நீ நாளையைப் பற்றி பெருமைப்பட்டுப் பேசாதே, யாக் 4:13-16லூக் 12:19-202 கொரி 6:21 சாமு 28:19ஏசா 56:12சங் 95:7
ஒரு நாள் என்னத்தைக் கொண்டுவரும் என்று உனக்குத் தெரியாதே.
உன் வாயல்ல, இன்னொருவரே உன்னைப் புகழட்டும். 2 கொரி 10:18நீதி 25:272 கொரி 10:122 கொரி 12:11
உன் உதடுகளல்ல, வேறொருவரே உன்னைப் புகழட்டும்.
கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; தானி 3:191 யோவா 3:121 சாமு 22:18-19ஆதி 49:7நீதி 17:12எஸ்த 3:5-6ஆதி 34:25-26
ஆனால் மூடரின் கோபமோ இவை இரண்டையும்விட பெரும் சுமையாய் இருக்கும்.
கோபம் கொடூரமானது, மூர்க்கம் பெருகிவரும்; நீதி 6:34நீதி 14:30யாக் 3:14-16யோபு 5:21 யோவா 3:12அப் 7:9மத் 27:18அப் 17:5
ஆனால் பொறாமை இன்னும் ஆபத்தானது.
மறைவான அன்பைவிட, நீதி 28:231 தீமோ 5:20கலா 2:14மத் 18:15லேவி 19:17
வெளிப்படையான கண்டிப்பு சிறந்தது.
நண்பன் உண்டாக்கும் காயங்கள் நல்நோக்கமுடையவைகள், சங் 141:5வெளி 3:19யோபு 5:17-18நீதி 26:23-262 சாமு 12:7-15எபி 12:102 சாமு 20:9-10நீதி 10:18
ஆனால் எதிரியின் ஏராளமான முத்தங்கள் வஞ்சகமானவை.
திருப்தியடைந்தவன் தேனையும் வெறுப்பான்; லூக் 15:16-17எண் 11:18-20எண் 21:5எண் 11:4-9யோவா 6:9யோபு 6:7
பசியால் வாடுபவனுக்கோ கசப்பாயிருப்பதும் சுவையாயிருக்கும்.
தன் கூட்டைவிட்டு அலைந்து திரிகிற பறவையைப் போலவே, நீதி 21:161 கொரி 7:20ஏசா 16:2யோனா 1:10-17யோனா 1:3ஆதி 16:6-81 இராஜா 19:91 சாமு 22:5
வீட்டைவிட்டு அலைகிற மனிதரும் இருக்கிறார்கள்.
வாசனைத் தைலமும் நறுமணத்தூளும் இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதுபோல, நீதி 16:23-24நீதி 16:21சங் 23:5நீதி 15:23சங் 104:152 கொரி 2:15-16உன்னத 4:10யோவா 12:3
ஒருவருடைய நண்பரின் அருமை
இதயப்பூர்வமான ஆலோசனையிலிருந்து வெளிப்படுகிறது.
நீ உன் சிநேகிதரையோ, உன் தகப்பனின் சிநேகிதரையோ கைவிட்டு விடாதே, நீதி 18:24நீதி 17:171 இராஜா 12:6-8லூக் 10:30-37ஒபதி 1:12-14நீதி 19:72 சாமு 19:24யோபு 6:21-23
உனக்குப் பேராபத்து வரும்போது உன் குடும்பத்தாரின் வீட்டிற்கு உதவி தேடிப்போகதே;
தொலைவில் இருக்கும் உன் குடும்பத்தாரைவிட, அருகில் இருக்கும் அயலாரே மேல்.
என் மகனே, நீ ஞானமுள்ளவனாயிருந்து என் இருதயத்தை சந்தோஷப்படுத்து; நீதி 10:1சங் 119:42நீதி 23:15-162 யோவா 1:4நீதி 23:24-25பிரச 2:18-21நீதி 15:20நீதி 29:3
அப்பொழுது என்னை மதிக்காதவர்களுக்கு என்னால் பதிலளிக்க முடியும்.
விவேகிகள் ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்கிறார்கள்; நீதி 22:3நீதி 18:10எபி 11:72 பேது 3:10-142 பேது 3:7யாத் 9:20-21எபி 6:18ஏசா 26:20-21
ஆனால் அறிவற்றவர்களோ பார்க்காமல் நேராகப்போய் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
அறியாதவனுடைய கடனுக்காகப் பாதுகாப்புக் கொடுப்பவனுடைய உடைகளை எடுத்துக்கொள், நீதி 20:16நீதி 6:1-4நீதி 22:26-27யாத் 22:26
வேறுநாட்டுப் பெண்ணுக்காக அதைச் செய்தால் அடைமானமாகவே அதை வைத்துக்கொள்.
