யோனா 1

Jonah 1

யோனா யெகோவாவைவிட்டு ஓடுதல்

அமித்தாயின் மகனாகிய யோனாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. லூக் 11:32லூக் 11:29-302இராஜா 14:25மத் 16:4மத் 12:39-41 “நீ பெரிய பட்டணமான நினிவேக்குப் போய், அதற்கு எதிராகப் பிரசங்கம்பண்ணு. ஏனெனில், அதன் கொடுமை எனக்கு முன்பாக வந்திருக்கிறது.” ஆதி 18:20-21ஆதி 10:11ஏசா 58:1நாகூ 1:1யோனா 3:2யோனா 4:11செப்ப 2:13-15எசேக் 3:5-9

ஆனால் யோனாவோ, யெகோவாவைவிட்டு ஓடி மறுதிசையிலிருக்கும் தர்ஷீசுக்குப் போகப் புறப்பட்டான். அவன் யோப்பாவுக்குப் போய் அங்கே தர்ஷீஸ் துறைமுகத்துக்குப் போகும் ஒரு கப்பலைக் கண்டான். அவன் பயணத்துக்கான கட்டணத்தைச் செலுத்தி, கப்பலேறி, யெகோவாவிடமிருந்து தப்பிக்கொள்வதற்காக தர்ஷீசுக்குப் பயணமானான். சங் 139:7-12யோசு 19:46ஆதி 4:162 தெச 1:9அப் 9:36அப் 9:431 இராஜா 19:3ஏசா 23:1

அப்பொழுது யெகோவா கடலில் பெருங்காற்றை அனுப்பினார். கப்பல் உடைந்துபோகுமென பயப்படத்தக்கதான, ஒரு பெரும்புயல் கடலில் உண்டாயிற்று. சங் 107:23-31மத் 8:24-27ஆமோ 4:13யாத் 14:21சங் 135:7யாத் 10:19யாத் 15:10எண் 11:31 கப்பலாட்கள் எல்லோரும் பயந்து, ஒவ்வொருவனும் தன்தன் தெய்வத்தை நோக்கிக் கதறினான். அத்துடன் அவர்கள் கப்பலின் பாரத்தைக் குறைப்பதற்காக, அதிலிருந்த சரக்குகள் எல்லாவற்றையும் கடலில் எறிந்தார்கள். அப் 27:18-19எரே 2:281 இராஜா 18:26ஏசா 45:20நியாயாதி 16:19யோனா 1:6லூக் 22:45-461 சாமு 24:3

ஆனால் யோனாவோ, கப்பலின் அடித்தளத்திற்குச் சென்று அங்கே படுத்து ஆழ்ந்த நித்திரையாயிருந்தான். அப்பொழுது மாலுமி அவனிடம் சென்று, “நீ எப்படி நித்திரை செய்யலாம்? எழுந்து நீயும் உன் தெய்வத்திடம் மன்றாடு; ஒருவேளை அவர் நம்மில் கவனம்கொண்டு, அழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடும் என்றான்.” யோனா 3:9சங் 107:28-292 சாமு 12:22எபே 5:14மாற் 4:37-41சங் 107:12-13அப் 21:13ஆமோ 5:15

அப்பொழுது கப்பலாட்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வாருங்கள், இந்த பேராபத்திற்குக் காரணம் யார் என்று அறியச் சீட்டுப் போடுவோம் என்றார்கள்.” அவர்கள் சீட்டுப் போட்டபொழுது, அது யோனாவின் பெயருக்கு விழுந்தது. நீதி 16:33யோசு 7:13-18எண் 32:231 சாமு 10:20-211 சாமு 14:41-42அப் 13:19யோசு 7:10ஏசா 41:6-7 எனவே அவர்கள் அவனிடம், “இந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் யார்? என்று இப்பொழுது நீ எங்களுக்குச் சொல்லவேண்டும். நீ என்ன வேலைசெய்கிறாய்? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உனது நாடு எது? நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்?” எனக் கேட்டார்கள். ஆதி 47:31 சாமு 30:13யாக் 5:16யோசு 7:191 சாமு 14:43

