பிரசங்கி 7

Ecclesiastes 7

ஞானம்

சிறந்த வாசனைத் தைலத்தைவிட நற்பெயரே நல்லது, வெளி 14:13நீதி 22:1பிரச 4:22 கொரி 5:82 கொரி 5:1பிலி 1:21-23நீதி 27:9உன்னத 1:3

பிறக்கும் நாளைவிட இறக்கும் நாளே சிறந்தது.

விருந்து வீட்டிற்குப் போவதைப் பார்க்கிலும், சங் 90:12உபா 32:29எபி 9:27உபா 32:461 பேது 4:3-4ஆகா 1:5பிலி 3:19ஆமோ 6:3-6

துக்க வீட்டிற்குப் போவதே சிறந்தது.

ஏனெனில் ஒவ்வொரு மனிதனின் நியதியும் மரணமே;

உயிரோடிருக்கிறவர்கள் இதைக் மனதிற்கொள்ளவேண்டும்.

சிரிப்பைப் பார்க்கிலும் துக்கமே நல்லது; 2 கொரி 7:9-11ரோம 5:3-4யாக் 4:8-10யோவா 16:20-222 கொரி 4:17எபி 12:10-11யாக் 1:2-4எரே 31:15-20

ஏனெனில் துக்கமுகம் இருதயத்திற்கு நன்மையைக் கொடுக்கும்.

ஞானமுள்ளவர்களின் இருதயம் துக்க வீட்டிலேயே இருக்கிறது; மத் 8:14-161 சாமு 25:36லூக் 7:12-131 இராஜா 20:161 சாமு 30:16தானி 5:1-4தானி 5:30ஓசி 7:5

ஆனால் மூடர்களின் இருதயமோ களிப்பு வீட்டிலேயே இருக்கிறது.

மூடர்களின் பாடலைக் கேட்பதைப் பார்க்கிலும், நீதி 15:31-32சங் 141:5வெளி 3:19நீதி 13:18நீதி 17:10நீதி 9:8நீதி 27:6நீதி 13:13

ஞானமுள்ளவர்களின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நல்லது.

பானைக்குக்கீழ் சடசட என எரியும் முட்களின் சத்தத்தைப்போலவே, சங் 118:12சங் 58:9பிரச 2:2லூக் 6:252 பேது 2:13-17ஆமோ 8:10ஏசா 65:13-15யூதா 1:12-13

மூடர்களின் சிரிப்பும் இருக்கும்.

இதுவும் அர்த்தமற்றதே.

பலவந்தமாய் எடுத்த ஆதாயம், ஒரு ஞானியையும் மூடனாக்கும். உபா 16:19யாத் 23:8நீதி 17:231 சாமு 8:3உபா 28:33-34உபா 28:65பிரச 4:1ஏசா 1:23

இலஞ்சம் வாங்குதல் இருதயத்தைக் கறைப்படுத்தும்.

ஒரு காரியத்தின் தொடக்கத்தைப் பார்க்கிலும், அதின் முடிவு நல்லது; எபி 10:36சங் 126:5-6நீதி 14:291 பேது 1:13யாக் 5:11யாக் 5:8நீதி 15:18கலா 5:22

பெருமையைப் பார்க்கிலும் பொறுமையே சிறந்தது.

உள்ளத்தில் கோபத்திற்கு இடங்கொடாதே, யாக் 1:19நீதி 14:17நீதி 16:32எபே 4:26-27நீதி 26:23-261 சாமு 25:21-222 சாமு 13:222 சாமு 19:43

ஏனெனில் கோபம் மூடர்களின் மடியிலே குடியிருக்கும்.

“இந்த நாட்களைவிட முந்திய நாட்கள் நலமாய் இருந்தது ஏன்?” என்று கேட்காதே. சங் 14:2-3ஆதி 6:11-12ஏசா 50:1நியாயாதி 6:13ரோம 1:22-32எரே 44:17-19ரோம 3:9-19

இப்படியான கேள்விகளைக் கேட்பது ஞானமுள்ள செயல் அல்ல.

