நீதிமொழிகள் 13

Proverbs 13

ஞானமுள்ள மகன் தன் தகப்பனின் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறான்; நீதி 15:5நீதி 9:7-8நீதி 15:20நீதி 10:1நீதி 4:1-141 சாமு 2:25ஏசா 28:14-15நீதி 4:20-22

ஆனால் ஏளனக்காரர்களோ கண்டிப்புக்கு செவிகொடுப்பதில்லை.

மனிதர் தன் வாயின் வார்த்தையினால் நன்மைகளை அனுபவிக்கிறார்கள், நீதி 12:14நீதி 18:20நீதி 10:11நீதி 1:31சங் 140:11ஆப 2:17ஆப 2:8நீதி 1:11-13

ஆனால் உண்மையற்றவர்கள் வன்முறைகளையே விரும்புகிறார்கள்.

தங்கள் நாவைக் காத்துக்கொள்பவர்கள் வாழ்வைக் காத்துக்கொள்கிறார்கள், நீதி 21:23நீதி 18:21நீதி 18:7யாக் 3:2-12மத் 12:36-37சங் 39:1யாக் 1:26நீதி 10:19

ஆனால் முன்யோசனையின்றி பேசுபவர்கள் அழிவுக்குள்ளாகிறார்கள்.

சோம்பேறிகள் ஆசைப்பட்டும் ஒன்றும் பெறாமலிருக்கிறார்கள்; நீதி 12:24நீதி 12:112 பேது 1:5-11நீதி 10:4நீதி 2:2-9நீதி 11:25யோவா 6:27நீதி 28:25

ஆனால் சுறுசுறுப்புள்ளவர்களின் ஆசைகளோ முற்றிலும் நிறைவேறுகின்றன.

நீதிமான்கள் பொய்யானவற்றை வெறுக்கிறார்கள், கொலோ 3:9எபே 4:25சங் 119:163எசேக் 20:43எசேக் 36:31நீதி 3:35வெளி 21:8தானி 12:2

ஆனால் கொடியவர்கள் வெட்கத்தையும்

அவமானத்தையும் கொண்டுவருகிறார்கள்.

உத்தமமானவர்களை நீதி காத்துக்கொள்ளும்; நீதி 11:3நீதி 11:5-6நீதி 21:12சங் 140:11சங் 15:2சங் 25:21சங் 26:1நீதி 5:22

ஆனால் கொடுமையோ பாவிகளை வீழ்த்திப்போடும்.

சிலர் ஒன்றுமில்லாமல் பணக்காரர்களைப் போல பாசாங்கு செய்வார்கள்; லூக் 18:11-14வெளி 3:17நீதி 11:24நீதி 12:92 கொரி 4:72 கொரி 6:10யாக் 2:5லூக் 12:21

வேறுசிலர் அதிக செல்வமிருந்தும் ஏழையைப்போல் பாசாங்கு செய்வார்கள்.

பயமுறுத்தப்படும்போது பணக்காரர் தம் செல்வத்தைத் தந்து அவருடைய வாழ்வை மீட்கலாம், மத் 16:261 பேது 1:18-192இராஜா 24:14சங் 49:6-102இராஜா 25:12எரே 39:10யோபு 2:4செப்ப 3:12

ஆனால் ஏழையோ பயமுறுத்தல் எதையுமே கேள்விப்படுவதில்லை.

நீதிமான்களின் வெளிச்சம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது, நீதி 24:20நீதி 4:18நீதி 20:20சங் 112:4சங் 97:11யோபு 18:5-6மத் 25:81 இராஜா 11:36

ஆனால் கொடியவர்களின் விளக்கோ அணைக்கப்படும்.

அகந்தை வாக்குவாதங்களை பிறப்பிக்கிறது, நீதி 19:20நீதி 12:15-161 தீமோ 6:4நீதி 17:143 யோவா 1:9-10யாக் 3:14-16யாக் 4:1லூக் 22:24

ஆனால் புத்திமதியை ஏற்றுக்கொள்கிறவர்களிடத்தில் ஞானம் காணப்படும்.

தவறான வழியில் சம்பாதித்த பணம் அழிந்துபோகும், நீதி 20:21நீதி 10:2யாக் 5:1-5நீதி 28:8யோபு 27:16-17நீதி 13:22-23நீதி 27:23-27நீதி 28:20

ஆனால் சிறிது சிறிதாக உழைத்துச் சேகரிக்கிறவர்கள் அதை அதிகரிக்கச் செய்வார்கள்.

எதிர்பார்ப்பு நிறைவேறத் தாமதிக்கும்போது, அது இருதயத்தைச் சோர்வுறப்பண்ணும்; யோவா 16:22நீதி 13:19சங் 119:81-83நீதி 11:30நீதி 3:18சங் 17:15சங் 69:3சங் 143:7

ஆனால் நிறைவேறிய வாஞ்சையோ ஒரு வாழ்வுதரும் மரம்போலிருக்கும்.

