெளி 2:3

உன் பெலன் எவ்வளவு குறைவானது.

மரணத்திற்கு வழிநடத்தப்படுகிறவர்களைத் தப்புவி; சங் 82:4ஏசா 58:6-71 யோவா 3:16-17யோபு 29:171 சாமு 26:8-9லூக் 10:31-32லூக் 23:23-25அப் 18:17

கொல்லப்பட களத்துக்குக் கொண்டுசெல்லப்படுகிறவர்களைக் காப்பாற்று.

“எங்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது” என்று நீங்கள் சொல்வீர்களானால், யோபு 34:11எரே 17:10வெளி 2:231 சாமு 16:7நீதி 21:2சங் 121:8ரோம 2:6பிரச 5:8

இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிற இறைவன் அதைக் காணமாட்டாரோ?

உங்கள் வாழ்வைக் காக்கிறவர் அதை அறியாமலிருப்பாரோ?

ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்வதற்குத் தக்கதாய் அவர் பதில்செய்யாமல் விடுவாரோ?

பழமொழி 26

என் மகனே, நீ தேனைச் சாப்பிடு; அது நல்லது; ஏசா 7:15உன்னத 5:1நீதி 25:16மத் 3:4சங் 119:103உன்னத 4:11நீதி 25:27சங் 19:10

கூட்டிலிருந்து ஒழுகும் தேன் நீ சுவைப்பதற்கு இனிமையாயிருக்கும்.

அதேபோல் ஞானமும் உன் ஆத்துமாவிற்கு இனிமையானது என்று அறிந்துகொள்: யாக் 1:25நீதி 2:10எரே 15:16நீதி 23:18சங் 119:103நீதி 2:1-5நீதி 22:18நீதி 3:13-18

அதை நீ தெரிந்துகொண்டால் உனக்கு எதிர்கால நம்பிக்கை உண்டு,

உன் எதிர்பார்ப்பு வீண்போகாது.

பழமொழி 27

நீ ஒரு திருடனைப்போல் நீதிமானின் வீட்டிற்கு எதிராகப் பதுங்கிக் காத்திருக்காதே; அப் 9:24எரே 11:191 சாமு 22:18-191 சாமு 23:20-231 சாமு 9:11ஏசா 32:18மத் 26:4சங் 140:5

அவனுடைய வீட்டைக் கொள்ளையடிக்காதே.

ஏனெனில் நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும், அவன் எழுந்திருப்பான்; சங் 34:19சங் 37:24மீகா 7:8-10யோபு 5:192 கொரி 4:8-122 கொரி 11:23-27நீதி 14:321 தெச 5:3

ஆனால் கொடியவர்களோ பேராபத்தினால் வீழ்த்தப்படுவார்கள்.

பழமொழி 28

உன் பகைவன் விழும்போது நீ ஏளனம் செய்து மகிழாதே; ஒபதி 1:12யோபு 31:291 கொரி 13:6-7நீதி 17:52 சாமு 16:5-14சங் 35:15சங் 35:19சங் 42:10

அவன் தடுமாறும்போது, உன் இருதயத்தில் சந்தோஷமடையாதே.

நீ மகிழ்ந்தால் யெகோவா அதைக்கண்டு புலம் 4:21-22சகரி 1:15-16

அவன்மேலிருக்கும் தன் கோபத்தை விலக்கி உன்மேல் மனவருத்தமடைவார்.

பழமொழி 29

தீமையானவர்களைக் குறித்து எரிச்சலடையாதே, நீதி 13:20நீதி 23:17நீதி 24:1சங் 1:1சங் 119:115சங் 37:1சங் 73:32 தீமோ 3:2-5

கொடியவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.

ஏனெனில் தீய மனிதனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இல்லை; நீதி 13:9யோபு 18:5-6யோபு 21:17நீதி 20:20சங் 11:6ஏசா 3:11யூதா 1:13மத் 25:8

கொடியவர்களின் விளக்கோ அணைந்துபோகும்.

பழமொழி 30

என் மகனே, யெகோவாவுக்கும் அரசனுக்கும் பயந்து நட, ரோம 13:1-71 இராஜா 12:161 பேது 2:13-17தீத் 3:1யாத் 14:31மத் 22:211 சாமு 12:12-19பிரச 8:2-5

கலகக்காரர்களுடன் நீ சேராதே.