ஒருவன் அதிகாலையில் தன் அயலானை அதிக சத்தமிட்டு ஆசீர்வதித்தால், 2 சாமு 16:16-19அப் 12:22-23எரே 28:2-41 இராஜா 22:131 இராஜா 22:62 சாமு 15:2-72 சாமு 17:7-13
அது சாபமாகவே எண்ணப்படும்.
சண்டைக்கார மனைவி, நீதி 19:13நீதி 21:9நீதி 21:19நீதி 25:24யோபு 14:19
மழைக்காலத்தில் தொடர்ச்சியான ஒழுக்கைப்போல் இருக்கிறாள்;
அவளை அடக்க முயல்வது காற்றை அடக்க முயல்வதுபோலவும், யோவா 12:3
கையினால் எண்ணெயைப் பிடிக்க முயல்வதுபோலவும் இருக்கும்.
இரும்பு இரும்பைக் கூர்மையாக்குவது போல, எபி 10:24நீதி 27:9யோபு 4:3-41 சாமு 23:16ஏசா 35:3-42 தீமோ 2:31 பேது 4:12-132 சாமு 10:11-12
ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கூர்மையாக்குகிறான்.
அத்திமரத்தைப் காத்து வளர்ப்பவன் அதின் பழத்தைச் சாப்பிடுவான்; 1 கொரி 9:72 தீமோ 2:6உன்னத 8:12யோவா 12:26லூக் 12:371 கொரி 3:8லூக் 12:43-44லூக் 19:17
தன் எஜமானின் நலன்களைப் பாதுகாப்பவன் மேன்மை பெறுவான்.
தண்ணீர் முகத்தைப் பிரதிபலிப்பது போல, யாக் 1:22-25சங் 33:15மாற் 7:21ஆதி 6:5
ஒருவருடைய இருதயமும் உண்மையான நபரைப் பிரதிபலிக்கும்.
பாதாளமும் அழிவும் ஒருபோதும் திருப்தியடையாது; பிரச 1:81 யோவா 2:16நீதி 30:15-16பிரச 6:7ஆப 2:5பிரச 2:10-11பிரச 4:8பிரச 5:10-11
அவ்வாறே மனிதனுடைய கண்களும் திருப்தியடைவதில்லை.
வெள்ளியை உலைக்கலமும் தங்கத்தை சூளையும் சோதிக்கும்; நீதி 17:3சகரி 13:9சங் 66:101 பேது 1:7மல்கி 3:31 பேது 4:121 சாமு 18:15-161 சாமு 18:30
ஆனால் மனிதர்களோ அவர்களுக்கு வரும் புகழினால் சோதிக்கப்படுகிறார்கள்.
தானியத்தை உலக்கையினால் இடிப்பதுபோல, எரே 5:3நீதி 23:35ஏசா 1:5வெளி 16:10-11யாத் 12:30யாத் 14:5எரே 44:15-162 நாளாக 28:22-23
மூடரை உரலில் போட்டு இடித்தாலும்,
மூடத்தனத்தை அவர்களிடமிருந்து உன்னால் அகற்றமுடியாது.
உனது ஆட்டு மந்தைகளின் நிலைமையை நீ நன்றாய் அறிந்துகொள், 1 பேது 5:2யோவா 21:15-17ஆதி 33:132 நாளாக 26:10எசேக் 34:31நீதி 24:32எசேக் 34:22-24யோவா 10:3
உன் மாட்டு மந்தைகளையும் கவனமாய்ப் பராமரி;
ஏனெனில் செல்வம் என்றென்றும் நிலைப்பதில்லை, நீதி 23:51 தீமோ 6:17-18செப்ப 1:182 சாமு 7:16ஏசா 9:7யாக் 1:10சங் 89:36
கிரீடமும் எல்லாத் தலைமுறைகளுக்கும் நிலைப்பதில்லை.
காய்ந்த புல் அகற்றப்படும்போது புதிதாக புல் முளைக்கிறது, நீதி 10:5சங் 104:14
குன்றுகளிலிருந்து புல் சேகரிக்கப்படுகின்றது;
ஆட்டுக்குட்டிகள் உனக்கு உடைகளைக் கொடுக்கும், யோபு 31:20
வெள்ளாடுகள் ஒரு வயல் வாங்கப் பணத்தைக் கொடுக்கும்.
உனக்கும் உன் குடும்பத்திற்கும் போதுமான வெள்ளாட்டுப்பால் உன்னிடம் நிறைவாய் இருக்கும், மத் 6:33நீதி 30:8-9
அது பணிப்பெண்களின் பிழைப்பிற்கும் போதுமானதாய் இருக்கும்.