லூக்கா 10

Luke 10

இயேசு சீடர்களை அனுப்புதல்

இதற்குப் பின்பு கர்த்தர், வேறு எழுபத்திரண்டுபேரை 1 நியமித்தார். அவர்களை, அவர் தாம் போகவிருந்த ஒவ்வொரு பட்டணத்திற்கும், இடத்திற்கும் தமக்கு முன்னே இரண்டிரண்டுபேராக அனுப்பினார். மாற் 6:7-13லூக் 9:52மத் 10:1-4லூக் 3:4-6எண் 11:24-26லூக் 9:1-2எண் 11:16அப் 13:2-4 இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “அறுவடை மிகுதியாய் இருக்கிறது, ஆனால் வேலையாட்களோ கொஞ்சமாய் இருக்கிறார்கள். ஆகையால் அறுவடையின் ஆண்டவரிடம், தமது அறுவடைக்கு வேண்டிய வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள். மத் 9:36-38யோவா 4:35-381 கொரி 3:6-9மாற் 16:151 தெச 5:122 தெச 3:12 தீமோ 4:5அப் 22:21 புறப்பட்டுப் போங்கள்! ஓநாய்களுக்குள்ளே ஆட்டுக்குட்டிகளை அனுப்புகிறதுபோல, நான் உங்களை அனுப்புகிறேன். மத் 10:16அப் 20:29எசேக் 2:3-6யோவா 15:20யோவா 10:12யோவா 16:2மத் 10:22மத் 7:15 நீங்கள் பணப்பையையோ, பயணப்பையையோ, இன்னொரு ஜோடி பாதரட்சைகளையோ கொண்டுபோக வேண்டாம்; வழியில் எவருக்கும் வாழ்த்துச் சொல்லவும் வேண்டாம். 2இராஜா 4:29லூக் 22:35லூக் 10:4-121 சாமு 21:82இராஜா 4:24மாற் 6:8-11ஆதி 24:33ஆதி 24:56

“நீங்கள் எந்த வீட்டுக்குச் சென்றாலும், ‘இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாக’ என்று முதலில் சொல்லுங்கள். 1 சாமு 25:6மத் 10:12-13ஏசா 57:19எபே 2:172 கொரி 5:18-20லூக் 19:9அப் 10:36 சமாதானத்திற்குரியவன் அங்கு இருந்தால், உங்களுடைய சமாதானம் அவனில் தங்கும்; இல்லையெனில், அது உங்களிடம் திரும்பிவரும். 2 கொரி 2:15-162 தெச 3:16ஏசா 9:61 சாமு 25:17எபே 2:2-3எபே 5:6யாக் 3:181 பேது 1:14 நீங்கள் அந்த வீட்டிலேயே தங்கி, அவர்கள் உங்களுக்குக் கொடுப்பதைச் சாப்பிட்டு குடியுங்கள். வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரவானாயிருக்கிறான். நீங்கள் வீட்டிற்கு வீடு, மாறிமாறிச் செல்லவேண்டாம். 1 தீமோ 5:17-18மத் 10:10-111 கொரி 9:4-152 தீமோ 2:63 யோவா 1:5-8உபா 12:18-19கலா 6:6மாற் 6:10

“நீங்கள் ஒரு பட்டணத்திற்குள் செல்லும்போது, அங்கு நீங்கள் வரவேற்கப்பட்டால், அங்கு உங்களுக்குக் கொடுக்கப்படும் உணவைச் சாப்பிடுங்கள். 1 கொரி 10:27மத் 10:40லூக் 10:10லூக் 9:48யோவா 13:20 அங்குள்ள நோயாளிகளை குணமாக்குங்கள். ‘இறைவனுடைய அரசு உங்களுக்கு சமீபித்திருக்கிறது’ என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். மத் 3:2யோவா 3:5அப் 28:7-10லூக் 10:11லூக் 17:20-21மத் 10:7-8அப் 28:31மாற் 6:13 ஆனால், நீங்கள் யாதொரு பட்டணத்திற்கு போகும்போது, அங்கு நீங்கள் வரவேற்கப்படாவிட்டால், அதன் வீதிகளில் சென்று அவர்களிடம், அப் 18:6அப் 13:51மத் 10:14லூக் 9:5 ‘எங்கள் கால்களில் ஒட்டியிருக்கும் உங்கள் பட்டணத்தின் தூசியைக்கூட உங்களுக்கெதிராய் உதறிப் போடுகிறோம். ஆனால்: இறைவனுடைய அரசு உங்களுக்கு சமீபித்திருக்கிறது’ என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். அப் 13:51லூக் 10:9அப் 13:26அப் 13:40அப் 13:46உபா 30:11-14எபி 1:3மத் 10:14 நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு கிடைக்கும் தண்டனை, சோதோம் பட்டணத்திற்கு கிடைக்கும் தண்டனையிலும் அதிகமாயிருக்கும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். மத் 10:15மத் 11:24மாற் 6:11புலம் 4:6எசேக் 16:48-50