அதற்கு அவன் அவர்களிடம், “நான் ஒரு எபிரெயன், கடலையும் நிலத்தையும் படைத்த பரலோகத்தின் இறைவனாகிய யெகோவாவை ஆராதிக்கிறவன்” எனப் பதிலளித்தான். சங் 146:5-6நெகே 9:6சங் 136:26சங் 95:5-6நெகே 1:4ஆதி 14:132இராஜா 17:252இராஜா 17:28

அவன் தான் யெகோவாவைவிட்டு ஓடிப்போகிறவன் என்று ஏற்கெனவே அவர்களிடம் சொல்லியிருந்தான். எனவே அவர்கள் அதைப்பற்றி அறிந்ததால் மிகவும் பயந்து, நீ என்ன செய்துவிட்டாய்? என்று கேட்டார்கள். யோனா 1:3யோபு 27:222 சாமு 24:3தானி 5:6-9யோவா 19:8யோசு 7:25

கடல் மென்மேலும் கொந்தளித்தது. எனவே அவர்கள், “கடலின் கொந்தளிப்பை அமைதிப்படுத்த, நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும்?” என அவனைக் கேட்டார்கள். 1 சாமு 6:2-32 சாமு 21:1-6மீகா 6:6-72 சாமு 24:11-13

“என்னைத் தூக்கிக் கடலுக்குள் எறிந்துவிடுங்கள்; அப்பொழுது அது அமைதலாகும். என் குற்றத்தினாலேயே உங்கள்மேல் இப்பெரும் புயல் வந்திருக்கிறது என நான் அறிவேன்” என அவன் விடையளித்தான். 2 சாமு 24:171 நாளாக 21:17யோசு 7:12யோவா 11:50அப் 27:24பிரச 9:18யோசு 7:20-21

ஆனாலும் அந்த மனிதர், கப்பலை தண்டுவலித்து கரைக்குக் கொண்டுபோகும்படி, தங்களால் இயன்றவரை முயற்சித்தனர். ஆனால் அது அவர்களால் முடியவில்லை. கடலோ முன்பு இருந்ததைவிட, மிக அதிகமாக கொந்தளித்துக் கொண்டேயிருந்தது. நீதி 21:30யோபு 34:29 அப்பொழுது அவர்கள் யெகோவாவிடம் வேண்டுதல்செய்து, “யெகோவாவே, இந்த மனிதனின் உயிரை எடுத்ததற்காக எங்களைச் சாகவிடாதேயும். குற்றமற்ற ஒரு மனிதனைக் கொன்றதற்கான பழியை எங்கள்மீது சுமத்தாதேயும். ஏனெனில், நீர் எப்பொழுதும் உமது விருப்பத்தின்படியே செய்திருக்கிறீர்” என அழுதார்கள். சங் 115:3சங் 135:6உபா 21:8எபே 1:11சங் 107:28தானி 4:34-35யோனா 1:16யோனா 1:5 அதன்பின் அவர்கள் யோனாவைத் தூக்கிக் கப்பலைவிட்டு கடலுக்குள் எறிந்தார்கள். அப்பொழுது கொந்தளித்த கடல் அமைதியானது. லூக் 8:24சங் 93:3-4சங் 107:29சங் 89:9மத் 8:26சங் 65:7யோசு 7:24-262 சாமு 21:8-9 இதைக் கண்ட அம்மனிதர்கள் யெகோவாவுக்கு மிகவும் பயந்து, அவருக்கு பலியைச் செலுத்தினார்கள்; அவருக்கு நேர்த்திக்கடன்களையும் செய்தார்கள். தானி 6:26சங் 116:14ஆதி 8:20சங் 107:22சங் 50:14அப் 5:11தானி 4:34-37ஏசா 26:9

யோனாவின் மன்றாட்டு

ஆனால் யெகோவாவோ, யோனாவை விழுங்கும்படி, ஒரு பெரிய மீனை ஆயத்தப்படுத்தியிருந்தார்; யோனா அந்த மீனின் வயிற்றில் மூன்றுநாள் இரவும் பகலும் இருந்தான். மத் 12:40லூக் 11:30மத் 16:4சங் 104:25-26ஆப 3:2யோனா 4:6ஆதி 1:21