அறிவுரையை ஏளனம் செய்பவர்கள் அதற்குரிய தண்டனையைப் பெறுவார்கள்; எண் 15:312 நாளாக 36:162 யோவா 1:8சங் 119:165எசேக் 20:16எசேக் 20:13சங் 19:11எசேக் 20:24

ஆனால் கட்டளைகளை மதிக்கிறவர்களோ பலனைப் பெறுவார்கள்.

ஞானமுள்ளவர்களின் போதனை வாழ்வின் நீரூற்று; நீதி 10:11நீதி 14:27சங் 18:52 சாமு 22:6-7நீதி 16:17நீதி 16:6சங் 116:3நீதி 15:24

அது மனிதரை மரணக் கண்ணிகளிலிருந்து காப்பாற்றுகிறது.

நல்லறிவுள்ளவர்கள் தயவைப் பெறுவார்கள், எரே 2:19நீதி 4:19நீதி 15:10ரோம 6:21அப் 7:10நீதி 3:4சங் 111:10சங் 95:9-11

ஆனால் உண்மையற்றவர்களின் வழி கேடு விளைவிக்கும்.

விவேகிகள் அறிவுடன் நடந்துகொள்கிறார்கள்; நீதி 15:2எபே 5:17நீதி 12:22-23பிரச 10:3ஏசா 52:13ரோம 16:191 கொரி 14:201 சாமு 25:10-11

ஆனால் மூடர்களோ தங்கள் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

கொடிய தூதுவன் தொல்லையில் விழுகிறான், நீதி 25:131 கொரி 4:22 கொரி 5:20எசேக் 33:7-81 தீமோ 1:122 தீமோ 2:2எசேக் 3:182 கொரி 2:17

ஆனால் நம்பகமான தூதுவனோ சுகத்தைக் கொண்டுவருகிறான்.

அறிவுரையை அலட்சியம் செய்பவர்கள் வறுமையையும் வெட்கத்தையும் அடைகிறார்கள்; நீதி 15:5நீதி 15:31-32நீதி 12:1நீதி 13:13நீதி 25:12நீதி 19:6நீதி 5:9-14நீதி 9:9

ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்கிறவர்கள் புகழப்படுவார்கள்.

வாஞ்சை நிறைவேறுவது உள்ளத்திற்கு இனிது, நீதி 13:12வெளி 7:14-17நீதி 29:272 தீமோ 2:19நீதி 16:17சங் 34:142 தீமோ 4:7-8யோபு 28:28

ஆனால் தீமையைவிட்டு விலகுவதையோ மூடர் வெறுக்கிறார்கள்.

ஞானிகளோடு வாழ்கிறவர்கள் ஞானிகளாவார்கள்; 1 கொரி 15:33-34நீதி 15:31நீதி 9:62 கொரி 6:14-18சங் 119:63வெளி 18:4மல்கி 3:16நீதி 1:11-19

ஆனால் மூடர்களுக்குத் தோழர்கள் தீங்கு அனுபவிப்பார்கள்.

பேரழிவு பாவிகளைப் பின்தொடர்கிறது, சங் 32:10ஏசா 3:10-11நீதி 13:13ரோம 2:7-10ஆதி 4:7சங் 140:11எண் 32:23அப் 28:4

ஆனால் நன்மை நீதிமான்களின் வெகுமதி.

ஒரு நல்ல மனிதர் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு பரம்பரை சொத்துக்களை விட்டுச்செல்கிறார்; பிரச 2:26யோபு 27:16-17நீதி 28:8சங் 37:25சங் 112:2ஆதி 17:7-8சங் 25:12-13எஸ்றா 9:12

ஆனால் பாவிகளின் செல்வமோ, நீதிமான்களுக்காக சேர்த்து வைக்கப்படுகிறது.

ஒரு ஏழையின் தரிசு நிலம் உணவை விளைவிக்கலாம், நீதி 12:11நீதி 28:19பிரச 5:9பிரச 8:5-6சங் 112:5நீதி 27:18நீதி 27:23-27எரே 8:7-10

ஆனால் அநீதி அதை அழித்திடும்.

பிரம்பைக் கையாளாதவர்கள் தன் பிள்ளைகளை வெறுக்கிறார்கள்; நீதி 29:17நீதி 23:13-14நீதி 29:15நீதி 19:18எபி 12:6-8நீதி 22:15நீதி 3:12நீதி 8:36

ஆனால் தன் பிள்ளைகள்மீது அன்பாயிருக்கிறவர்களோ அவர்களை நற்கட்டுப்பாட்டில் நடத்துவார்கள்.

நீதிமான்கள் தங்கள் உள்ளம் திருப்தியாகுமட்டும் சாப்பிடுவார்கள்; சங் 34:10நீதி 10:3எபி 13:51 தீமோ 4:8உபா 32:24நீதி 6:112 தெச 3:10உபா 28:48

ஆனால் கொடியவர்களின் வயிறோ பசியாயிருக்கும்.