“கோராசினே! உனக்கு ஐயோ! பெத்சாயிதாவே, உனக்கு ஐயோ! உங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும், 2 சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே மனந்திரும்பி இருப்பார்கள்; துக்கவுடை உடுத்தி, சாம்பலிலும் உட்கார்ந்திருப்பார்கள். ஏசா 23:1-18எசேக் 26:1யோவே 3:4-8மத் 11:20-23அப் 28:25-281 தீமோ 4:2எசேக் 3:6-7ஏசா 61:3 ஆனால், நியாயத்தீர்ப்பின்போது உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை, தீரு, சீதோன் பட்டணத்தினருக்கு கிடைக்கும் தண்டனையிலும் அதிகமாயிருக்கும். யோவா 15:22-25லூக் 12:47-48ரோம 2:1ரோம 2:27ஆமோ 3:2யோவா 3:19 கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். ஏசா 14:13-152 பேது 2:4மத் 4:13லூக் 13:28மத் 11:23ஆமோ 9:2-3உபா 1:28எசேக் 26:20

“உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான்; உங்களைப் புறக்கணிக்கிறவன் என்னைப் புறக்கணிக்கிறான்; என்னைப் புறக்கணிக்கிறவன் என்னை அனுப்பியவரை புறக்கணிக்கிறான்” என்றார். யோவா 13:201 தெச 4:8மத் 10:40யோவா 12:44யோவா 12:48யோவா 5:22-23மாற் 9:37மல்கி 1:6

அந்த எழுபத்திரண்டு பேரும் அப்படியே போய், சந்தோஷத்துடனே திரும்பிவந்து, “ஆண்டவரே, உமது பெயரில் பிசாசுகளும் எங்களுக்குப் கீழ்ப்படிகின்றன” என்றார்கள். லூக் 9:1மாற் 16:17ரோம 16:20லூக் 10:1லூக் 10:9

இயேசு அதற்கு மறுமொழியாக, “ஆம்; சாத்தான் வானத்திலிருந்து மின்னலைப்போல் விழுகிறதை, நான் கண்டேன். வெளி 12:7-9ஏசா 14:12யோவா 12:31யோவா 16:11வெளி 9:11 யோவா 3:8எபி 2:14மத் 4:10 பாம்புகளையும், தேள்களையும் மிதிப்பதற்கும், பகைவனுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்வதற்கும், நான் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன்; எதுவுமே உங்களுக்குத் தீங்கு விளைவிக்காது. சங் 91:13மாற் 16:18ரோம 16:20அப் 28:5வெளி 11:5லூக் 21:17-18எசேக் 2:6ரோம 8:31-39 ஆனால், தீய ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதைக் குறித்து மகிழ்ச்சியடைய வேண்டாம். உங்கள் பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டதைக் குறித்தே மகிழ்ச்சியடையுங்கள்” என்றார். வெளி 20:15மத் 7:22-23வெளி 20:12எபி 12:23வெளி 21:27வெளி 3:5தானி 12:1யாத் 32:32

அவ்வேளையில் இயேசு, பரிசுத்த ஆவியானவரின் சந்தோஷத்தால் நிறைந்தவராய், “பிதாவே, பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் இந்தக் காரியங்களை மறைத்து, சிறுபிள்ளைகளுக்கு நீர் அவற்றை வெளிப்படுத்தியபடியால், உம்மைத் துதிக்கிறேன். ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாய் காணப்பட்டது. 2 கொரி 4:3மத் 11:25-27மத் 13:11-161 கொரி 2:6-81 பேது 2:1-2எபே 1:51 கொரி 1:9-29கொலோ 2:2-3