உரிமைச்சொத்தைப்போல, ஞானம் இருப்பது நல்லது; பிரச 11:71 தீமோ 6:17-19பிரச 2:13நீதி 8:10-111 இராஜா 3:6-9பிரச 9:15-18லூக் 16:8-9

உயிரோடிருக்கும் அனைவருக்கும் அதுவே நன்மை கொடுக்கிறது.

பணம் புகலிடமாய் இருப்பதுபோலவே, நீதி 8:35நீதி 2:7நீதி 3:18நியாயாதி 9:15யோவா 12:50யோவா 17:3நீதி 11:4நீதி 18:10-11

ஞானமும் ஒரு புகலிடம்;

ஆனால் ஞானம் அதைக் கொண்டிருக்கிறவர்களின் உயிரைப் பாதுகாக்கிறது,

இதுவே அறிவின் மேன்மை.

இறைவன் செய்திருப்பதைக் கவனித்துப் பாருங்கள்: பிரச 1:15யோபு 12:14சங் 107:43பிரச 3:11ஏசா 14:27ஏசா 5:12எபே 1:11ரோம 9:15

அவர் கோணலாக்கினதை

யாரால் நேராக்க முடியும்?

காலங்கள் நலமாயிருக்கும்போது, மகிழ்ச்சியாயிரு; பிரச 3:4பிரச 3:22உபா 8:3பிரச 12:13யாக் 5:13உபா 28:47ஏசா 26:111 இராஜா 17:17-18

காலங்கள் கஷ்டமாய் இருக்கும்போது, சிந்தனை செய்:

இறைவனே இரண்டையும் ஏற்படுத்தியிருக்கிறார்,

ஆகையால் ஒரு மனிதனால்

தனது எதிர்காலத்தைக் குறித்து

எதையும் கண்டுபிடிக்க முடியாது.

நீதியானவன் தன் நீதியில் அழிந்துபோகிறதும்: பிரச 8:12-14பிரச 6:12மத் 23:34-35சங் 73:3-13பிரச 9:1-21 இராஜா 21:131 சாமு 22:18-192 நாளாக 24:21-22

கொடுமையானவன் தன் கொடுமையிலே நீடித்து வாழ்கிறதுமான

இரண்டையும் அர்த்தமற்ற என் வாழ்வில் நான் கண்டேன்.

ஆகையால் மிதமிஞ்சி நீதிமானாகவோ, ரோம 12:3நீதி 25:16கொலோ 2:181 கொரி 3:18யாக் 3:13-17மத் 6:1-7பிரச 12:12ஆதி 3:6

மிதமிஞ்சிய ஞானமுள்ளவனாகவோ காட்டிக்கொள்ளாதே.

அதினால் நீ ஏன் உன்னை அழித்துக்கொள்ள வேண்டும்?

அதிக கொடியவனாய் இராதே, நீதி 10:27யோபு 22:16சங் 55:23அப் 12:23அப் 5:10அப் 5:51 சாமு 25:38ஆதி 38:7-10

முட்டாளாயும் இராதே.

உன் காலத்திற்கு முன் நீ ஏன் சாகவேண்டும்?

முதலாவதைப் பற்றிக்கொள்வதும், பிரச 12:13பிரச 8:12மல்கி 4:2பிரச 11:6லூக் 1:50லூக் 11:42பிரச 3:14எரே 32:40

இரண்டாவதைக் கைவிடாதிருப்பதும் நல்லது.

இறைவனுக்குப் பயந்து நடக்கிறவனோ மிதமிஞ்சிய நடத்தைகளைக் கைக்கொள்ளமாட்டான்.

பட்டணத்திலுள்ள பத்து ஆளுநர்களைப் பார்க்கிலும், கொலோ 1:9-11நீதி 21:22பிரச 9:13-18நீதி 24:52 சாமு 20:16-22

ஒரு ஞானியை, ஞானம் அதிக வலிமையுள்ளவனாக்கும்.

ஒருபோதும் பாவம் செய்யாமல், சரியானதையே செய்கிற, ரோம 3:23ஏசா 53:61 யோவா 1:8-10யாக் 3:2நீதி 20:91 இராஜா 8:46யோபு 15:14-16ஏசா 64:6

நீதியான மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை.