ஏனெனில், திடீரென அவர்களுக்கு அழிவு வரும், 2 நாளாக 13:16-172 சாமு 18:7-8ஓசி 5:11எண் 16:31-35சங் 90:111 சாமு 31:1-7ஓசி 13:10-11நீதி 16:14

யெகோவாவும் அரசனும் எத்தகைய பேரழிவை அனுப்புவார்கள் என்று யாருக்குத் தெரியும்?

ஞானிகளின் கூடுதலான பழமொழிகள்

ஞானிகளின் கூடுதலான பழமொழிகள் என்னவெனில்: நீதி 28:21நீதி 18:52 நாளாக 19:7யாக் 3:17யோவா 7:24லேவி 19:15நீதி 1:6சங் 107:43

நியாயத்தீர்ப்பில் பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல:

குற்றவாளியைப் பார்த்து, “நீ குற்றமில்லாதவன்” எனச் சொல்பவனை மக்கள் சபிப்பார்கள், நீதி 17:15ஏசா 5:23நீதி 11:26யாத் 23:6-7ஏசா 66:24எரே 6:13-14நீதி 28:27நீதி 30:10

நாடுகள் அனைத்தும் அவனை வெறுப்பார்கள்.

ஆனால் குற்றவாளியைக் கடிந்துகொள்கிறவனுக்கு நலமுண்டாகும், 1 தீமோ 5:201 சாமு 3:13நீதி 28:231 இராஜா 21:19-20யோபு 29:16-18லேவி 19:17மத் 14:4நெகே 13:17

அவர்கள்மேல் மிகுந்த ஆசீர்வாதம் பெருகும்.

நேர்மையான பதில் நீதி 15:23ஆதி 41:38-57நீதி 25:11-12யோபு 6:25நீதி 16:1தானி 2:46-48மாற் 12:17-18மாற் 12:32-34

உதடுகளில் கொடுக்கும் முத்தத்தைப் போலிருக்கும்.

உன் வெளிவேலைகளை ஒழுங்குபடுத்தி, லூக் 14:28-301 இராஜா 5:17-181 இராஜா 6:7

உன் வயல்வெளிகளை ஆயத்தப்படுத்து;

அதின்பின், உனது வீட்டைக் கட்டு.

காரணமின்றி உன் அயலானுக்கு விரோதமாக சாட்சி கூறாதே; எபே 4:251 இராஜா 21:9-13மத் 26:59-60நீதி 25:181 சாமு 22:9-10கொலோ 3:9யாத் 20:16யாத் 23:1

பொய்களை சொல்ல உன் உதடுகளை நீ பயன்படுத்தலாமா?

“அவன் எனக்குச் செய்ததுபோல நானும் அவனுக்குச் செய்வேன்” என்றோ, நீதி 20:22ரோம 12:17-211 தெச 5:15மத் 5:39-44நீதி 25:21-222 சாமு 13:22-28நியாயாதி 15:11

“அவன் செய்ததற்குத் தக்கதாக நானும் அவனைத் தண்டிப்பேன்” என்றோ நீ ஒருபோதும் சொல்லாதே.

நான் சோம்பேறியின் வயலைக் கடந்து சென்றேன்; நீதி 12:11நீதி 6:6-19பிரச 8:9-11யோபு 4:8பிரச 4:1-8நீதி 10:13நீதி 6:32சங் 37:25

புத்தியில்லாதவனின் திராட்சைத் தோட்டத்தையும் கடந்து சென்றேன்;

அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது; ஏசா 5:5பிரச 10:18ஆதி 3:17-19எரே 4:3மத் 13:22நீதி 22:13எபி 6:8யோபு 31:40

தரையெங்கும் களைகள் நிறைந்திருந்தன,

தோட்டத்தின் கற்சுவரும் இடிந்து கிடந்தது.

நான் பார்த்ததை என் இருதயத்தில் சிந்தித்தேன்; 1 கொரி 10:111 கொரி 10:6உபா 13:11உபா 21:21உபா 32:29யோபு 7:17யூதா 1:5-7லூக் 2:19

அப்பொழுது நான் கண்டதிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன்:

கொஞ்சம் நித்திரை செய்வேன், கொஞ்சம் தூங்குவேன், நீதி 6:4-111 தெச 5:6-8ரோம 13:11எபே 5:14

கொஞ்சம் என் கைகளை மடித்து ஓய்வெடுப்பேன் என்பாயானால்,

வறுமை கொள்ளைக்காரனைப்போல் உன்மேல் வரும்; நீதி 10:4நீதி 13:4

பற்றாக்குறை ஆயுதம் தாங்கிய முரடனைப்போல உன்னைத் தாக்கும்.