“என் பிதாவினால் எல்லாம் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதாவைத் தவிர வேறொருவனும் மகனை இன்னாரென்று அறியான். மகனைத் தவிர வேறொருவனும் பிதா யாரென்றும் அறியான். யாருக்கெல்லாம் பிதாவை வெளிப்படுத்த மகன் தெரிந்துகொள்கிறாரோ, அவர்களைத்தவிர, வேறொருவரும் பிதா இன்னாரென்று அறியார்கள்” என்றார். மத் 11:27யோவா 1:18யோவா 6:44-46யோவா 10:152 கொரி 4:6யோவா 17:262 யோவா 1:9மத் 28:18

பின்பு அவர் தமது சீடர்களின் பக்கமாய்த் திரும்பிப்பார்த்து, தனிப்பட்ட விதத்தில் அவர்களுக்குச் சொன்னதாவது: “நீங்கள் காண்பவற்றைக் காணும் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை. மத் 13:16-17 நான் உங்களுக்குச் சொல்கிறேன், பல இறைவாக்கினர்களும், அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பியும் அவர்கள் அதைக் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றை அவர்கள் கேட்க விரும்பியும் அவர்கள் அதைக் கேட்கவில்லை.” யோவா 8:561 பேது 1:10-12எபி 11:13எபி 11:39

நல்ல சமாரியன் உவமை

அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட நிபுணன் இயேசுவைச் சோதிக்கும்படி எழுந்து நின்று அவரிடம், “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். மத் 22:34-39லூக் 18:18அப் 16:30-31மத் 19:16-19கலா 3:18லூக் 11:45-46லூக் 7:30

அதற்கு அவர், “மோசேயின் சட்டத்தில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீ வாசித்திருக்கிறது என்ன?” என்று கேட்டார். ஏசா 8:20ரோம 10:5கலா 3:21-22ரோம 3:19கலா 3:12-13ரோம 4:14-16

அதற்கு அவன், “ ‘உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பெலத்தோடும், உன் முழு மனதோடும் அன்பு செலுத்தவேண்டும்’ 3; அத்துடன், ‘உன்னில் நீ அன்பாய் இருப்பதுபோல், உன் அயலானிலும் அன்பாய் இரு என்பதே.’ 4” எனப் பதிலளித்தான். மாற் 12:30-31மத் 22:37-40உபா 6:5ரோம 13:9லேவி 19:18உபா 30:6யாக் 2:8உபா 10:12

அப்பொழுது இயேசு அவனிடம், “நீ சரியாகப் பதில் சொன்னாய். அப்படியே செய். அப்பொழுது நீ வாழ்வடைவாய்” என்றார். எசேக் 20:11லேவி 18:5மத் 19:17நெகே 9:29எசேக் 20:13எசேக் 20:21கலா 3:12லூக் 7:43

ஆனால் அவனோ, தன்னை நீதிமானாய் காட்ட விரும்பி இயேசுவிடம், “என் அயலான் யார்?” என்று கேட்டான். லூக் 16:15லூக் 18:9-11லேவி 19:34மத் 5:43-44கலா 3:11ரோம 10:3லூக் 10:36ரோம 4:2