மனிதர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்தில் எடுக்காதே; நீதி 30:10ஏசா 29:212 சாமு 16:101 கொரி 13:5-72 சாமு 19:19

கவனிப்பாயானால் உன் வேலைக்காரன் உன்னைச் சபிப்பதையும் நீ கேட்க நேரிடலாம்.

ஏனெனில் பலமுறை, யாக் 3:91 இராஜா 2:44யோவா 8:7-9மத் 15:19மத் 18:32-35

நீயும் மற்றவர்களைச் சபிக்கிறதை உன் இருதயத்தில் அறிவாயே.

இவை எல்லாவற்றையும் நான் என் ஞானத்தினால் சோதித்துப் பார்த்து, ரோம 1:221 கொரி 1:20ஆதி 3:51 இராஜா 11:1-81 இராஜா 3:11-12

“நான் ஞானமுள்ளவனாய் இருக்க உறுதிகொண்டேன்” என்று சொன்னேன்;

ஆனால் இதுவும் எனக்கு எட்டாததாய் இருந்தது.

ஞானம் எப்படிப்பட்டதாய் இருந்தாலும், ரோம 11:331 தீமோ 6:16ஏசா 55:8-9யோபு 28:28சங் 139:6யோபு 11:7-8யோபு 28:12-23சங் 36:6

அது மிக தூரமாகவும் ஆழமாகவும் இருக்கிறது.

அதை யாரால் கண்டறிய முடியும்?

ஆகவே, ஞானத்தையும் நிகழ்வுகளுக்கான காரணகாரியத்தையும் அறியவும், பிரச 10:13யோசு 7:132 பேது 2:3-92 பேது 3:3-92 சாமு 13:12பிரச 1:13-17பிரச 2:1-3பிரச 2:12

விசாரிக்கவும், ஆராயவும் என் மனதைச் செலுத்தினேன்.

கொடுமையின் மூடத்தனத்தையும்,

மூடத்தனத்தின் அறிவீனத்தையும் விளங்கிக்கொள்ள என் மனதைத் திருப்பினேன்.

கண்ணியாய் இருக்கும் பெண், நீதி 22:14நீதி 5:3-5நீதி 2:16பிரச 2:26நீதி 2:18-19நீதி 23:27-28நீதி 7:21-27நியாயாதி 16:18-21

மரணத்திலும் பார்க்க கசப்பானவள் என்று நான் கண்டேன்;

அவளது இருதயம் பொறியாயும்,

அவளது கைகள் சங்கிலிகளாயும் இருக்கின்றன.

இறைவனுக்குப் பிரியமாய் நடக்கும் மனிதனோ அவளிடமிருந்து தப்புவான்.

பாவியையோ அவள் சிக்க வைப்பாள்.

“இதோ, நிகழ்வுகளின் திட்டங்களை விளங்கிக்கொள்வதற்காக ஒன்றுடன் ஒன்றைச்சேர்த்துப் பார்த்தேன்”: பிரச 12:8-10பிரச 1:1-2

அப்பொழுது நான் கண்டது இதுவே என்று பிரசங்கி சொல்கிறான்:

“நான் ஆயிரம் பேருக்குள்ளே நேர்மையான ஒருவனை கண்டேன்; யோபு 33:23சங் 12:11 இராஜா 11:1-3பிரச 7:23-24ஏசா 26:9

ஆனால் ஆயிரம் பெண்களுக்குள்ளே நேர்மையான ஒரு பெண்ணை நான் காணவில்லை.

நான் இன்னும் ஆராய்ந்து கொண்டேயிருக்கிறேன்;

ஆனால் விளங்கவில்லை.”

ஆனால் இது ஒன்றையே நான் கண்டுபிடித்தேன்: எரே 4:22ஆதி 6:11-12மாற் 7:8-9ஆதி 5:1தீத் 3:3எபே 2:2-3ஆதி 1:26-27ஆதி 3:6-7

இறைவன் மனுக்குலத்தை நீதியானதாகவே படைத்தார்;

மனிதர்களோ தங்கள் மனம்போன போக்கில் நடந்துகொள்கிறார்கள்.