அதற்கு இயேசு அவனிடம்: “யூதன் ஒருவன் எருசலேமிலிருந்து, எரிகோவுக்குப் போய்க்கொண்டிருந்தான். அப்பொழுது அவன், கள்வர்களின் கையில் அகப்பட்டான். அவர்கள் அவனுடைய உடைகளைப் பறித்துக்கொண்டு, அவனை அடித்து, குற்றுயிராய்ப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். எரே 51:52லூக் 18:31எசேக் 30:24சங் 88:4புலம் 2:12லூக் 19:28 ஒரு ஆசாரியன் அதே வழியாய் போய்க்கொண்டிருந்தான், அவன் காயப்பட்டவனைக் கண்டபோது, மறுபக்கமாய் அவனைவிட்டு விலகிச்சென்றான். 1 யோவா 3:16-18சங் 69:20ஓசி 6:9எரே 5:31நீதி 21:13பிரச 9:11ஓசி 5:1மல்கி 1:10 அப்படியே ஒரு லேவியனும் அவ்விடத்திற்கு வந்து, அவனைக் கண்டபோது, மறுபக்கமாய் அவனைவிட்டு விலகிச்சென்றான். அப் 18:17நீதி 27:102 தீமோ 3:2சங் 109:25 ஆனால், அவ்வழியாய்ப் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியன் ஒருவன் அந்த மனிதன் கிடந்த இடத்துக்கு வந்து அவனைக் கண்டபோது அவன்மேல் அனுதாபம் கொண்டான். 1 இராஜா 8:50லூக் 7:13எரே 38:7-13மத் 18:33நீதி 27:10யோவா 4:9மத் 10:5யாத் 2:6 அந்த மனிதனிடம் அவன் போய், அவனுடைய காயங்களில் எண்ணெயும், திராட்சை இரசமும் ஊற்றிக் கட்டினான். பின்பு அவனைத் தனது சொந்தக் கழுதையின்மேல் ஏற்றி, ஒரு சத்திரத்திற்குக் கொண்டுபோய், அங்கு அவனைப் பராமரித்தான். ரோம 12:20சங் 147:31 தெச 5:15யாத் 23:4-5யாத் 4:24ஆதி 42:27ஏசா 1:5-6லூக் 2:7 மறுநாள், அவன் இரண்டு வெள்ளிக்காசை சத்திரத்தின் உரிமையாளனிடம் கொடுத்து அவனிடம், ‘இவனைப் பராமரித்துக்கொள். நான் திரும்பி வருகிறபோது, நீ அதிகமாய் ஏதாவது செலவு செய்திருந்தால், அதை நான் உனக்குக் கொடுப்பேன்’ என்றான்.” நீதி 19:17லூக் 14:13ரோம 16:23மத் 20:2

இயேசு இந்த உவமையைச் சொல்லி முடித்தபின், “இந்த மூன்று பேரிலும், கள்வர் கையில் அகப்பட்ட அவனுக்கு, யார் அயலானாய் இருந்தான் என்று நீ நினைக்கிறாய்?” என்று கேட்டார். லூக் 7:42மத் 21:28-31மத் 17:25மத் 22:42

அதற்கு மோசேயின் சட்ட நிபுணன், “அவன்மேல் இரக்கம் காட்டியவனே” என்றான். 1 யோவா 3:16-18மீகா 6:81 பேது 2:212 கொரி 8:91 யோவா 4:10-11லூக் 6:32-36யோவா 13:15-17எபே 5:2

அப்பொழுது இயேசு அவனிடம், “நீயும் போய் அப்படியே செய்” என்றார்.

மார்த்தாள், மரியாள்

பின்பு இயேசுவும் அவருடைய சீடர்களும், தொடர்ந்து சென்றுகொண்டிருக்கையில், ஒரு கிராமத்திற்கு வந்தார்கள். அங்கே மார்த்தாள் என்னும் பெயருடைய ஒரு பெண், அவரைத் தன் வீட்டில் ஏற்றுக்கொண்டாள். யோவா 11:19-20யோவா 11:1-5யோவா 12:1-3லூக் 8:2-3அப் 16:152 யோவா 1:10 அவளுக்கு மரியாள் என்னும் பெயருடைய ஒரு சகோதரி இருந்தாள். மரியாள் கர்த்தருடைய பாதத்தின் அருகே உட்கார்ந்து, அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். நீதி 8:34லூக் 8:35யோவா 12:3அப் 22:3உபா 33:3லூக் 2:461 கொரி 7:32-40யோவா 11:1 ஆனால் மார்த்தாளோ, வீட்டில் செய்யவேண்டிய எல்லா ஆயத்தங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். அவள் இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, என் சகோதரி எல்லா வேலையையும் என்னிடம் விட்டுவிட்டு இங்கு இருப்பதைப்பற்றி உமக்கு கவலை இல்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும்” என்றாள். யோவா 6:27லூக் 12:29மத் 16:22யோனா 4:1-4மத் 14:15லூக் 9:55மாற் 3:21

அதற்குக் கர்த்தர், “மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேகக் காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டு, குழம்பி இருக்கிறாய். பிலி 4:6மாற் 4:19லூக் 21:34மத் 6:25-34லூக் 8:14லூக் 12:221 கொரி 7:32-35பிரச 6:11 ஆனால், அவசியமானது ஒன்றே. மரியாள் அந்த சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள், அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார். சங் 27:4சங் 16:5-6யோவா 10:27-28யோவா 4:14சங் 73:25யோவா 5:24லூக் 18:22யோவா 17:3